Monday, February 04, 2008

கிரெடிட் கார்டு நல்லதா? கெட்டதா?

பிளாஸ்டிக் மணி எனப்படும் இந்த கிரெடிட் கார்டைப் பத்தி
பேசாதவங்க இல்ல.

நானும் கொஞ்சம் பேசிக்கறேன்.

இந்தக் கிரெடி கார்டினால் பாதிக்க்ப்பட்டவங்க அதிகம்.

எதனால் இந்த பாதிப்பு. அந்த கடன் அட்டையைச் சரியா

உபயோகிக்க தெரியாததனாலும், அதன் வழிமுறைகளை

தெரிஞ்சுக்காத்தாலும் தான் இந்த பாதிப்பு.

கிரெடிட் கார்ட்:

ஒரு குறிப்பிட்ட வங்கியில் நம் பெயரில் ஒரு அக்கவுன்ட் இருக்குற
மாதிரியும் அதில் பணம் இருக்குறமாதிரியும் ரெடி பண்ணிக்குவாங்க.
(1 லட்சம் முதல் 5 லட்சம் வரை வரம்பு இருக்கும்)
இந்த வரம்பை நிர்ணயிப்பது நாம வாங்கும் சம்பளம்.

ஒவ்வொருமுறை நாம் இந்தக் கார்டை உபயோகிக்கும்போதும், நமக்குபதில்
அந்த வங்கி, கடைகாரருக்கு பணத்தை கொடுக்கும்.

நாம் செய்யும் தவறு ஒன்று இங்கேதான். அதான் வரம்பு இருக்கே என்றும், அடுத்தமாதம்தானே கட்டப்போகிறோம் என்பதாலும் முடிஞ்சவரை
கார்டை உபயோத்துவிடுகிறோம். பணம் கட்டச்சொல்லி பில் வரும்போது
கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறோம்.

அதில் குறைந்த பட்ச தொகையை செலுத்தினால் போதும் என்று சொல்லியிருக்கும் பணத்தை மட்டும் செலுத்தி தப்பிபார்கள் சிலர்.
இதனால் மீதமிருக்கும் பணத்திற்கு வட்டி கட்ட வேண்டும். வட்டி குட்டிபோட்டு
வீட்டிற்கு குண்டர்கள் வரும் அளவிற்கு போய்விடுகிறது.

மிக முக்கியமாக கவனத்தில் வைக்கவேண்டியது. பில்லிங் & பணம் செலுத்தும் தேதி.

ஒரு உதாரணம் சொல்கிறேன் பாருங்கள். ஜனவரி 20 தேதிக்கு மேல்
தாங்கள் உபயோக்கிக்கும் கடன் அட்டைக்கான பணத்தை மார்ச் மாதபில்லிற்கு
செலுத்தினால் போதும் (45 நாள் என்ற கணக்கு இதுதான்). இது தெரியாமல் 20 தேதிக்குமுன் அட்டையை உபயோகித்தால் அதை நீங்கள் பிப்ரவரிமாதத்தில் கட்டவேண்டியதிருக்கும்.

சரி. எப்படி பாவித்தால் நல்லது?

கிரெடிட் கார்ட் என்று பெயர் இருந்தாலும் அதை டெபிட் கார்ட் என்றே
நினைத்துக் கொள்ளுங்கள்.

அதாவது வாங்கக்கூடிய பொருளுக்கு பணம் செலுத்தக்கூடிய அளவு பணம் கையிருப்பில் இருந்தால் மட்டுமே அட்டையைப் பயன் படுத்துவது நல்லது.

உதாரணமாக தாங்கள் மைக்ரோவேவ் அவன் வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். அதற்கு உண்டானப் பணத்தை வங்கியிலிருந்து எடுத்துச்
சென்று, வாங்குவதற்கு பதில், கடன் அட்டையை உபயோகித்து வாங்கிக்
கொண்டுவந்துவிட்டு, பில்வரும்போது பணம் செலுத்தலாம். (ஆனால் வங்கியில் பணம் கையிருப்பு இருப்பது அவசியம்).

அதிக அளவு பணம் கையில் எடுத்துச் செல்வது ஆபத்து. அந்தமாதிரி
நேரங்களில் இது உதவியாய் இருக்கும்.

அவசர நேரத்தில் உதவியாய் இருக்கும். என் கணவரை நள்ளிரவில்
மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது. கையில் அதிகப் பணம்
இல்லை. அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாய் உதவியது கிரெடிட் கார்ட்தான்.


