Monday, March 10, 2008

மகளிர் மட்டும் படக் கொசுவத்தி!!!!

ஆச்சு, மகளிர் தினக் கொண்டாடங்கள் ஓஞ்சுடுச்சு.
ஒவ்வொரு வருஷமும் மகளிர் தினக் கொண்டாட்ட
சிறப்புத்திரைப்பாடமா "மகளிர் மட்டும்"
படம் போட்டுவாங்க. இந்தமுறையும் இந்தப்படம்
போட்டாங்க.


இந்தப் படம் பாக்கும்போதெல்லாம், எனக்கு
என் மும்பை அலுவலக ஞாபகம் வந்திடும்.

மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டிடத்திற்கு
எதிரில் எங்கள் ஆபிஸ். அதற்கு கொஞ்சம்
பக்கத்தில் இன்னொரு மாடியில் நாங்கள்
அமரும் இடம். கிட்டதட்ட 20 ஆண்கள்.
நான், வந்தனா, கீதா 3 பேர்தான் மகளிர்.

ரீஜனல் ஹெட் ஆபிஸ். மும்பையில்
இருக்கும் மத்த பிராஞ்சுகளிலும் கூட
பெண்கள் கிடையாது. எங்கள் ராஜ்ஜியம்தான்.

மகளிர் மட்டும் "மூக்கன்" மாதிரி பிரச்சனையில்லை.
ஆனால் "மாதவி" கேரக்டர் மாதிரி ஒரு "தீபக்".
போட்டுக் கொடுப்பதுதான் முக்கியவேலை.
அவனுக்கு ஒரு கையாள். தாடிக்கார ரோட்ரிக்ஸ்.
இவர்களின் மராட்டிப் பேச்சுகளுக்கு என்
மொழிபெயர்ப்பாளர் வந்தனா.

ஆபீஸ் கோ ஆர்டினேட்டர் வேலைன்னு பேரு.
1 மணி வரை பொட்டிதட்டணும். (DATA ENTRY),
நடுவுல வர்ற போன் கால் அட்டெண்ட், பண்ணனும்,
பெட்டி கேஷ் பாக்கணும். கீதாவும், வந்தனாவும்
அக்கவுண்ட்ஸ்.

நான், வந்தனா, கீதா அடித்த லூட்டிகள்
ஏராளம்....
பிஸியாக இருக்கும் நேரத்தில்
எக்ஸ்டென்ஸனில் கூப்பிட்டு
"ஹாய்" சொல்லிப்பது, "க்யா ஹால் ஹே?"
என்று கேட்பது, ரொம்ப பிஸியாக இருந்தால்
ஒரு மிஸ்டு காலாவது அடிப்போம்.

1 மணிக்கு சாப்பாடு கடைதான்.
கரெக்டா 1 மணிக்கு சாப்பிடவேண்டும் என்று
வேண்டுதல் மாதிரி "டப்பா"வைத்திறந்து
விடுவோம். 'ஷேரிங்"தான். வந்தனா எனக்காக
ஸ்பெஷலாக கொண்டுவரும், விஜிடபிள்
ஆம்லெட், மராட்டி ஸ்டையில் பாகற்காய் கறி..
கீதா வீட்டு பரோட்டா, இவை எனக்கு,
எங்கள் வீட்டுச் சாப்பாடு அவர்களூக்கு.


ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும்
பார்ட்டிதான். சர்ச்கேட் வரை 3 பேரும் சேர்ந்தே
போவோம். சர்ச்கேட் அருகில் இருக்கும் கையேந்தி
பவன்களில் சாட், தோசா.....
சனிக்கிழமைகளில் "விண்டோ ஷாப்பிங்",
சில ஞாயிற்றுக்கிழமைகள் crufford market,
அல்லது Fasion street ல் கழியும்.

வந்தனா ஆடை வடிவமைப்பதில் திறமைசாலி.
அப்போது என் சுடிதார்கள் அவள் வடிவமைத்துதான்.

