எழுத இயலாமல் கஷ்டப்படுவதை பார்த்திருப்பீர்கள்.
எழுத்தின் வடிவம் சரியாக மனதில் பதியாததே
இதற்கு காரணம். கீழே கொடுத்திருக்கும் உபகரணங்கள்
அக்குறையில்லாமல் ஆங்கிலம் போதிக்க
உபயோகிக்கப் படுகிறது.
1. METAL INSETS : மெடலில் செய்யப்பட்ட
வடிவங்கள். குமிழ் உருளையைப் பிடித்துப் பழகிய
பின்னால் முதல் முறையாக பிள்ளை பென்சில்
பிடித்து எழுதுவது இந்த உபகரணத்தில் தான்.
ஒவ்வொரு வடிவங்களாக எடுத்து அதை பென்சில்
உதவியால் ட்ரேஸ் செய்யப் பயிற்சி கொடுக்கப்படும்.
வடிவங்களீன் உதவியால் பார்டர் டிசைன் அமைத்தது
அதற்கு வர்ணம் தீட்ட பயிற்சி அளிக்கப்படும்.

வடிவத்தை சரியாக உணர முடியும். உப்புத்தாள்
கொண்டு செய்யப்பட்ட இந்த எழுத்துக்கள்
sand paper laters என்றழைக்கப்படுகிறது.
எழுதுவது போல் கைவிரலால் ட்ரேஸ் செய்து
உணர்வதே பயிற்சி.
இதில் முதலில் VOWELS அறிமுகப் படுத்தப்படும்.
நீல நிற போர்கள் vowels.
ஒவ்வொரு எழுத்துக்கும் உச்சரிக்கும் முறைக்காக
உதாரணம் கொடுக்கப்படவேண்டும்.
(radiant way of reading book :1 ல் இருக்கும் உதாரணம்.
இதில் முக்கியமானது a for apple என்று சொல்ல
மாட்டோம். a as in apple என்று சொல்வோம்.
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.)
pink/ red நிற போர்டுகள் consonants.
முதலில் உணர்ந்து எழுத்துக்களை, உச்சரித்து
அந்த அட்டைகளை வைத்து வார்த்தைகள் அமைக்க
பயிற்றுவிக்கப் படும்.
at, up, on, in
cat, bat, cat, mat,
man, can, pan, van.

பழக்கப்படும். sand paperல் எழுத்துக்களை எடுத்துப் பார்க்க முடியாது.
இதில் கையில் எடுத்துப் பார்த்து வார்த்தை அமைக்க வேண்டும்.
இவ்வாறு எழுத்துக்கள் அறிமுகம் ஆன பிறகு குழந்தைக்கு
இவ்வாறு எழுத்துக்கள் அறிமுகம் ஆன பிறகு குழந்தைக்கு
உயிர், மெய எழுத்துக்களின் வித்தியாசம் தெரியும் .
எழுத பழகாமலே RADIANT WAY OF READING BOOK :1
இருக்கும் வார்த்தைகளையும், வாக்கியங்களையும்
படித்து அறிந்து கொள்ளும்.
எல்லாம் சரியாக முறையாக கற்றுக்கொள்ள ஏதுவாய்
மாண்டிசோரி அம்மையார் வடிவமைத்திருக்கிறார்.
எதார்த்த வாழ்விற்கு பிள்ளைகளை தயார் படுத்தும்
உபகரண்ங்களோடு மீண்டும் சந்திக்கிறேன்.
12 comments:
படிக்க படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு. அடுத்த பாடத்தோட சீக்கிரம் வாங்க. நன்றி.
வாங்க நிஜமா நல்லவன்,
மொதல்ல வந்தா மீ த பர்ஸ்டுன்னு சொல்லுங்க :)))
அடுத்த போஸ்டும் சீக்கிரம் போட்டுடலாம்.
மொதல்ல கமெண்ட் போட்டா, ஸ்டார் பதிவர் மாதிரி, ஸ்டார் கமெண்டர்ன்னு எதாவது பட்டம் கொடுப்பீங்க போல.பரவாயில்லயே.
உங்க மா.சோரி பத்தி படிக்கரப்ப நமக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலியேன்னு தோணுது.
ஆமாம் சாமான்யன்,
நானும் அப்படித்தான் நினைச்சேன்.
என்ன செய்யறது?
புதுகைத் தென்றல் said...
வாங்க நிஜமா நல்லவன்,
மொதல்ல வந்தா மீ த பர்ஸ்டுன்னு சொல்லுங்க :)))
எனக்கு தெரியாம போச்சே. இனிமேல் சொல்லிடுறேன்.
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
உங்க மா.சோரி பத்தி படிக்கரப்ப நமக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலியேன்னு தோணுது.
எனக்கும் வருத்தமா இருக்கு.
வாங்க நிஜமா நல்லவன்,
இனி வருத்தப்பட்டு என்ன ப்ரயோசனம் :)
நமக்கு மட்டுமல்ல நம்ம நாட்டில் பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கறதில்ல என்பது தான்
வேதனைக்குறிய விடயம்.
புதுகைத் தென்றல் said...
வாங்க நிஜமா நல்லவன்,
இனி வருத்தப்பட்டு என்ன ப்ரயோசனம் :)
நமக்கு மட்டுமல்ல நம்ம நாட்டில் பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கறதில்ல என்பது தான்
வேதனைக்குறிய விடயம்.
நீங்க தான் இந்தியா வரப்போறீங்களே? இதே மாதிரி ஒரு பள்ளி ஆரம்பிச்சுடுங்க.
சுவரசியம் தொடர்கிறது..
ஆமாம் நிஜமா நல்லவன்,
என் விருப்பம் அதுதான் பார்க்கலாம்.
இன்னும் தொடரும் பாசமலர்,
வருகைக்கு நன்றி.
புதுகைத் தென்றல் said...
ஆமாம் நிஜமா நல்லவன்,
என் விருப்பம் அதுதான் பார்க்கலாம்.
உங்கள் விருப்பம் கண்டிப்பாக நிறைவேறும்.
Post a Comment