பெண்களின் ஆயுதம் கண்ணீர்.!
இவங்க அழுதே சாதிச்சுப் பாங்க!
கோழைகள் அதனால் அழுதிடுவாங்க.!
இப்படி பெண்களைப் பற்றி பலர் பேசக் கேட்டிருக்கேன்.
இப்படி ஒரு பெயர் எனக்கு வரக்கூடாது, என்பதில் மிக
வைராக்கியமாக இருக்கிறேன்.
அழவேண்டிய தருணங்களில் கூட கண்கள் குளம்
கட்டப் பார்த்தாலும்வைராக்கியம் தலைத் தூக்கி,
அதை கரை தாண்ட விடாமல் செய்திருக்கிறது.
சிறுவயதிலேயே மனதை மாற்றி வைத்திருந்தேன்.
செய்யாத தவறை செய்த்தாக சொன்னால் மட்டுமே தாளமுடியாமல்
என்மகள் அழுவாள் என்று என் அம்மா பெருமைப் பட்டுக் கொள்வார்.
"திருமணம் ஆகிப் போகும் போது அழுவாயே அப்பப் பார்க்கலாம்",
என்று தோழிகள் பந்தயம் கட்டினார்கள்.
என் அம்மம்மா சிறுவயது முதலே என்னிடம்
ஒன்று சொல்லிவருவார்கள்.
"இது உன் வீடல்ல (பிறந்த வீடு) . இந்த வீட்டின் மீது
அதிகப் பற்றினை வளர்த்துக்கொள்ளாதே. உன் கணவன் வீடுதான்
உன் வீடு. பெண்ணாக பிறந்த அன்றே நீ வேறொரு வீட்டிற்கு
போகவேண்டியவள் என்று முடிவாகிவிட்டது."
இதைக் கேட்டு வளர்ந்த நான் திருமணமாகிப் போகும்போது கூட
அழவில்லை. நான் என் வீட்டிற்கு போகிறேன். புதுவாழ்க்கையைத்
துவங்கும்போது அழுதுகொண்டு துவங்க மாட்டேன் என்று மனதில்
சங்கல்பமே வைத்திருந்தேன்.
எங்கே அழுதுவிடுவேனோ என்று எல்லோரும் காத்திருக்க,
டாடா! பை பை! என்று அனைவருக்கும் சிரித்த முகத்துடன்
சொல்லிக் கொண்டுதான் வண்டியில் ஏறினேன். என்னைப்
பார்த்து யாரும் அழாமலேயே அனுப்பி வைத்தார்கள்.
அழுவது எனக்கு பிடிக்காது. எந்தப் பிரச்சனை வந்தாலும்
அழுவதனால் பலன் இல்லை. அழுவதால் எனர்ஜி வேஸ்ட்
ஆகிறது. நம்மால் சரியாக யோசிக்கமுடியாது போகும்
என்று திடமாக நம்புகிறவள். அப்படியேதான் இருந்தேன்.
என்ன ஆயிற்று எனக்கு?!?!
அழுதது நானா? எனக்கும் அழத்தெரியுமா? அழுத
எனக்கே அச்சரியமாக இருக்கிறது.!!!!!
எது என்னை கரையவைத்து,
பொங்கிப் பொங்கி அழவைத்தது.?????????
தொடரும்........
14 comments:
சபாஷ்.. போண்ணுங்க்கன்னா அழறதுன்னு ஒரு பேச்சே இருக்கு. இப்படி உங்களை போல் 2-3 விதிவிலக்கு இருப்பது ரொம்ப நல்லது..
ஆனால், உங்களைய்யே கலங்கடிச்ச அந்த சம்பவம் என்னன்னு டெஹ்ரிய அவா.. (அதான் தொடரும்ன்னு போட்டிருக்கீங்களே..) ;-)
மீ த பர்ஸ்ட்டு - கமெண்டு ரிஸர்வ்ட் - வெயிட்டீங்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
வாங்க மைஃபிரண்ட்
வருகைக்கு நன்றி.
என்னையே அழவைத்தது எதுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
வாங்க சீனா,
வெயிட்டிங்க்ஸ்ஸா? அடுத்த பதிவுல சொல்றேன்.
