Sunday, February 17, 2008

நானும் சைக்கிளும் பாகம் 3

அப்பா வைத்த ஆப்பு இதுதான்.......

"இங்க சைக்கிள் ஓட்டுறது சரி. நீ தனியா சைக்கிள்ல
அம்மம்மா வீட்டுக்கு போயிட்டு வா. அப்பத்தான்
சைக்கிள் சரியா ஓட்டுறேன்னு சொல்வேன்".

அம்மம்மா வீட்டுக்கு போகறதுக்கு மெயின் ரோடு
(தஞ்சாவூர் ரோடில்) தான் போகணும். பஸ் ரூட்.
அதை விட கொடுமை, தடி கொண்ட ஐயனார்
கோவில் தாண்டினவுடன் வர்ற மேட்டுல
நடந்து ஏற்ரதே கஷ்டம். சைக்கிளை மிதிக்கனும்னா??!!!!


விடுவாரா? மறுபடியும் ரோஷம் தரும் வார்த்தைகள்.
கிளம்பியாச்சு. போற வழியில் ஒரு சர்ச் இருக்கு.
அதை தாண்டறதுக்கே கலவரமாயிடுச்சு.

தடிகொண்ட ஐயனார் கோயிலைத் தாண்டினதும்,
தெனாலி கமல் மாதிரி பஸ், லாரி, டீவிஏஸ் 50 எல்லாம்,
பயமுறுத்த "இறங்கி, ஏறி" மேட்ல மிதிச்சு
மேடு ஏறினவுடன், ஸ்ரீநிவாசா தியேட்டர் கண்லபட்டதும்
தான் மூச்சே வந்தது. அப்பாடின்னு! அம்மம்மா வீட்டுக்கு
போய் சேர்ந்துட்டேன்.

அம்மம்மா ஆரத்தி, திருஷ்டி எல்லாம் எடுத்தாங்க. சின்ன மாமா
கூட சபாஷ்னு சொல்ல சந்தோஷமா இருந்துச்சு.
வீட்டுக்கு திரும்பும் படலம்.

இறக்கம் வரைக்கும் நல்லாத்தான் வந்தேன். இறக்கத்துல
வண்டி "சல்லுன்னு" போகுது. கண்ட்ரோலே இல்ல....
எதுர்ல வந்த டவுன் பஸ்ஸுக்கு பயந்து ஹேண்டில் பாரைத்
திருப்பினது தான் தெரியும்.........
கண்னைத் திறந்து பார்த்தப்ப நான் இருந்தது,
விளக்கென்னை விக்கற தையல் நாயகி அம்மா வீட்டு
வாசல்ல.


என்னை ஊர்ல எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.
தாத்தா ஊரறிஞ்ச டீச்சர். தையல் நாயகி அம்மா
வெளியில வந்து,"மாமா வந்து நேத்து தான்ம்மா
என்ணை வாங்கிகிட்டு போனாங்க" அப்படின்னு கேட்டாங்க.

இல்ல ஆத்தா! பாட்டி வீட்டுகு போயிட்டு வரும்போது
சைக்கிள்லேர்ந்து விழுந்துட்டேன்னு சொல்ல, காயத்தை
கழுவி, குடிக்கத் தண்ணி கொடுத்தாங்க.

நொண்டி!நொண்டி நடக்கிறதுக்கு பதில்
சைக்கிளே ஒட்டிடலாம்னு,சைக்கிளை
கடையில் விட்டுட்டு, வீட்டுக்கு வந்தேன்.

ராத்திரி அப்பா வந்து,"பரவாயில்லை!!!" அப்படின்னு
சொல்லிட்டார். அடுத்தமுறை கீழே விழாம
போகனும்னு நானே கிளம்பினேன். மேட்ல ஏர்ற
லாகவம் தெரிஞ்சது. இறங்கும் போது
பெடல் அதிகம் செய்யாம, சும்மா ஜல்லுன்னு,
காற்றை அனுபவசிக்கிட்டு, ஐயனார் கோயில்
தாண்டி பெடல் பண்ணினேன்.


