Monday, February 04, 2008

REIKI - ரெய்கி ஒரு அறிமுகம்




"ரெய்கி" எனும் வார்த்தை ஜப்பானிய மொழியிலிருந்து வந்தது.

ரெய் + கி = ரெய்கி. ரெய் என்கின்ற வார்த்தைக்கு பலவித அர்த்தம்
இருந்தாலும் "உலகளாவிய" என்பதுதான் சரியான அர்த்தமாக
எடுத்துக்கொள்ளப்படுகிறது. "கி" என்றால் சக்தி ('life force of spiritually guided vital energy').


ரெய்கி எதையும் குணப்படுத்த உபயோகிக்கலாம். (உடல், மனம்,ஆத்மா).
"ரெய்கி" என்பது எந்தஒரு உயிரனமும் தோன்றுவதற்கு முன்பிருந்தே
இருக்கிறது. நாம் பிறக்கும்போதே நம்முள் "ரெய்கி சக்தி' உடையவர்களாக பிறக்கிறோம். (அதனால் தான்3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரெய்கிசெய்யத் தேவையில்லை.)


ரெய்கி சக்தியைக் கொண்டு (body, mind & spirit) குணப்படுத்தலாம் என்று
கண்டுபிடித்த பெருமை DR. MIKADO USUI அவர்களையேச் சாரும்.
1800 களில் இந்த தெய்வீக குணமாக்கும் கலையை அறிந்திருந்த
யேசுபிரான், புத்தர், மற்றும் ரிஷிக்களைக் குறித்து பல ஆராய்ச்சிகளை
செய்திருந்தார். கடும் தவத்திற்கு பிறகுதான் இந்த சக்தி கிட்ட
சாத்தியம் என்றறிந்து, ஜப்பான் மலைக்குன்றின் மேல் 21 நாட்கள் கடும்தவம்மேற்கொண்டார்.


அந்தத் தெய்வீக சக்தி ஒளி பிம்பமாக, குணப்படுத்தும் சக்தியாகிய
"ரெய்கி" யால் ஆசிர்வதிக்கப்பட்டார். அவர்ஒரு "ரெய்கி சக்தியுடையவராகி" பல்வேறு சீர்கேடுகளை குணமாக்கினார்.
இப்படியாக டா.உஸிய் உன்னதமான
தெய்வீக ஒளி சக்தியான ரெய்கியை கண்டுகொண்டார்.



தனது வாழ்நாளில் அவர் இந்த "ரெய்கி" முறையை பலபேருக்கு
போதித்து சிறந்த "ரெய்கி மாஸ்டர்களை" உருவாக்கினார்.
அவர்களால் ரெய்கி அனனத்து கண்டங்களிலும் பிரபலமானது.


டா.மிக்காடோ உஸியி நாம் உள்வாங்கிக் கொள்ளும் ரெய்கி
ஒளிசக்திக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதை
நம்பினார்.


அவரின் 5 முக்கியமான ரெய்கி கொள்கைகள்:


1. JUST FOR TODAY, I WILL NOT BE ANGRY.

2. JUST FOR TODAY, I WILL NOT WORRY

3. JUST FOR TODAY, I WILL DO MY WORK HONESTLY.

4. JUST FOR TODAY, I WILL BE KIND TO MY NEIGHBOUT AND EVERY LIVING THING.

5. JUST FOR TODAY, I WILL GIVE THANKS FOR MY MANY BLESSINGS.



ரெய்கியின் சக்தி அபாரமானது. "உஸியின் ரெய்கி முறை" எளிமையானது,
அதே சமயம் தகுந்த பலனைத் தரக்கூடியது. கற்றுக்கொள்வதற்கும்,
பயன்படுத்துவதற்கும் எளிமையானது. ரெய்கியால் ஒருவர் தன்னனத்தானே குணப்படுத்திக்கொள்ள முடியும் என்பது தனிச்சிறப்பு.

Distance healing மூலம் வேறு தேசத்தில் இருப்பவரைக்கூட குணப்படுத்தலாம்.

ரெய்கி தெய்வீகத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், கற்க விரும்புபவரோ,குணமடையவிரும்புபவரோ தெய்வநம்பிக்கை உடையவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. கற்க வேண்டும் என்கின்ற விருப்பமும், சக்தியை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளும்
விசாலமனதும் போதும், யாரும் ரெய்கியைக் கற்கலாம்.


ஒருமுறை ரெய்கி கற்றவர்கள் அதை மறக்க வாய்ப்பே இல்லை.
சைக்கிள் பழகியவர்கள் பல நாளாக சைக்கிள் ஓட்டாமல் இருந்தாலும்,
ஒருநாள் அற்புதமா சைக்கிள் ஓட்டுவதைப் போலத்தான் இதுவும்.

MAY LOVE AND LIGHT SPREAD ON EVERYBODY.


22 comments:

இம்சை said...

ஆகா எல்லா துறையிலயும் பூந்து விளையாடுறிங்க... ஆல் இன் ஆல் ... ஒன் வுமன் ஆர்மியா கலக்குறிங்கலே...

pudugaithendral said...

