இங்கு எங்களுக்கு ஒரு நண்பர் இருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்தவர். திருமணம்
ஆகவில்லை. தானே சமைத்து சாப்பிடுகிறார்.
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?
ஏதோ சமைப்பது அல்ல.வகை வகையாக
சமைத்து அசத்துகிறார். அவரின் பெயர் வெங்கட்.
அவர் ஒரு CADD ENGINEER. ஆனாலும்
காலையில் எழுந்து சமைத்து வைத்து
விட்டு அலுவலகம் செல்கிறார்.
வாழைப்பூ உசிலி எல்லாம் செய்வார்.
அவலில் அதிகம் எண்ணெய் இல்லாமல்
கட்லெட் செய்வார். எல்லாம் சரி.
சமையலில் இந்த ஆர்வம் எப்படி வந்தது?
அதுதான் இங்கே ஸ்வாரஸ்யம். தனது
15 வயதில் சமைய்க்க ஆரம்பித்தாராம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மா வகை
வகையாக சமைத்து விட்டு சமைத்த
களைப்பில் ஒன்றும் சாப்பிடாமல்,
காபி மட்டும் குடித்துவிட்டு படுத்துக்கொள்வாராம்.
அதனால் மணம் நொந்த வெங்கட்
தான் சமைய்க்க ஆரம்பிதரம்.
எத்தனை வகையாக சமைத்தாலும்
வேற வகை செய்து கொடுக்கச்
சொல்லி ஏவும் பிள்ளைகளைப்
பார்திருக்கிறேன். அம்மா சாப்பிட்டார்களா
என்று கவலைபடாமல், அம்மாவுக்கு
மிச்சம் இருக்கிறதா என்று யூசிக்காமல்
சாpபிட்டு செல்லும் பிள்ளைகள்
பார்த்திருக்கிறேன். இந்தப் பிள்ளை
வித்தியாசம் தான். அவர்கள் குடும்பத்தில்
இருக்கும் பாசப்பினைப்பு விவரிக்க முடியாத
ஒன்று.
வாழ்த்துக்கள் வெங்கட்!!! :)
16 comments:
கொடுத்துவச்ச அம்மா.
நானும் தான் சமைத்து சாப்பிடுகிறேன்,எனக்கு என்று யாரும் பதிவு போடமாட்டேன் என்கிறார்கள்!! :-)
சரி, சரி பெயர் பொருத்தமாவது இருக்கே என்று ஆறுதல் அடையவேண்டியது தான். :-))
வெங்கட் வாழ்த்துக்கள்!
//
எத்தனை வகையாக சமைத்தாலும்
வேற வகை செய்து கொடுக்கச்
சொல்லி ஏவும் பிள்ளைகளைப்
பார்திருக்கிறேன். அம்மா சாப்பிட்டார்களா
என்று கவலைபடாமல், அம்மாவுக்கு
மிச்சம் இருக்கிறதா என்று யூசிக்காமல்
சாப்பிட்டு செல்லும் பிள்ளைகள்
பார்த்திருக்கிறேன்
//
என்னைய எப்ப பாத்தீங்க!?!?!?
அவ்வ்வ்
வாழ்த்துகள் வெங்கட்..அம்மாவின் சாப்பாடு குறித்துக் கவலைப்பட்டு..முயற்சியும் செய்து..
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் வெங்கட்.
///எத்தனை வகையாக சமைத்தாலும்
வேற வகை செய்து கொடுக்கச்
சொல்லி ஏவும் பிள்ளைகளைப்
பார்திருக்கிறேன்.///
நீங்க வகைவகையா சமைக்கிறதுக்கு இப்பதானே காரணம் தெரியுது.
அருமையான பதிவு.
வாங்க துளசி அக்கா,
வருகைக்கு நன்றி
வாங்க வடுவூர் குமார், எனக்கு உங்களைப் பற்றி தெரிஞ்சிருந்தா கண்டிப்பா ஒரு பதிவு போட்டிருப்பேன். வருகைக்கு நன்றி
வாங்க சிவா,
வருகைக்கு நன்றி
ஆஹா, நிஜமா நல்லவன், என் பிள்ளைகளுக்கு விதம் விதமா வேணும்னு அவசியமில்லை. ஆனா எத்தனை வீடுகள்ல பாத்திருக்கேன். அத்தக் கொண்டா, இத்தைக் கொண்டான்னு அதிகாரம் தூள் பறக்கும்.
ஆஹா, வாங்க பாசமலர்.
வாங்க சாமன்யன் வருகைக்கு நன்றி
//புதுகைத் தென்றல் said...
ஆஹா, நிஜமா நல்லவன், என் பிள்ளைகளுக்கு விதம் விதமா வேணும்னு அவசியமில்லை. //
உங்க பிள்ளைங்க சமர்த்துனு தான் தெரியுமே.
<==
நிஜமா நல்லவன் said...
//புதுகைத் தென்றல் said...
ஆஹா, நிஜமா நல்லவன், என் பிள்ளைகளுக்கு விதம் விதமா வேணும்னு அவசியமில்லை. //
உங்க பிள்ளைங்க சமர்த்துனு தான் தெரியுமே.
==>
எதுக்கு தேவையில்லாதத கேட்டு அம்மாவை சிரமப்படுத்தணுமேன்ற நல்ல எண்ணம்தான். அப்புறம் அதத் தானே சாப்பிட்டு நல்லா இருக்குன்னு வேற சொல்லணும். இல்லாட்டி (வீட்டு) மார்க் வேற குறைஞ்சிடும் =((
Post a Comment