Tuesday, March 18, 2008

பாஷை புரியாமல் பட்ட அவஸ்தைகள்!!!!!

இங்கு வந்த புதிதில் நடந்த கதையிது
. கங்கார்மய்யா (புத்தர் கோயில்) பெரெரா
(திருவிழா) சமயம். அந்த ரோடே அடைத்து
விழா நடக்கும். அது தெரியாம
அந்தப்பக்கமா போயிட்டோம்.
(கொம்பனி முருகன் கோயிலுக்கு
போறதுக்காக). போலிஸ்காரர் இப்படி
போக முடியாது அப்படின்னு ஏதோ
சிங்களத்துல சொல்றாரு. என்ன
சொல்றாருன்னு புரியல.நீங்க சொல்றது புரியலன்னு ஆங்கிலத்துல
சொன்னோம். அவருக்கு அது புரியல.
"என்ட, என்ட" அப்படிங்கறாரு. என்ன
சொல்றாருன்னு சுத்தமா புரியல.
ஆஷிஷ் வேற," என்ன அம்மா! சாயந்திரம்
எப்படி வெயில் வரும்னு? (தெலுங்கில்
"என்ட" என்றால் "வெயில்") கேட்டதும்
நங்கள் சிரித்துவிட்டோம். அபுறம்
என்ன நினைத்தாரூ போலிஸ்காரர் விட்டுடார்.

இங்கே வந்த புதிதில் மொழி புரியாமல்
பட்ட துயரங்கள் தான் இந்த போஸ்ட்.
நண்பர்கள் கிட்ட காலேல என்ன சாப்பிட்டிங்க?
அப்படின்னு கேட்டா "பான்" அப்படின்னு
சொல்லுவாங்க. பானா அது நாங்க
சாப்பிட்டதற்கு பின்னாடி இல்ல
சாப்பிடறதாச்சே! அப்படின்னு சொன்னா,
முறைச்சுகிட்டு "பான் " அப்படின்னு சொன்னாரு.
உருளைக்கிழங்கு, தேங்காய்ப்பால்
போட்ட சொதி நல்லா இருக்கும்.
இடியாப்பம், பரோட்டாவிற்கு நல்ல
காம்பினேஷன். உருளைக்கிழங்கு
"ஆலு" (ஹிந்தியில்) அப்படின்னு
சொல்றது பழக்கம். அயித்தான்
கடைக்கு போய் "ஆலு கறி"ன்னு
கேட்டு வாங்கிட்டு வந்தார்.பாகெட்டை
திறந்து பாத்திரத்தில ஊத்தினா "மணக்குது".
கரண்டியில் எடுத்து பார்த்தா "மீன் சொதி".
அயித்தான் ஆலுகறின்னு கேக்க
கடைக்காரர் "மாலுக்கறி" கொடுத்துப்பிட்டார்.
"மாலு" - மீன் :))))
அதுக்கப்புறம் சொதி வாங்க
கடைக்குப் போனார்னா அம்ருதா,
"அப்பா! கடைல என்ன சொல்லனும்?
அப்படின்னு ஒவ்வொரு முறையும் ஞாபகப்படுத்தும்.


சரி பாஷை கத்துக்கலாம்னு
ஆசைப்பட்டேன். என்ன ஆச்சு!!!!!!
தொடரும்.............

11 comments:

மங்களூர் சிவா said...

அந்த மாலுக்கறிய என்ன பண்ணீங்க!?!?!?

புதுகைத் தென்றல் said...

vaanga siva varugaiku nandri.

:))))))))))))

மங்களூர் சிவா said...

தொடருங்க சீக்கிரம்

நிஜமா நல்லவன் said...

ஆஹா உங்களுக்கு அடுத்த விஷயம் கிடைத்து விட்டது பதிவிட. சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க.

நிஜமா நல்லவன் said...

///மங்களூர் சிவா said...
அந்த மாலுக்கறிய என்ன பண்ணீங்க!?!?!?///மங்களூருக்கு பார்சல் பண்ணிட்டாங்களாம்.

புதுகைத் தென்றல் said...

irunga irunga innaiku sayanthiram pathivu pottudaren...

2 pathiva podalamna porukathe :))))))))))

தென்றல்sankar said...

yea its realy nice blog.continue your service.

இறக்குவானை நிர்ஷன் said...

கங்காராமய - கொழும்பில் பிரசித்தி பெற்ற பெளத்த விகாரை
பெரஹெர - பெளத்த திருவிழா
அல - கிழங்கு
என்ட ( என்ன என்பது சரியானது)- வாருங்கள்.

பெரும்பாலான சொற்கள் தமிழ்,ஹிந்தி மொழிகளைத் தழுவியதாகவே சிங்களத்திலும் உள்ளன. பாலி மொழி மருவி சிங்களமாக பரிணாமம் பெற்றதாக மகாவமிசத்தில் கூறப்பட்டிருக்கிறது.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இன்ட்ரஸ்டிங் பதிவு

அதிஷா said...

Eppo next pathivu ........? romba thamasa irukku

புதுகைத் தென்றல் said...

வாங்க வந்தவங்க எல்லோருக்கும் நன்றி. இந்த இ கலப்பை இல்லாததால் தனித்தனி பின்னூட்டமா போட முடியல மன்னிக்கவும்.