Tuesday, January 29, 2008

என் கல்லூரி நினைவுகள்

புதுகையில் பள்ளிக் கல்வியை முடிச்சிட்டு

கல்லூடி படிப்புக்கு பள்ளத்தூர் போனேன்.

(ஆச்சி மனோரமாவின் பிறந்த ஊர்,

நாங்க அங்க படிக்கும் போதுதான்

நாடோடித் தென்றல் படப் பிடிப்பு அந்த

ஊர்ல நடந்தது)

புதுகை டு பள்ளத்தூர் 1 மணி நேரப் பயணம் தான்.

கானாடுகாத்தான் பாலிடெக்னிக், தாண்டி எங்க கல்லூரி.

காரைக்குடி கல்லூரி போற பசங்க எங்க காலேஜை பண்ற

கிண்டல் தான். (காலேஜ் பேருக்கே கிண்டல்)

சே! என்ன இப்படி சொல்றாங்கன்னு மொதல்ல நினைச்சாலும்

அவங்க சொல்றதுதான் உண்மை.

அவங்க அப்படி என்ன சொல்வாங்க? சஸ்பென்ஸெல்லாம்

வெக்காம இங்கயே சொல்லிடறேன்.

எங்க காலேஜ் பெயர் சீதாலக்ஷ்மி ஆச்சி காலேஜ் பார் வுமன்.

அவங்க என்ன சொல்வாங்கன்னா

SEETHALAKSHMI ANIMALS COLLEGE FOR WOMEN.

english major எங்க வகுப்பு மாட்டுக் கொட்டகை சாரி

கீத்துக் கொட்டகையில தான்.

ஆடு, மாடு எல்லாம் சர்வ சாதரணமா வந்து போகும்.

பாம்பு புத்தே எங்க 3rd year கிளாஸுக்கு பின்னாடி தானே!!!

அங்க காலேஜுல அடிச்ச லூட்டி. அது அயித்தானுக்கு தெரிஞ்சது

கூட காலக் கொடுமைதான்.

அயித்தானின் நண்பர் குடும்பத்துடன் இலங்கை வந்திருந்தாங்க.

வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருந்தோம். அவங்க மனைவி எங்க

காலேஜ். என்னைவிட ஒரு வருடம் சீனியர்.

ஆச்சி காலேஜ்ல படிச்சேன்னு சொல்ல, அவங்க வருஷம்

எல்லாம் கேட்டுட்டு


"ஆஹா, நானும் அப்ப அங்கதானே இருந்தேன்" அப்படின்னு


காலேஜ்ல ஸ்டிரைக் பண்ணது, அடிச்ச லூட்டிங்க, ...........

எல்லம் போட்டு உடைச்சிட்டாங்க .

கும்மி அடிச்சிட்டு போயிட்டாங்க.

அங்கே படித்தது ஒருவருடம் தான். ஆனால் பொற்காலம்.

(அங்கே ஒரு மாணவிக்கு நடந்த விபத்தினால்
அப்பா பயந்து போய் படிப்பை பாதிலேயே நிப்பாட்டிடாரு.
அஞ்சல் வழிக் கல்வில முடிச்சுட்டேன்)

சாலா, தேவி, என தோழிகள் அதிகம். இன்றும் என்னுடன்

உயிர் சிநேதியா இருப்பது ஒருத்தி தான்.

அவிங்க இப்ப சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில

வேலை பார்க்கறாங்க. எஸ்.எம்.எஸ் ஆவது அனுப்பி அன்பை

காட்டிடுவோம்ல.

பிரிவோம்! சந்திப்போம் என் கல்லூரி நினைவுகளையும்

நினைச்சுப் பார்க்க வெச்சுடிச்சு.

11 comments:

இம்சை said...

ஆகா நல்லா இருக்கே, நான் படிச்ச காலேஜ் கூட அப்படிதான்... கவர்ண்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் கரூர்...

pudugaithendral said...

அது சரி,

எல்லாக் காலேஜும் இப்படித்தானா?

நிஜமா நல்லவன் said...

///புதுகையில் பள்ளிக் கல்வியை முடிச்சிட்டு

கல்லூரி படிப்புக்கு பள்ளத்தூர் போனேன்.

(ஆச்சி மனோரமாவின் பிறந்த ஊர்,

நாங்க அங்க படிக்கும் போதுதான்

நாடோடித் தென்றல் படப் பிடிப்பு அந்த

ஊர்ல நடந்தது)///


புதுகைதென்றல் எப்படி நாடோடிதென்றல் ஆனாங்கன்னு இப்பதான் புரியுது.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

நாடோடிக் கூட்டத்தில் ஒரு கூட்டம்
எங்களுது.

TBCD said...

தமிழ் நாட்டுக்குள்ளே இலங்கையா என்ன புதுக் கலவரம் இது..

நாட்டுக்கோட்டைப் படம் "பிரிவோம் சந்திப்போம்" நேத்து தான் பார்த்தேன்.

விசாலாட்சியயை "சாலா" என்று அழைப்பதை கவனித்து, இப்படியும் கூப்பிடுவார்களோ என்று நினைத்தேன்..

இங்க வந்துப் பார்த்தா, அயித்தான், சாலா எல்லாம்..இருக்கு..அண்ணமண்டி விட்டுட்டீங்க.. ;)

நான் படிச்சதெல்லாம்..பயங்கரமான கல்லூரி..பெயரேச் சொன்னா, எவனாயிருந்தாலும், இரண்டாவது தடவைக் கேட்பான்..

மெப்கோ ஷெலெங் பொறியியற் கல்லூரி ;)

pudugaithendral said...

வாங்க tbcd,
முதல் வருகைக்கு நன்றி,

எனக்கு அண்ணனே இல்லாதபோது
அண்ணமண்டி எங்க?

எந்த ஊர் கல்லூரிங்க இது?

TBCD said...

சிவகாசிக்கும்,விருதுநகருக்கும் இடையில் (சரியா 12 கிமி இரண்டுபுறமும் ) இருக்குங்க..

மங்களூர் சிவா said...

//
அப்பா பயந்து போய் படிப்பை பாதிலேயே நிப்பாட்டிடாரு.
//

நல்லவேளை காலேஜ் தப்பிச்சது!!!!

மங்களூர் சிவா said...

//
TBCD said...

நான் படிச்சதெல்லாம்..பயங்கரமான கல்லூரி..பெயரேச் சொன்னா, எவனாயிருந்தாலும், இரண்டாவது தடவைக் கேட்பான்..

மெப்கோ ஷெலெங் பொறியியற் கல்லூரி ;)

//
இரண்டாவது தடவை இல்லை மூணாவதுதடவையும் கேக்கணும் போல இருக்கே!!!

ரசிகன் said...

உண்மையிலேயே கல்லூரி நினைவுகள் மறக்க முடியாதவைதான்..
அருமையா சொல்லியிருக்கிங்க...
சூப்பர்..:)

pudugaithendral said...

வந்தவங்க எல்லோருக்கும் நன்றி