Wednesday, January 23, 2008

M.SC HUSBANDOLOGY - முதுகலை இல்லறவியல்: பாடம் 5

போய்வா! என் கணவா! அலுவலகத்துக்கு நீ போய்வா- பகுதி 1

ரங்கமணிகளிடம்," ஏங்க! இன்னனக்கு உங்களால லீவு போட முடியுமா?" என்று கேட்டுப் பாருங்கள்!!

அவ்வளவுதான் உடனே ரங்கமணிக்கு கைகாலெல்லாம் உதறலெடுக்கும், கேட்கக்கூடாத ஒன்றை கேட்டதுபோல் டென்ஷனாகிவிடுவார்கள். விழிகளை உருட்டி, பேஜாராகி, நெற்றிக் கண் இருந்தால் உங்களைப் பஸ்மம் ஆக்கிவிடுவார்கள்.

ரங்கமணிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "விடுப்பு" (விஜயகாந்த் ஸ்டைலில் படிங்க. அப்பத்தான் எஃபக்டா இருக்கும்). அவர்களது
அகராதியில் "LEAVE" என்ற சொல்லே கிடையாது.

இதற்கெல்லாம் தங்கமணிகள் டென்ஷன் ஆகக்கூடாது. கூல் :)))

ஒவ்வொரு ரங்கமணிகளும் அவர்கள் வேலைப் பார்க்கும் அலுவலகத்தின் தூண்கள், சுமைதாங்கிகள். ரங்கமணிகள் ஒரு நாள் போகவில்லை என்றாலும் ஸ்தம்பித்துவிடும். (சும்மா. நினைச்சுக்கறது தான்!!!)

"நீங்க ஒரு நாள் இல்லாட்டியும், ஆபிஸ்ல வேலையே ஆவாது. அப்படியே இருக்கும். நீங்க இந்த ஆபீஸுக்கு ரொம்ப முக்கியம் சார்", அப்படின்னு, சகஊழியர்களோ, அதிகாரிகளோ சொல்ற புகழ்ச்சி வார்த்தைகளுக்கு மயங்கி
"மந்திரிச்சு விட்ட" மாதிரியே ஒரு கிக்கோட இருப்பார்கள்.

வேலையும் ஒரு போதை மாதிரிதாங்க. அதிகமா, எப்பப்பாரு வேலை, வேலைன்னு இருக்கறவங்கள "workholic" அப்படின்னு தானே சொல்வாங்க?!!

இந்த போதை அதிகமாகி, அதாவது இந்த போதைக்கு அடிமை ஆனவர்களால் அலுவலகம் செல்லாமல் இருக்க முடியாது.

ஓய்வு பெறும் வரை இதே மாதிரி ஓடும் இவர்கள், இவர்களின் ஓய்வுக்குப்பிறகும் அந்த அலுவலகம் அதேமாதிரியே இருக்கும் என்பதை உணராதவர்கள். தங்கமணிகள் சொன்னால் கோபம்தான் வரும். மனக்கசப்பு உண்டாகும்.

போகட்டும் தடுக்காதீர்கள். அவர்கள் ஆனந்தமாய அலுவலகம் போனால்தான் தங்கமணிகளுக்கு நல்லது. ஆனந்தம்! பரமானந்தம். எப்படி? அடுத்த வாரம் அதான்.

டிஸ்கி: இந்தப் பதிவை படித்துவிட்டு ர.மணிகள். நாங்கள் வேலைக்குப் போனால்தான் அது வாங்க முடியும், இது வாங்கமுடியும், சாப்பிடமுடியும், தூங்க முடியும்........ அப்படி, இப்படின்னு சண்டைக்கோழிகளாய் தாக்க வருவார்கள்.

ஐயா!!! நாங்கள் உங்களை வேலைக்கே போகவேண்டாம் என்று சொல்லவில்லை. முக்கியமானது, அவசரம் போன்றவற்றிற்கும் விதிவிலக்கு
இல்லாமல் வேலைப் பார்ப்பதைத் தான் சொல்கிறோம்.

130 comments:

மங்களூர் சிவா said...

இது என்ன நாலு லைன்ல ஒரு போஸ்ட்டு???

ரங்கமணி விடுப்புல இருக்காரோ!?!?

மங்களூர் சிவா said...

//
ஒவ்வொரு ரங்கமணிகளும் அவர்கள் வேலைப் பார்க்கும் அலுவலகத்தின் தூண்கள், சுமைதாங்கிகள். ரங்கமணிகள் ஒரு நாள் போகவில்லை என்றாலும் ஸ்தம்பித்துவிடும்.
//
சேச்சே அப்பிடி எல்லாம் இல்லைங்க!!

போய் சும்மா உக்காந்துட்டு வர்றதுக்குதான் சம்பளம் சம்பளம்னு ஒண்ணு குடுக்கிறாய்ங்க.

மங்களூர் சிவா said...

//
நீங்க ஒரு நாள் இல்லாட்டியும், ஆபிஸ்ல வேலையே ஆவாது. அப்படியே இருக்கும். நீங்க இந்த ஆபீஸுக்கு ரொம்ப முக்கியம் சார்", அப்படின்னு, சகஊழியர்களோ, அதிகாரிகளோ சொல்ற புகழ்ச்சி வார்த்தைகளுக்கு மயங்கி
//
அவங்களும் ஒரு தங்கமணியோட ரங்கமணிகள்தானே !!

அவங்க எப்பிடி இப்பிடி எல்லாம் சொல்லுவாங்க அவங்களும் சும்மா உக்காந்துட்டுதான் சம்பளம் வாங்குவாங்க!!

pudugaithendral said...

ரங்கமணிகள் லீவு எடுக்காமல் அலுவலகம் போகும் பதிவை ரங்கமணி வீட்டில் இருக்கும் போதா போடுவோம்.

அதத்தவிற எங்க வேலையெல்லாம் முடிச்சிட்டுத் தான் சாமி பதிவுகள் போடவருவோம்.

மங்களூர் சிவா said...

//
மந்திரிச்சு விட்ட" மாதிரியே ஒரு கிக்கோட இருப்பார்கள்.
//
வீட்டுல தங்கமணிகளின் மந்திரிப்புக்கு இது பரவாயில்லை என்ற ஒரு அல்ப சந்தோசம்தான்!!

pudugaithendral said...

சிவா,
//
ஒவ்வொரு ரங்கமணிகளும் அவர்கள் வேலைப் பார்க்கும் அலுவலகத்தின் தூண்கள், சுமைதாங்கிகள். ரங்கமணிகள் ஒரு நாள் போகவில்லை என்றாலும் ஸ்தம்பித்துவிடும்.
//
சேச்சே அப்பிடி எல்லாம் இல்லைங்க!!

போய் சும்மா உக்காந்துட்டு வர்றதுக்குதான் சம்பளம் சம்பளம்னு ஒண்ணு குடுக்கிறாய்ங்க.//

இதை நான் எதிரி பார்ததது தான். ஏன் அப்படின்னு கேட்டா. சரியா புரிஞ்சுக்காததனாலத் தானே இப்படி பின்னூட்டம் போடறீங்க.

வேலையே வாங்கம சம்பளம் தரமாட்டங்க. கொடுக்கற சம்பளத்துக் தக்க ரத்தத்தை உரிஞ்சுட்டுத் தான் விடுவாங்க.

நானும் வேலைக்குப் போகும் பெண்தான்.

மங்களூர் சிவா said...

//
இந்த போதை அதிகமாகி, அதாவது இந்த போதைக்கு அடிமை ஆனவர்களால் அலுவலகம் செல்லாமல் இருக்க முடியாது.

ஓய்வு பெறும் வரை இதே மாதிரி ஓடும் இவர்கள், இவர்களின் ஓய்வுக்குப்பிறகும் அந்த அலுவலகம் அதேமாதிரியே இருக்கும் என்பதை உணராதவர்கள்.
//
சமூக சேவை செய்யறதுக்கா அலுவலகம் போறோம் !?!?

போனாதானுங்க சம்பளம் கிடைக்கும் (வேலை பார்த்தால் என சொல்லவில்லை கவனிக்கவும்)

ஓய்வுபெற்ற பிறகும் அந்த அலுவலகம் அங்கனதான் இருக்கும் புதுசா ஒருத்தன் வந்து போய்கினு இருப்பான்!!

மங்களூர் சிவா said...

//
போகட்டும் தடுக்காதீர்கள். அவர்கள் ஆனந்தமாய அலுவலகம் போனால்தான் தங்கமணிகளுக்கு நல்லது. ஆனந்தம்! பரமானந்தம்
//
அப்புறம் என்ன பிரச்சனை!?!?

நிம்மதியா விடுங்களேன் ரங்கமணிகளை!!

pudugaithendral said...

சிச்சுவேஷனுக்கு ஒரு பாட்டு சொல்லட்டுமா சிவா,

ஆரம்பம் ஆரம்பம் ஆனதே,
சிவாவின் புலம்பல்கள் ஆரம்பம் ஆனதே.

புலம்பி முடிங்க!!

மங்களூர் சிவா said...

//
டிஸ்கி: இந்தப் பதிவை படித்துவிட்டு ர.மணிகள். நாங்கள் வேலைக்குப் போனால்தான் அது வாங்க முடியும், இது வாங்கமுடியும், சாப்பிடமுடியும், தூங்க முடியும்........ அப்படி, இப்படின்னு சண்டைக்கோழிகளாய் தாக்க வருவார்கள்.
//

சேச்சே நம்ம பாட்டன் பூட்டன் எல்லாம் ஷாப்பிங் ப்ளாசா நடத்தும்போது நாம காசு குடுத்தா வாங்கணும்!? காசு குடுத்தாதான் அவங்க வாங்கிப்பாங்களா??

நாங்க என்ன சண்டைபிடிக்கவா அலைஞ்சிகிட்டிருக்கோம்!!

பாச மலர் / Paasa Malar said...

லீவா..சும்மாப் போட்டாலும் போடுவாங்க..நம்ம சொல்லிப் போட்டுட்டா என்ன ஆகிறது..

மங்களூர் சிவா said...

//
ஐயா!!! நாங்கள் உங்களை வேலைக்கே போகவேண்டாம் என்று சொல்லவில்லை. முக்கியமானது, அவசரம் போன்றவற்றிற்கும் விதிவிலக்கு
இல்லாமல் வேலைப் பார்ப்பதைத் தான் சொல்கிறோம்.
//
எது அவசரம்னு / அவசியம்னு ரங்கமணிகளுக்கு தெரியாதா அவ்ளோ கூமுட்டைகளாவா இருக்கோம் இந்த ஆண் வர்கம்??

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
ரங்கமணிகள் லீவு எடுக்காமல் அலுவலகம் போகும் பதிவை ரங்கமணி வீட்டில் இருக்கும் போதா போடுவோம்.

அதத்தவிற எங்க வேலையெல்லாம் முடிச்சிட்டுத் தான் சாமி பதிவுகள் போடவருவோம்.
//
சரி அப்பிடி என்ன வெட்டி முறிக்கறாங்க தங்கமணிகள் கொஞ்சம் சபீனா போட்டு வெளக்குங்களேன்!!

pudugaithendral said...

