இதுவும் நம் உடம்பில் மிக முக்கியமான அங்கம்.
ஆனால் அதிகம் புறக்கணிக்கப்படும் ஒன்று.
நாளும், பொழுதும் நம் பாரத்தை தாங்கும் நம் கால்களுக்கு
நாம் போதிய கவனிப்பு தருவதில்லை.
முகம் பெரும் முக்கியத்துவம் நம் கால்களுக்கும் பெறும்
உரிமை இருக்கிறது.
கால்களைப் பேணுவதை pedicure என்கிறார்கள்.
பியூட்டி பார்லர்களில் மிக அருமையாக செய்து
விடுவார்கள். பார்லர் செல்லும் பழக்கமோ,
நேரமோ இல்லாதவர்களுக்காக இதோ
பெடிக்யூர் செய்து கொள்ளும் முறை.
இவைதான் பெடிக்யூர் செய்துக்கொள்ள தேவையானவைகள்
Epsom salts - எப்சம் உப்பு
Liquid soap - திரவ சோப்பு
Moisturizing lotion - மாய்சுரைஸர் கிரீம்
Cuticle remove - இறந்த செல்களை நீக்கும் கிரீம்
Moisturizing lotion - மாய்சுரைஸர் கிரீம்
Cuticle remove - இறந்த செல்களை நீக்கும் கிரீம்
nail polish remover - நகப்பூச்சு நீக்கி
Nail polish _ நகப்பூச்சு
Luke warm water - வெது வெதுப்பான் நல்ல தண்ணீர்.
Nail Filer - நகத்தை சமப்படுத்தி
Nail polish _ நகப்பூச்சு
Luke warm water - வெது வெதுப்பான் நல்ல தண்ணீர்.
Nail Filer - நகத்தை சமப்படுத்தி
Nail Brush - நகத்திற்கான சிறை பிரஷ்
Cuticle Cutter - இற்நத செல்களை வெட்டும் கத்தி
Cuticle Pusher - செல்களை உள் தள்ள
Pumice Stone - ப்யூமிக் கல்
Foot Scraper - பாத ஸ்கரப்பர்
Towel - துண்டு
Basins
cotton wool - வாயகன்ற பேசின்/ வாளி.
Cuticle Cutter - இற்நத செல்களை வெட்டும் கத்தி
Cuticle Pusher - செல்களை உள் தள்ள
Pumice Stone - ப்யூமிக் கல்
Foot Scraper - பாத ஸ்கரப்பர்
Towel - துண்டு
Basins
cotton wool - வாயகன்ற பேசின்/ வாளி.
செய்முறை:
1. நகத்தில் இருக்கும் பாலிஷ்களை அதற்குண்டான
மருந்தில், பஞ்சை முக்கி தேய்த்து பாலிஷ்களை
அகற்றவும்.
2. வெது வெதுப்பான நீரில் , எப்சாம் உப்பு அல்லது
சமையல் உப்பு சேர்த்து கால்களை
10 நிமிடம் ஊற விடுங்கள் .
3. பிரஷ், ஸ்கரப்பர் மற்றும் ப்யூமிக் கல்லின்
உதவியால் கால்களை நன்கு தேய்க்கவும்.
(இறந்த செல்களை நீக்கி கால்களை
மென்மையாக்கவே இது.)
4.பேசினிலிருந்து காலை எடுத்து
துடைத்துக்கொள்ளுங்கள்.
5.நகங்களை சீராக வெட்டி எடுங்கள்.
6.Nail filer உதவியுடன் நகங்களைச்
சமப்படுத்துங்கள்.
7.இறந்த செல்களை நீக்கும் கிரீமைக்
கொண்டு நகக்கண்களை தடவி,
(அதாவது தோல் துவங்கும் இடத்தில்)
இறந்த செல்களை எடுத்து விட்டு,
கொஞ்சம் உள்ளே அழுத்தி விடவும்.)
8. நல்ல மாய்சுரைஸர் கிரீம் கொண்டு
பாதங்களை நன்கு மசாஜ் செய்யவும்.
(பாதத்தின் அடியிலும் செய்ய வேண்டும்)
9. நகப்பூச்சு விரும்புவர்கள்,
முதலில் பேஸ்கோட் போட்டு,
சற்று காய்ந்ததும் பாலிஷ் போடுங்கள்.
அது காய்ந்ததும் கிளியர் கோட் போட்டால்
பூச்சு அதிக நாள் வரும்.
இதோ வீட்டிலியே அருமையான
இதமான "பெடிக்யூர்".
வெயிலில் அலைவதாலும், நம் உடலின்
பாரத்தை தாங்குவதாலும் இப்படி
ஒரு டிரீட்மெண்ட் பாதத்திற்குத்தேவை.
