Tuesday, February 05, 2008

இந்திய நாடு என் நாடு! இந்தியன் என்பது என் பேரு!

வெளிநாட்டுக்கு வந்தபிறகு அனைவருக்கும் தேசபற்று அதிகமாகிறது.

தன் நாட்டை விட்டு வந்திருக்கிறோம், உற்றார், உறவினர் அருகில்
இல்லை போன்ற பல காரணங்களால்,நீங்க இந்தியாவா? என்று கேட்டு
நட்பாகிறோம். பேசும் பாஷை, ஜாதி இதெல்லாம் வித்தியாசமாகத் தெரிவதில்லை.

ஆனால் திரும்ப இந்தியாவில் நுழைந்த உடன், முதலில் நீ எந்த மாநிலத்தை
சேர்ந்தவன், பிறகு பேசும் மொழி, ஜாதி, அதிலும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி,
பணம், அந்தஸ்து என்று பிரிவினைகளின் கையில் ஆட்கொண்டு
சிக்கிச் சின்னாபின்னமாகிறான் இந்தியன்.

ஏன் இந்த நிலை? வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பதுதானே நமது
குறிக்கோள்?

முன்பு பெங்களூரிவில் தமிழர்களை அடித்து வெளியேற்றினர். இப்போது மஹாரரஷ்ட்ரா எங்களது என்கிறார்கள். போகிற போக்கில்
பார்த்தால் இந்தியாவிற்குள் நடமாடவே "விசா" வாங்கிக் கொண்டு
போகவேண்டும் போலிருக்கிறது.

நேற்று NDTV யில் தைரியமாக பேட்டி அளித்த அந்த டாக்ஸி டிரைவருக்கு
என் பாராட்டுக்கள். அவர் சொல்கிறார், நான் உத்திரபிரதேஷத்தை சேர்ந்தவன்,
மும்பையில் பிழைப்புக்காக வந்தேன். என்னைப் போகச் சொன்னால் போவது
எங்கே? தெரியாமல்தான் கேட்கிறேன்? இங்கே இருக்கும் முக்கால் வாசி
டிரைவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தாம். நாங்கள்
போய்விட்டால் இவர்கள் ரயில்வே ஷ்டேஷனுக்கோ, மருத்துவமனைக்கோ,
விமான நிலையத்திற்கோ செல்வது எப்படி."?

நியாயமான கேள்வி, இப்படி மும்பையிலிருந்து வேறு மாநிலத்தவர்களை
விரட்டி விட்டால் மும்பை அவ்வளவுதான். MUMBAI IS NO MORE FINANCIAL HUB.

3 வருடம் மும்பையில் இருந்த நான் அந்த ஊரை மிகவும் விரும்புவதனால் "அம்ச்சி மும்பை" (என்னுடைய மும்பை) என்று சொல்லுவேன். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்பதால் அப்படிச்சொல்லக்கூடாதா? மும்பை இருப்பது இந்தியாவில்தானே? இந்திய நாடு என் நாடு. பிறகு எந்த ஊரும் என் ஊரே.

அனுமதியோம், அனுமதியோம், நாட்டைத் துண்டாட அனுமதியோம் என்று
இன்னமும் பாடிக்கொண்டிருக்கவேண்டிய அவலநிலையில் இருக்கிறோம்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்!!!!

13 comments:

துளசி கோபால் said...

நாயம்தான்.

ஆனா யார்காதுலே விழப்போகுது?

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி அக்கா,

இப்படி பேசுவது தவறுன்னு கோர்ட்
தீர்ப்பு வழங்கனும்.

வன்முறையைத் தூண்டுவதற்கான முயற்சின்னு கேஸ்போடனும்.

TBCD said...

ஏனுங்க..

அவர்களின் குரலில், 1% சதவிகதமேனும் நியாயம் இருக்கும் என்று தோனலியா.

புதுகைத் தென்றல் said...

வாங்க டி.பி.சி.டி
உங்களுக்குத்திறமை இருந்தா உங்களுக்கு வேலைக் கிடைக்கும்.

உங்களால முடியாதபோது வேலைச் செய்யறவன் எவனோ அவனுக்குத்தான் வேலை கொடுப்பாங்க.

இத ஏத்துக்கனும்.

புதுகைத் தென்றல் said...

அங்கே இருக்கும் மக்கள் இந்தக் குரலை எழுப்பியிருந்தால் பரவாயில்லை.

அரசியல் நியாயத்துக்காக கிளப்பி விடறது சரியில்லீங்க.

புதுகைத் தென்றல் said...

TBCD SIR,

நான் வேற்று மொழி பேசுபவள். பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்.

நான்கு தலைமுறைக்கு மேற்பட்டு இங்கேதான் இருக்கோம்.

நான் எங்கே போகவேண்டும்? நான் எந்த ஊரைச் சேர்ந்தவள்?

கொஞ்சம் சொல்லுங்க

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

பதிவுக்கு வந்துட்டேன்.

பாச மலர் said...

அந்த டாக்ஸி ட்ரைவரின் முதல் வாதம் சரி..

நாங்கள் போய்விட்டால் யார் டாக்ஸி ஓட்டுவார்..இது கொஞ்சம் ஓவராக இல்லை?

இப்போது என்ன பெங்களூரிலிருந்து தமிழர்கள் எல்லாம் வெளியே வந்து விட்டார்களா?

அல்லது மும்பையிலிருந்து அனைவரும் போகப் போகிறார்களா?

இல்லவே இல்லை..அரசியல் தகராறுகள்..இப்படி வரும்..போகும்..

இதையும் தாண்டி கலவரம் உள்ளே
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பதுதான் நம் இந்தியா..

புதுகைத் தென்றல் said...

சரிங்க பாசமலர்,

வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் பண்பாடே.

நேற்று டிரைவர்களை அடித்ததை காட்டினார்களே நீங்கள் பார்தீர்களா?

பாவம்ங்க.

தாக்குதல் நடத்தற அளவுக்கு போகக்கூடாது. அதைக் கட்டுபடுத்த வேண்டும்.

NejamaNallavan said...

///அனுமதியோம், அனுமதியோம், நாட்டைத் துண்டாட அனுமதியோம் என்று
இன்னமும் பாடிக்கொண்டிருக்கவேண்டிய அவலநிலையில் இருக்கிறோம்.////
தரங்கெட்ட அரசியலும் அரசியல்வாதிகளும் இருக்கும்வரை இப்படியே பாடிக்கொண்டிருப்பதை தவிர வேறுவழியில்லை.

பாச மலர் said...

//நேற்று டிரைவர்களை அடித்ததை காட்டினார்களே நீங்கள் பார்தீர்களா?//

அது பாவம்தான்..

நிஜமா நல்லவன் said...

/// பாச மலர் said...
இதையும் தாண்டி கலவரம் உள்ளே
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பதுதான் நம் இந்தியா..///

உண்மைதான். ஒன்றா இரண்டா நிறைய விஷயங்களில் சமாளித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

புதுகைத் தென்றல் said...

வாங்க நிஜ்மா நல்லவன்,

சரியா சொன்னீங்க.