வாங்க பாசமலர்,
//லீவா..சும்மாப் போட்டாலும் போடுவாங்க..நம்ம சொல்லிப் போட்டுட்டா என்ன ஆகிறது//

சரியா சொன்னீங்க. நாம் சொல்லி அவங்க லீவு போட்டுட்டா பிரஸ்டிஜ் என்ன ஆவுறது?

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

இதை நான் எதிரி பார்ததது தான். ஏன் அப்படின்னு கேட்டா. சரியா புரிஞ்சுக்காததனாலத் தானே இப்படி பின்னூட்டம் போடறீங்க.
//

அட சரியா புரிஞ்சிக்காம பதிவே போடறாய்ங்க பின்னூட்டம் போட்டா என்ன??

இத்தினிக்கும் நான் ச்சின்ன பையன் எக்ஸ்பீரீயன்ஸும் இல்லை!!

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
சிச்சுவேஷனுக்கு ஒரு பாட்டு சொல்லட்டுமா சிவா,

ஆரம்பம் ஆரம்பம் ஆனதே,
சிவாவின் புலம்பல்கள் ஆரம்பம் ஆனதே.

புலம்பி முடிங்க!!
//
முடிச்சாச்சு முடிச்சாச்சு பதில் சொல்லுங்க எல்லா பின்னூட்டத்துக்கும்.

pudugaithendral said...

சிவா சொன்னது,
//எது அவசரம்னு / அவசியம்னு ரங்கமணிகளுக்கு தெரியாதா அவ்ளோ கூமுட்டைகளாவா இருக்கோம் இந்த ஆண் வர்கம்??//
நாங்க அவ்வளவு மோசமாத் திட்டல.
அலுவலக வேலைகளைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுதுன்னு சொல்றது உங்களுக்கு கோவமா வருதா? மறுத்தாலும் உண்மை அது தான்.

மங்களூர் சிவா said...

//

பாச மலர் said...
லீவா..சும்மாப் போட்டாலும் போடுவாங்க..நம்ம சொல்லிப் போட்டுட்டா என்ன ஆகிறது..
//
அதுதானே என்னாடா நாம ஒருத்தனே பொலம்பிகிட்டிருக்கோமே கூட யாரும் கம்பெனிக்கு இல்லியேன்னு பாத்தேன்!

pudugaithendral said...

இன்றைக்கு சிறிய வயதுக் காரர்களுக்கு கூட மாரடைப்பு நோய் வருதுன்னா, அதுக்கு முக்கிய காரணமே அலுவலக பணிகள் தரும் மனச்சோர்வுதான்.

அத தளர்த்திக்கிட்டா உங்களுக்கு(ர.மணிகளுக்கு) நல்லது அப்படீங்கற அக்கரையில சொல்றோம்.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

நாங்க அவ்வளவு மோசமாத் திட்டல.
அலுவலக வேலைகளைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுதுன்னு சொல்றது உங்களுக்கு கோவமா வருதா? மறுத்தாலும் உண்மை அது தான்.
//
அதுதானுங்க எல்லாத்துக்கும் பேசிஸ் அடிப்படை ஆதாரமே.

கோவம் எல்லாம் ஒண்ணும் இல்லிங்கோ.

வேலைதான் மொத பொண்டாட்டி அதுக்கப்புறம்தானுங்க மத்ததெல்லாம் தப்பு கிடையாது.

pudugaithendral said...

சிவா சொன்னது.
//அப்புறம் என்ன பிரச்சனை!?!?//

பிரச்சனை இருக்கு நண்பரே. இப்படி அலுவலகம் மாத்திரமே கதி என்று கிடப்பதால்,பிள்ளைகளுக்கும், தகப்பனுக்கும் இடையே விரிசல் விழுகிறது.

நாம் இன்று குழந்தைகளுக்கு அன்பு காட்டத் தவறினால், நாளை முதுமையில் அன்புக்கு ஏங்க வேண்டி வரும்.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

சரியா சொன்னீங்க. நாம் சொல்லி அவங்க லீவு போட்டுட்டா பிரஸ்டிஜ் என்ன ஆவுறது?
//

இதுல பிரஸ்டிஜ் இஸ்யூ ஒண்ணும் இல்லிங்க. நீங்கதான் அப்பிடி நினைக்கிறீங்க போல!!

எங்கம்மா கூடதான் எப்ப போன் பண்ணாலும் எப்ப ஊருக்கு வர எப்ப ஊருக்கு வரன்றாங்க நான் வாரத்துக்கு மூனுதரம் போன் பண்ணுவேன்

எப்ப முக்கியமோ(!?) அப்ப லீவு போட்டுட்டு போக வேண்டியதுதான்.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
இன்றைக்கு சிறிய வயதுக் காரர்களுக்கு கூட மாரடைப்பு நோய் வருதுன்னா, அதுக்கு முக்கிய காரணமே அலுவலக பணிகள் தரும் மனச்சோர்வுதான்.

அத தளர்த்திக்கிட்டா உங்களுக்கு(ர.மணிகளுக்கு) நல்லது அப்படீங்கற அக்கரையில சொல்றோம்.
//
அதுக்கு லீவு போட்டுட்டு வீட்டுல உக்காந்துகிட்டா சரியா போயிடுமா??

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
சிவா சொன்னது.
//அப்புறம் என்ன பிரச்சனை!?!?//

பிரச்சனை இருக்கு நண்பரே. இப்படி அலுவலகம் மாத்திரமே கதி என்று கிடப்பதால்,பிள்ளைகளுக்கும், தகப்பனுக்கும் இடையே விரிசல் விழுகிறது.

நாம் இன்று குழந்தைகளுக்கு அன்பு காட்டத் தவறினால், நாளை முதுமையில் அன்புக்கு ஏங்க வேண்டி வரும்.
//
இதுக்கும் 'லீவு போட சொன்னா போட மாட்டாங்க ரங்கமணிகள்'கும் என்ன சம்பந்தம்!?!?

Sanjai Gandhi said...

//போய்வா! என் கணவா! அலுவலகத்துக்கு நீ போய்வா-//

கணவரை இப்படி மரியாதை இல்லாமல் பேசும் பெண்ணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன். :)

Sanjai Gandhi said...

//ரங்கமணிகளிடம்," ஏங்க! இன்னனக்கு உங்களால லீவு போட முடியுமா?" என்று கேட்டுப் பாருங்கள்!!

அவ்வளவுதான் உடனே ரங்கமணிக்கு கைகாலெல்லாம் உதறலெடுக்கும், கேட்கக்கூடாத ஒன்றை கேட்டதுபோல் டென்ஷனாகிவிடுவார்கள். விழிகளை உருட்டி, பேஜாராகி, நெற்றிக் கண் இருந்தால் உங்களைப் பஸ்மம் ஆக்கிவிடுவார்கள்.//

பின்ன.. தங்கமணிங்க இமசைல இருந்து தப்பிக்க தான் ரங்கமணிங்க அலுவலகமே போறாங்க.. அதுக்கும் வேட்டு வச்சா எப்படி? :P

pudugaithendral said...

சிவா,
//சரி அப்பிடி என்ன வெட்டி முறிக்கறாங்க தங்கமணிகள் கொஞ்சம் சபீனா போட்டு வெளக்குங்களேன்!!//
உங்களுக்கு கல்யாணம் ஆகட்டும். அதுக்கப்புறம் உங்க மனைவிகிட்ட சொல்லி டிரீட்மென்ட் கொடுக்கச் சொல்றேன்.

அப்புறம் தெரியும் வீட்டுல என்ன வேலை இருக்குன்னு.

தெலுங்கு புரியும்னா "MR.PELLAM" ஆப்படீன்னு ராஜேந்திர பிரசாத் நடிச்ச படம் ஒண்ணு இருக்கு. இணையத்துல தேடிப் பாருங்க.

Sanjai Gandhi said...

//ரங்கமணிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "விடுப்பு" (விஜயகாந்த் ஸ்டைலில் படிங்க. அப்பத்தான் எஃபக்டா இருக்கும்). அவர்களது
அகராதியில் "LEAVE" என்ற சொல்லே கிடையாது.//

நிஜம் தான். சிலரின் அகராதிகளில் இருந்து தப்பிக்க தான் லீவ் என்ற வார்த்தை பிடிக்காமல் போகிறது! :P

Sanjai Gandhi said...

//போகட்டும் தடுக்காதீர்கள். அவர்கள் ஆனந்தமாய அலுவலகம் போனால்தான் தங்கமணிகளுக்கு நல்லது. ஆனந்தம்! பரமானந்தம். எப்படி? அடுத்த வாரம் அதான்.//

யக்கா.. இப்ப நீ இன்னா சொல்ல வர... வேலக்கி போனும்னு சொல்லிகினு கீரயா .. போவாத ஊட்டாண்டயே குந்திகினு கெடனு சொல்லிகினு கீரியா.. ஒன்னுமே பிரிலகா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;((

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

சிவா,
உங்களுக்கு கல்யாணம் ஆகட்டும். அதுக்கப்புறம் உங்க மனைவிகிட்ட சொல்லி டிரீட்மென்ட் கொடுக்கச் சொல்றேன்.

அப்புறம் தெரியும் வீட்டுல என்ன வேலை இருக்குன்னு.

தெலுங்கு புரியும்னா "MR.PELLAM" ஆப்படீன்னு ராஜேந்திர பிரசாத் நடிச்ச படம் ஒண்ணு இருக்கு. இணையத்துல தேடிப் பாருங்க.
//

நீங்க கண்டிப்பா போன் போட்டாச்சும் சொல்லுவீங்க எனக்கு நம்பிக்கை இருக்கு அது வேற விசயம் விடுங்க!!

உங்களை கேட்டா அந்த வீடியோ தேடிப்பாரு இந்த படம் தேடிப்பாருன்னா என்ன அர்த்தம்!?!?!

நீங்கதானே ஹஸ்பண்டாலஜி லெக்சரர்!!

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
சிவா,

அப்புறம் தெரியும் வீட்டுல என்ன வேலை இருக்குன்னு.
//

என்னமோ கல்யாணத்துக்கப்புறம்தான் நாங்கெல்லாம் சோத்தையே கண்ணுல பாக்குறமாதிரியும் , துணிமணியெல்லாம் தொவெச்சு போட்டுக்கிறமாதிரியும் என்னா ஒரு அடாவடித்தனம் பண்றீங்க!!!

Sanjai Gandhi said...

//ஐயா!!! நாங்கள் உங்களை வேலைக்கே போகவேண்டாம் என்று சொல்லவில்லை. முக்கியமானது, அவசரம் போன்றவற்றிற்கும் விதிவிலக்கு
இல்லாமல் வேலைப் பார்ப்பதைத் தான் சொல்கிறோம்.//
யக்கா.. இதுக்கு நீங்க டாட்டாக்களையிம் அம்பானிக்களையும் கண்ணாலம் கட்டிகினு இருக்கனும்.. நிங்க சொல்லும் போது எல்லாம் லீவ் எடுத்தாக்கா.. மொத்தமா சங்கு ஊதி ஊட்டுக்கு அனுப்பிடுவாங்க.

மங்களூர் சிவா said...

//
SanJai said...
//போய்வா! என் கணவா! அலுவலகத்துக்கு நீ போய்வா-//

கணவரை இப்படி மரியாதை இல்லாமல் பேசும் பெண்ணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன். :)
//
அண்ணா வாண்ணா!!

