FRANCES PHISSLE என்பவர் இரவுச் சாப்பாட்டை
குறித்து இவ்வாறு விளக்கமளிக்கிறார்:
"இரவுச் சாப்பாட்டு நேரம் அனைவரும்
விரும்பும் ஓர் நாளின் அங்கம்.
அந்தச் சமயத்தில்தான் உணவு மேசை
பேசி மகிழவும், திட்டமிட,
மற்றும் பகிர்ந்துகொள்ளும்
இடமாக இருக்கும்.
உண்ணும் உணவு உடலுக்கு
ஊட்டமளித்து அடுத்த நாளிற்கு
நம்மை தயார் படுத்துகிறது என்றால்,
பகிர்ந்து கொண்ட, பேசிமகிழ்ந்த
விடயங்கள், மனதையும், உறவையும்
பலப்படுத்தி, ஊட்டமும் அளிக்கிறது".
நல்லா சொல்லியிருக்கிறார் இல்ல?!!
நாம் எல்லோரும் இன்பத்தை
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
டீவி பார்த்துக்கொண்டு, இயந்திரத்தனமாக
தான் சாப்பாடு நேரம் போகிறது.
நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும்
இன்பமானதாக கழியுங்கள்.
இன்பம் இருப்பது நம்மிடம் தான்.
அதை வேறெங்கும் தேடத் தேவையில்லை.
29 comments:
100க்கு வாழ்த்துக்கள்
குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி சிரித்தபடி உண்பது குதூகலமான ஒன்று.
இழந்து பல வருடங்கள் ஆகிறது :(
//
நாம் எல்லோரும் இன்பத்தை
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
டீவி பார்த்துக்கொண்டு, இயந்திரத்தனமாக
தான் சாப்பாடு நேரம் போகிறது.
//
காலசக்கர சுழற்சியிலும் வாழ்க்கை முறை மாற்றங்களாலும் பொருளீட்டுவதையே குறிக்கோளாக கொண்டு இன்பத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் :(
//
நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும்
இன்பமானதாக கழியுங்கள்.
இன்பம் இருப்பது நம்மிடம் தான்.
அதை வேறெங்கும் தேடத் தேவையில்லை
//
ஊக்கமளிக்கும் வார்த்தைகள் நன்றி.
குறியாட்டை தோளில் போட்டுக்கொண்டு ஊர் முழுவதும் தேடியதை போலத்தான் !!
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் :(
வாழ்த்துக்கு நன்றி.
இந்தியன் படப் பாடல் ஞாபகத்துக்கு வருது.
பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டில்,
"சின்னச்சின்ன சந்தோஷத்தில் அன்பு மிச்சம் இருக்கு"
வாழ்த்துக்கள். மொதல்ல ஒழுங்கா கணக்கு படிச்சிட்டு வாங்க. அம்ருதா கிட்ட கேட்டிருந்தா கூட சரியா எண்ணி சொல்லி இருப்பாங்க. கணக்கு தெரியலைனா கேக்க வேண்டியது தான?
எத்த்னை வாட்டி நாங்க வாழ்த்து சொல்றதாம்? :(
வாங்க சஞ்சய்,
மெல்லற வாய்க்கு அவல் கிடைச்சாப்ல ஆயிடுச்சு.
என்ன செய்ய காலம்!
100க்கு மீண்டும் வாழ்த்துகள்..
ஹா..ஹா.. அடிக்கடி சாப்பாடு விஷயங்களா போட்டு என்னிய மாதிரி பசங்களை பொருமூச்சு விட வைக்கறதே உங்க வேலையா போச்சு:))))))))))
நாம் எல்லோரும் இன்பத்தை
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
டீவி பார்த்துக்கொண்டு, இயந்திரத்தனமாக
தான் சாப்பாடு நேரம் போகிறது.
சரியா சொல்லி இருக்கீங்க, நாம படிச்ச காலத்தில 7:00 - 7:30 மட்டும் தான் நாடகம், வெள்ளி ஒலியும் ஒளியும், சனி - ஹிந்தி திரைப்படம், ஞாயிறு தமிழ் படம். இத தவிர வேற ஒன்னும் பாக்கிற மாதிரி இல்ல. ஒரு வேளை இதனால தான் நாம எல்லாம் டீவிக்கு அடிமை ஆகாம இருக்கோமா...
இப்ப பாருங்க 100க்கு மேல சானல், எத போட்டாலும் ஒரே சண்டை , அழுகை, பொறாமை, ஆபாசம் பாவம் இந்த காலத்து குழந்தைங்க... பாவம் நம்ம மாதிரி பெற்றோர்கள்
100..பயனுள்ள பதிவுகளை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்...
இன்னும் இது போன்ற பல 100 பயனுள்ள பதிவுகளை தர வாழ்த்துக்கள்
100-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அவசரப்படாம மெதுவா வந்ததால சரியான பதிவுக்கு வாழ்த்து சொல்லிட்டேன்.கூடிய சீக்கிரம் 1000 பதிவு போடுங்க.
மங்களூர் சிவா said...
//
நாம் எல்லோரும் இன்பத்தை
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
டீவி பார்த்துக்கொண்டு, இயந்திரத்தனமாக
தான் சாப்பாடு நேரம் போகிறது.