சில வங்கிகளில் தாங்கள் ஒழுங்காக பணம் கட்டுவதனால் தங்களுக்கு
மேலும் கடன் கொடுக்கிறோம், செக் ரெடியாக இருக்கிறது என்று செக்கையையும் சேர்த்து அனுப்புவார்கள். அதையெல்லாம் திரும்பிக்கூட பார்க்காதீர்கள். அவர்கள் வலையில்
விழ வைக்க தந்திரம்.

மொத்ததில் வரவுக்குள் செலவழித்தல், திட்டமிடல் இவை இருந்தால்
கிரெடிகார்ட் நமக்கு பகைவன் அல்ல. உற்ற நண்பன் தான்.

அதை உபயோகிக்கும் தந்திரமும், சூட்சுமமும் அறிதல் அவசியம்.

15 comments:

cheena (சீனா) said...

கிரெடிட் கார்டு பற்றிய பொதுவான பதிவு இது - ஏற்கெனவே இது மாதிரி பதிவுகள் அதிக்கம் உள்ளன. இருப்பினும் வாழ்த்துகள்

மங்களூர் சிவா said...

//
"கிரெடிட் கார்டு நல்லதா? கெட்டதா?"
//

மாஸ்டர் கார்டா? இல்ல 'விசா' கார்டா எதை கேக்குறீங்க!?!?

மங்களூர் சிவா said...

//
"கிரெடிட் கார்டு நல்லதா? கெட்டதா?"
//

'மாஸ்டர்' கார்டா? இல்லை
'விசா'வா

எதை கேக்குறீங்க!?!?

இம்சை said...

ஆகா நீங்க கெட்டதுன்னு சொல்லுவிங்க அப்படின்னு நினைச்சி படிச்சிட்டே வந்தேன் இப்படி பண்ணிட்டீங்களே... நானும் 10 வருசமா யூஸ் பண்ணரேன் ஆனா இது வரை பாக்கி வைத்ததில்லை 100% கட்ட ஸ்டான்டிங் இன்ஸ்டிரெக்சன் குடுத்து இருக்கேன் அதனால இது வரை பிராப்ளம் எதுவும் இல்லை

மகேஸ் said...

//சில வங்கிகளில் தாங்கள் ஒழுங்காக பணம் கட்டுவதனால் தங்களுக்கு
மேலும் கடன் கொடுக்கிறோம், செக் ரெடியாக இருக்கிறது என்று செக்கையையும் சேர்த்து அனுப்புவார்கள். அதையெல்லாம் திரும்பிக்கூட பார்க்காதீர்கள். அவர்கள் வலையில்
விழ வைக்க தந்திரம்//
மிகச் சரி,என்க்கும் செக் அனுப்பி ஆசை காட்டினார்கள். முதல் வேலையாக செக்கை தீவைத்துக் கொளுத்தி விட்டுத்தான் மறுவேலை பார்த்தேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சீனா சார்,

இது பொதுவான பதிவுதான். வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

சிவா,

மாஸ்டரோ,விசாவோ கார்டு கார்டுதானே?

புதுகைத் தென்றல் said...

இம்சை,

நண்பனைக் கெட்டவன்னு எப்படி சொல்ல முடியும்.

நண்பனுக்கும் நமக்கும் ஒரு எல்லைக் கோடு இருக்குல்ல.... அதுமாதிரி தான் இதுவும்.

புதுகைத் தென்றல் said...

வாங்க மகேஸ்,

தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

என் கணவர் அடிக்கடி இந்திய பயணம் மேற்கொள்வார். சென்றமுறை ஒரு தனியார் வங்கியிலிருந்து அடிக்கடி போன் வந்து
கொண்டிருந்ததாம். கைப்போன் விட்டால், அலுவலக நம்பர் என்று
டார்ச்சர் தாங்கவில்லை.

ராத்திரி 10 மணிக்கு கூட போன் வரவே
இவர் கோபப்பட்டு," உங்களுக்கு என்னதான்யா வேணும்னு கேட்க"?

சில விவரங்கள் கேட்டிருக்காங்க. அது முடிஞ்சு," இது பார்மல் சார்!
நாங்க உங்களுக்கு 25 லட்சம் லோன்
கொடுக்கத் தயார். (வீட்டுலோன்)
நீங்க எப்ப "உம்"னு சொன்னாலும் செக்கை அனுப்பி வைக்கறோம். 6 மாசத்தில எப்பவேணாம் கூப்பிடுங்க சார்னு," சொல்லியிருக்காங்க.