மங்களூர் சிவா said...

//
SanJai said...
//ரங்கமணிகளிடம்," ஏங்க! இன்னனக்கு உங்களால லீவு போட முடியுமா?" என்று கேட்டுப் பாருங்கள்!!

அவ்வளவுதான் உடனே ரங்கமணிக்கு கைகாலெல்லாம் உதறலெடுக்கும், கேட்கக்கூடாத ஒன்றை கேட்டதுபோல் டென்ஷனாகிவிடுவார்கள். விழிகளை உருட்டி, பேஜாராகி, நெற்றிக் கண் இருந்தால் உங்களைப் பஸ்மம் ஆக்கிவிடுவார்கள்.//

பின்ன.. தங்கமணிங்க இமசைல இருந்து தப்பிக்க தான் ரங்கமணிங்க அலுவலகமே போறாங்க.. அதுக்கும் வேட்டு வச்சா எப்படி? :P
//

'கப்'னு மேட்டர்-க்கு வந்திட்டியே ராசா!!

pudugaithendral said...

//வேலைதான் மொத பொண்டாட்டி அதுக்கப்புறம்தானுங்க மத்ததெல்லாம் தப்பு கிடையாது.//

அதேதான் சிவா,
பொதுவா ரண்டாவது சம்சாரத்து மேல்தான் அன்பா, பாசமா இருந்து நல்ல கவனிச்சுக்குவாங்க.

இங்க கதையே தலகீழா இல்ல இருக்கு?

மங்களூர் சிவா said...

//
SanJai said...

நிஜம் தான். சிலரின் அகராதிகளில் இருந்து தப்பிக்க தான் லீவ் என்ற வார்த்தை பிடிக்காமல் போகிறது! :P

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

Sanjai Gandhi said...

//
அதேதான் சிவா,
பொதுவா ரண்டாவது சம்சாரத்து மேல்தான் அன்பா, பாசமா இருந்து நல்ல கவனிச்சுக்குவாங்க.

இங்க கதையே தலகீழா இல்ல இருக்கு?//

தோடா.. இன்னாவோ ஊர்ல கீர எல்லாரும் 2 பொண்டாட்டிக் காரய்ங்க என்பது மாதிரி இல்ல பேசறிங்க...:)

pudugaithendral said...

//எங்கம்மா கூடதான் எப்ப போன் பண்ணாலும் எப்ப ஊருக்கு வர எப்ப ஊருக்கு வரன்றாங்க நான் வாரத்துக்கு மூனுதரம் போன் பண்ணுவேன்

எப்ப முக்கியமோ(!?) அப்ப லீவு போட்டுட்டு போக வேண்டியதுதான்//

அம்மா அன்பால கூப்பிடறாங்க. எப்ப முக்கியமோ அப்ப போவீங்க சரி. உங்க அம்மா உங்க வருகையும், உங்க அருகாமையும் அவசியம்னு நினைக்கற ஒரு நிகழ்ச்சி, உங்களுக்கு இது முக்கியமல்லன்னு படுமே அது தப்பு.

நீங்க பார்க்கற கோணம் வேற. (ஆண்கள்)

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

அதேதான் சிவா,
பொதுவா ரண்டாவது சம்சாரத்து மேல்தான் அன்பா, பாசமா இருந்து நல்ல கவனிச்சுக்குவாங்க.

இங்க கதையே தலகீழா இல்ல இருக்கு?

//
அப்பிடியா புது தகவலா இருக்கு மைண்ட்ல வெச்சிக்கறேன்

நான் போட்ட கமெண்ட்ல பாதிய கட் பண்ணி பதில் சொல்லீட்டீங்க.

//
அதுதானுங்க எல்லாத்துக்கும் பேசிஸ் அடிப்படை ஆதாரமே.
//
இல்லைனா சர்தான் போய்யானு பொட்டிய தூக்கீனு போயிட மாட்டீங்க!!அப்பன் வீட்டுக்கு!!!

Sanjai Gandhi said...

//அம்மா உங்க வருகையும், உங்க அருகாமையும் அவசியம்னு நினைக்கற ஒரு நிகழ்ச்சி, உங்களுக்கு இது முக்கியமல்லன்னு படுமே அது தப்பு.

நீங்க பார்க்கற கோணம் வேற. (ஆண்கள்)//

அதுக்காக மாசத்துக்கு 4 நாளைக்கு இப்டி அவசியம்னு நெனைச்சா .. தங்கமணிகள் மாதிரி .. என்ன பன்றது?

நீங்க பார்க்கிற கோணம் வேற( பெண்கள்).. :)

pudugaithendral said...

//அதுக்கு லீவு போட்டுட்டு வீட்டுல உக்காந்துகிட்டா சரியா போயிடுமா??//

சும்மா லீவு போட்டுட்டு வீட்டுல உர்க்கார சொல்லல.

அலுவல டென்ஷன்களிருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு,have a break னு சொல்வாங்களே அது மாதிரி, வேலைக்குத் திரும்பினால் முன்னை விட ஆக்கப்பூர்வமா வேலை பார்க்கலாம்.

pudugaithendral said...

தன்னோட உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல், டாக்டர் ரெஸ்ட் எடுக்கச்சொல்லியும் அடுத்தநாளே வேலைக்குப் போகும் ர.மணிகள் இருக்காங்க.

pudugaithendral said...

நிஜம் தான். சிலரின் அகராதிகளில் இருந்து தப்பிக்க தான் லீவ் என்ற வார்த்தை பிடிக்காமல் போகிறது! :P

இப்படி சொல்லிக் கிட்டு திரிங்க. பட்டாத்தான் தெரியும்

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
//எங்கம்மா கூடதான் எப்ப போன் பண்ணாலும் எப்ப ஊருக்கு வர எப்ப ஊருக்கு வரன்றாங்க நான் வாரத்துக்கு மூனுதரம் போன் பண்ணுவேன்

எப்ப முக்கியமோ(!?) அப்ப லீவு போட்டுட்டு போக வேண்டியதுதான்//

அம்மா அன்பால கூப்பிடறாங்க. எப்ப முக்கியமோ அப்ப போவீங்க சரி. உங்க அம்மா உங்க வருகையும், உங்க அருகாமையும் அவசியம்னு நினைக்கற ஒரு நிகழ்ச்சி, உங்களுக்கு இது முக்கியமல்லன்னு படுமே அது தப்பு.

நீங்க பார்க்கற கோணம் வேற. (ஆண்கள்)
//

வாரத்துக்கு மூணுதரம் போன் பண்ணும் போதும் கூப்பிடறாங்களே அது அவங்க அறியாமைன்னு உங்களுக்கு தோணலையா?

நாங்கள் பார்க்கும் கோணம் வேறதான்.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
//அதுக்கு லீவு போட்டுட்டு வீட்டுல உக்காந்துகிட்டா சரியா போயிடுமா??//

சும்மா லீவு போட்டுட்டு வீட்டுல உர்க்கார சொல்லல.

அலுவல டென்ஷன்களிருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு,have a break னு சொல்வாங்களே அது மாதிரி, வேலைக்குத் திரும்பினால் முன்னை விட ஆக்கப்பூர்வமா வேலை பார்க்கலாம்.

//

அதுக்குதான் ஞாயிறு, சில அலுவலகங்களில் சனி மற்றும் ஞாயிறு.

அது மட்டுமில்லாமல் அரசு விடுமுறை நாட்கள், அதுமில்லாம கேசுவல் லிவ் 15 - 18 நாட்கள், இயர்ண்ட் லீவ் 30 நாள், எல்.டி.ஏ கம்பல்ஸரி 4 நாள் லீவு குடுக்கறாங்களே பத்தாதா?

நீங்க ரங்கமணிகளை 'அவசியமான' காரணத்துக்காக லீவு போட சொன்னால் சொல்லவே தேவை இல்லை கண்டிப்பா அவங்களே போட்டிடுவாங்க. unless and otherwise there is no important meating or auditing such things are there.

pudugaithendral said...

வாங்க சஞ்சய்
//இதுக்கும் 'லீவு போட சொன்னா போட மாட்டாங்க ரங்கமணிகள்'கும் என்ன சம்பந்தம்!?!?//

பசங்க படிக்கிற பள்ளிக்கூடத்திற்கு எததனை தகப்பன்கள் parens meeting attend பண்ண வந்திருப்பாங்க.

வேலை வேலை. இப்படி ஓடுற தகப்பன எந்தகுழந்தைக்கு பிடிக்கும்.

ஒரு கதை சொல்வாங்க.
தகப்பனின் ஒருமணி நேர சம்பளத்தை கொடுத்து ஒரு மகன் தன்னோடு 1 மணி நேரம் இருக்க முடியுமா என்று கேட்டானாம். அந்த பணத்தை குழந்தை கஷ்டப்பட்டு சேமித்துக் கொடுத்ததாம்.

இதுதான் நிலை. கல்யாணத்திற்கு முன்னாடியே நல்ல பிள்ளையா வேலைக்கு ஒரு வரமுறை வச்சுக்குங்க.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
தன்னோட உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல், டாக்டர் ரெஸ்ட் எடுக்கச்சொல்லியும் அடுத்தநாளே வேலைக்குப் போகும் ர.மணிகள் இருக்காங்க.
//

அப்பிடியெல்லாம் போறாங்கண்ணா அதுக்கு அத விட முக்கியமான காரணம் இருக்கும்

pudugaithendral said...

//போய்வா! என் கணவா! அலுவலகத்துக்கு நீ போய்வா-//

கணவரை இப்படி மரியாதை இல்லாமல் பேசும் பெண்ணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன். :)//

இதுல என்ன சஞ்சய் மரியாதை குறைஞ்சு போச்சு.

அவ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

பசங்க படிக்கிற பள்ளிக்கூடத்திற்கு எததனை தகப்பன்கள் parens meeting attend பண்ண வந்திருப்பாங்க.

வேலை வேலை. இப்படி ஓடுற தகப்பன எந்தகுழந்தைக்கு பிடிக்கும்.

ஒரு கதை சொல்வாங்க.
தகப்பனின் ஒருமணி நேர சம்பளத்தை கொடுத்து ஒரு மகன் தன்னோடு 1 மணி நேரம் இருக்க முடியுமா என்று கேட்டானாம். அந்த பணத்தை குழந்தை கஷ்டப்பட்டு சேமித்துக் கொடுத்ததாம்.

இதுதான் நிலை. கல்யாணத்திற்கு முன்னாடியே நல்ல பிள்ளையா வேலைக்கு ஒரு வரமுறை வச்சுக்குங்க.
//

இந்த கதையெல்லாம் எங்களுக்கும் அதாவது ரங்கமணிகளுக்கும் தெரியும்.

பிள்ளைகளோட பேரண்ட் மீட்டிங் அட்டண்ட் பண்ண ரங்கமணிகளை நீங்க பாத்ததே இல்லியா அது யார் தப்பு!?!?!

மொதல்ல ஸ்கூல் சிஸ்டம் சரியா இருக்கா அவனுங்க தோணினப்ப வைப்பானுங்க ஏன் சனிக்கிழமை ஞாயித்துகிழமை வைக்ககூடாதா.