//
காலசக்கர சுழற்சியிலும் வாழ்க்கை முறை மாற்றங்களாலும் பொருளீட்டுவதையே குறிக்கோளாக கொண்டு இன்பத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் :(///
ஒரே ரத்தம்.
//// மங்களூர் சிவா said...
//
நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும்
இன்பமானதாக கழியுங்கள்.
இன்பம் இருப்பது நம்மிடம் தான்.
அதை வேறெங்கும் தேடத் தேவையில்லை
//
ஊக்கமளிக்கும் வார்த்தைகள் நன்றி.
குறியாட்டை தோளில் போட்டுக்கொண்டு ஊர் முழுவதும் தேடியதை போலத்தான் !!
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் :(////
சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள்.
///புதுகைத் தென்றல் said...
வாழ்த்துக்கு நன்றி.
இந்தியன் படப் பாடல் ஞாபகத்துக்கு வருது.
பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டில்,
"சின்னச்சின்ன சந்தோஷத்தில் அன்பு மிச்சம் இருக்கு"////
அப்ப பெரிய சந்தோஷத்தில் என்னங்க இருக்கு?
///மங்களூர் சிவா said...
குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி சிரித்தபடி உண்பது குதூகலமான ஒன்று.
இழந்து பல வருடங்கள் ஆகிறது :(///
நீங்க மட்டுமா? பல பேரோட நிலைமை இது தான் சிவா.
///SanJai said...
வாழ்த்துக்கள். மொதல்ல ஒழுங்கா கணக்கு படிச்சிட்டு வாங்க. அம்ருதா கிட்ட கேட்டிருந்தா கூட சரியா எண்ணி சொல்லி இருப்பாங்க. கணக்கு தெரியலைனா கேக்க வேண்டியது தான?
எத்த்னை வாட்டி நாங்க வாழ்த்து சொல்றதாம்? :(////
///புதுகைத் தென்றல் said...
வாங்க சஞ்சய்,
மெல்லற வாய்க்கு அவல் கிடைச்சாப்ல ஆயிடுச்சு.
என்ன செய்ய காலம்!///
கவலை படாதீங்க. அம்ருதா கிட்ட எல்லாம் கணக்கு கேட்க வேண்டாம். CMW பாலோ பண்ணுங்க.
U CAN DO...U MUST DO...U WILL DO
கண்டிப்பா அடுத்த தடவை கணக்கு சரியா வரும்.
100 ஆவது உணவுக்கு வாழ்த்துக்கள் ;)
வாங்க ரசிகன்,
என்ன புலம்பல் ஜாஸ்தியாவே இருக்கு? :))))))))))))
வாங்க இம்சை,
ஆனா அந்த டீவியை பார்க்காம இருக்கலாமே? அதை ஏன் யாரும் செய்ய மாட்டாங்கன்னு தான் தெரியல..
வெண்ணிலா முற்றத்தில் பாட்டி
சோறுபிசைந்து உருட்டிப் போட,
உனக்கு எனக்குன்னு போட்டி போட்டுகிட்டு சாப்பிடுவோமே!
கதைச் சொல்லிக்கிட்டே சாப்பாடு போடுவாங்களே!
வீட்டில் ஒரு சட்டம் அமுல் படுத்திக்கனும். டீவி போட்டா சாப்பாடு கிடையாதுன்னு.
வாங்க கீழை ராசா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க நிஜமா நல்லவன்,
வாழ்த்துக்கு நன்றி. 1000 பதிவா??????????
துளசி அக்காவே 600 சொச்சம் தான்
போட்டிருக்காங்க.
நான் எம்மாத்திரம்.
இதுக்கும் C M W சொல்லச் சொல்லாதீங்க :)))))))))
பெரிய சந்தோஷம்னு ஏதும் இல்ல
நிஜமா நல்லவன்.
சின்னச் சின்ன சந்தோஷங்கள் நாள்தோறும் கிடைக்கும் போது
அன்பை அனுபவிக்க முடியும்.
ஆஹா எல்லோரும் எல்லாத்துக்கும்
சி.எம். டபிள்யூ சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களே.
ஆரம்பிச்சிட்டாங்கய்யா! ஆரம்பிச்சிட்டாங்கய்யா!
100ஆவது விருந்துக்கு தவறாமல் வந்த
கானா பிரபா அண்ணாவுக்கு ஒரு இல்ல 4 ஓஓஓஓ......
:))))))))))))))))))
நிஜ 100க்கு வாழ்த்துகள்.
<==
புதுகைத் தென்றல் said...
வீட்டில் ஒரு சட்டம் அமுல் படுத்திக்கனும். டீவி போட்டா சாப்பாடு கிடையாதுன்னு. ==>
டீ.வி ஆஃப் செய்தபின் தான் சமையலேன்னு வச்சுகிட்டா? =)))
வாங்க சாமான்யன்,
நீங்க சொல்ற பாயிண்டும் ரொம்ப சரி,
அப்படி வெச்சா ரொம்ப சந்தோஷம்.
//இன்பம் இருப்பது நம்மிடம் தான்.
அதை வேறெங்கும் தேடத் தேவையில்லை.
//
உண்மை.சில சந்தர்ப்பங்களில் வெளியில் தேடுகிறோம்.
100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
வாங்க நிர்ஷான்,
வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
Post a Comment