Saturday, February 16, 2008

நானும் சைக்கிளும் - பாகம் 2

சைக்கிள் பழகி அடிபட்டுக்கிடந்த என்னை பார்க்க
அம்மம்மா வந்திருந்தாங்க. "இங்க ரோடுல வண்டி அதிகமா
இருக்கு. நம்ம வீட்டுக்கு வரப்போ கத்துக்கோ. மாமா
சொல்லித்தருவார்." அப்படின்னு சொன்னாங்க.



அம்மம்மா வீட்டுக்கு போக எப்பன்னு காத்துகிட்டு
இருப்பேன். (லோக்கல் தான் அவங்க வீடு. 2 அல்லது
3 கி.மீ தூரம் தான்.) தஞ்சாவூர் ரோடில் ஸ்ரீநிவாச தியேட்டருக்குப்
பின்னாடி, ஸ்ரீநிவாச நகர்ல இருந்தாங்க. வீடுகளும்
அப்ப ரொம்ப கிடையாது. பிளாட்டுங்கதான் இருக்கும்.





மாடல் ஸ்கூல் பக்கத்திலேர்ந்து வாடகை சைக்கிள்
கொண்டுவந்தாச்சு. குளக்கரையில கல்லு மேல ஏறி
சைக்கிள்ல உட்கார்ந்த எனக்கு கல்லு இல்லாம ஏற
முடியல. "எத்தனை நாளைக்கு கல்லுல ஏறி இந்த
விளையாட்டுன்னு" சின்ன மாமா திட்டிகிட்டு,(பின்ன
சைக்கிள் கத்துதறோம்லன்னு ஒரு போஸ் அடிக்க
வேண்டாம்) விட்டுடாரு. அம்மமா கிட்ட
பஞ்சாயத்து பண்ணி அடுத்த நாள் சைக்கிள் ஒட்ட
போனப்போ கீழே விழுந்து சைக்கிள் ஹேண்டில் பார்
நெஞ்சுல குத்தி ஒரே வலி. சைக்கிளைப் போட்டுடு
வீட்டுக்கு ஓடி போயிட்டேன். 4 நாளைக்கு வலி இருந்துச்சு.
திரும்ப அப்பா விட்டுக்கு வந்துட்டேன்.






சும்மா விடுவாரா அப்பா?" ஒரு சைக்கிள் பழக
துப்பில்லை"அப்படின்னு திட்டிப்புட, ரோஷம் வந்துச்சு.

இந்த முறை கோபி அண்ணா கல்லு இல்லாம
சைக்கிள்ல ஏறச்சொல்லி கொடுத்தாரு. நல்ல மூடுல
மீனாட்சி அக்காவும் சொல்லிக் கொடுக்க
சைக்கிள் ஓட்ட கத்துகிட்டு ஜாலியா சைக்கிள்
ஓட்ட ஆரம்பிச்சேன். அம்மாவுக்கும், பாட்டிக்கும்
பெருமை.



அப்பா பார்த்துட்டு." சரி. ஆனா இதெல்லாம் பத்தாது?!!!"
நான் சொல்ற மாதிரி செஞ்சா ஒத்துக்குவேன்"
அப்படின்னாரு.


ஆஹா..... வெச்சுப்புட்டாரய்யா ஆப்பு......!!!!!!!!!


(ஆப்பு என்ன? தொடரும்...)

23 comments:

பாச மலர் / Paasa Malar said...

சைக்கிள் இரண்டு பகுதியும் இப்பதான் படிச்சேன்..ஓட்ட சீக்கிரம் கத்துக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்..நானும் முயற்சி பண்ணித் தோற்று..இன்று வரை சைக்கிள் ஓட்டத் தெரியாமல் காலத்தை ஓட்டியாச்சு..

மங்களூர் சிவா said...

//
அப்பா பார்த்துட்டு." சரி. ஆனா இதெல்லாம் பத்தாது?!!!"
நான் சொல்ற மாதிரி செஞ்சா ஒத்துக்குவேன்"
அப்படின்னாரு.


ஆஹா..... வெச்சுப்புட்டாரய்யா ஆப்பு......!!!!!!!!!
//
இதுக்காகவே

இதுக்காகவே

ஐ லைக் யுவர் டாட் ஸோ மச்!!!!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
அப்பா பார்த்துட்டு." சரி. ஆனா இதெல்லாம் பத்தாது?!!!"
நான் சொல்ற மாதிரி செஞ்சா ஒத்துக்குவேன்"
அப்படின்னாரு. ==>
என்ன கிழ விழுவாம 1 கி.மீ தூரம் ஓட்டச்சொனனாரா? =)
கஷ்டம்தான் சைக்கிளுக்கு.

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

சீக்கிரம் ஓட்ட கத்துகிட்டதுக்கு காரணம் அப்பாதான்.

