Friday, February 15, 2008

நானும், சைக்கிளும்.......!

அப்ப எனக்கு ஒரு 11 வயசு இருக்கலாம். அப்பா திடும்னு
ஒருநாள்,"நீ சைக்கிள் கத்துக்கோ!!!" அப்படின்னு சொன்னார்.
"சைக்கிளா?!!! நானா?" அப்படில்லாம் கேள்வியே கேக்க
முடியாது. சொல்லிக்கொடுப்பது யார்? ன்னு யோசிச்சப்போ,
பக்கத்து வீட்டு மீனாட்சி அக்காவும், கோபி அண்ணாவும்,
"நாங்க ரெடின்னு" வந்தாங்க.

லேடீஸ் சைக்கிள்தான் கத்துக்கணும்னு முடிவு செஞ்சேன்.
வாடகை சைக்கிள்தான். 1 மணி நேரத்துகு 1 ரூபாய்.
அப்ப நாங்க ஐயர் குளம் வடகரையில் இருந்தோம்...

S.V.S தியேட்டர் பக்கத்தில தான் வாடகை சைக்கிள் கடை
இருந்தது. எங்க வீட்டுலேர்ந்து தியேட்டருக்குப் போகும்
வழியில் ஒரு இறக்கம் வேற இருக்கும். அதுல கஷ்டபட்டு
சைக்கிளை உருட்டிகிட்டு வீடு வரைக்கும் கொண்டு வந்தேன்.

சைக்கிள்ல ஏறி உட்காரவே முடியலை. அவங்க பிடிச்சுகிட்டாலும்,
கீழே, விழுந்து சிராய்ப்பு. எப்படியோ உட்கார்ந்து ஹேண்டில்பாரை,
வளைத்து, பேலன்ஸ் தவறி, போற வற வண்டிகளைப் பாத்து
பயந்து சைக்கிளை கீழே போட்டுவேன்.

S.V.S தியேட்டர் காரங்க வண்டி வேற சர்புர்னு வேகமா போக வற
இருக்கும்.
இப்படி இருந்தா சரிவராதுன்னு ஒரு ஐடியா செஞ்சேன்.
குளக்கரைங்கறதனால, உட்கார பாறங்கல் போட்டு
வெச்சுருப்பாங்க, அது மேல ஏறி அப்புறம் சைக்கிள்ல
உட்கார்ந்து, கொஞ்சம் இடுப்பை வளைக்காம சைக்கிள்
ஓட்டினேன். சீட்டை பிடிச்சுகிட்டு மீனாட்சி அக்கா வருவாங்க.

4 நாளாச்சு. விழுப்புண்களும், முட்டி பேந்ததும் தான் மிச்சம்.
சைக்கிள் ஓட்டப்போயி நடக்கவே முடியாம ஆயிடிச்சு!!!
விடாது கருப்புன்னு அப்பவும் சைக்கிள் ஓட்டச் சொன்னாரு
அப்பா. எதுத்து ஒரு வார்த்தை பேச முடியாது.



திரும்ப விழுதல், எழுதல், ஓட்டுதல்னு ஆரம்பிச்சப்போ,
வலிக்குத்துன்னு நான் நிக்கற சைக்கிள் கேப்புல,
தான் இரண்டு ரவுண்ட் மீனாட்சி அக்கா சைக்கிள்
ஓட்டுறத பாட்டி சன்னல்லேர்ந்து பார்த்து,

அவுகள வைய்ய......... சைக்கிள்
கத்துக்கறது அவ்வளவுதான்........

நான் சொல்லித்தறமாட்டேன்னு சொல்லிட்டாங்க
மீனாட்சி அக்கா. நம்ம விழுப்புண்களும் ஆரட்டும்னு
கொஞ்சம் கேப் விட்டேன்.......

அடுத்து என்னாச்சு????!!!!!!


தொடரும்...................

12 comments:

மங்களூர் சிவா said...

ம்.

கலக்கியிருக்கீங்க!!

நாங்கல்லாம் சைக்கிள் ஹைட் கூட வளந்திருக்காத டைம்ல குரங்கு பெடல்னு ஒரு ஸ்டைல் அதாவது அந்த ட்ரையாங்கில் பார் நடுவில கால் விட்டு ஒரு கைல ஹேண்டில் பிடிச்சிகிட்டு ஒரு கைல அந்த ட்ரையாங்கிள் பார பிடிச்சிகிட்டு ஓட்டறது.

அதுல ரேஸ், டபுள்ஸ் எல்லாம் போவோம்.

எப்ப நார்மல் ஸ்டைல் சைக்கிள் ஓட்ட கத்துகிட்டேன்னு மறந்து போச்சு. அதுக்கப்புறம் எங்க போனாலும் ட்ரிபிள்ஸ்தான் சீட்ல இருக்கிறவன், பின்னாடி இருக்கிறவன் ரெண்டு பேரும் பெடல் பண்ணிகிட்டு.