ஆனால் சரியான பயந்தாங்கொள்ளி, எதற்கும்
பயந்து சாவாள். மும்பையில் மழையினால்
டிரெயின் சேவை நின்று போகும் தருணங்களில்
நான், வந்தனா, அவளின் தம்பி வினோத்
மூவரும் பஸ்ஸில் அந்தேரி வரைச் செல்வோம்.
என் கையை கெட்டியாக பிடித்தபடிதான் பயணம்
செய்வாள். ஓடும் ரயிலில் ஏறி இடம் பிடிக்கும்
என்னைத் திட்டி தீர்ப்பாள். தனியாக ரயிலில்
மும்பை டு புதுகை நான் பயணம் செய்வது
அவளுக்கு மிக ஆச்சரியம்.


நான் வேலைக்கு சேர்ந்த புதிதில்
தொலைதூரத்தில் இருக்கும் கஸ்டமர்
ஒருவருக்கு "வைப்பு பத்திரத்தை"
நேரில்வந்து வாங்கிக்கொள்ளுமாறு எழுதி
விட்டேன். அதற்கு அவர் கோபமாக
மராட்டியில் திட்டி எழுதினார். அவருக்கு
பதில் மராட்டியில் எழுத ஆரம்பித்தாள் வந்தனா.
அது ஒரு தொடர்கதை ஆகிப்போனது.

வாமன் ஆப்டே (அதான் அந்த கஸ்டமர் பெயர்)
எழுத இவள் எழுத என்று ஓடிக்கொண்டிருந்தது.
அலுவலகத்தில் எல்லோரும் அவளைக் கலாய்ப்போம்.
வாமன் ஆப்டேக்கு வயது 60.. :)


நான் வேலையில் சேர்ந்த முதல் நாளே கீதாவுக்கு,
சக ஊழியர் ஒருவருக்கும் "லவ்ஸ்" ஓடிக்கொண்டிருப்பதைக்
கண்டு பிடித்ததால், நல்ல தோழியாகி விட்டாள்.
வந்தனா மஹாரஷ்டிரியன், கீதா "எஞ்ச உள்ளார்"?
துளு பேசும் பெண். பிறந்து வளர்ந்தது எல்லாம்
மும்பைதான். ஹிந்தி சரளமாக பேசவந்ததால்
எங்களுக்குள் நல்ல ஃப்ரண்ட்ஷிப். முக்கியமான
தினங்களில் சொல்லி வைத்துக்கொண்டு
புடவை அணிதல், ஒரே கலரில் உடை என்று
என்னென்னவோ...

தீபக், ரோட்ரிகஸ், சாவந்த், பரேக் இவர்களை தவிர
ஆபிசில் அனைவரும் தமிழர்கள் தான்.
மகளிரில் நான் மட்டுமே தமிழ் தெரிந்தவள்.
ஆக, வந்தனா, கீதாவிற்கு நான் தான் மொழிபெயர்ப்பாளி.

இவர்களைப் பற்றி நினைக்கும்போது அவனின்
ஞாபகம் வருகிறது.

அவன் பெயர் கல்யாணசுந்தரம். கல்யாண்
THE GREAT என்றுதான் அறிமுகம் செய்து
கொள்வான்.

யார் இந்தக் கல்யாண்??
தொடரும்.......

19 comments:

மங்களூர் சிவா said...

வணக்கம்.

:)

மங்களூர் சிவா said...

ஓ. இன்னைக்கும் நாந்தான் பர்ஸ்ட்டா????

நிஜமா நல்லவன் வருத்தப்படுவார்............

pudugaithendral said...

வாங்க சிவா,

என்ன புதுசா வணக்கமெல்லாம் :)

ஹா ஹா.. நிஜமா நல்லவன்
வருத்தப்பட வேண்டாம்.

நிஜமா நல்லவன் said...

என்ன வச்சு ஏதும் காமடி கீமடி எதுவும் பண்ணலையே??!!!

