Saturday, March 29, 2008

பிரிவோம்! சந்திப்போம்

வலைப்பூ நண்பர்களுக்காக ஒரு விருந்து. இலங்கையின் பாரம்பரிய உணவு.சில நான் சமைத்தது, சில நெட்டில் சுட்டது. :))))




இது பீர் இல்லீங்கோ. இஞ்சி சாறு. சொரசம்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்க.





நான் மிகவும் விரும்பும் சிவப்பரிசி சோறு.




உருளைக்கிழங்கு, முந்திரி கறி.



அன்னாசி தேங்காய்ப்பால் கறி


என்ன விருந்து பிடிச்சிருக்கா?


பிரிவு எப்போதும் துயரமானது. ஆனால் தவிர்க்க முடியாதது.எனது நிலமையும் தற்போது அதுதான்.
தாயகம் திரும்புவதில் மட்டற்ற மகிழ்ச்சிதான். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு துயரம் இழையாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.


நாளைக்காலை விமானம் ஏறுகிறோம். கூவும் குயிலின் ஓசை, பறவைகளின் சிப் சிப் சத்தம், தோட்டத்து அணில், அவ்வப்போது ஹாய் சொல்லும், நத்தை, கீரி, பக்கத்து வீட்டி பூனை இவைகளை விட்டுப் பிரியப்போகிறோம்.
சிங்கப்பூர், மலேசியா பார்த்திருக்கிறேன். நம் தாய்நாட்டிற்கு அடுத்து நான் பெரிதும் விரும்புவது இலங்கை. அதனால் தான் இலங்கைப் பற்ரிய பதிவுகள் எழுத ஆரம்பித்தேன்.

இங்கு என் வாழ்வில் 6 வருடங்கள் கழியும் என்பதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. சொர்க்கத்தில் வாழ்ந்ததாகவே நினைக்கிறேன்.
விடைகொடு இலங்கை நாடே!கடல் வாசல் தெளிக்கு காடே!பனமரக்காடே! பறவையின் கூடே மறுமுறை ஒருமுறை காண்போமா.......


:(((((((((((((((((((((((((
(கந்தலாமா பதிவுக்கு போட்ட தொடரும் அடுத்த பதிவிலிருந்து தொடரும்.)








8 comments:

நிஜமா நல்லவன் said...

///பிரிவு எப்போதும் துயரமானது. ஆனால் தவிர்க்க முடியாதது.எனது நிலமையும் தற்போது அதுதான்.தாயகம் திரும்புவதில் மட்டற்ற மகிழ்ச்சிதான். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு துயரம் இழையாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.///



இப்படி எல்லாம் சொல்லி கலங்கடிக்க கூடாது.
:((((((((((

Sanjai Gandhi said...

ஹைதராபாத் தங்களை அன்புடன் வரவேற்கிறது. :))

சுரேகா.. said...

இந்த அய்ட்டமெல்லாம் சாப்பிடுறோமோ இல்லையோ...

கண் குளிர காட்டினீங்களே...!

அதுவே போதும்!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இன்னும் கமெண்ட மாடிரேட் பண்ணலே போலிருக்கு.

பாச மலர் / Paasa Malar said...

தாய்நாட்டு வாழ்க்கை தனி சுகம்தான்..வாழ்த்துகள்!

மங்களூர் சிவா said...

ம். அதெல்லாம் எப்ப சமைக்க போறீங்க சீக்கிரம் ஹைதராபாத்கு ஒரு டிக்கட் போட்டு கொரியர்ல அனுப்பிவிடுங்க!!!

:)))

மங்களூர் சிவா said...

பிரிவு வருத்தமான ஒன்றுதான். But all in the game.

சின்னப் பையன் said...

விருந்துக்கு :-)))))))))))))))))
உங்க ஊர்ப்பிரிவுக்கு :-((((((((((((((((