அது எல்லாம் ஒரு அருமையான காலம்.

pudugaithendral said...

வாங்க சிவா,

ஆமாம் அது அந்தக் காலம்.

நானும் பாத்திருக்கிறேன். பசங்க
குரங்கு பெடல் போட்டு ஓட்டுவாங்க.

அப்பல்லாம் சைக்கிள் வைச்ருக்க்றது பெரிய விஷயம்.

புதுவசந்தம் படம் வந்த புதுசுல, வந்த தீபாவளிக்கு அதே மாதிரி மஞ்ச சட்டை, கறுப்பு பேண்டுன்னு போட்டுகிட்டு 2 சைக்கிள்ல 6 நண்பர்கள் ரோட்ல லந்து பண்ணாங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
புதுகைத் தென்றல் said
அப்பா. எதுத்து ஒரு வார்த்தை பேச முடியாது. ==>
பின்னே அடில விழும்.

pudugaithendral said...

சாமானயன் சிவா சொன்னது,

//பின்னே அடில விழும்//


அதெல்லாம் ஞாபக படுத்தாதீங்க சிவா.
அவ்வ்வ்வ்வ்.

சுரேகா.. said...

ஓ. இதைத்தான் விழுந்து விழுந்து படிச்சதுன்னு சொல்லுவாங்களோ..?

பின்னிட்டீங்க போங்க!

யதேச்சையா, என் பதிவுலயும் ஒரு கொசுவத்திதான் ஓடிக்கிட்டிருக்கு!

நிஜமா நல்லவன் said...

நான் சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டப்ப கை கால்ல அடிபடாம நல்ல தான் ஓட்டுனேன். அப்புறம் ஒரு மெதப்புல பயங்கர வேகத்துல எங்க பாட்டிக்கு 'உளுந்து பெருங்காயம்' வாங்கிறதுக்காக கடைக்கு போகும்போது கீழே 'விழுந்து பெருங்காயம்' ஆகி பத்து தையல் போட்டு ஒரு வாரம் ஆஸ்பத்திரியில இருந்தேன்.

pudugaithendral said...

வாங்க சுரேகா,

உங்க கொசுவத்தி படிச்சேன்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

எல்லோருக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கும்ல....

cheena (சீனா) said...

புதுகைத் தென்றல் - எத்தனை முறை விழுந்தாய் என்பது பெரிதல்ல - எத்தனை முறை எழுந்தாய் என்பது தான் சிறப்பு. கொசுவத்தி சுத்தினேன் - ஆகா ஆகா - சைக்கிள் கத்துக்கிட்டது 12 வயசு முடிஞ்சு 13 ந்டக்கும் போது.

2 பசங்க 2 பக்கத்துலேயும் ஒடிக்கிட்டே இடுப்புலே வளைக்காதெ வளைக்காதேன்னு அடிச்சிக் கிட்டே வருவானுங்க. ஏறி உக்காந்து பெடல் பண்ண ஆரம்பிக்கற வரைக்கும் பிடிச்சிப்பானுங்க. அப்புறம் விட்டுடுவானுங்க. ஆரம்பமே ரெகுலர் சைக்கிள் தான். நல்லா ஓட்டக் கத்துக்கிட்டப்புறம் தான் ஏறக் கத்துக்கிட்டேன். சைக்கிளைத் தள்ளிக்கிட்டே, ஒரு காலை பூமியிலே உந்தி உந்தித் தள்ளி, சைக்கிள் பெடல்லே மற்ற காலாலே அழுத்தி ஏறணூம். சில சமயம் இப்படியே தரையில்லே உந்தி உந்தியே போக வேண்டிய இடத்துக்குப் போயிடுவேன்.
ஆனா நான் சைக்கிள்ளே லோடு அடிச்ச மாதிரி யாரும் அடிச்சிருக்க மாட்டாங்க.

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

விழாம எழுந்திருக்க கத்துக்க முடியாதுங்கறது சைக்கிள்ல உண்மை.

உங்க கொசுவத்தியும் நல்லா இருக்கு.

goma said...

இதுக்குப் பெயர்தான் என்சைக்கிளைப் பிடியான்னு சரியா அர்த்தம் கண்டு பிடிச்சிருப்பாரே.
அருமையான அலசல் .இன்னும் நிறைய அலசுங்க .அனுபவமும் ஆரோக்கியமான சிந்தனையும் கலந்து அலசி எழுதினால் அதன் வெளுப்பே தனிதான்.haasaya-rasam.blogspot.com is my paasarai .just drop in

pudugaithendral said...

nandri goma