Monday, March 10, 2008

மகளிர் மட்டும் படக் கொசுவத்தி 2

நாளை முதல் கணிணியில் உட்கார்ந்து வேலை,

என்று கணிணித்துறை மேலாளர் சொன்னார்.

அவரும் வேற பிராஞ்சுக்கு மாறிப்போவதால்,

கணிணியில் அனுபவம் மிக்க கல்யாணை, துறைத்

தலைவராகவும், என்னை அஸிஸ்டெண்டாகவும்,

(டைப் அடிக்கத் தெரியும் என்பதால் அந்த

போஸ்ட் எனக்கு கொடுக்கப்பட்டது) போட்டார்கள்.



நான் கணிணி அருகில் போய் உட்கார கல்யாணுக்கு

டென்ஷன். ஒரு பெண் கணிணியிலா? என்ற

ஆணீய சிந்தனை. சாடை மாடையாகப் பேசுவது

தாங்கமுடியாமல், மேலாளரிடம் போய் முறையிட்டேன்.





அவர் வந்து கல்யாண் இடம் இந்தப் பெண்தான்

கணிணியில் எல்லாவற்றையும் ஏற்ற வேண்டும்

என்று உறுதியாகச் சொல்லிவிட முனுமுனுப்புடன்,

பேசாமல் இருந்தார். நான் வேகமாக அடித்து

கணிணியில் ஏற்றுவதைப் பார்த்து திகைத்துப்

போயிருக்க வேண்டும்.







3ஆவது நாள் முதல் கண்டால் சிரிப்பார்.

பேசாமலேயே என் வேலையைச் செய்து

முடிப்பேன். 4 ஆவது நாள் நான் லீவு எடுத்திருந்தேன்,

சார்டிங்க், செட்டிங் என்று வேலை அதிகம்.

அதைக் கணிணியில்

வேறு தானே ஏற்ற கஷ்டபட்டு,

அடுத்த நாள் செய்ய எடுத்து வைத்திருந்தார்.





நான் அதையும், அன்று வந்த மற்ற

பேப்பர்களையும் சேர்த்து அடித்துக்

கொடுத்தேன். குறைந்தது 1000 காபிகளாவது

இருக்கும். "என்னால் 600 தான் அடிக்க முடிந்தது.

உன்னால் எப்படி 1000 எண்ட்ரி செய்ய முடியும்.

நீ உண்மையிலையே வேகமாக செய்கிறாய்"

என்று சொன்னார்.





கும்பகோணத்திலிருந்து வந்திருக்கும் பையன்.

அக்கா வீட்டில் தங்கி வேலைப் பார்க்கிறார்.

ஊரில் தங்கை, அப்பா, அம்மா இருக்கிறார்கள்

போன்ற் விவரங்கள் சொன்னார்.







நான் சிரித்துக்கொண்டே, உங்கள் தங்கையும்

ஓர் இடத்தில் வேலைக்குப் போய், அங்கே

உடன் வேலை செய்பவர் இப்படி இருந்தால்

எப்படி நினனப்பார்", என்று கேட்டேன்.

ஒன்றுமே பேசவில்லை. நானும் உங்கள்

தங்கை போலத்தானே! என்று கேட்க,

'சாரி, " என்று சொல்லிவிட்டு நட்பாக

சிரித்தார்.





அன்று ஆரம்பித்தது எங்கள் கலாட்டா.

கல்யாண் செட் செய்துக்கொடுக்க, நான்

கட கடவென் கணிணியில் ஏற்றிக் கொடுப்பேன்.

பேசிக் கொண்டே வேலை நடக்கும்.

கல்யாணுக்கு ஹிந்தி தெரியாது. நாம்

ஹிந்தில க்வீனு. அண்ணனுக்கு நான் தான்

மொழிபெயர்ப்பாளர்.



ஆனந்த் அண்ணா வந்து சேர்ந்தார்.

அவருடன் ஹரி வந்தார். இருவரும்

சென்னைதான் என நினைக்கிறேன்.

ஹரி கல்யாணின் நண்பனார். மாமா

என்றுதான் கூப்பிடுவார். நானும்

ஹரியை மாமா என்று கலாய்க்க

ஜாலியாக வேலை நடக்கும்.

லச்சுவும் வந்து சேர்ந்தார்.

இவர்கள் யாருக்கும் ஹிந்தி

தெரியாது.



கல்யாண் ஊதித்தள்ளும்

வெண்குழல் வத்திக்காக எனக்கும்

கல்யாணுக்கும் சண்டை நடக்கும்.

பேசமாட்டேன். சமாதன ஆக

KITKAT choclate வாங்கிக் கொடுத்தாக

வேண்டும்.



நான் தான் முதலில் ராக்கி கட்டவேண்டும்,

என்று காத்திருந்தது, ராக்கிகட்டியதற்கு

பரிசுக்கு பதிலாக ஒருவேளை சிகரட்டை

தியாகம் செய்ய வைத்தது, இப்படி

எத்தனையோ நிகழ்வுகள்.



எப்படி மறந்து போனாய் அண்ணா?

இன்றும் கிட்கட் சாக்லேட்

பார்க்கும்போது உன் ஞாபகம்தான்.

ரோட்ரிக்ஸும், தீபக்கும் போட்டு

கொடுத்து ஆப்பு வைத்தபோதெல்லாம்

ஆபத்பாந்தவனாய் வந்து நின்றாயே

எப்படி மறந்தாய்?