இவ்வாறு மாதம் ஒரு முறையாவது
செய்துவந்தால், பித்தவெடிப்பு
போன்றவை இராது. கால்கள் அழகாக
இருக்கும்.
(வீட்டில் செருப்பு அணிவது நல்லது.
வெளியில் அணியும் செருப்பையூம்
வாரம் ஒரு முறை குளிக்க வைப்பது
சுகாதாரம் தரும்.)
இந்தப் பெடிக்யூர் ஆண்களும்
செய்து கொள்ளலாம்.
ஷூ அணிந்து கஷ்டப்படும்
கால்களுக்கு ஒரு நல்ல ஓய்வு
தரலாம்.
(நகப்பூச்சு இல்லாமல் தான்)
காலை முதல் மாலை வரை
ஷூ அணியும் பிள்ளைகளின்
பாதத்திற்கு வெதுவெத்ப்பான
தண்ணீரில் 10 நிமிடம் வைத்து,
ஸ்கரப்பரால் தேய்த்து, டவலால்
துவட்டி, கீரீமால் மசாஜ் செய்துவிடலாம்.
பெண்கள் இரவு படுக்கும்முன், கால்களைக்
கழுவி ஈரம் போகத்துடைத்து, மாய்சுரைஸரால்
மசாஜ் செய்துக்கொண்டு படுக்கப் போவது நலம்.
27 comments:
கால்கள் நம் உடலில் ஓர் முக்கியமான உறுப்புதான்.
அருமையான பதிவு.
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.
நாள்பட்ட டையபடிஸ்காரர்கள் கால்களை பார்த்துக் கொள்ளாவிட்டால் ஏன் அழுத்தமாக ஊன்றி நடந்தாலே காலில் புண்கள் ஏற்படும் அதை 'கேங்ரி' என்பார்கள்.
வெளியிலீருந்து பார்த்தால் ஆறியது போன்றிருக்கும் காயம் உள்ளே சீழ்பிடித்துக்கொண்டே சென்று காலை எடுக்க வேண்டிய நிலை கூட ஏற்படும்.
அதனால கால் ஜாக்கிரதை.
வாங்க சிவா,
அருமையான தகவல்கள் தந்திருக்கீங்க. நன்றி.
வெளிநாட்டில் ஒரு பெண்மணி தன் கால்களை சரியாக பராமரிக்காததால், காலில் சீழ் வடிந்ததாம். உடனே
நாட்டில் அனைவரும் பெடிக்யூர் செய்துகொள்ள வேண்டும் என சட்டமே
போட்டார்கள் எனப் படித்தேன்.
நம்ம ஊரில் சட்டம் எல்லாம் வராது. நாம தான் நம்மளை பாத்துக்கணும்
மேடம்,
// வேற எதைபத்தியோன்னு, நினைச்சுகிடாதீங்க //
தங்களுடைய பதிவைப் படிக்க வரும் எவரும் வேறு எதைப் பத்தியும் நினைச்சுக்கிட்டு வர மாட்டாங்க. அக்கறையான ஒரு வேண்டுகோள்: தங்கள் பதிவின் தரத்துக்கு அந்த முதல் வாக்கியம் பொருத்தமாக இல்லை. முடிந்தால் நீக்கி விடுங்கள்.
பதிவு குறித்து:
அதாவது கணவர்கள் இனிமேல் மனைவியரின் கால் பிடித்து விடும் போது பாதத்தையும் சேர்த்து அழுத்திவிடச் சொல்கிறீர்கள். ம், செஞ்சுட்டாப் போச்சு.
ரொம்ப நல்ல பதிவு போட்டு இருக்கீங்க. சரி சரி நான் ஷாப்பிங் கிளம்புறேன். இதை எல்லாம் உடனே வாங்கணும்.
///மங்களூர் சிவா said...
கால்கள் நம் உடலில் ஓர் முக்கியமான உறுப்புதான்.
அருமையான பதிவு.
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.//
ஆமாம். ஆமாம். அது சரி மங்களூர் சிவா எப்ப பார்த்தாலும் எப்படி நீங்களே முதல் பின்னூட்டம் போடுறீங்க.
நல்ல உபயோகமான பதிவு.
"எம் எஸ் வோர்ட்டி"ல் காப்பி பேஸ்ட் செய்து பிரிண்ட் அவுட் எடுக்க முயற்ச்சி செய்தேன்.உம் ஹூம். வரலை.
<==
புதுகை தென்றல்
நம்ம ஊரில் சட்டம் எல்லாம் வராது. நாம தான் நம்மளை பாத்துக்கணும்
==>
அப்படியெல்லாம் சொல்ல முடியாது =(((.