ரோஷம் வர்ற மாதிரி பேசும்போது, சாதிக்கணும்னு எண்னம் தானா வந்துட்டது.

pudugaithendral said...

வாங்க மங்களூர் சிவா,

என்ன ஒரு நல்ல எண்ணம்?!!!!

pudugaithendral said...

வாங்க சாமான்யன்,

கீழ விழாம தானே ஒட்டினேன்.

இது வேற மாதிரி ஆப்பு.

சொல்றேன் இருங்க.

அதுக்கு ஒரு அவ்வ்வ்வ்வ்வ்வ்.

ரசிகன் said...

//அப்பா பார்த்துட்டு." சரி. ஆனா இதெல்லாம் பத்தாது?!!!"
நான் சொல்ற மாதிரி செஞ்சா ஒத்துக்குவேன்"
அப்படின்னாரு.//
நிச்சயமா கையை விட்டுட்டு ஓட்ட சொல்ல அம்புட்டு கோபம் இருக்க வாய்ப்பில்லை..

ஏனுங்க அண்ணி.. ஒரு வேளை சைக்கிள்ல எட்டு போட சொல்லியிருப்பாரோ:P ஹிஹி:)))))

நிஜமா நல்லவன் said...

கண்ணை மூடிகிட்டு கைய விட்டுட்டு ஓட்ட சொன்னாரா?

Anonymous said...

உங்களுக்கும் என்ன மாதிரி சைக்கிள் ரொம்ப ராசி போல இருக்கே. நானா எப்ப ஓட்ட ஆரம்பிச்சேன்னு எனக்கே நினைவில்ல

pudugaithendral said...

வாங்க சின்ன அம்மணி,

என் ராசியை போகப்போக பாருங்க...

pudugaithendral said...

வாங்க ரசிகன்,

எட்டெல்லாம் போடச்சொல்லி இருந்த நாம எட்டு, ஏழரை எல்லாம் போட்டிருக்க மாட்டோமா??!!!!

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

நீங்க சொல்றது எல்லாம் இல்ல.

இதோ சஸ்பென்ஸ் உடைச்சிட்டேன்.

Sanjai Gandhi said...

//நானும் சைக்கிளும் - பாகம் 2//

மோகன்லால் இந்த பேர்ல ஒரு படம் எடுக்க போறாராம்.

//சைக்கிள் பழகி அடிபட்டுக்கிடந்த என்னை பார்க்க
அம்மம்மா வந்திருந்தாங்க.//
என்னவோ போரில் குண்டடிபட்ட மாதிரி.

// "இங்க ரோடுல வண்டி அதிகமா
இருக்கு. நம்ம வீட்டுக்கு வரப்போ கத்துக்கோ. //

பின்ன.. உங்க மெல மோதி அந்த வண்டிகளுக்கு டெமேஜ் ஆச்சினா என்ன பன்றது. உங்க அம்மம்மா எவ்ளோ நல்லவங்க பாருங்க.



//அம்மம்மா வீட்டுக்கு போக எப்பன்னு காத்துகிட்டு
இருப்பேன். //
அவங்க தல எழுத்து.

//(லோக்கல் தான் அவங்க வீடு. 2 அல்லது
3 கி.மீ தூரம் தான்.) தஞ்சாவூர் ரோடில் ஸ்ரீநிவாச தியேட்டருக்குப்
பின்னாடி, ஸ்ரீநிவாச நகர்ல இருந்தாங்க.//

3 கி.மீட்டர்னா லோக்கல் தான் . எங்களுக்கும் தெரியும். நாங்க இத STDன்னா சொன்னோம்.

//மாடல் ஸ்கூல் பக்கத்திலேர்ந்து வாடகை சைக்கிள்
கொண்டுவந்தாச்சு. //
உண்மயை சொல்லுங்க. அது வாடகை சைக்கிளா இல்லா தெரியாம உருட்டிட்டு வந்ததா?

//குளக்கரையில கல்லு மேல ஏறி
சைக்கிள்ல உட்கார்ந்த எனக்கு கல்லு இல்லாம ஏற
முடியல.//
ஓ.. இந்த பழக்கம் அப்போவே ஆரம்பிச்சாச்சா?... பேட் கேர்ள்.

// "எத்தனை நாளைக்கு கல்லுல ஏறி இந்த
விளையாட்டுன்னு" சின்ன மாமா திட்டிகிட்டு,//
அதான.. அடுத்து சாராயம் ரம் ஜின்.. எவ்ளோ இருக்கு ஏத்த.


//சைக்கிளைப் போட்டுடு
வீட்டுக்கு ஓடி போயிட்டேன். //

ஏன் சைக்கிளுக்கு சொந்தகாரர் வந்துட்டாரா?

