Thursday, February 28, 2008

மாண்டிசோரி முறைக் கல்வி - நிறைவு பகுதி

எதார்த்த வாழ்க்கைக்கு தேவையான கல்வியைப்
போதிப்பதும் மாண்டிசோரி முறைக்கல்வியில்
ஒரு அங்கம்.

அன்றாடம் தன் வேலையைக் குழந்தை தானே
செய்துக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது.
தன்னம்பிக்கை நிறைந்த மனிதனாக உருவாக
இது அவசியம்

ஷூ லேஸ் கட்டுதல்


ஷூ பாலிஷ் செய்தல்

சேஃப்டி பின் போடப் பழக்குதல்ஜிப் போடப் பழக்குதல்லேஸ் கட்ட பயிற்சி

ஷூ பக்கிள்ஸ் போடப் பயிற்சிபொள முறை முடிச்சு

பட்டன் போடுதல்


செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல்


தோட்ட வேலைசுத்தமாக்கும் உபகரணங்களை முறையாக உபயோகிக்க பயிற்சி.இது தவிர:
1. அழைப்பு மணிக்கு கதவை திறக்க,
2. வரிசையில் நிற்க.
3.கொடுத்து/ வாங்க (உணவு பரிமாறிக்கொள்ளுதல்)
4.தட்டு, வாளி, பேஸின் போன்றவற்றை ஓரி இடத்திலிருந்து
மற்றோர் இடத்துக்கு எடுத்துச்செல்லல்.
5. நாற்காலியை எடுத்துச் செல்லல்
6. டேபிளைத் துடைத்தல்.
7. பாயை மடித்தல்
8. நாப்கின்/ சாக்ஸை மடித்தல்
9. காய்கறிகளின் தோலுரித்து நறுக்க (peeling & cutting)
10.பல் தேய்க்க
11.பூக்களை அடுக்குதல்,
12. நன்றியுறைத்தல்.
13. மாடிப்படி ஏறி/இறங்குதல்.
14. ஜக்கில் நீர் நிறைத்தல்.
15. டம்பளரில் நீர் ஊற்றி, தட்டில் வைத்து எடுத்துச் செல்லுதல்.
16. பாட்டிலின் மூடியை திறந்து மூடுதல்.
இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே செல்லலாம்.
இவை 2 1/2 வயதுக் குழந்தையாக இருக்கும்போதே
பயிற்சி அளிக்கப்படும். 5 வயதில் தன் கையே
தனக்குதவி என குழந்தை எல்லாம் அறிந்து கொள்ளும்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதனாலேயே,
ஒரு குழந்தை தன் வாழ்க்கைக்குத் தேவையான அனனத்தையும்
கற்கும் விதத்தில் இக்கல்வி இருக்கிறது.
வளர்ச்சிக் குறை இருக்கும் குழந்தையும், இந்த உபகரணங்களினால்
சாதாரணமாக கற்க இயலும் என்றால்!
சாதாரணமான பிள்ளைகள் மா மேதைகள் ஆகிவிடுவார்கள்
என்பதில் ஐயமில்லை.

13 comments:

மங்களூர் சிவா said...

ம் இதுல படிச்சிருக்கலாம்!!

இன்னும் அயர்ன் பண்ண வரமாட்டிக்கிது கடைலதான் குடுக்கிறேன்

:(

புதுகைத் தென்றல் said...

பரவாயில்லை சிவா,
நான் ஸ்கூல் ஆரம்பிச்சதும் மொதல் அட்மிஷன் உங்களதுதான்.

:)))))))))))))))))))))))

மங்களூர் சிவா said...

நன்றி!!

பொன்வண்டு said...

நல்லதொரு பயனுள்ள தொடரைத் தந்த புதுகைத் தென்றல் (டீச்சர் ?) நன்றி :)

நிஜமா நல்லவன் said...

அடடா அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா? பரவாயில்லை அதான் பள்ளி ஆரம்பிக்க போறீங்களே அங்க வந்து தெரிஞ்சுக்க வேண்டியதுதான்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா,

புதுகைத் தென்றல் said...

வாங்க பொண்வண்டு,

வருகைக்கு நன்றி. சொன்னாலும் சொல்லாட்டியும் டீச்சர் தான்.

என்ன இந்த வேலை பரம்பரையா தொடருது.

தொட்டுத் தொடரும் ஒரு பாரம்பரியம்.

:)

புதுகைத் தென்றல் said...

வாங்க வாங்க
நிஜமா நல்லவன்.

ரசிகன் said...

//புதுகைத் தென்றல் said...

பரவாயில்லை சிவா,
நான் ஸ்கூல் ஆரம்பிச்சதும் மொதல் அட்மிஷன் உங்களதுதான்.

:)))))))))))))))))))))))//

ஹா..ஹா.. எனக்கும் ஒரு சீட்டு ரிசர்வ் செஞ்சிருங்க..:)))))

புதுகைத் தென்றல் said...

வாங்க ரசிகன்,

அட்மிஷன் போடலாம். ஆனா கிளாசுக்கு சரியா வருவீங்களா?

இப்பவே அடிக்கடி அப்ஸ்காண்ட் ஆயிடறீங்க!!!!!!!!!!!!

பாச மலர் said...

வாழ்த்துகள் நல்ல ஒரு தொடருக்கு..

கயல்விழி முத்துலெட்சுமி said...

நல்ல தொடர்..

புதுகைத் தென்றல் said...

வாங்க கயல்விழி முத்துலெட்சுமி,

வருகைக்கும் பின்னூட்டதுக்கும் நன்றி.