Sanjai Gandhi said...

//வாங்க சஞ்சய்
//இதுக்கும் 'லீவு போட சொன்னா போட மாட்டாங்க ரங்கமணிகள்'கும் என்ன சம்பந்தம்!?!?//

பசங்க படிக்கிற பள்ளிக்கூடத்திற்கு எததனை தகப்பன்கள் parens meeting attend பண்ண வந்திருப்பாங்க.

வேலை வேலை. இப்படி ஓடுற தகப்பன எந்தகுழந்தைக்கு பிடிக்கும்.//

எச்சுச்மீ... இந்த கமெண்ட்க்கும் எனக்கும் இன்னாமே சம்பந்தம்?அது சிவா மாம்ஸ் கேட்ட கேள்வி.. பதில் எனக்கா? :)

இதான் உங்க பொறுப்புணர்ச்சி... எல்லாத்தயும் இப்டி அவசர கதியில தப்பு தப்பா பேச வேண்டியது. எப்போ தான் ரங்கமணிகள் தங்கமணிகள சரியா புரிஞ்சிக்க போறிங்களோ? ;(

Sanjai Gandhi said...

//சும்மா லீவு போட்டுட்டு வீட்டுல உர்க்கார சொல்லல.//

எதுக்கு சொல்லனும்.. ஆஃபிஸ்ல இதத தான பண்ணிட்டு இருக்கோம்.. :P

//அலுவல டென்ஷன்களிருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு,have a break னு சொல்வாங்களே அது மாதிரி, வேலைக்குத் திரும்பினால் முன்னை விட ஆக்கப்பூர்வமா வேலை பார்க்கலாம்.//

ஓய்வில்லாம டென்ஷனோட வேல பாக்கிறோம்னு நீங்களா தப்பா புரிஞ்சிகிட்டா நாங்க இன்னா பண்ண முடியும்?.. அப்பாடா என்னா ஒரு அக்கறை.. முடியல.. :P

pudugaithendral said...

பின்ன.. தங்கமணிங்க இமசைல இருந்து தப்பிக்க தான் ரங்கமணிங்க அலுவலகமே போறாங்க.. அதுக்கும் வேட்டு வச்சா எப்படி? :P//

அப்படி ஒரு நினைப்பு. உங்க இம்சையிலிருந்து தங்கமணிகளுக்கு தப்பிக்கத்தான் வழியே இல்லை.

மங்களூர் சிவா said...

//
SanJai said...
//வாங்க சஞ்சய்
//இதுக்கும் 'லீவு போட சொன்னா போட மாட்டாங்க ரங்கமணிகள்'கும் என்ன சம்பந்தம்!?!?//

பசங்க படிக்கிற பள்ளிக்கூடத்திற்கு எததனை தகப்பன்கள் parens meeting attend பண்ண வந்திருப்பாங்க.

வேலை வேலை. இப்படி ஓடுற தகப்பன எந்தகுழந்தைக்கு பிடிக்கும்.//

எச்சுச்மீ... இந்த கமெண்ட்க்கும் எனக்கும் இன்னாமே சம்பந்தம்?அது சிவா மாம்ஸ் கேட்ட கேள்வி.. பதில் எனக்கா? :)

இதான் உங்க பொறுப்புணர்ச்சி... எல்லாத்தயும் இப்டி அவசர கதியில தப்பு தப்பா பேச வேண்டியது. எப்போ தான் ரங்கமணிகள் தங்கமணிகள சரியா புரிஞ்சிக்க போறிங்களோ? ;(

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்

pudugaithendral said...

யக்கா.. இப்ப நீ இன்னா சொல்ல வர... வேலக்கி போனும்னு சொல்லிகினு கீரயா .. போவாத ஊட்டாண்டயே குந்திகினு கெடனு சொல்லிகினு கீரியா.. ஒன்னுமே பிரிலகா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;((//

தம்பி,,
வேலக்கி போக வேணாம்னு சொல்லல. என்னைக்காவது லீவு போடச்சொன்னா குதிப்பாங்க அப்படின்னு தெரியாத, புரியாத புதுசா கண்ணால கட்டிகப்போர, கட்டிக்கிட்ட த.மணிகளுக்கு சொல்றேன்.
ஊட்டாண்ட குந்தச் சொன்னா என்ன ஆகும்னு அடுத்த பாடத்துல சொல்றேன். அதுவரைக்கும் பொறுமையா இருக்கனும்

pudugaithendral said...

உங்களை கேட்டா அந்த வீடியோ தேடிப்பாரு இந்த படம் தேடிப்பாருன்னா என்ன அர்த்தம்!?!?!

நீங்கதானே ஹஸ்பண்டாலஜி லெக்சரர்!!

மங்களூர் சிவா,
வீட்டுப் பாடமா அந்த வீடியோ பாருங்கன்னு சொன்னா, டீச்சரையே கேள்வி கேட்கறதா?

Sanjai Gandhi said...

//அப்படி ஒரு நினைப்பு. உங்க இம்சையிலிருந்து தங்கமணிகளுக்கு தப்பிக்கத்தான் வழியே இல்லை.//

இம்சைனு தெரியுதுல.. அப்புறம் இன்னாத்துக்கு கம்முனு வேலக்கி போறவங்கள வசப் படில வந்து மடக்கினு லீவ் போடு லீவ் போனு டார்ச்சர் குடுக்கறிங்களாம்?..

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

தம்பி,,
வேலக்கி போக வேணாம்னு சொல்லல. என்னைக்காவது லீவு போடச்சொன்னா குதிப்பாங்க அப்படின்னு தெரியாத, புரியாத புதுசா கண்ணால கட்டிகப்போர, கட்டிக்கிட்ட த.மணிகளுக்கு சொல்றேன்.
ஊட்டாண்ட குந்தச் சொன்னா என்ன ஆகும்னு அடுத்த பாடத்துல சொல்றேன். அதுவரைக்கும் பொறுமையா இருக்கனும்
//

வேலைக்கு இன்னிக்கு போ அப்பிடினா போகோனும் போவாத இன்னிக்கு அப்பிடின்னா போககூடாது இதுதான் தங்கமணிகளுக்கு, வருங்கால தங்கமணிகளுக்கு நீங்க குடுக்கற அட்வைஸா!!??

அப்பிடினா எல்லா தங்கமணிகளும் இந்த வேலைய விட்டுபுட்டு கூலி வேலைக்குதான் போகோனும் :(

pudugaithendral said...

//யக்கா.. இதுக்கு நீங்க டாட்டாக்களையிம் அம்பானிக்களையும் கண்ணாலம் கட்டிகினு இருக்கனும்.. நிங்க சொல்லும் போது எல்லாம் லீவ் எடுத்தாக்கா.. மொத்தமா சங்கு ஊதி ஊட்டுக்கு அனுப்பிடுவாங்க.//

சொல்லும்போதெல்லாம் லீவு எடுக்கச் சொல்லல. வேலையின் முக்கியத்துவம் புரியாம லீவு எடுக்கச்சொல்ல த.மணிகள் ஒன்னும் தெரியாத மண்ணாங்கட்டிகள் அல்ல.

மங்களூர் சிவா said...

//
SanJai said...
//ஐயா!!! நாங்கள் உங்களை வேலைக்கே போகவேண்டாம் என்று சொல்லவில்லை. முக்கியமானது, அவசரம் போன்றவற்றிற்கும் விதிவிலக்கு
இல்லாமல் வேலைப் பார்ப்பதைத் தான் சொல்கிறோம்.//
யக்கா.. இதுக்கு நீங்க டாட்டாக்களையிம் அம்பானிக்களையும் கண்ணாலம் கட்டிகினு இருக்கனும்.. நிங்க சொல்லும் போது எல்லாம் லீவ் எடுத்தாக்கா.. மொத்தமா சங்கு ஊதி ஊட்டுக்கு அனுப்பிடுவாங்க.
//

அண்ணாத்தே நம்மளைவிட டாட்டாக்களுக்கும் அம்பானிகளுக்கும்தான் பொறுப்பு அதிகம் கண்டிப்பாக.

வேலைல நாம சரியா இல்லைனா நமக்குதான் சங்கு

அவங்க சரியா இல்லைனா கம்பெனிக்கே சங்கு!!!

pudugaithendral said...

//தோடா.. இன்னாவோ ஊர்ல கீர எல்லாரும் 2 பொண்டாட்டிக் காரய்ங்க என்பது மாதிரி இல்ல பேசறிங்க...:)//

சஞ்சய்,
உங்க ஆள் சொன்ன கூற்றுதான் அது. மங்களூர் சிவாதான் சொன்னாரே வேலைதான் மொத பொண்டாட்டின்னு.

அப்ப எல்ல ர.மணிகளும் ரென்டு பொட்டாட்டிக் காரர்தானெ.

முதல் மனைவி வேலை.
ரண்டாவது மனைவி த.மணி. புரிஞ்சுதா. இது நான் சொல்லலை. உங்க ஆளுதான் சொன்னாரு.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
உங்களை கேட்டா அந்த வீடியோ தேடிப்பாரு இந்த படம் தேடிப்பாருன்னா என்ன அர்த்தம்!?!?!

நீங்கதானே ஹஸ்பண்டாலஜி லெக்சரர்!!

மங்களூர் சிவா,
வீட்டுப் பாடமா அந்த வீடியோ பாருங்கன்னு சொன்னா, டீச்சரையே கேள்வி கேட்கறதா?
//

பாடம் தவறாக நடத்தும் போது கேள்வி கேட்கும் ஒன்றிரெண்டு ஸ்மார்ட் ஸ்டூடண்ட் இருக்கத்தான் செய்வார்கள்.

பதிலை சொல்லுங்க.

pudugaithendral said...

//இல்லைனா சர்தான் போய்யானு பொட்டிய தூக்கீனு போயிட மாட்டீங்க!!அப்பன் வீட்டுக்கு//

நான் போனதில்லை. போறவங்க மனசு என்ன கஷ்டபட்டா அப்படி போவாங்கன்னு நினைச்சுப் பாருங்க

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
//யக்கா.. இதுக்கு நீங்க டாட்டாக்களையிம் அம்பானிக்களையும் கண்ணாலம் கட்டிகினு இருக்கனும்.. நிங்க சொல்லும் போது எல்லாம் லீவ் எடுத்தாக்கா.. மொத்தமா சங்கு ஊதி ஊட்டுக்கு அனுப்பிடுவாங்க.//

சொல்லும்போதெல்லாம் லீவு எடுக்கச் சொல்லல. வேலையின் முக்கியத்துவம் புரியாம லீவு எடுக்கச்சொல்ல த.மணிகள் ஒன்னும் தெரியாத மண்ணாங்கட்டிகள் அல்ல.
//

புடவை எடுக்கவும் , பர்ச்சேஸ் பண்ணவும் போவது எவ்வளவு முக்கியம் என அறியாத ரங்கமணிகள்தான் மண்ணாங்கட்டிகள்!!!!

அவ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
//தோடா.. இன்னாவோ ஊர்ல கீர எல்லாரும் 2 பொண்டாட்டிக் காரய்ங்க என்பது மாதிரி இல்ல பேசறிங்க...:)//

சஞ்சய்,
உங்க ஆள் சொன்ன கூற்றுதான் அது. மங்களூர் சிவாதான் சொன்னாரே வேலைதான் மொத பொண்டாட்டின்னு.