திருமணம் நிச்சயமாகி, நாள் குறிக்க
படாமல் இருக்க, என்னைவிட
டென்ஷன் ஆனது நீதானே?
பிருதிவிராஜன் மாதிரி மாப்பிள்ளை
வந்து குதிரையில்தான் தூக்கிகிட்டு
போகணும் என்று புலம்பி தீர்த்தாயே!


ஹரிமாமா குருப் போட்டோ எடுத்து,
கவிதை எழுதி பரிசாகக் கொடுக்க,
நீயோ வைரமுத்துவின் வரிகளை
இரவல் வாங்கி,
"ரோஜா மகள், ராஜா மகள்"
எழுதிக்கொடுத்தாய்.
(உன் அண்ணன் உன்னன
சரியாக புரிந்து வைத்திருக்கிறான்,
என்று இவர் பாராட்டு பத்திரம்
வாசித்தார்)


அவரின் அலுவலக விலாசத்திற்கு
நீ எழுதிய கடிதங்களை மிக
உற்சாகத்துடன், "இன்னைக்கு
உங்கண்ணன் போட்ட லெட்டர்
வந்திருக்கு" என்று கொண்டுவந்து
கொடுத்தார். காலப்போக்கில்
உன் கடிதம் வரத்து நின்றே
போனது ஏன்?


எப்படி மறக்க முடிந்தது?
சித்ரா மாமி, நான், நீ எல்லோரும்
கலாட்டா செய்துகொண்டு
வேலை பார்த்து ஞாபகம் இருக்கா?


எப்படியோ தேடி, ஆனந்த் அண்ணா
மற்றும் லச்சு நம்பரைக் கண்டு
பிடித்துவிட்டேன். ஹரி மாமா
சென்னையில் இருப்பதாய்க் கேள்வி.
அவரையும் பிடித்து விடுவேன்.



உன்னைதான் எப்படி கண்டு பிடிக்கப்
போகிறேன் என்றுத் தெரியவில்லை.!!!


ஒரு நல்ல அண்ணனாக, பாசம் காட்டினாய்.
எங்கே போனாய்?
எப்படி மறந்து போனாய்?


வாழ்நாளில் ஒரு நாளாவது உன்னை
சந்திப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது.

14 comments:

பாச மலர் / Paasa Malar said...

2 கொசுவத்தியும் படிச்சாச்சு...அண்ணாரு சீக்கிரம் கிடைப்பார்..கவலைப்படாதீங்க..

pudugaithendral said...

வாங்க பாசமலர்,
வருகைக்கு நன்றி.
ரயில் சிநேகங்கள் மாதிரி
சில உறவுகள்.....

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்நாளில் ஒரு நாளாவது உன்னை
சந்திப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது.

நம்பிக்கை நனவாகும்.

pudugaithendral said...

வாங்க நிர்ஷான்,
வருகைக்கும், நல்ல வார்த்தைக்கும்
நன்றி.

மங்களூர் சிவா said...

நல்லா எழுதியிருக்கீங்க.

அண்ணன் திரும்ப கிடைப்பார்.

எப்பிடி இத்தனை பேர் ஞாபகம் வெச்சிருக்கீங்க!?!?

ரசிகன் said...

//பாச மலர் said...
2 கொசுவத்தியும் படிச்சாச்சு...அண்ணாரு சீக்கிரம் கிடைப்பார்..கவலைப்படாதீங்க..

//

ரிப்பீட்டேய்ய்ய்ய்.....

pudugaithendral said...

இங்கே நல்ல மழை.

இடி, மின்னலுடன். காரணம் என்னவாக இருக்கும் என்று பார்த்தால்,
தொடர்ந்து பதிவுகளுக்கு ரசிகனிடமிருந்து பின்னூட்டங்கள்.. :))))
நன்றி ரசிகன்.

நிஜமா நல்லவன் said...

நல்ல நண்பர்கள் அமைவதும் அவர்கள் நல்ல உறவுகளாக மாறிப்போவதும் வாய்க்க கொடுத்துவைத்திருக்க வேண்டும். உங்கள் அண்ணனை கண்டிப்பாக ஒரு நாள் நீங்கள் சந்திப்பீர்கள். உங்கள் எண்ண அலைகளின் வீச்சு அவரை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

pudugaithendral said...

வாங்க சிவா,

மும்பையையும் என் அலுவலக
நண்பர்களையும் மறக்கவே முடியாது.

தினமும் நான் அசைபோடும் நல்ல
நினைவுகள் அவை.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

//நல்ல நண்பர்கள் அமைவதும் அவர்கள் நல்ல உறவுகளாக மாறிப்போவதும் வாய்க்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்.//

நான் கொடுத்துவைத்தவள் தான்.

//உங்கள் அண்ணனை கண்டிப்பாக ஒரு நாள் நீங்கள் சந்திப்பீர்கள். உங்கள் எண்ண அலைகளின் வீச்சு அவரை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.//

நம்பிக்கைக்கு உரம் ஊட்டும் இந்த வார்த்தைகளுக்கு நன்றி.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

படிச்சுட்டேன்.என்ன கமெண்ட் போடறதுன்னு தெரியல்லே.

கிருத்திகா ஸ்ரீதர் said...

புதுகை ரொம்ப நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.. சில சமயம் நட்வு வட்டம் இப்படித்தான் விட்டுப்போகும் ஆனால் தேடத்தொடங்கினால் எளிதில் கைக்கெட்டும் தூரத்தில் கிட்டிவிடும். வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

வாங்க சாமான்யன்,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

pudugaithendral said...

வாங்க கிருத்திகா,

இது 10 வருடத் தேடல். கண்டுபிடிச்சிடுவேன்னு நம்பிக்கை இருக்கு.

வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.