Monday, January 28, 2008

நானே நானா? யாரோ தானா? - பாகம் 2

சில பேர் எமோஷனலா பேசும்போது, பேசறத கேட்கும்போது

அழுவாங்க.

சிலர் உருக்கமான கதையை படிச்சிட்டு அழுவாங்க.

தப்பு செஞ்சா ஒத்துகிடுவேன். செய்யாத தப்புக்கு அம்மா,அப்பா திட்டினா
மட்டும் கண்ணுல குளம் கட்டும்.

அதுவே வேற யாராவது திட்டினா, அவங்க அவ்வளவுதான்.

உருக்கமான காட்சிகள் உள்ள திரைப்படமா இருந்தாலும் மனசு

கனமாகும், அம்மா கிட்ட அல்லது தோழிகள் கிட்ட

பேசி மனசு லேசாகிடும்.

இல்ல இருக்கவே இருக்கு பாடல்கள்.

மனசு பாரமா இருக்கும் போது தியானம் போல்

பாடல்களில் கரைந்துவிடுவேன்.

மனசு லேசாகிடும்.




ஆனா கடந்த சனிக்கிழமை ஒரு சினிமா பார்த்து நான்

அழுததை கணவர் ஆச்சரியமா பார்த்தார்.

என் பிள்ளைகள் கூட ஆச்சிரியமா பார்த்தாங்க.




என்னை அப்படி அழவைத்த சினிமா எது?

எதறகும் அழாத என்னையும் அழவைத்த அந்த

சினிமாவில் அப்படி என்ன இருக்கிறது?


தொடரும்......

14 comments:

MyFriend said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ....

MyFriend said...

//சில பேர் எமோஷனலா பேசும்போது, பேசறத கேட்கும்போது//

ரைக்ட்டு

//சிலர் உருக்கமான கதையை படிச்சிட்டு அழுவாங்க.
//

ரைக்ட்டு

//உருக்கமான காட்சிகள் உள்ள திரைப்படமா இருந்தாலும் மனசு

கனமாகும், அம்மா கிட்ட அல்லது தோழிகள் கிட்ட

பேசி //

ரைக்ட்டூ.. ;-)

pudugaithendral said...

ஆஹா,

என்ன மொதல்லையே வந்துட்டீக.

வாங்க மை ஃபிரண்ட்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<=
ஆனா கடந்த சனிக்கிழமை ஒரு சினிமா பார்த்து நான்

அழுததை கணவர் ஆச்சரியமா பார்த்தார்.
==>
இருக்காத பின்னே.இவங்க மத்தவங்களைல அழ வைப்பாங்க. இவங்க எப்படின்னு ஆச்சரியப்பட்ருப்பர்.

Dreamzz said...

let me guess.. நம்ம சொம்பு நடிச்ச காளை.. ஆனா எனக்கு அத பார்த்து சிரிப்பு தான வந்தது ;)

சரி சீரியஸ்... ஒன்பதூ ரூபாய் நோட்டு?

pudugaithendral said...

சாமான்யன்

சரியா சொன்னீங்க. good guess.

நன்றி.

pudugaithendral said...

வாங்க ட்ரீம்ஸ்,

உங்க கணிப்பு தப்பாயிடுச்சே.

நிஜமா நல்லவன் said...

நீங்க ஸ்ரீலங்காவை பிரிந்து இந்தியா வந்துட்டீங்க. அதனால நான் என்ன நினைக்கிறேன்னா ஒரு வேளை 'பிரிவோம் சந்திப்போம்' படம் பார்த்துட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு அழுதுட்டீங்க. சரியா? நான் இன்னும் அந்த படம் பார்க்கல.சும்மா ஒரு ஊகம் தான்.இன்னும் ஒரு தொடரும் போடாம சட்டுன்னு சொல்லிடுங்க தென்றல்.

pudugaithendral said...

நிஜமா நல்லவன்,

நான் இன்னும் இலங்கையை விட்டு வரல். வரப்போறேன். அதுக்கு அழுகல. மனசு வருத்தமாத்தான் இருக்கு.

பதிவு போட்டுடறேன். சஸ்பென்ஸ் முடிஞ்சிடுச்சு. (அதெப்படி சரியா சொன்னீங்க)

இம்சை said...

ஆனா கடந்த சனிக்கிழமை ஒரு சினிமா பார்த்து நான் அழுததை கணவர் ஆச்சரியமா பார்த்தார்.

ம்ம்ம் நான் அவர் கிட்டயே கேட்டுக்கரேன்...

pudugaithendral said...

ஆஹா இம்சை,

நீங்களுமா?


சரி நல்ல கேளுங்க. யார் வேணாம்னு சொன்னது.

மங்களூர் சிவா said...

ம். 3வது பாகத்தை படிச்சிட்டு இங்க வந்ததால சுவாரஸ்யம் கம்மியாயிடிச்சி!!

மங்களூர் சிவா said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
மீ தி ஃபர்ஸ்ட்டூ....
//
எக்கா !!

நல்லா இரு.

Sanjai Gandhi said...

//என்னை அப்படி அழவைத்த சினிமா எது?

எதறகும் அழாத என்னையும் அழவைத்த அந்த

சினிமாவில் அப்படி என்ன இருக்கிறது?//

உங்க ஃபோட்டோவா காட்டி.. இவங்க ரொம்ப நல்லவங்கனு சொல்லிட்டாங்களா? :P