அப்ப எல்ல ர.மணிகளும் ரென்டு பொட்டாட்டிக் காரர்தானெ.

முதல் மனைவி வேலை.
ரண்டாவது மனைவி த.மணி. புரிஞ்சுதா. இது நான் சொல்லலை. உங்க ஆளுதான் சொன்னாரு.

//
இது இல்லாம மூனாவது மனைவி இருந்தாதான் தவறு.

pudugaithendral said...

அது மட்டுமில்லாமல் அரசு விடுமுறை நாட்கள், அதுமில்லாம கேசுவல் லிவ் 15 - 18 நாட்கள், இயர்ண்ட் லீவ் 30 நாள், எல்.டி.ஏ கம்பல்ஸரி 4 நாள் லீவு குடுக்கறாங்களே பத்தாதா?

த.மணிகளே! கேட்டுக்கங்க. அலுவலகத்துல இவ்வளவு லீவு இருக்கு. (சனிக்கிழமை அரைநாள்தான்னு தெரியாதுன்னு சொன்னீங்களே லதா.. (தனியா மடல் போட்டிருந்தார்)

நீங்க ரங்கமணிகளை 'அவசியமான' காரணத்துக்காக லீவு போட சொன்னால் சொல்லவே தேவை இல்லை கண்டிப்பா அவங்களே போட்டிடுவாங்க. unless and otherwise there is no important meating or auditing such things are there.

சொன்னாங்க சொன்னாங்க

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
//இல்லைனா சர்தான் போய்யானு பொட்டிய தூக்கீனு போயிட மாட்டீங்க!!அப்பன் வீட்டுக்கு//

நான் போனதில்லை. போறவங்க மனசு என்ன கஷ்டபட்டா அப்படி போவாங்கன்னு நினைச்சுப் பாருங்க
//
அட நான் என்னமோ உங்களை சொன்னா மாதிரி நான் அப்பிடி இல்லைன்னு ஒரு சுய விளக்கம்!!!

ஏன் சம்பாதிக்காத புருசனை விட்டு அப்பன் வீட்டுக்கு போன பொம்மண்ணாட்டிகள் இல்லையா உங்களுக்கு தெரியாதா??

pudugaithendral said...

புதுகைத் தென்றல் said...
தன்னோட உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல், டாக்டர் ரெஸ்ட் எடுக்கச்சொல்லியும் அடுத்தநாளே வேலைக்குப் போகும் ர.மணிகள் இருக்காங்க.
//

அப்பிடியெல்லாம் போறாங்கண்ணா அதுக்கு அத விட முக்கியமான காரணம் இருக்கும்

மங்களூர் சிவா,
அதெல்லாம் இல்ல. சாருக்கு உடம்பு சரியில்லாட்டி போனாலும் ஆபீசுக்கு உடனே வந்துட்டாருன்னு, ஆபீஸுல பேசுறதை பெருமைப் பொங்க கேட்கனுமே அதுக் காகத்தான்.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
அது மட்டுமில்லாமல் அரசு விடுமுறை நாட்கள், அதுமில்லாம கேசுவல் லிவ் 15 - 18 நாட்கள், இயர்ண்ட் லீவ் 30 நாள், எல்.டி.ஏ கம்பல்ஸரி 4 நாள் லீவு குடுக்கறாங்களே பத்தாதா?

த.மணிகளே! கேட்டுக்கங்க. அலுவலகத்துல இவ்வளவு லீவு இருக்கு. (சனிக்கிழமை அரைநாள்தான்னு தெரியாதுன்னு சொன்னீங்களே லதா.. (தனியா மடல் போட்டிருந்தார்)
//
எப்பவுமே கமெண்ட்ல மொத ரெண்டு லைன் கட் பண்ணீட்டுதான் பதில் சொல்லுவீங்களோ??

எல்லா அலுவலகத்திலும் சனி விடுமுறை கிடையாது.

//

நீங்க ரங்கமணிகளை 'அவசியமான' காரணத்துக்காக லீவு போட சொன்னால் சொல்லவே தேவை இல்லை கண்டிப்பா அவங்களே போட்டிடுவாங்க. unless and otherwise there is no important meating or auditing such things are there.

சொன்னாங்க சொன்னாங்க
//

சொல்லலை சொல்லலை

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
புதுகைத் தென்றல் said...
தன்னோட உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல், டாக்டர் ரெஸ்ட் எடுக்கச்சொல்லியும் அடுத்தநாளே வேலைக்குப் போகும் ர.மணிகள் இருக்காங்க.
//

அப்பிடியெல்லாம் போறாங்கண்ணா அதுக்கு அத விட முக்கியமான காரணம் இருக்கும்

மங்களூர் சிவா,
அதெல்லாம் இல்ல. சாருக்கு உடம்பு சரியில்லாட்டி போனாலும் ஆபீசுக்கு உடனே வந்துட்டாருன்னு, ஆபீஸுல பேசுறதை பெருமைப் பொங்க கேட்கனுமே அதுக் காகத்தான்.

//
இதைத்தான் தவறான புரிதல்ங்கிறது
வழக்கம்போல!

pudugaithendral said...

பிள்ளைகளோட பேரண்ட் மீட்டிங் அட்டண்ட் பண்ண ரங்கமணிகளை நீங்க பாத்ததே இல்லியா அது யார் தப்பு!?!?!

எத்தனை அப்பாக்கள் வர்றாங்கன்னு விரல் விட்டுஎன்னலாம் சிவா.

மொதல்ல ஸ்கூல் சிஸ்டம் சரியா இருக்கா அவனுங்க தோணினப்ப வைப்பானுங்க ஏன் சனிக்கிழமை ஞாயித்துகிழமை வைக்ககூடாதா

இப்படி அனாவசியக் கேள்வி கேட்காம, கூப்பிடறாங்களா? போவனும்னு பொறுப்புணர்ச்சி இல்லாம் இருக்கரீங்களே அதைத்தான் சொல்றேன்.

pudugaithendral said...

எப்போ தான் ரங்கமணிகள் தங்கமணிகள சரியா புரிஞ்சிக்க போறிங்களோ//

நன்றி. சஞ்சய். நாங்க கேட்கவேண்டிய கேள்விய எங்க சார்பா நீங்களே கேட்டுட்டீங்க.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
பிள்ளைகளோட பேரண்ட் மீட்டிங் அட்டண்ட் பண்ண ரங்கமணிகளை நீங்க பாத்ததே இல்லியா அது யார் தப்பு!?!?!

எத்தனை அப்பாக்கள் வர்றாங்கன்னு விரல் விட்டுஎன்னலாம் சிவா.

மொதல்ல ஸ்கூல் சிஸ்டம் சரியா இருக்கா அவனுங்க தோணினப்ப வைப்பானுங்க ஏன் சனிக்கிழமை ஞாயித்துகிழமை வைக்ககூடாதா

இப்படி அனாவசியக் கேள்வி கேட்காம, கூப்பிடறாங்களா? போவனும்னு பொறுப்புணர்ச்சி இல்லாம் இருக்கரீங்களே அதைத்தான் சொல்றேன்.
//

சரி டாபிக் மாறுது இருந்தாலும் பதில் சொல்லுறேன்.

இன்றைக்கு இருக்கும் கல்விமுறையே வணிக நோக்கிலான பேடித்தனமான கல்வி முறை பொறுப்பற்ற முறையில்தான் இருக்கிறது. கேட்டா ப்ராக்டிகலா சொல்லி குட்டுக்கிறாங்களாம்.

தெர்மோகோல்ல அதை செஞ்சுகிட்டு வா , இதை செஞ்சுகிட்டு வா அப்பிடின்னு தெனைக்கும் எழுதி அனுப்பிவிடறது அதை என்ன எல்.கே.ஜி, யூ.கே.ஜி பையன செய்யறான் அவங்க அப்பன் ஆத்தாதான் செய்யறாங்க.

pudugaithendral said...

அட நான் என்னமோ உங்களை சொன்னா மாதிரி நான் அப்பிடி இல்லைன்னு ஒரு சுய விளக்கம்!!!

ஏன் சம்பாதிக்காத புருசனை விட்டு அப்பன் வீட்டுக்கு போன பொம்மண்ணாட்டிகள் இல்லையா உங்களுக்கு தெரியாதா??

சிவா,
கணவன் வேலைக்கு போகாட்டியும் தான் சம்பாதிச்சு போடுற மனைவியையும் பார்த்திருக்கிறேன்.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
எப்போ தான் ரங்கமணிகள் தங்கமணிகள சரியா புரிஞ்சிக்க போறிங்களோ//

நன்றி. சஞ்சய். நாங்க கேட்கவேண்டிய கேள்விய எங்க சார்பா நீங்களே கேட்டுட்டீங்க.
//
என்னத்த கரெக்டாதானே சொல்லீருக்கார்.

இந்த தங்கமணிகள் இப்பிடிதான் லீவுபோடு ஆபீஸ் போவாத , போண்ணு அவங்க இஷ்டத்துக்கு டைரக்ஷன் குடுத்துகிட்டே இருப்பாங்க அதனால சரியா புரிஞ்சிகிட்டு ஆவறத பாருங்கய்யா ரங்கமணிகளானு சொல்லியிருக்கார்.

pudugaithendral said...

இதைத்தான் தவறான புரிதல்ங்கிறது
வழக்கம்போல!

நான் சொல்ல வேண்டியது. பதிவை சரியா புரிஞ்சுக்கலை.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
அட நான் என்னமோ உங்களை சொன்னா மாதிரி நான் அப்பிடி இல்லைன்னு ஒரு சுய விளக்கம்!!!

ஏன் சம்பாதிக்காத புருசனை விட்டு அப்பன் வீட்டுக்கு போன பொம்மண்ணாட்டிகள் இல்லையா உங்களுக்கு தெரியாதா??

சிவா,
கணவன் வேலைக்கு போகாட்டியும் தான் சம்பாதிச்சு போடுற மனைவியையும் பார்த்திருக்கிறேன்.
//
நூற்றில் ஒரு கேஸ் ஐநூற்றில் ஒரு கேஸ் எல்லாம் பொதுப்படையா உதாரணமா வெச்சி பேசப்பிடாது.

நான் சொன்னது 100க்கு 80+ பேர்

pudugaithendral said...

இன்றைக்கு இருக்கும் கல்விமுறையே வணிக நோக்கிலான பேடித்தனமான கல்வி முறை பொறுப்பற்ற முறையில்தான் இருக்கிறது. கேட்டா ப்ராக்டிகலா சொல்லி குட்டுக்கிறாங்களாம்.

//தெர்மோகோல்ல அதை செஞ்சுகிட்டு வா , இதை செஞ்சுகிட்டு வா அப்பிடின்னு தெனைக்கும் எழுதி அனுப்பிவிடறது அதை என்ன எல்.கே.ஜி, யூ.கே.ஜி பையன செய்யறான் அவங்க அப்பன் ஆத்தாதான் செய்யறாங்க.//

நீங்க சொன்னதுல ஒன்னு தான் உண்மை.