வாங்க இம்சை,

கற்பதற்கு உலகில் விஷயத்துக்கா பஞ்சம்.

கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவுன்னு சும்மாவா சொன்னாங்க.

இன்னும் கத்துக்கணும்.....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

புதுகை தென்றல்,

உங்கள் பன்முகத் தன்மை வியப்பளிக்கிறது.
தொடருங்கள் உங்கள் பயணத்தை! வாழ்த்துக்கள்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

pudugaithendral said...

வாங்க ஜோதிபாரதி,

தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

நான் ரெய்கியில் செகண்ட் டிகிரி முடித்து பிறருக்கு குணமாவதில் உதவியாய் இருக்கிறேன் என்பதில்
மட்டட்ற மகிழ்ச்சி.

நிஜமா நல்லவன் said...

புதுகைத் தென்றல் said...
வாங்க இம்சை,

கற்பதற்கு உலகில் விஷயத்துக்கா பஞ்சம்.

கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவுன்னு சும்மாவா சொன்னாங்க.

இன்னும் கத்துக்கணும்.....








உண்மைதான். உங்ககிட்ட இருந்தும் நிறைய கத்துக்கணும். வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்............

வல்லிசிம்ஹன் said...

ரெய்கியின் மகிமை அனுபவித்துத்தான் புரிந்து கொள்ளணும்.


மிக மிக நன்றி, தென்றல்.
இன்னும் எல்லா லெவல்களிலும் நீங்கள் தேர்ச்சி அடைய வாழ்த்துகள்.

pudugaithendral said...

வாங்க வல்லிசிம்ஹன்,

ரெய்கி ஒரு அற்புதம். நீங்கள் சொல்வதைப்போல் அதை உணர்ந்தால்தான் தெரியும்.

தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

Athisha said...

வாழ்த்துக்கள், இரெய்கியைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். சென்னையில் இது எங்கு கற்றுத் தரப்படுகிறது என தெரிந்தால் கூறவும். கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

என்றும் அன்புடன்
அதிஷா

pudugaithendral said...

வாங்க அதிஷா,

உங்க முதல் வருகைக்கு நன்றி.

விவரங்கள் தருகிறேன். தங்கள் இமெயில் ஐடி கொடுங்கள்.

Athisha said...

dhoniv@gmail.com

pudugaithendral said...

அதிஷா,

உங்க ஃப்ரொஃபைலில் ஐடி பாத்து மெயில் அனுப்பிட்டேன்.

Athisha said...

ரொம்ப நன்றிங்க , இதை கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் ஆகும் , எவ்வளவு செலவாகும்,

pudugaithendral said...

வாங்க அதிஷா,

கற்றுக்கொள்ள 2 நாள் போதும். அதாவது முதல் நாள் 1 ஸ்டேஜ், 2 ஆவது நாள் 2ண்ட் ஸ்டேஜ்.

ஒரு குரூப்பாக இருந்தால் பயிற்ச்சி அளிக்க நல்லது.

தற்போது என்ன சார்ஜ் செய்கிறார் என்று தெரியாது?

2 நாளுக்கும் சேர்த்து சுமார் 2000 ஆகலாம்.

நான் தங்கள் மெயில் அனுப்பியிருக்கும் நம்பரில் பேசி பாருங்கள்.

வாழ்த்துக்கள்

Athisha said...

உதவிக்கு மிக்க நன்றி தென்றல்.

கண்மணி/kanmani said...

தென்றல்
நானும் ரெய்கி கற்றுக் கொண்டேன்.1 அ 2 ஸ்டேஜ் என நினைக்கிறேன்.எதிலும் வரும் நம்பகமற்ற தன்மை போல இதிலும் சந்தேகங்கள் இருந்தாலும் ஏமாற்றுவேலையாக இல்லாமல் மனதிருப்திக்காக செய்யப் படுவது தப்பில்லை.
தொடர்ந்து தினமும் அதை பயிற்சி செய்யலைனாலும் ஒரு குருவிடம் தீட்சை பெற்றவள் என்ற அடிப்படையில் என் நண்பர்கள் சிலருக்கு 'ச்சோக்குரே கஜான்'சொல்லி 'தன விருக்ஷா' போட்டு ஆசிர்வதித்து தந்த பிறகு அவர்களுக்கு நிரந்தரவேலை கிடைத்தது ஆச்சரியம்.காக்கை உட்கார பனம் பழமோ இல்லை நல்லாயிருக்கட்டும் என்ற மனதின் வாழ்த்தோ சிலசமயம் இது போல் பலிக்கும் போது இதை செய்வதில் தப்பில்லை.
அதே நேரம் 2000,3000 செலவு செஞ்சு பிரமிட் மந்திரிச்சுக் கொடுத்தால் எலக்ஷென்ல ஜெயிக்கலாம்,எய்ட்ஸ் குணமாகும்,கேன்சர் குணமாகும் போன்றவைகளையும்,ஆரா சுத்தப் படுத்துகிறேன் என்பது போன்றவைகளையும் ஏற்க முடியவில்லை.
ரெய்கி ஹீலர்கள் பணத்துக்காக செய்பவையே இந்த கலை மீது அவநம்பிக்கையை அதிகப் படுத்துகிறது.
'ரெய்கி''பிரபஞ்ச சக்தி'யோ இல்லையோ நிச்சயம் நல்ல மனதின் 'ஆசிர்வாதம்'வாழ்த்துக்கள்'
ஆமாம் நீங்க ஹீலரா?

