Wednesday, March 19, 2008

பாஷை புரியாமல் பட்ட அவஸ்தைகள்!!!!! 2

ஒவ்வொரு ஊரா போகும்போது அந்த ஊரின்
மொழியை கத்துக்கணும்னு நினைப்போமே
அது மாதிரி தான் நானும் நினைச்சேன்.
இங்க தமிழ், சிங்களம் இரண்டும் பேசராங்க.
தமிழ் தெரியும் அதனால சிங்களம்
கத்துக்கலாம்னு ஆசைப்பட்டேன்.


ஆங்கிலத்துல மொழியாக்கம்
செஞ்சு சொல்லிக்கொடுக்க சரியான
டீச்சர் கிடைக்கல. சரி பசங்க
பள்ளிக்கூடத்துல தமிழ், சிங்களம்
இரண்ட் மொழியும் படிக்கிறங்களே
நானும் அப்படியீ கத்துக்கலாம்னு
பார்த்தேன்.ம் ம்ம் ... அதுவும் முடியல.


சே.. என்ன இதுன்னு நொந்து
போயி ஆங்கிலத்தில மட்டுமே
பேசவேண்டியதாச்சு.


டீச்சர் டிரெயினிங் போனப்போ
மாணவர்கள் கிட்ட படிச்சது கொஞ்சம்.
நிர்ஷான் சொன்னது போல நம்ம
மராட்டி, சமஸ்கிருதம், தமிழ், பாலி
எல்லாம் கலந்ததுதான்சிங்களம்.அயித்தான் ஆபிஸ் போயிட்டு
திரும்பறவரை கொஞ்சம் பக்
பக்குன்னு தான் இருக்கும்.
(இங்கத்த நிலமைதான் உங்களுக்குத் தெரியுமீ!!!)
கொஞ்சம் லேட்டானாலும் போன்
அடிச்சுப்பிடுவேன். ஆனா லைன்
கிடைக்காது. அப்ப பூனில் வரும்
ரெக்கார்டட் மெசெஜ் தான்நான்
கத்துக்கிட்ட மொத சிங்கள வாக்கியம் :)


"நிம அங்கய சம்பந்த கருனோ எக,
கருணாகர பசும அவதான"
நீங்கள் டயல் செய்த.............................. அதே தான். :)அப்புறம் சில வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டேன்.
பேசினா கொஞ்சம் புரிஞ்சுக்கலாம். பதில் சொல்லத்தெரியாது.


மணலகயிறு படத்தில் ஹிந்தி
தெரியனும்னு கண்டீஷன் போட்டிருப்பாரு.
விசு ஹீரோயினைப் பாத்து ஹிந்தி
தெரியுமான்னு கேக்க, பக்கத்து வீட்டு
டீவில ஹிந்தி சினிமா பாத்து
4 / 5 ஹிந்தி வார்தை தெரியும்னு
சொல்ல, விஸு அது போதும்னு
சொல்வாரு. அது மாதிரி ஆயிடுச்சு என் நிலமை. :)டிஸ்கி :சரிங்க... நாளைக்கு "போயா டே". லீவு.
இந்தியா வந்தப்புறம் போயா டேக்கு
லீவு கிடையாது, அதனால் இந்த
போயாவை எஞ்சாய் செய்யனும்னு
பிள்ளைங்க ஆசைப்படறதனால
ஒரு 3 நாளைக்கு லீவு சொல்லிக்கறேன்...


போற இடம் எங்கேப்பா? போயிட்டு
வந்தப்புறம் சொல்றேன்ப்பா.......
பை... பை....

15 comments:

நிஜமா நல்லவன் said...

மீ த பர்ஸ்ட்?!?!?

நிஜமா நல்லவன் said...
This comment has been removed by the author.
நிஜமா நல்லவன் said...

/// சரி பசங்க
பள்ளிக்கூடத்துல தமிழ், சிங்களம்
இரண்ட் மொழியும் படிக்கிறங்களே
நானும் அப்படியீ கத்துக்கலாம்னு
பார்த்தேன்.ம் ம்ம் ... அதுவும் முடியல.////பசங்க சொல்லிக்கொடுக்கலையா இல்ல நீங்களும் பசங்க கூட பள்ளிக்கு போனப்ப உங்கள உள்ள விடலையா?

நிஜமா நல்லவன் said...

///சே.. என்ன இதுன்னு நொந்து
போயி ஆங்கிலத்தில மட்டுமே
பேசவேண்டியதாச்சு.////
அப்ப நொந்து போனவங்க பேசுறது தான் ஆங்கிலமா?

நிஜமா நல்லவன் said...

///போற இடம் எங்கேப்பா? போயிட்டு
வந்தப்புறம் சொல்றேன்ப்பா.......
பை... பை....////


போய்ட்டு வந்து அதவச்சி ரெண்டு மூணு பதிவு போடுவீங்கதானே?

மங்களூர் சிவா said...

//
"நிம அங்கய சம்பந்த கருனோ எக,
கருணாகர பசும அவதான"
//

அட ஒரு தரம் படிச்ச எனக்கே புரிஞ்சிடிச்சி...........

:))))))

இரண்டாம் சொக்கன்...! said...

ஆய்புவான்..,..னா...கும்புட்டுக்க்றேன்....கரீட்ட்டா!

புதுகைத் தென்றல் said...

வாங்க நி.நல்லவன்,
என்ன வம்புல மாட்டிவிடறதுன்னு முடிவு பண்ண்ட்டீங்களா? சிங்களர்கள் யாருன்னு ஆராயரத பத்தி சொன்னேன்? தேவை இல்லாத வம்பு.

புதுகைத் தென்றல் said...

பசங்க பள்ளிக்கூடத்தில கத்துகிட்டாங்க. ஆனா மொழியாக்கம் செஞ்சு சொல்லித்தர ஆசிரியர் கிடைக்காததனால நாங்க மத்துக்க முடியல நி.நல்லவன்.

புதுகைத் தென்றல் said...

ஆகா,ஏன் இந்த மர்டர் வெறி நி.நல்லவன்.

அவ்வ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

போயிட்டு வந்து குறைஞ்சது 4 பதிவாவது போட மேட்டர் தேரும். :)))))

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா, உங்களூக்கும் புரியுதா? அப்ப உங்களுக்கும் சிங்களம் தெரியும். :)))))))

புதுகைத் தென்றல் said...

கரீட்டு இரண்டாம் சொக்கன்....

மேலும் சில வார்த்தைகள் தெரியும். அப்புறமா ஒரு பதிவு போடுறேன்.

புதுகைத் தென்றல் said...

இன்னைக்கு போயா டேன்னு பதிவுல சொல்லியிருந்தேன், மன்னிக்கவும். இன்னைக்கு மிலாடி நபி, நாளைக்குத்தான் போயா.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
டிஸ்கி :சரிங்க... நாளைக்கு "போயா டே". லீவு.
==>
என்னமோ "போடா டே"ன்னு திட்ற மாதிரி இருக்கு. காமெடி கீமடி பண்ணலையே?