அடக் கடவுளேன்னு நினைச்சோம். ஒரு காலத்தில கெஞ்சி, கூத்தாடினாலும், கடன் கிடைக்காது. இப்ப கூப்பிட்டு கூப்பிட்டு கொடுக்கறாங்க. எந்த வகை லோனும் இப்ப சர்வ சாதாரணமாக கிடைக்குது.

இதனால மக்கள் ரொம்ப பாதிக்கப் படுறாங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

அது சரி, க்ரெடிட் கார்டுக்கும் தங்க மணிக்கும் என்ன சம்பந்தம்னு புரியலையே? அட்டையைக்கொடுத்து பொருள வாங்கறதோட சரி,அப்புரம் ர.மணில்ல அத திரும்பச் செலுத்தப்போரார்.

இந்த கிரெடிட் கார்ட்ல எதும் பிரச்னைனா ஒரு எட்டு நம்ம ப்ளாக் http://stock-siva.blogspot.com பக்கம் வந்துட்டு போங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
cheena (சீனா) said...
கிரெடிட் கார்டு பற்றிய பொதுவான பதிவு இது - ஏற்கெனவே இது மாதிரி பதிவுகள் அதிக்கம் உள்ளன. இருப்பினும் வாழ்த்துகள்
==>
பெண்கள் அடுக்களை(சமையல்),குழந்தை வளர்ப்பு,பாட்டு,சினிமாவ விட்டு கொஞ்சம் கொஞ்சமா இப்படி வெளிய(க்ரெடிட் கார்ட் பத்தி ப்ளாக எழுத) வந்தாத்தான் உண்டு.வாழ்த்துகள்.

புதுகைத் தென்றல் said...

சிவா
பெண்களுக்கு எதுவும் தெரியாது என்ற தப்பான எண்ண்த்திலேயே எப்போதும் பின்னூட்டம் இடுகிறீர்கள்.

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எழுதுவது தனிமனித சுதந்திரமாக இருக்கலாம்.
அதற்காக பெண்களை இப்படி அநியாயமாக தாக்கி எழுதுவதை மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

இத்தகைய பின்னூட்டங்கள் தொடருமானால், பின்னூட்டங்கள் பிரசூரிக்கப் படமாட்டாது.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
புதுகைத் தென்றல் said...
இத்தகைய பின்னூட்டங்கள் தொடருமானால், பின்னூட்டங்கள் பிரசூரிக்கப் படமாட்டாது.
===>
=)=)=)=)=)=)

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
பெண்களுக்கு எதுவும் தெரியாது என்ற தப்பான எண்ண்த்திலேயே எப்போதும் பின்னூட்டம் இடுகிறீர்கள்.
//
நீங்க கூடதான் ஹஸ்பண்டாலஜில இல்லாததும் பொல்லாததும் எழுதறீங்க. ரொம்பா டேமேஜ் பண்றீங்க.


//
இத்தகைய பின்னூட்டங்கள் தொடருமானால், பின்னூட்டங்கள் பிரசூரிக்கப் படமாட்டாது.
//
இப்பிடி ஒரு கமெண்ட் உங்க கிட்ட எதிர்பார்க்கலை. சின்னபுள்ளதனமா இருக்கு.

அவர் போட்ட கமெண்ட்ல எதும் தப்பு இருக்கமாதிரி தெரியலை. பிரசுரிக்கிறதும் நிராகரிக்கிறதும் உங்க விருப்பம்.

புதுகைத் தென்றல் said...

மங்களூர் சிவா,

ஹஸ்பண்டாலஜி பொதுவாக ஆண்களைப் பத்தி சொல்வது.
அது ஆண்களை டேமேஜ் செய்வதற்கு அல்ல.

இப்படியும் இருக்கிறார்கள் என்று சொல்கிறேன்.

தவிர வேறு எதுவும் எழுதத் தெரியாத மாதிரி சொல்வது தவறு.

ஹஸ்பண்டாலஜி தவிர ஆண்களைக்குறித்து நான் தவறாக எங்கும் சொல்லவில்லை.
ஆண்களின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவள்.
ஆண்களில் நல்லவர்கள் உண்டு என்பதே என் எண்ணம்.