Monday, January 21, 2008
என்னைக் கவர்ந்த தேசம்
ஏறத்தாழ 26 ஆண்டுகளுக்கு முன் அப்பா தன் நண்பர்களுடன் வந்த இலங்கை பயணத்தை விவரித்ததாலா?
அன்றாடம் கேட்டு ம்கிழ்ந்த இலங்கை ஒலிபரப்பினாலா?
அப்பாவிற்கு திருமணப் பரிசாக வந்த நல்லூர் கந்தன் - வாழ்த்து மடலாலா?
கதிர்காமக் கந்தனனக் காண வேண்டும் என்ற ஆவலா?
ஏனென்று தெரியாத ஒரு காதல் இந்த தேசத்தின் மீது. வாழ்நாளில் ஒருமுறையேனும், இலங்கைக்கு வரமாட்டோமா? கந்தனனக் காண மாட்டோமா? என்று ஏங்கிக் கொண்டிருந்த எனக்குத் தேனாக வந்தது
கணவரின் பணிமாற்றம்.
இலங்கைக்கு பணிமாற்றம் என்றதும் நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவேஇல்லை. ஆனால் முதலில் 1 1/2 வருடக் காலம் கணவர் மாத்திரம் செல்ல அனுமதிக் கிடைத்தது. பிறகு 2002- டிச்ம்பரில் குடும்பத்தோடு வந்தோம்.
இதோ ஆயிற்றி 5 ஆண்டுகள் முடிந்து 6 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்த
வேளையில் இப்போது இந்தியாவிற்கு மாற்றம் எனும் செய்தி. தாய் நாட்டிற்கு திரும்புகிறோம் என்று ஆனந்தப் பட்டாலும், மனதின் ஒரு மூலையில் இலங்கையைப் பிரிகிற வலி இருக்கிறது.
இலங்கை இனி என் ஞாபக ஏடுகளில் மாத்திரம்தான். நான் இலங்கையில் பார்த்து ரசித்த இடங்கள், அவைப்பற்றிய தகவல்கள், புகைப்படங்கள்தான் இனி என் அடுத்த பதிவுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆமா, அங்கங்க குண்டு வெடிச்சிகிட்டிருக்குன்னு அவனவன் இங்கன அகதியா ஓடி வந்துகிட்டிருக்கான். உயிர்பிழைச்சா போதும்னு :(
சீக்கிரம் கெளம்பி வாங்கம்மா!
கலவர பூமியில காத்துவாங்கிகிட்டு.
வாங்க சிவா,
அன்புக்கு நன்றி,
கலவர பூமியா இருப்பது வடக்கேதான்.
ஆனாலும் இப்ப கொழும்பிலும் நிலமை கொஞ்சம் சரியில்லை.
ஆமா, கலவரம் எந்த நாட்டில் தான் இல்லை? நம்ம ஊரு மாத்திரம் ரொம்ப பாதுகாப்பானதா?
அதான் வர்ரோம்ல. அதுக்குத் தானே அழுகாச்சியா வருது...
SriLanka Naturally Beautiful Country in the world.Once Singapore Dreamt to become like SriLanka. Now Where is Singapore and where is Srilanka.You will not enjoy this country if you face the problems facing by this people.No srilankan leaders are good enough to think about the people.
Welcome SSC,
I totally agree with u. But most of the people not aware of the beauty of this country.and they scare to visit srilanka.
This country is mostly based on tourism only. If people does't visit
how will the tourism industry boom?
Post a Comment