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இந்தப் பதிவு நல்லா இருக்கு. எங்கே நீங்க அங்கு செய்த வேலைகளைப் பத்திதான் சொல்லப் போறீங்களோன்னு பார்த்தேன். அதுக்குத்தான் அங்கு வேலையே இல்லையே =)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
மங்களூர் சிவா said...
ஓ. இன்னைக்கும் நாந்தான் பர்ஸ்ட்டா????

நிஜமா நல்லவன் வருத்தப்படுவார்............
==>
ஓ, உங்களூக்குள்ள போட்டி வேறா? பேஷ், பேஷ் , ரொம்ப நல்லா இருக்கு. படத்துக்கு காமெடி ட்ராக் மாதிரி உங்க ட்ராக்னு நினைக்கிரேன். எனக்கென்னமோ, இது உங்க 3 பேருக்குள்ள ஒப்பந்தம் மாதிரி தெரியுது =))

pudugaithendral said...

//அங்கு செய்த வேலைகளைப் பத்திதான் சொல்லப் போறீங்களோன்னு பார்த்தேன். அதுக்குத்தான் அங்கு வேலையே இல்லையே =)//


வேலைப்பாக்காம எங்கையும் சம்பளம் தரமாட்டங்கன்னு தெரியாது போல இருக்கு.

பாவம்.

pudugaithendral said...

உங்க 3 பேருக்குள்ள ஒப்பந்தம் மாதிரி தெரியுது =))

இதுக்கெல்லாம் கூடவா ஒப்பந்தம்
போட்டுக்குவாங்க. அடக்கடவுளே!!!!

கிருத்திகா ஸ்ரீதர் said...

புதுகை நீங்க எப்படி சிவாவோட ப்ரொபைல்ல இருக்கீங்க... எனக்கு இது புரியல..

pudugaithendral said...

வாங்க கிருத்திகா,

நீங்களுமா?!!!!!!!

எனது பிளாக்கில் டெம்ப்ளேடில்
கொஞ்சம் சிவா உதவி செய்கிறார்.
அவருக்கு நேரம் கிடைக்கும்போது
செய்கிறார்.

மங்களூர் சிவா said...

//
கிருத்திகா said...

புதுகை நீங்க எப்படி சிவாவோட ப்ரொபைல்ல இருக்கீங்க... எனக்கு இது புரியல..
//
அருமையான பின்னூட்டம். கல்வெட்டில் பொறிக்கலாம்!!

அக்கா கோச்சுக்காதீங்க!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==

கிருத்திகா said...
புதுகை நீங்க எப்படி சிவாவோட ப்ரொபைல்ல இருக்கீங்க... எனக்கு இது புரியல..

10 March, 2008 3:20 PM
==>
=)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
வேலைப்பாக்காம எங்கையும் சம்பளம் தரமாட்டங்கன்னு தெரியாது போல இருக்கு.

பாவம்.
==>
எங்களூக்கெல்லாம் வேலை பார்க்காமலேயே சும்மா இருந்தாவே சம்பளம். வேணுமின்னா வேர யார்கிட்டயும் கேட்டுப்பாருங்க[ஸ்மைலி கூட போடலே]

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
கிருத்திகா said...
புதுகை நீங்க எப்படி சிவாவோட ப்ரொபைல்ல இருக்கீங்க... எனக்கு இது புரியல..
==>
பேய் எழுத்தாளர்(Ghost Writer) மாதிரி பேய் ப்ளாக்கரா இருக்குமோ? =)))

காட்டாறு said...

கொசுவத்தின்னு பார்த்ததும் ஓடி வந்துட்டேன். சுத்துங்க சுத்துங்க. தொடரும் வேற இருக்குது. எப்போ தொடரும்? ;-)

துளசி கோபால் said...

அடுத்த பகுதிக்கு நானும் இங்கெ வெயிட்டீஸ்:-)

pudugaithendral said...

காட்டாறு வாங்க

இரண்டாவது பகுதி போட்டுடேனே

பாருங்க

pudugaithendral said...

துளசி அக்கா,

இரண்டாவது பகுதி போட்டாச்சு.