.
ஆஹா, வெச்சுட்டாரய்யா புள்ளி வெச்சுட்டாரய்யா.
தென்றலை அழவைத்தது எது? தொட்டதற்கு எல்லாம் அழுவதை விடுத்து மனசு பொறுக்க முடியாத நிலை வரும்போது அழுது விடுவதே நல்லது என நினைக்கிறேன். எதற்குமே அழக்கூடாது என்ற வைராக்கியத்தில் மனதை கட்டுப்படுத்தி வைக்கும் போதுதான் என்றோ ஒருநாள் வெடித்து பொங்கி அழவைத்து விடுகிறது. தென்றல் அழுததும் நல்லதே.
// சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
.
27 January, 2008 9:53 PM
புதுகைத் தென்றல் said...
ஆஹா, வெச்சுட்டாரய்யா புள்ளி வெச்சுட்டாரய்யா.
28 January, 2008 8:16 AM//
ஒருவேளை உங்க அழுகைக்கு முற்றுபுள்ளி வைக்க சொல்லுறாரோ என்னவோ?
வாங்க நிஜமா நல்லவன்,
மனசுல எதையும் வெச்சுக்க மாட்டேன்.
எதையும் வெளிபடையா பேசிடுவேன்.
எனக்கு அழுகை வராது. கோபம் கொஞ்சம் ஜாஸ்தி. ஆனா அது இதுவரை யாரையும் பாதிக்காம பாத்துக்குறேன்.
அதிக, அனாவசிய சினம் சேர்ந்தாரைக் கொல்லி ஆக்கிடுமே.
அழுததே முதலும் கடைசியுமா அன்றைக்குத்தான்.
சாமான்யன் புள்ளி வைக்கிறார்னா, நண்பர் இப்ப பிஸி, அப்பால கமெண்ட் போடுவாரு(ஆப்பு வைப்பாரு) அப்படின்னு அர்த்தம்.
என்னங்க இது குண்டைத்தூக்கி போடுறீங்க?
எதாவது..காமெடியா சொல்லி..மொக்கையா முடிச்சுருங்க!
இல்லைன்னா...மனசு கஷ்டமாயிடும்!
நீங்க பலப்பல பதிவுகள்ல பிஸின்னு தெரியுது! இருந்தாலும்....
நம்ம வீட்டுப்பக்கமும் வந்துபோங்க!
NejamaNallavan said...
// சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
.
<===
27 January, 2008 9:53 PM
புதுகைத் தென்றல் said...
ஆஹா, வெச்சுட்டாரய்யா புள்ளி வெச்சுட்டாரய்யா.
28 January, 2008 8:16 AM//
ஒருவேளை உங்க அழுகைக்கு முற்றுபுள்ளி வைக்க சொல்லுறாரோ என்னவோ?
28 January, 2008 10:47 AM
===>
நிஜமா நல்லவன்,
எப்படிங்க, இப்படியெல்லாம் யோசிக்க முடியுது? (வடிவேலு பாணியில் படிக்கவும்)உக்காந்து யோசிப்பீங்களோ? நிஜமாவே உங்க யூகம் மிகப்பொருத்தமான யூகம்தான்.
பேருக்குத்தகுந்த மாதிரி நிஜமாவே நீங்க நல்ல யூகிப்பாளர்தான்.
<===
புதுகைத் தென்றல் said...
...
...
கோபம் கொஞ்சம் ஜாஸ்தி.
ஆனா அது இதுவரை யாரையும் பாதிக்காம பாத்துக்குறேன்.
====>
ஆமா, என்ன கையில கிடச்ச கரண்டி,அப்பளக்குளவி போன்றவை வீட்டில் பறக்கும் என்று கேள்வி.அவ்ளோதான்.[இந்த கமெண்ட் சும்மா டமாசுக்கு]
ஒரு சினிமா விமர்சனட்த்துக்கு இப்பிடி ஒரு பில்டப்பா!!
தாங்குமா ப்ளாகர் இல்ல தாங்குமா தமிழ்மணம்!!
Post a Comment