சுந்தரவடிவேல் said...

//Distance healing மூலம் வேறு தேசத்தில் இருப்பவரைக்கூட குணப்படுத்தலாம்.//
அருமையான யோசனையாக இருக்கிறதே. இது பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்று குலவுசனப்பிரியன் போன்றவர்கள் சொல்வதை http://pramalin.blogspot.com/2008/02/9.html எல்லாம் நம்பாதீர்கள் . உங்களுக்கு முன்னே உலகத்தில் இருக்கும், எல்லா நாடுகளிலும் இருக்கும் நோயாளிகளைக் குணப்படுத்தும் உன்னத இலட்சியம் இருக்கிறது. அதுவும் சும்மா இல்லை, மில்லியன் டாலர் பரிசும் காத்திருக்கு. உண்மை. விபரம் இங்கே இருக்கு. http://www.randi.org/joom/index.php?option=com_content&task=view&id=38&Itemid=31
இது ரெய்கிக்கும் பொருந்தும். நம்ம புதுக்கோட்டைக் காரரு ஒருத்தரு புகழ் பெறப் போறாருன்னு நினைக்கும்போதே எனக்குப் புல்லரிக்கிறது. வாழ்த்துக்களுடன்.

ரெண்டு நாள்ல ரெண்டாயிரம் வாங்கிக்கிட்டு உங்களையெல்லாம் ஏமாத்துராங்கன்னு தெரிஞ்சும் இதுல போயி விழக் காத்திருக்கவங்களை நினைச்சு அழுவதா சிரிப்பதா என்று நிஜமாகவே தெரியவில்லை.

pudugaithendral said...

வாங்க கண்மணி,

நீங்க சொல்லியிருக்கிற கருத்துக்கள் நல்லா இருக்கு.

நீங்க சொல்ற மாதிரி மந்திரமெல்லாம் எனக்குத் தெரியாது.

கடந்த 3 வருஷமா "ரெய்கி" செய்றேன். ஒரு பைசாகூட சார்ஜ் செஞ்சதில்லை.

ஆத்மார்தமாக ரெய்கியை உணர்ந்து, எனக்கு உதவு என்று கேட்பவர்களுக்கு மட்டுமே செய்கிறேன்.

என் குரு சொல்லிக் கொடுத்திருப்பது அதுதான். எனக்கு ரெய்கி தெரியும் என்றாலும் இன்றுவரை என் பெற்றோருக்கு கூட செய்ததில்லை,

ரெய்கி கேட்டால் மட்டுமே தரப்படவேண்டும் என்று நம்புகிறேன்.

நான் ஹீலர்தான்.

pudugaithendral said...

வாங்க சுந்தர வடிவேல்,

முதல் வருகைக்கு நன்றி.

கடவுள் இருக்கிறாறா என்பதற்கு எப்படி வாதம்/பிரதிவாதம் இருக்கிறதோ அது மாதிரிதான் ரெய்கிக்கும்.

நான் நம்புகிறேன். இது சித்து வேலை அல்ல. புற்றீசல் போல் கிளம்பும் ரெய்கி குருக்கள் என்ற பெயரில் பலர்
பணம் கறப்பதைப் பார்த்து நீங்கள் பேசுகிறீர்கள்.

நான் கற்றது நல்லதொரு குருவிடம். ரெய்கியால் புகழ் அடையவேண்டும் என்பது என் நோக்கம் அல்ல.

எனக்கு நானே உதவிக்கொள்ள முடியும். ரெய்கியை உணர்ந்தவர்களுக்கு விரும்பினால உதவலாம் என்ற நல்ல நோக்கத்துடன் தான் கற்றுக் கொண்டேன்.

மற்றபடி ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்கு அல்ல. இது ஒரு அனுபவம். இனிப்பை உண்டால்தான் அதன் சுவைத் தெரியும்.

நான் யாரையும் கற்றுக் கொள்ளுங்கள் என்று வற்புருத்தவில்லையே சுந்தரபாண்டியன்?

எனக்குத் தெரிந்ததை என் வலைப்பூவில் ஒரு பதிவாக போட்டிருக்கிறேனேத் தவிர இது விளம்பரத்திற்காக செய்தது அல்ல.

Unknown said...

I want to learn this. Can you tell me where should I take training?

A Turning Point said...

Hi

I want to learn this. Can you tell me where should I take training?

pudugaithendral said...

சாயி, டர்னிங் பாயிண்ட்,

நீங்கள் இருக்கும் ஊரில் ரெய்கி குருக்கள் இருக்கிறார்களா என்று வலையில் தேடி பார்க்கவும். எனக்கு தெரியவில்லை.

வருகைக்கு மிக்க நன்றி