ரொம்ப தேவையான தகவல். நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடுவோம். ;-)
நல்ல பதிவுங்க.. நான் இதுல பெரும்பாலும் செய்யலைன்னாலும் சிலசமயம் (அவ்வப்போது) எப்சம் உப்பில் காலை சில நிமிடங்கள் வைத்து, இயன்றவரை தினமும் குளிக்கும்போது பியூமிஸ் கல்லால் பாதத்தை (குறிப்பாக பித்தவெடிப்பு உள்ள இடங்களை) தேய்த்து இரவு தூங்கப்போகும்போது இயன்றவரை தினமும் cracked heel cream (Dr.Scholl's, Kerasal, Lamisilk போன்ற brand-களில் கிடைககின்றன) பயன்படுத்துகிறேன். (கவனம்: இந்த Lamisilk என்பது Lamisil அல்ல. இரண்டும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்புதான் என்றாலும் Lamisil என்பது பிரிஸ்க்ரிப்ஷன் மருந்து - காலில் வரும் fungus-க்குப் பயன்படுத்துவது - side effects உள்ளதால் மருத்துவர் மேற்பார்வையின்றி இதைப் பயன்படுத்தக்கூடாது)
நல்ல பயனுள்ள பதிவு
புது தொடர் விளையாட்டு வாங்க
http://kouthami.blogspot.com/2008/03/blog-post_04.html
neenga sonna sariyathaan irukkum!
வாங்க ரத்னேஷ்,
தங்களின் அக்கறைக்கு மிக்க நன்றி.
இதுவும் நம் உடலில் ஓர் முக்கியமான
உறுப்புதான் என்ற தலைப்பை தப்பாக புரிந்து கொண்டு யாரும் வந்து கும்மக்கூடாது என்பதற்காகத்தான் அந்த வாக்கியம் சேர்த்தேன்.
அந்த வாக்கியம் சேர்க்காவிட்டால் நான் வேறமாதிரி பின்னூட்டங்களைப் பார்க்க நேர்ந்திருக்கும்.
எல்லாம் ஒரு மோசமான அனுபவம் தான்.
//அதாவது கணவர்கள் இனிமேல் மனைவியரின் கால் பிடித்து விடும் போது பாதத்தையும் சேர்த்து அழுத்திவிடச் சொல்கிறீர்கள். ம், செஞ்சுட்டாப் போச்சு.//
அப்பா மேட்டர கப்புன்னு பிடிச்சிட்டீங்க. :)
வாங்க நிஜமா நல்லவன்,
ஷாப்பிங் முடிச்சாசா? வாங்கினதை
உபயோகப் படுத்துங்க.
ஏன்னா, சில பேரு வேக்யூவம் கீளினர் வாங்கி வெச்சிருப்பாங்க. ஆனா அது மேலையே தூசி இருக்கும்.
வாங்க சாமான்யன்,
வேணும்னா தனி மெயிலில் அனுப்பறேன்.
யூனிகோட் பேஜ் லிங்கில் காபி செஞ்சு பிரிண்ட் எடுக்க முடியுமான்னு பாருங்க.
வாங்க மை ஃபிரண்ட்,
ஊர்ல தான் இருக்கீங்களா?
வருகைக்கு நன்றி.
வாங்க சேதுக்கரசி,
வருகைக்கு நன்றி.
ஆமாம் சில மருந்துகள் சிலருக்கு ஒவ்வாது.
மருத்துவ ஆலோசனை முக்கியம்.
வாங்க கண்மணி,
தொடர் விளையாட்டா?
இதோ வந்துட்டேன்.
ஆஹா!!??!!
வாங்க டீரீம்ஸ்.
வருகைக்கு நன்றி
ஆமா..பாதத்தை நாம கண்டுக்கிறதே இல்லை..நல்லாச் சொல்லி இருக்கீங்க..
வாங்க பாசமலர்,
வலைச்சர ஆசிரியரா கலக்கிகிட்டு
இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
:)
வாங்க வசந்தம் ரவி,
ஸ்மைலி போட்டு வருகைய பதிவு செஞ்சுக்கரீங்க போல.
வருகைக்கும், ஸ்மைலிக்கும் நன்றி.
வெது வெதுப்பான நீரல்,உப்பு, சில துளி எலுமிச்சை சாரு, few drops of shampoo and body wash mix it well and soak your foot for 10mins.Try this .
வாங்க சதங்கா,
உங்க டிப்சும் நல்லாதான் இருக்கு.
செஞ்சு பாத்துடுவோம்.
அட.. அக்கா ஹஸ்பண்டாலஜி பேசி அக்கப் போர் பன்றாங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன். நல்ல உபயோகமான பதிவும் போட்டிருக்காங்க. நல்ல பதிவுங்கோ.
ஹஸ்பண்டாலஜி பேசி அக்கப்போரா?
ஏன் சொல்ல மாட்டீங்க.
ரங்கமணிகளின் பல ரகசியங்கள்
வெளிவந்தக் களம் அதுதான்.
எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள் அதுதான் :)
Post a Comment