காதல் சுகமானது.
நான் மிகவும் விரும்பும் இப்பாடல்
தெலுங்குப் படமான "சந்தோஷம்"
என்ற திரைப்படத்திலிருந்து "நுவ்வண்டே நாகிஷ்டமனி) (நீ என்றால் எனக்கு விருப்பம்).
காதல் எப்போதும் அழகானதுதான் என்றாலும், காதலித்து திருமணம் செய்து கொண்ட சிலர் ITS A LOVE MARRIAGE, BUT AFTER MARRIAGE THERE IS ONLY MARRIAGE NO LOVE என்று
சொல்லும் விதத்தில் இருப்பார்கள்.
திருமணத்திற்கு பிறகும் காதல் மிச்சம் இருக்க வேண்டும். காதல் இல்லையேல் வாழ்வில் இனிமை இல்லை.
நான் மிகவும் விரும்பும் இப்பாடலின்
தமிழாக்கம் இதோ.....
என் முதல் சுவாசம் சொன்னது நீ எனக்கு இஷ்டமானவள் என்று.
நீதான் என்னுலகம் என்று உணர்த்தியது என் ஆசை.
உன் சிரிப்பில் சுருதி சேர்த்து பாடவா!
உன் நிழலில் நானும் ஆடவா?
சந்தோஷம் என்று ஸ்வரம் சொன்னது மனது.
நீ என்னுடன் இருந்தால்,
எனக்கு வழிகாட்டி நடந்தால்,
எதிர் வரும் ஒவ்வொரு கனவும்,
நிஜமாகிப் போகாதா?
உன்னை நான் பார்த்துக்கொண்டிருந்தால்
ஏற்படும் உணர்ச்சியில் நிஜம்கூட
கனவாகிறது.
இருக்கின்ற வரங்கள் எல்லாம்
என்னிடம் சேர்ந்ததுவே.
இனி என்ன கோரிக்கை வேண்டும்?
இந்தக்காலம் என்றும் நம் சொந்தமாகிப் போகவேண்டும்,
சின்னதாக, சன்னமாக கைநழுவ
விடாதே!
நான் செய்யும் ஜாலத்தால்
நாளையும் நமதாகி, நம் குழந்தையாய் புதிதாய் வருகிறது
நம் காலம்.
நீ எனக்குத் துணையாய், நான்
உனக்கு நிழலாய், ஒவ்வொரு
நிமிடமும் இனியதாய்,
இப்படியே இருந்தால் போதுமே!
Wednesday, February 13, 2008
Santhosham-Nuvvante Nakishtamani
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
///திருமணத்திற்கு பிறகும் காதல் மிச்சம் இருக்க வேண்டும். காதல் இல்லையேல் வாழ்வில் இனிமை இல்லை.////
இதை படிக்கும் போது ஏற்படுகிற உண்மையான புரிதல் நிஜத்திலும் எல்லோருக்கும் இருந்து விட்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் சந்தோஷம் தான்.
வாங்க நிஜமா நல்லவன்,
நீங்கள் சொல்வது 100 % உண்மை.
காதல் மனதில் எப்போதும் இருந்தால்,
சும்மா பேருக்கு பரிசு கொடுத்து
காதலர் தினம் வருடத்திற்கு ஒரு முறை கொண்டாட தேவையில்லை.
என்றும் "காதலர் தினம்" தான்.
Post a Comment