ஆத்தாதான் செய்யறாங்க.

pudugaithendral said...

இது என்ன நாலு லைன்ல ஒரு போஸ்ட்டு???

சிவா இதுக்கே 75 கமெண்ட் ஆயிடிச்சு

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
இன்றைக்கு இருக்கும் கல்விமுறையே வணிக நோக்கிலான பேடித்தனமான கல்வி முறை பொறுப்பற்ற முறையில்தான் இருக்கிறது. கேட்டா ப்ராக்டிகலா சொல்லி குட்டுக்கிறாங்களாம்.

//தெர்மோகோல்ல அதை செஞ்சுகிட்டு வா , இதை செஞ்சுகிட்டு வா அப்பிடின்னு தெனைக்கும் எழுதி அனுப்பிவிடறது அதை என்ன எல்.கே.ஜி, யூ.கே.ஜி பையன செய்யறான் அவங்க அப்பன் ஆத்தாதான் செய்யறாங்க.//

நீங்க சொன்னதுல ஒன்னு தான் உண்மை.

ஆத்தாதான் செய்யறாங்க.
//
அவ்வ்வ்வ்

மாமன்காரன் நானே செஞ்சிருக்கேன். ச்சும்மா அடிச்சி விடாதீங்க எல்லாத்தையும் தங்கமணிகள் தலைல தாங்கறாங்கன்னு!!

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
இது என்ன நாலு லைன்ல ஒரு போஸ்ட்டு???

சிவா இதுக்கே 75 கமெண்ட் ஆயிடிச்சு
//
4 லைன்ல தங்கமணிகளை இப்பிடி ஒரு குழப்பு குழபினா ரங்கமணிகளோட நிலமை அந்தோ பரிதாபம்தான்!

pudugaithendral said...

இம்சைனு தெரியுதுல.. அப்புறம் இன்னாத்துக்கு கம்முனு வேலக்கி போறவங்கள வசப் படில வந்து மடக்கினு லீவ் போடு லீவ் போனு டார்ச்சர் குடுக்கறிங்களாம்?..//

சஞ்சய்,
லீவு போடவேண்டியது முக்கியமா இருந்தாத்த்தான் போடச்சொல்றோம்.
புரிஞ்சக்காம சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லக்கூடாது.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
இம்சைனு தெரியுதுல.. அப்புறம் இன்னாத்துக்கு கம்முனு வேலக்கி போறவங்கள வசப் படில வந்து மடக்கினு லீவ் போடு லீவ் போனு டார்ச்சர் குடுக்கறிங்களாம்?..//

சஞ்சய்,
லீவு போடவேண்டியது முக்கியமா இருந்தாத்த்தான் போடச்சொல்றோம்.
புரிஞ்சக்காம சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லக்கூடாது.
//
அவர் என்னாங்க சொல்றார் முக்கியமான விசயமா இருந்தா நாங்க லீவு போட்டிற மாட்டமா?

நீங்க வாசப்படில வந்து மடக்கற அளவு வெச்சிப்பமானு சரியாதானே சொல்றார்.

குசும்பன் said...

//புதுகைத் தென்றல் said...
இது என்ன நாலு லைன்ல ஒரு போஸ்ட்டு???///

ஹி ஹி கும்மி அடிக்கிறதுன்னு முடிவு செஞ்சுட்டா அது ஒரு லைன்ல இருந்தாலும் 500 கமெண்ட் அடிப்போமுங்க!!!

குசும்பன் said...

//சரியா சொன்னீங்க. நாம் சொல்லி அவங்க லீவு போட்டுட்டா பிரஸ்டிஜ் என்ன ஆவுறது?///

என்ன கல்யாணம் ஆனபிறகும் பிரஸ்டிஜ் எல்லாம் இருக்குமா என்னா? யாருங்க அந்த லட்சத்தில் ஒருவன்!!!

குசும்பன் said...

///SanJai said...
//போய்வா! என் கணவா! அலுவலகத்துக்கு நீ போய்வா-//

கணவரை இப்படி மரியாதை இல்லாமல் பேசும் பெண்ணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன். :)///

சஞ்செய் விவரம் தெரியா புள்ளையாக இருக்கே, இதுவே ரொம்ப மரியாதைய்யா, என்னா போ இதுகூட தெரியாமல் இருக்க!

குசும்பன் said...

///புதுகைத் தென்றல் said...
இன்றைக்கு சிறிய வயதுக் காரர்களுக்கு கூட மாரடைப்பு நோய் வருதுன்னா, அதுக்கு முக்கிய காரணமே அலுவலக பணிகள் தரும் மனச்சோர்வுதான்.//

அலுவலகத்தில் இருக்கும் பொழுது மாரடைப்பு வருவது ரொம்ப கம்மிங்க:) வீட்டில் இருக்கும் பொழுதுதான் அதிகம் பேருக்கு வருகிறது:) இந்த உண்மையை சொன்னா அடிக்க வருவாங்க:)

pudugaithendral said...

வேலைக்கு இன்னிக்கு போ அப்பிடினா போகோனும் போவாத இன்னிக்கு அப்பிடின்னா போககூடாது இதுதான் தங்கமணிகளுக்கு, வருங்கால தங்கமணிகளுக்கு நீங்க குடுக்கற அட்வைஸா!!??

அப்பிடினா எல்லா தங்கமணிகளும் இந்த வேலைய விட்டுபுட்டு கூலி வேலைக்குதான் போகோனும் :(//

இதைத்தான் தவறா புரிஞ்சுக்கறதுன்னு சொல்றது. சரியா படிச்சு புரிஞ்சுக்குங்க.

pudugaithendral said...

அவர் என்னாங்க சொல்றார் முக்கியமான விசயமா இருந்தா நாங்க லீவு போட்டிற மாட்டமா?

நீங்க வாசப்படில வந்து மடக்கற அளவு வெச்சிப்பமானு சரியாதானே சொல்றார்.//

பதிவை சரியா படிச்சு, புரிஞ்சுக்கல. இதைத்தவிர வேறு என்ன சொல்ல?

pudugaithendral said...

பாடம் தவறாக நடத்தும் போது கேள்வி கேட்கும் ஒன்றிரெண்டு ஸ்மார்ட் ஸ்டூடண்ட் இருக்கத்தான் செய்வார்கள். //

பதிவையே சரியா புரிஞ்சுக்காம மேம்போக்கா கேள்விகேட்கறது ஸ்மார்ட்னஸ் இல்ல சிவா.

pudugaithendral said...

மாமன்காரன் நானே செஞ்சிருக்கேன். ச்சும்மா அடிச்சி விடாதீங்க எல்லாத்தையும் தங்கமணிகள் தலைல தாங்கறாங்கன்னு!!

. மாமாவா நீங்க செஞ்சீங்கன்னா, உங்க அக்கா/தங்கை வீட்டுக்காரர் செய்யாம தப்பிச்சுக்கிட்டாருன்னுதானே அர்த்தம். மாமா உங்களை செய்ய விட்டு அவர் என்ன பண்ணிகிட்டு இருந்தாரு. தகப்பனா தான் தானே செய்யனும்?

ஆக, ர.மணிகள் தப்பிச்சுக்கப் பார்ப்பாங்க. இதுதான் உண்மை.

(தனிமனித தாக்குதல்னு நினைக்காதீங்க. ஒரு உதாரண்த்துக்குச் சொன்னேன்.)

pudugaithendral said...

வாங்க குசும்பன்,
முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள். விகடனில் உங்க பிளாக் பத்தி போட்டிருந்தாங்க.

பிரஸ்டிஜ் பெண்களுக்குத்தான் இல்லாம் போகுது. அது தான் உண்மை. அத நீங்க (ர.மணிகள்) எப்படியும் ஏற்க மாட்டீங்க. ஏன்னா, உண்மை சுடும்.

pudugaithendral said...

போய்வா நதி அலையே, அப்படின்ங்கற பாடல் வரிகளை கொஞ்சம் உட்டாலங்கடி அடிச்சு தலைப்பை வச்சதற்கு மதிப்பு இல்ல, மரியாதை இல்லன்னு என்ன சத்தம் அப்பா!!

மனைவியை அடியே, இங்க வாடின்னு பொது இடத்திலும் கூப்பிடுறீங்களே (பொதுவா சொல்றேன்) அதை நாங்க என்னன்னு சொல்ல???????????

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...
//சரியா சொன்னீங்க. நாம் சொல்லி அவங்க லீவு போட்டுட்டா பிரஸ்டிஜ் என்ன ஆவுறது?///

என்ன கல்யாணம் ஆனபிறகும் பிரஸ்டிஜ் எல்லாம் இருக்குமா என்னா? யாருங்க அந்த லட்சத்தில் ஒருவன்!!!
//

வாப்பா ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொன்ன!!

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...
///SanJai said...
//போய்வா! என் கணவா! அலுவலகத்துக்கு நீ போய்வா-//

கணவரை இப்படி மரியாதை இல்லாமல் பேசும் பெண்ணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன். :)///

சஞ்செய் விவரம் தெரியா புள்ளையாக இருக்கே, இதுவே ரொம்ப மரியாதைய்யா, என்னா போ இதுகூட தெரியாமல் இருக்க!
//
அப்பிடியா

எனக்குகூட தெரியாதுபா
வெவரமே தெரியாம வளந்துட்டோம் நாங்கெல்லாம்!!

அவ்வ்வ்

pudugaithendral said...

வாப்பா ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொன்ன//

இது வேறயா?

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...
///புதுகைத் தென்றல் said...
இன்றைக்கு சிறிய வயதுக் காரர்களுக்கு கூட மாரடைப்பு நோய் வருதுன்னா, அதுக்கு முக்கிய காரணமே அலுவலக பணிகள் தரும் மனச்சோர்வுதான்.//

அலுவலகத்தில் இருக்கும் பொழுது மாரடைப்பு வருவது ரொம்ப கம்மிங்க:) வீட்டில் இருக்கும் பொழுதுதான் அதிகம் பேருக்கு வருகிறது:) இந்த உண்மையை சொன்னா அடிக்க வருவாங்க:)
//

ஆட்டோ அல்ரெடி துபாய்க்கு வந்துகிட்டிருக்குவோய்!!

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
வேலைக்கு இன்னிக்கு போ அப்பிடினா போகோனும் போவாத இன்னிக்கு அப்பிடின்னா போககூடாது இதுதான் தங்கமணிகளுக்கு, வருங்கால தங்கமணிகளுக்கு நீங்க குடுக்கற அட்வைஸா!!??

அப்பிடினா எல்லா தங்கமணிகளும் இந்த வேலைய விட்டுபுட்டு கூலி வேலைக்குதான் போகோனும் :(//

இதைத்தான் தவறா புரிஞ்சுக்கறதுன்னு சொல்றது. சரியா படிச்சு புரிஞ்சுக்குங்க.
//
நாலு லைனை எத்தினி தபா படிக்கிறது!!!

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
அவர் என்னாங்க சொல்றார் முக்கியமான விசயமா இருந்தா நாங்க லீவு போட்டிற மாட்டமா?

நீங்க வாசப்படில வந்து மடக்கற அளவு வெச்சிப்பமானு சரியாதானே சொல்றார்.//

பதிவை சரியா படிச்சு, புரிஞ்சுக்கல. இதைத்தவிர வேறு என்ன சொல்ல?
//
வேற எது சொன்னாலும் 'கரெக்டா' சொல்லுங்க.

