Friday, February 08, 2008

துளஸி ஸ்லோகம்

துளசி புனிதமானது. நமது கலாசாரத்தில் வழிபாட்டு முறைகள்

ஆரம்பகால முதலே, விஞ்ஞான ரீதியான ஆழ்ந்த

உள்ளர்த்தங்கள் கொண்டுள்ளன. துளசிச் செடியானது, பல

உடல் உபாதைகளுக்கு அருமருந்து.

துளசி வீட்டில் இருப்பது விஞ்ஞானரீதியாக

அரோக்கியம் கூடுகிறது என்று விஞ்ஞானிகள்

கண்டுபிடித்திருக்கிறார்கள். அத்தகைய துளசிச் செடியை

நாம் போற்றுகிறோம்.

வெள்ளிக்கிழமைகளில் துளசி பறித்தல் ஆகாது.

பூஜைக்கு, மருந்திற்கு என இரண்டு தனிச் செடி

வளர்ப்பது உத்தமம்























ஸ்ரீ துளசி ஸ்லோகம்

ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா

வெள்ளிக் கிழமை தன்னி விளங்குகின்ற- மாதாவே!

செவ்வாய்க் கிழமை செழிக்க வந்த செந்திருவே!

தாயாரே உந்தன் தாளடியை நான் பணிந்தேன்.



பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே

பரிமளிக்கு மூலக் கொழுந்தே நமஸ்தே!

அற்பப் பிறப்பை தவிர்ப்பாய நம்ஸ்தே.

அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே!



ஹரியுடைய தேவீ அழகி நம்ஸ்தே!

அடைந்தார்க்கு இன்பன் அளிப்பாய-நமஸ்தே!

வனமாலையென்னும் மருவே நமஸ்தே

வைகுண்ட்ட வாஸியுடன் மகிழ்வாய நமஸ்தே!


அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டுவந்து
மண்ணின் மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீர் ஊற்றி

முற்றத்தில் தான் வளர்த்து முத்துப் போல் கோலமிட்டுச்


செங்காவி சுற்றுமிட்டு திருவிளக்கும் ஏற்றி வைத்துப்

பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்துப்

புஷ்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்கு

என்ன பலனென்று ஹ்ருஷிகேசர் தான் கேட்க

மங்களமாயத் துளசி மகிழ்ந்துரைப்பாள்!


மங்களமாய எனைவைத்து மகிழ்ந்து உபாசித்தவர்கள்

தீவினையைப் போக்கிச் சிறந்த பலன் நானளிப்பேன்!

அரும்பிணியை நீக்கிச் செல்வத்தை நான்ளிப்பேன்!

புத்திரனில்லாதவர்க்குப் புத்திர பாக்கியமளிப்பேன்!


கன்னிகைகள் பூஜை செய்தால் நல்லகணவரைக் கூட்டுவிப்பேன்!

கிருஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன்

முமூக்ஷூக்கள் பூஜை செய்தால்மோக்ஷபதம் நானளிப்பேன்

கோடிக்காராம்பசுவைக் கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்கு பொன்னமைத்துக் குளம்புக்கு வெள்ளிகட்டி

கங்கைக் கரை தனிலே கிரஹண புண்யகாலத்தில்

வாலுருவி அந்தணர்க்கு மஹாதானஞ்செய்தபலன்

நானளிப்பேன் சத்தியமென்று நாயகியுஞ் சொல்லலுமே

அப்படியே யாகுமென்று திருமால் அறிக்கையிட்டார்

இப்படியாய் ஏற்றித் தொழுவார்கள் அற்புதமாய்

வாழ்ந்திருவார்! பரதேவித் தன்னருளால்

************************************************************

10 comments:

VSK said...

நல்லதொரு பதிவு!

முமுக்ஷுக்கள் என இருக்க வேண்டும் மூக்ஷுக்கள் அல்ல!

pudugaithendral said...

வாங்க வீ.எஸ்.கே,

இது என்னோட 75 ஆவது பதிவு.

வெள்ளிக்கிழமை பூஜை செய்யனுங்கற அவசரத்தில தவறா அடிச்சுட்டேன்.

இப்ப மாத்திட்டேன். சுட்டிக் காட்டினத்துக்கு மிக்க நன்றி.

சுரேகா.. said...

கலக்குங்க!

வசந்தம் ரவியின் பட்டியலில் இருக்கீங்க!

போற வேகத்துல...

விகடன் வரவேற்பரையில் வந்து உக்கார வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

வாங்க சுரேகா,

வாழ்த்துக்கு நன்றி.

ரசிகன் said...

இங்க துளசி தூள் நிறம்பிய டீ சல்லடைப் பை தான் கிடைக்குது நெனக்கும்போதெல்லாம் லெமன்,துளசி டீ போட்டுக் குடிக்கலாம்... ஆபிஸ் பக்கத்துல மருந்து மாதிரி துளசி வளக்கறாங்க.. அம்புட்டுதான்..
என்ன இருந்தாலும் நம்ம நாடு/வீடு மாதிரி வருமா?..

pudugaithendral said...

வாங்க ரசிகன்,

முன்னெல்லாம் மொதோ ஆளா வந்து பின்னூட்டுவீங்க. "காணவில்லை"ன்னு பதிவு போடலாமான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

இங்கையும் துளசிச் செடி வெச்சிருக்கிறேன். சும்மா காடா வளருது. நினைச்சப்ப துளஸி டீ ஃப்ரஷ்ஷா போட்டு குடிப்போம்.

துளசி கோபால் said...

எங்க வீட்டிலும் 'துளசி' டீ போட்டுக் குடிக்கிறாள்:-))))

pudugaithendral said...

வாங்க துளசி அக்கா,

ஒவ்வொரு வீட்டிலும் "துளசி" டீ போட்டத்தான் குடிக்க முடியும். ரொம்ப சரியா சொன்னீங்க.

குசும்பன் said...

///துளசி வீட்டில் இருப்பது விஞ்ஞானரீதியாக///

நான் எப்படி துளசி டீச்சர் வீட்டுக்கு போவது அவுங்க என்னை கூப்பிடவே இல்லையே!!!

துளசி கோபால் said...

குசும்ப்ஸ்,

//துளசி வீட்டில் இருப்பது விஞ்ஞான ரீதியாக.........//

இது கோபாலுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு:-))))