//சும்மா விடுவாரா அப்பா?" ஒரு சைக்கிள் பழக
துப்பில்லை"அப்படின்னு திட்டிப்புட, ரோஷம் வந்துச்சு.//

ரோஷமா? காமெடிய பாருடா. ஹ்ம்ம்.. அப்புறம்? :P

//இந்த முறை கோபி அண்ணா கல்லு இல்லாம
சைக்கிள்ல ஏறச்சொல்லி கொடுத்தாரு.//
எல்லா பனை மரத்தயும் காலி பண்ணிட்டிங்களா இதுக்குள்ள.. :(

// நல்ல மூடுல
மீனாட்சி அக்காவும் சொல்லிக் கொடுக்க
சைக்கிள் ஓட்ட கத்துகிட்டு ஜாலியா சைக்கிள்
ஓட்ட ஆரம்பிச்சேன்.//

எத்தன பேர போட்டு தள்னிங்கனு சொல்லவே இல்லையே. :)
//அம்மாவுக்கும், பாட்டிக்கும்
பெருமை.//

ஓ.. லிஸ்ட் அவ்ளோ பெரிசா?

//அப்பா பார்த்துட்டு." சரி. ஆனா இதெல்லாம் பத்தாது?!!!"
நான் சொல்ற மாதிரி செஞ்சா ஒத்துக்குவேன்"
அப்படின்னாரு.//

கொலைகார குடும்பம்டா சாமி..

//ஆஹா..... வெச்சுப்புட்டாரய்யா ஆப்பு......!!!!!!!!!//

ஏன் ..பைக் ஓட்டி யாரனா முடிக்க சொன்னாரா?


//(ஆப்பு என்ன? தொடரும்...)//

எத்தனி பேருக்கு அப்புரேசன் தொடர்ந்ததோ? :(

//தென்றலாக வீசியது புதுகைத் தென்றல் //

இங்க மட்டும் தென்றல். சைக்கிள் ஓட்டினா கொலைகார புயல்.. ஸாரி.. சுனாமி. ;P

....யக்கா ..முடியலக்கா... :P

pudugaithendral said...

வாங்க சஞ்சய்,


இன்னைக்கு நிறைய நேரம் கிடைச்சிருக்குப் போல.

அதான் விரிவான பின்னுட்டமா??

நடத்துங்க.

Sanjai Gandhi said...

ஈரோடு போகனும். கொஞ்சம் டைம் இருந்தது. அதான் கும்மிட்டேன். :P

pudugaithendral said...

கோவா போயிட்டு வந்த தாக்கம் நல்லா தெரியுது சஞ்சய்.

அதனாலதான் கல்லெலாம் "கள்" ஆ
தெரிஞ்சிருக்கு.

குசும்பன் said...

பதிவு மிகவும் சிறியதாக இருக்கு சுவாரஸ்யமாக ஆரம்பித்த வுடனே தெடரும் என்று போட்டுவிட்டீர்கள்:((

(அப்ப அப்ப ஒழுங்காவும் பின்னூட்டம் போடுவேன் கண்டுக்காதீங்க, சின்னதாக இருப்பதால் கிண்டல் செய்ய மேட்டர் தேட வேண்டி இருக்கு:))) அதான் கவலை!!!

குசும்பன் said...

//ஸ்ரீநிவாச தியேட்டருக்குப்
பின்னாடி, ஸ்ரீநிவாச நகர்ல இருந்தாங்க. ///

ஸ்ரீநிவாச கல்யாண மண்டபம் இருக்கு தியேட்டர் ரொம்ப வருடத்துக்கு முன்பு இருந்ததோ!!!

குசும்பன் said...

SanJai உங்க பின்னூட்டம் பதிவை விட மிகவும் பெருசாக இருக்கிறது, என்ன இது சின்ன புள்ள தனமா இப்படி எல்லாம் செய்யகூடாது சரியா!!!

pudugaithendral said...

வாங்க குசும்பன்,

பதிவு இன்னும் முடியல, தொடரும் போட்டிருக்கேன்.

pudugaithendral said...

ஆமாம், முன்னாடி அங்கே தியேட்டர் இருந்தது.

உங்களுக்கு எப்படி தெரியும். புதுகை வந்திருக்கிங்களா????

cheena (சீனா) said...

அய்யொ பாவம் அடி பட்டுடுச்சா - எல்லார் வூட்லேயும் அம்மம்மா தான் துணையா ?? - ம்ம்ம் - அப்பா என்ன சொன்னாரு ? - பொடியன் பின்னூட்டம் அருமை. கள்ளு - பனை மரம் ச்சுப்பர்ப்பு

pudugaithendral said...

சீனா சார்,

எனக்கு எப்பவும் எல்லாத்துக்கும்
அம்மம்மா துணைதான். அம்மா வேலைக்கு போனதால் அம்மம்மா கிட்ட வளர்ந்தவள்.