Friday, February 01, 2008

திருவிளக்கு - தீபலக்ஷ்மி வழிபாட்டு ஸ்லோகம்



விளக்கே திரு உருவே வேந்தனுடன் பிறப்பே

ஜோதி மணிவிளக்கே ஸ்ரீதேவிப் பொண்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாட்சி தாயாரே

பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத்திரி போட்டுக்
குளம்போல நெய்விட்டுக் கோலமுடன் ஏற்றிவைத்தேன்
பொட்டுமிட்டேன் குங்குமத்தால் பூமாலை சூற்றினேன்.

ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள மாதவிக் கண்டு கொண்டேன்.
மாங்கலயப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா!
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!

பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா!
கொட்டில் நிறைய்ப் பால் பசுவைத் தாருமம்மா!

புகழுடம்பைத் தந்து என் பக்கத்தில் நில்லுமம்மா!
சேவித்தெழுந்து நின்றேன் தேவி வடிவு கண்டேன்

வஜ்ரக் கீரிடங் கண்டேன் வைடூரிய மேனிக் கண்டேன்
முத்துக் கொண்டைகண்டேன் முழுபச்சை மாலை கண்டேன்
சவுரிமுடியக் கண்டேன் தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன் பிறைப்போல நெற்றிக் கண்டேன்
குறிக்கிடும் நெற்றிக் கண்டேன் கோவைக் கனி வாயும் கண்டேன்
செந்தாழைப் பூமடல் போல் செவியிரண்டும் கண்டு கொண்டேன்

அம்பிகையே அருந்துணையே உனை அடைந்த எந்தனுக்கு
வந்த வினையகற்றி மகா பாக்கியம் தந்தருள்வாய்
தந்தை தாயும் நீயே தற்காக்கும் ரட்சகி நீயே
அந்தத்திற்கு உதவி நீயே அதாரம் நீயே

உன்னை உறவாக நம்பி உற்றாரைக் கைவிட்டேன் தாயே!
சந்தானம் சொளபாக்யமளித்து சத்துக்கள் சேவையளிப்பாய்
பக்தியுள்ள மனதெனக்கு தந்து பரதேவி
கிருபையுடனே அருள்வாயே!!!

*****************************************

ஊன் ஆனாய் உயிர் ஆனாய்
உயிரில் ஊரும் உணர்வானாய்


வான் ஆதி ஐம்பூத

வகை எல்லாம் நீ ஆனாய்


தேன் ஆரும் மலர்க் கொன்றைச்

சிவம் என்னும் பொருள் ஆனாய்


நான் ஆனனய் உயிர்க்கு உயிரே

ஞானப் பேரொளி உமையே!

7 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

அட, இந்த மாதிரிப்பாட்டுகூட புரியுதே.

pudugaithendral said...

இதெல்லாம் தெரியாட்டாதான் ஆச்சரியம் சிவா.

cheena (சீனா) said...

புதுகைத் தென்றல், பாடல் அருமை. எங்கள் வீட்டில் என் பாட்டி தினம் தினம் பாடும் பாட்டு. பின் எங்கள் அம்மாவுடன் சேர்ந்து நானும் பாடிய காலமுண்டு. சாயந்திரம் விளக்கேற்றி வைத்து, கொட்டில் நிறைய பால் பசுவைத் தாருமம்மா என வேண்டிய காலம் நினைவிற்கு வருகிறது. வீட்டில் 2 பசுக்களும் கன்றுகளூம் இருந்தகாலம். சிறு வயது நினைவுகளைத் தூண்டி விட்டீர்கள். புதுகைப் பக்கம் இப்பாடல்கள் புழங்கிய காலமது என நினைக்கிறேன்.

பூப்பறி
பூசை பண்ணு
பால் வாங்கு
பாயசம் வை
எனத் தொடங்கும் பாடல் தெரியுமா

pudugaithendral said...

நீங்கள் சொன்ன பாடல் தெரியாது சீனா சார்,

என் அம்மம்மா துளசி (அடுத்து அதான்) ஸ்லோகம், அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே, குங்கும ஸ்லோகம், பச்சைபட்டு கட்டிக் கொண்டு பராசக்தி உன் அழகைப் பார்த்துவிட்டாள் ஆகிய பாடல்கள் பாடக் கேட்டிருக்கிறேன்.

இந்தப் பாடல் அம்மம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்.

மங்களூர் சிவா said...

என் வீட்டில் அம்மா தினமும் சொல்லி கேட்டதுண்டு.

மிக்க அருமை. தொடர்ந்து இது போல நிறைய எழுதுங்கள்.

நன்றி

pudugaithendral said...

வாங்க சிவா,

ஊக்கத்திற்கு நன்றி.

cheena (சீனா) said...

//இந்தப் பாடல் அம்மம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்.//

கேட்டாச்சா