ஆனா வீட்டுக்கு வண்டியை விடாம, மெயின்
ரோடிலேயே இருக்குறஅப்பா வேலை செய்யுற
வங்கி முன்னாடிபோனேன். எதுத்தாப்புல
"செல்லையா டீக்கடை"ல
நின்னுகிட்டிருந்த அப்பாவோட நண்பர்கள்,
பார்த்துட்டு, "உன் பொண்ணு ஜோரா சைக்கிள்
ஓட்டிகிட்டு போறாப்பா!! பிருந்தாவனம்
ஸடாப்பிங்கிட்ட சைக்கிளை ஒட்டிகிட்டு
போரது லேசுல்ல....." அப்படின்னு சொல்லியிருக்காங்க.


ராத்திரி அப்பா "கடலை மிட்டாய்" வாங்கி கிட்டு
வந்து ஊட்டி விட்டு பெருமையாச் சொன்னாரு.


அப்புறம் எங்கே போகணும்னாலும் வாடகை
சைக்கிள்தான். சைக்கிள் கத்துக்கோன்னு சொன்னவரு,
சைக்கிள் கேட்டப்போ வாயே தொரைக்கலை.
(சைக்கிள் வாங்கற அளவுக்கு வசதி கிடையாது)
நான் கேட்டுகிட்டே இருக்கறதைப் பார்த்து
6 வருஷம் கழிச்சு அம்மா லோன் போட்டு
சைக்கிள் வாங்கி கொடுத்தாங்க..


ஏண்டா? சைக்கிள் கேட்டோம்னு ஆயிடுச்சு.
இது நானே எனக்கு வெச்சுகிட்ட ஆப்பு.........

தொடரும்....

9 comments:

Sanjai Gandhi said...

யக்கா.. அப்பா கண்ணுல படறவரைக்கும் சைக்கிள் ஒட்டிட்டி அப்புறம் தள்ளிட்டே போய் திரும்பவும் வர வழியில அந்த டீ கடைகிட்ட அபபவ பாத்து சைக்கிள் ஓட்டி கொஞ்ச தூரம் போனதும் மறுபடி தள்ளிட்டே போய்... வீட்ல எல்லார்கிட்டயும் அம்மம்மா வீட்டுக்கு போய் வர வரைக்கும் சைக்கிள் ஓட்டினதா கதை விட்டு( எல்லாம் ஒரு கடலை மிட்டய்க்கு தான்).......

இதை எல்லாம் சொல்லாம மறைச்சிட்டிங்களே.. :P

pudugaithendral said...

வாங்க சஞ்சய்,

அந்தளவுக்கு பொய்யெல்லாம் சொல்லத் தெரியாது, சொல்லவும் முடியாது.

அது ஒரு தனி கதை. ஊர்ல எல்லோருக்கும் எங்க குடும்பத்தை தெரியும்.

அவ்வ்வ்வ்வ்வ்

நிஜமா நல்லவன் said...

ஆஹா ஆப்பு மேல ஆப்பா இருக்கும் போல.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

எனக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்புதான் பெரியா ஆப்பு.

pudugaithendral said...

சஞ்சய்,

அப்பாக்கு பிடிச்சதை நாம செஞ்சு, நமக்கு பிடிச்சதை அப்பா செய்வது ஒரு ஆனந்தம்.

நான் அதிகம் செலவு வைக்காத ஆளு.

கடலை மிட்டாய் உடம்புக்கும் நல்லது.

கடலை மிட்டாயை அப்பா ஊட்டி விட்டது தான் "மேட்டர்"

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
புதுகைத் தென்றல் said
அப்பாக்கு பிடிச்சதை நாம செஞ்சு, =>
செஞ்சுதான ஆகணும்.இல்லனைனா அடில விழும் =)).
<==
கடலை மிட்டாயை அப்பா ஊட்டி விட்டது தான் "மேட்டர்"
==>
சைக்கிளோட கீழே விழுந்து கை,கால் முட்டி எல்லாம் வீங்கி படுக்கையில இருக்கரப்ப, அப்பா தலைல "ணங்"குனு ஒரு குட்டு வச்சு, அப்புரம், கடலை மிட்டய் ஊட்டி விட்டத சொல்லணும்.

pudugaithendral said...

நங்குன்னு குட்டுல்லாம் இல்லை சாமான்யன்

அடிச்சா நெத்தி அடிதான். இல்லைன்னா வார்த்தைகளாலேயே மரண அடிதான்............

cheena (சீனா) said...

இதெல்லாம் சகஜமப்பா - சைக்கிள் கத்துக்கணும்னா சும்மாவா

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

இதெல்லாம் சகஜம்னு நான் இப்ப என் பொண்ணுக்கு சொல்றேன்.