இப்பிடி தப்பு தப்பா தங்கமணிகளுக்கு சொல்லிகுடுத்து எங்க வாழ்க்கைல வெளையாடீடாதீங்க!!

pudugaithendral said...

இருக்கற 4 வரியே படிச்சு புரிஞ்சுக்கத் தெரியல. விளக்கிச்சொன்னாலும் புரியல. நான் ஒன்னும் பண்றதுக்கு இல்ல.

அடுத்த கிளாஸில் முன்னாடி பெஞ்சுல உட்கார்ந்து கவனமா கேளுங்க.

சிவா உங்களுக்கு மாத்திரம் எக்ஸ்ட்ரா ஹோம்வொர்க். புரியர வரைக்கும் திரும்ப திரும்ப படிச்சு பாருங்க.

ஆல் தி பெஸ்ட்.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

பிரஸ்டிஜ் பெண்களுக்குத்தான் இல்லாம் போகுது. அது தான் உண்மை. அத நீங்க (ர.மணிகள்) எப்படியும் ஏற்க மாட்டீங்க. ஏன்னா, உண்மை சுடும்.
//

எங்க ஊர்ல நெருப்பு சுடும், சூடான குக்கர், தோசைக்கல் மேல கை, கால் தெரியாம பட்டா சுடும், டோஸ்டர் சுடும்!!

குசும்பன் said...

//புதுகைத் தென்றல் said...
இருக்கற 4 வரியே படிச்சு புரிஞ்சுக்கத் தெரியல. விளக்கிச்சொன்னாலும் புரியல. நான் ஒன்னும் பண்றதுக்கு இல்ல.

அடுத்த கிளாஸில் முன்னாடி பெஞ்சுல உட்கார்ந்து கவனமா கேளுங்க.///

முதல் பெஞ்சுன்னாதான் தூங்க வசதியா இருக்கும் எப்பொழுதும் டீச்சருங்களுக்கு கடைசி பெஞ்சு மாணவன் மேல தான் கவணம் இருக்கும், நாம் கொர்ர்ர் விடலாம்:)

pudugaithendral said...

தங்கமணிகள் சரியா புரிஞ்சுக்குவாங்க. அவங்களுக்கு ஒன்னும் தப்பா சொல்லித்தரலை.

(பெண்களின் பாஷை ஆண்களுக்கு புரிந்ததாக சரித்தரமே இல்லை. உப்பு, புளி வெச்சு வெளக்கினாலும் அவ்வளவுதான்....)

சிவா இது 100அவது பின்னூட்டம்.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

மனைவியை அடியே, இங்க வாடின்னு பொது இடத்திலும் கூப்பிடுறீங்களே (பொதுவா சொல்றேன்) அதை நாங்க என்னன்னு சொல்ல???????????
//
உண்மைய பேசுங்க அம்மிணி எந்த ஊர்ல பாத்தீங்க!?!?!

குசும்பன் said...

//ஆட்டோ அல்ரெடி துபாய்க்கு வந்துகிட்டிருக்குவோய்!!//

நல்ல அக்கா ஒன்னும் சொல்ல மாட்டாங்க வாங்க என்று சொல்லி கூப்பிட்டு விட்டு இப்படி சொல்லும் உம்மை என்ன செய்வது!

குசும்பன் said...

// மங்களூர் சிவா said...
//
புதுகைத் தென்றல் said...

பிரஸ்டிஜ் பெண்களுக்குத்தான் இல்லாம் போகுது. அது தான் உண்மை. அத நீங்க (ர.மணிகள்) எப்படியும் ஏற்க மாட்டீங்க. ஏன்னா, உண்மை சுடும்.//

டுப்பாக்கி கூட சுடும்:)

கவுண்டர் ஒரு படத்தில் கேட்பார் மண்டயா கையில என்னா டா ன்னு?

செந்தில்: இதுவான்னே சூடுகாய்னே

கவுண்டர்: அப்படின்னா?

செந்தில்: இத இப்படி தரையில் தேய்கனும்.. நல்லா தேச்சு பக்கதில் இருக்கும் ஆள் தொடையில் வைக்கனும் என்று வைப்பார்!

புகை வரும்! செம காமெடியா இருக்கும்! அந்த சுடுகாய் கூட சுடுங்கோ!!!

pudugaithendral said...

அப்படி கூப்புடுறதுதான் நடக்குது.
இது கூட தெரியாதா உங்களுக்கு?

நீங்க சொல்ற எல்லாச்சூட்டை விடவும் உண்மை தரும் சூடு தாங்க முடியாது சிவா.

முதல் பெஞ்சிலேயெ தூங்கினா வெளங்கிடும்.

குசும்பன் said...

//புதுகைத் தென்றல் said...
வாங்க குசும்பன்,
முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள். விகடனில் உங்க பிளாக் பத்தி போட்டிருந்தாங்க.

பிரஸ்டிஜ் பெண்களுக்குத்தான் இல்லாம் போகுது. அது தான் உண்மை. அத நீங்க (ர.மணிகள்) எப்படியும் ஏற்க மாட்டீங்க. ஏன்னா, உண்மை சுடும்///

நன்றிங்க

பிரஸ்டிஜ் பெண்களுக்கு ஆண்களுக்கு என்று எல்லாம் பேதம் இல்லைங்க பிரிஸ்டிஜ் குக்கர் அருமையானது அதுலதான் நான் தினமும் சாதம் வைக்கிறேன்! சில சமயம் கைய சுடுங்க:)

pudugaithendral said...

கரெக்டா சொன்னீங்க குசும்பன்,

அந்த சுடுகாய் சூடு தரும் தழும்பைவிட மோசமானதாக இருக்கும் உண்மை தரும் தழும்பு.

(பயப்படாதீங்க நான் ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டேன்,)

pudugaithendral said...

கரெக்டா சொன்னீங்க குசும்பன்,

அந்த சுடுகாய் சூடு தரும் தழும்பைவிட மோசமானதாக இருக்கும் உண்மை தரும் தழும்பு.

(பயப்படாதீங்க நான் ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டேன்,)

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
தங்கமணிகள் சரியா புரிஞ்சுக்குவாங்க. அவங்களுக்கு ஒன்னும் தப்பா சொல்லித்தரலை.

(பெண்களின் பாஷை ஆண்களுக்கு புரிந்ததாக சரித்தரமே இல்லை. உப்பு, புளி வெச்சு வெளக்கினாலும் அவ்வளவுதான்....)
//
அவ்வளவும் சீக்ரெட் கோடட்

எப்பிடி எங்களுக்கு புரியும்?

இதுக்கு பெனாத்தல் போட்டாரே பெண்கள் சொல்வதற்கு அர்த்தம் என்ன? படிச்சுமே இவ்வளவுதான் புரியுது. :(

குசும்பன் said...

//(பயப்படாதீங்க நான் ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டேன்,)//

நன்றீங்க, நான் சின்னபிள்ளை:) ஆமா கும்மி அடிப்பதில் பிரச்சினை இல்லையே? அடிக்கலாமா?

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...

டுப்பாக்கி கூட சுடும்:)
//
யோவ் ஏற்கனவே கொலை வெறில இருக்காங்க இதுல துப்பாக்கி வேற சுடும்னு சொல்லிகுடுத்துகிட்டு!!

ஆட்டோல ஆள்கிட்ட குடுத்துவிடபோறாங்கய்யா!!

Sanjai Gandhi said...

//நீங்க சொல்ற எல்லாச்சூட்டை விடவும் உண்மை தரும் சூடு தாங்க முடியாது சிவா.//

இப்போ தெளிவா புரியுது. நீங்க யேன் இப்டி அலறித் துடிக்கறிங்கனு. :P.. நாங்க சொல்ற உண்மையோட சூடு தாங்காமத் தானே! :P

pudugaithendral said...

//பிரஸ்டிஜ் பெண்களுக்கு ஆண்களுக்கு என்று எல்லாம் பேதம் இல்லைங்க பிரிஸ்டிஜ் குக்கர் அருமையானது அதுலதான் நான் தினமும் சாதம் வைக்கிறேன்! சில சமயம் கைய சுடுங்க:)//

இதுல சுயவெளக்கம் வேறயா? நீங்க சொல்றத நாங்க நம்பனுமா? யாரங்கே ஆட்டோவை துபாய்க்கு அனுப்பி நிலமை என்னன்னு பார்த்துட்டு வரச்சொல்.

pudugaithendral said...

//இப்போ தெளிவா புரியுது. நீங்க யேன் இப்டி அலறித் துடிக்கறிங்கனு. :P.. நாங்க சொல்ற உண்மையோட சூடு தாங்காமத் தானே! :P//

சஞ்சய சூடு தாங்காமல் அலறித்துடிப்பது நானல்ல. அது தெளிவாகத் தெரிந்த பின்னும் இப்படி ஒரு கேள்வி கேட்டு காமெடி பின்னுரீங்க.

pudugaithendral said...

சும்மா கும்முங்க குசும்பன்,

நாங்களும் தயாரத் தான் இருக்கோம்.

pudugaithendral said...

சும்மா கும்முங்க குசும்பன்,

நாங்களும் தயாரத் தான் இருக்கோம்.

Sanjai Gandhi said...

//சும்மா கும்முங்க குசும்பன்,

நாங்களும் தயாரத் தான் இருக்கோம்//

ஏலே மாப்ளைங்களா.. இங்க ஒருதர் சிக்கிட்டாங்க..எல்லாரும் வண்டி கட்டிட்டு வாங்க.. வந்து நல்லா கை வலிக்க கும்மிட்டு போங்க..:P

pudugaithendral said...

ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க.

நல்லாத்தானே சஞ்சய் இருந்தீங்க.

ஏன் இந்த கொலை வெறி????????

ஓஹோ - பாடத்திற்கு நேராவே கண்டனமா? மிரட்டலா?

அசரமாட்டோம்ல.

குறைஞ்சது இன்னும் 3 பாடமாவது வரும்.

மங்களூர் சிவா said...

//
SanJai said...
//நீங்க சொல்ற எல்லாச்சூட்டை விடவும் உண்மை தரும் சூடு தாங்க முடியாது சிவா.//

இப்போ தெளிவா புரியுது. நீங்க யேன் இப்டி அலறித் துடிக்கறிங்கனு. :P.. நாங்க சொல்ற உண்மையோட சூடு தாங்காமத் தானே! :P

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க.

நல்லாத்தானே சஞ்சய் இருந்தீங்க.

ஏன் இந்த கொலை வெறி????????

ஓஹோ - பாடத்திற்கு நேராவே கண்டனமா? மிரட்டலா?

அசரமாட்டோம்ல.

குறைஞ்சது இன்னும் 3 பாடமாவது வரும்.
//

எச்சரிக்கைன்னு போட மறந்துட்டீங்களே!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

சே,ஒரு அரைநாள் விடுப்பு எடுத்துட்டு மெதுவா வந்தா இங்கே 100 பின்னூட்டத்துக்குமேல போய்ட்ருக்கு.

