அம்மா, அப்பா வேலைக்குப் போனாலும் வீட்டில் பாட்டி இருந்தார்கள்.
மும்பையில் அம்மம்மா வீட்டில் இருந்த போது
கூட்டுக் குடும்பம், பெரியமாமா, அத்தை,
அவர்களது மகள்கள், சின்னமாமா என்று வீட்டில்
ஆட்களுக்கு குறைவில்லை.
சனிக்கிழமை இரவுகளில் அபார்ட்மெண்டே
அதிரும்படி, பக்கத்து வீட்டுக்காரர்களுடன்
சேர்ந்து பேசி, அந்தாக்க்ஷ்ரி என்று இருப்பேன்.
லோக்கலில் டிரெயினில் நான் அடித்த
லூட்டிக்கு ஒரு தனிப் பதிவே
போட்டிருக்கிறேன்.
அலுவலும் என்க்கொரு வீடுமாதிரி இருக்கும்.
நல்ல நண்பர்கள். எங்கேயும் ஒரு
ஜாலிப் பட்டாசாக இருப்பேன். இப்படி இருந்த
நான் திருமணம் முடிந்து
ஹைதராபாத் வந்த நாள் முதல் தனிக்குடித்தனம்.
கணவர் ஆபீஸ் போனபின் நாளெல்லாம் தனியாக இருந்தது மகாக்கொடுமை.
காலையில் வேலைக்குப் போனால்,
இரவு 8 மணிஆகும் அவர் வர.
மதியம் சாப்பாடு என்ன? சாயந்திரம் டீ கூடத்
தனியாக குடிக்கும் நிலை.
அதிலும் இவருக்கு 20 நாள் டூர் வேற. ஒரே கும்பலாக இருந்து, வேலைக்குப் போய் பழக்கப்பட்ட
எனக்கு இந்தத் தனிமை ஒரு
தண்டனையாக இருந்தது.
அந்தத் தண்டனைக்காலம் (மகன் பிறக்கும் வரை)
நான் அனுபவித்தமனக்கஷ்டங்களை,
"பிரிவோம் சந்திப்போம்" திரைப்படத்தில்
அருமையாக காட்டியிருந்தார்.
எனக்கும் அன்பான புகுந்தவீட்டினர்,
அருமையான கணவர். எங்கும்
எதிலும் குறையில்லை. தனிமையைத் தவிர.
ஒவ்வொரு காட்சியிலும்
ஒரு பெண் தனிமையில் எப்படி தவிக்கிறாள்
என்பதை காட்டியது என்னை நானே திரையில்
பார்த்தது போலிருந்தது.
தாங்க முடியாமல் இத்தனை நாள் மனதினுள்
இருந்த வருத்தம் முதல்முறை ஒரு
திரைப்படம் பார்த்து நான் அழுததாக ஆகிவிட்டது.
நல்லவேளை எனக்கு மனநோய் ஏற்படவில்லை.
தாய்மை அடைந்த பிறகு கொஞ்சம் தனிமை
குறைந்தது. வயிற்றில் இருக்கும்
குழந்தையோடு பேசுவேன்.(அதனால் தானோ
என்னவோ மகன் நான் சொல்வதை
கேட்பதாக அனைவரும் சொல்கிறார்கள்)
மொத்ததில் கரு.பழனியப்பனின்
"பிரிவோம்! சந்திப்போம்"
திரைப்படம் என் மனதில் மட்டுமல்ல,
என் குடும்பத்தினர் மனதிலும் நீங்கா
இடத்தை பிடித்துவிட்டது.
13 comments:
அங்க அங்க பாக்கும் போதே படம் நல்லாருக்குன்னு புரிஞ்சுது...சீக்கிரம் பாக்கணும்..
கண்டிப்பா பாருங்க,
அருமையான படம்.
உறவுகளைக் பாசிடிவா காட்டுறது
கரு.நாகப்பனின் பலம்.
அவருடைய முந்திய படம் "பார்த்திபன் கனவை" விட இந்தப்படம் ரொம்ப நல்லா இருக்கு.
சினேகாவும், சேரனும் உணர்ந்து நடிச்சிருக்காங்க.
ஒன்னும் புரியலயே, ஓ இது தொடர் பதிவுன்னு நினைக்கரேன்... முன்னாடி எழுதிய பதிவுக்கு அப்படியே ஒரு லிங் குடுங்க அப்ப தான் என்ன மாதிரி டியூப் லைட்க்கு எல்லாம் புரியும்.
ஆகா இது என்ன திரைப்பட விமர்சனமா இருங்க பழசு எல்லாம் தெடி பிடிச்சி படிச்சிட்டு வரேன்...
இம்சை
இதுக்குத்தான் அடிக்கடி வரணும்னு சொல்றது.
மெயில் அனுப்பினாலும் வந்து பார்க்கல.
பொறுமையா வாங்க.
சே! இந்த படத்துக்கு இப்படி ஒரு பில்டப்பா?? எங்க தலைவி இதே படத்துக்கு விமர்சனம் எழுதீயிருக்காங்க.. பருங்க:
http://vanusuya.blogspot.com/2008/01/blog-post_28.html
ஆனாலும், அப்படி உங்களை கலங்கவச்சது எது, கல்யாணமா, சமயலான்னு பார்ப்போம்.. :-P
ஹலோ மைஃபிரண்ட்,
தனிமைதான் கலங்க வெச்சது.
படம் பாருங்க நான் சொல்றது உண்மைன்னு புரியும்.
sure.. இன்னும் படம் பார்க்கலை. அதான் இப்படியெல்லாம். படம் பார்த்துட்டு சொல்றேன். ;-)
//புதுகைத் தென்றல் said...
கண்டிப்பா பாருங்க,
அருமையான படம்.//
அவசியம் பார்க்கணும்.
பாருங்க நிஜமா நல்லவன்,
அருமையா இருக்கு. ஒரு பெண்ணின் பார்வையில் இந்தப் படம்.
//கண்டிப்பா பாருங்க,
அருமையான படம்.//
ஆமா..சரிதான்..! பாத்துட்டேன்..ஆனா.கொஞ்சம் அதிகப்படுத்திட்டமாதிரி தெரியுது..2வது பாதியில்..அட்டக்கட்டி ஒண்ணும் ஆப்பிரிக்காவில் இல்லையே?
//உறவுகளைக் பாசிடிவா காட்டுறது
கரு.நாகப்பனின் பலம்.//
உண்மைதான்..ஒரு சின்ன திருத்தம்.
அவர் கரு.பழனியப்பன்..!
//
இம்சை said...
ஒன்னும் புரியலயே, ஓ இது தொடர் பதிவுன்னு நினைக்கரேன்... முன்னாடி எழுதிய பதிவுக்கு அப்படியே ஒரு லிங் குடுங்க அப்ப தான் என்ன மாதிரி டியூப் லைட்க்கு எல்லாம் புரியும்.
//
ரிப்பீட்டேய்
ஆகா இது என்ன திரைப்பட விமர்சனமா!?!?!
நல்லா இருக்கு. படம் இன்னும் பாக்கலை பாத்திடறேன்.
Post a Comment