மங்களூர் சிவா,சஞ்சய்
நல்லா கமெண்ட் எழுதிறீங்க.
<==
தன்னோட உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல், டாக்டர் ரெஸ்ட் எடுக்கச்சொல்லியும் அடுத்தநாளே வேலைக்குப் போகும் ர.மணிகள் இருக்காங்க.==>
(வீட்ல இருக்கரதுக்கு) அவன் கஷ்டம் அவனுக்குத்தானே தெரியும். ==)

அட, உங்களுக்கு தெரியாதா? ரெஸ்ட் எடுகத்தானே அலுவலகம் போறோம்.
[பாருங்க ஸ்மைலி போடலே.]

<==
நாங்கள் பார்க்கும் கோணம் வேறதான் ==>
சினிமாவுல ரெண்டு கையையும்(ஆள்காட்டி விரல்,பெருவிரல்) சதுரமா வச்சுக் கோணம் பார்பாங்களே அந்தக்கோணமா?
<==
மங்களூர் சிவா சொல்ரார்
அப்பிடியெல்லாம் போறாங்கண்ணா அதுக்கு அத விட முக்கியமான காரணம் இருக்கும்
==>
கரெக்ட்,
<==
சஞ்சை சொல்ரார்
ஓய்வில்லாம டென்ஷனோட வேல பாக்கிறோம்னு நீங்களா தப்பா புரிஞ்சிகிட்டா நாங்க இன்னா பண்ண முடியும்?.. அப்பாடா என்னா ஒரு அக்கறை.. முடியல.. :P
==>
அதானே.
<==
புதுகை தென்றல் சொல்ரார்
அப்படி ஒரு நினைப்பு. உங்க இம்சையிலிருந்து தங்கமணிகளுக்கு தப்பிக்கத்தான் வழியே இல்லை. ==>
அது அலுவலகத்துக்கு ர.மணி போய்ட்ரார் இல்ல.அப்புரம் எப்படி இம்சை?
சொன்னதையே திருப்பி சொன்னா பதிலாயிடுமா?

<==
புதுகை தென்றல் சொல்ரார்
மங்களூர் சிவா,
வீட்டுப் பாடமா அந்த வீடியோ பாருங்கன்னு சொன்னா, டீச்சரையே கேள்வி கேட்கறதா?
==>
பாடம் ஆரம்பிக்கரப்ப வீட்டுப்பாடமே கிடையாது சொன்ன மாதிரி ஞாபகம். சிலபஸ் மாத்திட்டாங்களா? சொல்லவே இல்ல
<==
சஞ்சை சொல்ரார்
இம்சைனு தெரியுதுல.. அப்புறம் இன்னாத்துக்கு கம்முனு வேலக்கி போறவங்கள வசப் படில வந்து மடக்கினு லீவ் போடு லீவ் போனு டார்ச்சர் குடுக்கறிங்களாம்?..
==>
சஞ்சை பின்ரீங்களே. ரிப்ப்ப்பீடேய்.
<==
மங்களூர் சிவா சொல்ரார்
அப்பிடினா எல்லா தங்கமணிகளும் இந்த வேலைய விட்டுபுட்டு கூலி வேலைக்குதான் போகோனும் :(
==>
மஙகளூர் சிவா, எப்படிங்க. அதே அதான்.
இப்படி கரெக்டா அடிக்கிறீங்க.
இவங்களுக்கு ர.மணி,இப்படி ரொம்ப போட்டியுள்ள உலகத்தில வேலையிலும் மேலே மேலெ போகணுமாம்.ஆனா,டாண்ணு இரவு 6மணிக்கு வீட்டுக்கு வந்திடணுமாம்.இவங்க லீவு போடச்சொன்னா போட்டுட்டு வீட்ல இருக்கணுமாம். இது எப்படின்னு த.மணிகள்தான் சொல்லணும்.

<==
புதுகை தென்றல் சொல்ரார்
த.மணிகளே! கேட்டுக்கங்க. அலுவலகத்துல இவ்வளவு லீவு இருக்கு. (சனிக்கிழமை அரைநாள்தான்னு தெரியாதுன்னு சொன்னீங்களே லதா.. (தனியா மடல் போட்டிருந்தார் ==>
தொழிற்சாலைல வேலை பார்க்கிறவர்களுக்கும் அலுவலகத்தில் வேலை பார்கிறவர்களுக்கும்
வித்தியாசம் தெரியாதவங்களை என்ன பண்ரது?
லீவெல்லாம் ஒரு பேருக்குதான்.வேலை இருந்தா எல்லா நாளும் அலுவலகம் வந்துதான் ஆகணும்.

<==
புதுகை தென்றல் சொல்ரார்
மங்களூர் சிவா,
அதெல்லாம் இல்ல. சாருக்கு உடம்பு சரியில்லாட்டி போனாலும் ஆபீசுக்கு உடனே வந்துட்டாருன்னு, ஆபீஸுல பேசுறதை பெருமைப் பொங்க கேட்கனுமே அதுக் காகத்தான். ==>
இல்ல அவங்களுக்கு தெரியும் ஏன்னு =)))

வாங்க குசும்பன்,
ஜோதியில ஐக்கியாமானதுக்கு.

<==
புதுகை தென்றல் சொல்ரார்
மனைவியை அடியே, இங்க வாடின்னு பொது இடத்திலும் கூப்பிடுறீங்களே (பொதுவா சொல்றேன்) அதை நாங்க என்னன்னு சொல்ல???????????
==>
அட, அது யார்பா அந்த லட்சத்துல/கோடியில ஒரு தைரியசாலி =)))

அப்பாடா, சிங்கிள் ஷாட்ல கமெண்ட் எழுதியாச்சு.

எப்படியும் ஆயிரம் பீனூட்டம்வரைக்கும் போகும்போல.
அடுத்த பட்டம் ரெடி. ஆயிரம் பின்னூட்டம் வாங்கிய அபூர்வ பிளாக்கி!

ரசிகன் said...

//ச்்ஜய்
பின்ன.. தங்கமணிங்க இமசைல இருந்து தப்பிக்க தான் ரங்கமணிங்க அலுவலகமே போறாங்க.. அதுக்கும் வேட்டு வச்சா எப்படி? :P //
ரிபீட்டெய்ய்ய்ய்ய்

pudugaithendral said...

//வீட்ல இருக்கரதுக்கு) அவன் கஷ்டம் அவனுக்குத்தானே தெரியும். ==)//

நீங்க வீட்டுல இருந்தா என்ன கஷ்டமுன்னு உங்க த.மணியை கேட்டா நல்லாத் தெரியும்,(அதுக்கு ஒரு பதிவு வருது)

விடுப்பு எடுத்துக்கிட்டு உங்களை (ரங்கமணிகளை) வீட்டுல இருக்கச்
சொல்லலை. இதப் பதிவுலையும், பின்னூட்டத்திலையும் விரிவா சொல்லியிருக்கேன்.

pudugaithendral said...

//ஓய்வில்லாம டென்ஷனோட வேல பாக்கிறோம்னு நீங்களா தப்பா புரிஞ்சிகிட்டா நாங்க இன்னா பண்ண முடியும்?.. அப்பாடா என்னா ஒரு அக்கறை.. முடியல.. :P//

சாமான்யன் சிவா,

சஞ்சய்க்கு இன்னும் கல்யாணம் ஆகல. அதனால் மனைவியின் அன்புக் அக்கறையும் புரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஆனால் நீங்கள் திருமணம் ஆனவர். உங்களுக்குமா மனைவியின் அன்பு, அக்கறை மீது சந்தேகம்?

pudugaithendral said...

நாங்கள் பார்க்கும் கோணம் வேறதான் ==>
சினிமாவுல ரெண்டு கையையும்(ஆள்காட்டி விரல்,பெருவிரல்) சதுரமா வச்சுக் கோணம் பார்பாங்களே அந்தக்கோணமா?

//எப்படிங்க? எதையும், கரெக்டா தப்பாவே புரிஞ்சுக்குறீங்க. ர.மணிகளின் ஸ்பெஷாலில்லிடியே அதாங்க.//

<==
மங்களூர் சிவா சொல்ரார்
அப்பிடியெல்லாம் போறாங்கண்ணா அதுக்கு அத விட முக்கியமான காரணம் இருக்கும்
==>
கரெக்ட்,

ஆஹா, ஆமா, இல்லைன்னு சொல்லலை. வீடு, குடும்பம் இதைத்தவிர மத்தது "எல்லாம்" மிக முக்கியம்.

pudugaithendral said...

//பாடம் ஆரம்பிக்கரப்ப வீட்டுப்பாடமே கிடையாது சொன்ன மாதிரி ஞாபகம். சிலபஸ் மாத்திட்டாங்களா? சொல்லவே இல்ல//

சிலபஸ் எல்லாம் மாத்தலை. வீட்டுப்பாடம் த.மணிகளுக்கு இல்ல. ர.மணிகளுக்கு கூட அந்த படம் ஒரு ரெஃபரன்ஸ்க்காக உதவும்.

அத மொதல்ல பாருங்க. அப்புறம் ஏன் சொல்றேன்னு தெரியும்.

pudugaithendral said...

புதுகை தென்றல் சொல்ரார்
மனைவியை அடியே, இங்க வாடின்னு பொது இடத்திலும் கூப்பிடுறீங்களே (பொதுவா சொல்றேன்) அதை நாங்க என்னன்னு சொல்ல???????????
==>
அட, அது யார்பா அந்த லட்சத்துல/கோடியில ஒரு தைரியசாலி =)))

சாமான்யன் சிவா,
என்னக் கிண்டலா? இது தான் நடக்குது. என்னவோ இல்லாத பொல்லாததை சொல்லிட்ட் மாதிரி எஃபக்ட் கொடுத்தா ஆச்சா?

pudugaithendral said...

//அடுத்த பட்டம் ரெடி. ஆயிரம் பின்னூட்டம் வாங்கிய அபூர்வ பிளாக்கி!//

பட்டம் கொடுப்பதில் நீங்கதான் மன்னர் ஆச்சே. நீங்க பட்டம் கொடுக்கறதை பார்க்கும் போது என் உள்மனசு "ஆப்பு, ஆப்பு" ன்னே சொல்லுது.

ஒரு ஷாட்ல பின்னூட்டம் போட்டீங்க. பதில் 4/5 பின்னூட்டமா கொடுத்திருக்கேன்.
இது என்ன பட்டம் சிவா, பிளாக்கி நல்லா இல்ல. (ஏதோ.... பேரு மாதிரி இருக்கு)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

என்னோட பின்னூட்டத்தோட முதல் வரியை மறுபடியும் தர்ரேன்.உங்க பதிவுக்கு அதுவே பதில்.
<==சே,ஒரு அரைநாள் விடுப்பு எடுத்துட்டு ==>
விடுப்பு எதுக்கு எடுக்கறோம்? வீட்டு வேலைக்குத்தான்.
<== புதுகை தென்றல் சொல்ரார்
இது என்ன பட்டம் சிவா, பிளாக்கி நல்லா இல்ல. (ஏதோ.... பேரு மாதிரி இருக்கு) ==>
பிளாக்கர்ங்கறது பொது வார்த்தை.அப்படியே,பிளாக்கி பெண்பாலாயிடுச்சு.
"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு"ன்னு நீங்க பாடலாம்.