Saturday, March 08, 2008

கதிர்காமம்- புனித தலம்.

கதிர்காமம் இலங்கையில் மிக விசேடமான இடம்.

கந்தன் வள்ளியை மணம்புரிந்து வாழ்ந்த இடம்.

கதிர்காமக்கோயிலிக்கு அருகில் வள்ளியம்மா

பிறந்த இடம் இருக்கிறது.தேனும் தினை மாவும் படைப்பது வழக்கம்.

சர்வ சாதாரணமாக இங்கு தினை மாவு கிடைக்கிறது.கொழும்புவிலிருந்து கதிர்காமத்திற்கு 7 மணித்யாலப்
பயணம். ரத்னபுரி வழியாகச் செல்லலாம்.
கடலின் அழகை ரசித்தப் படி மாதர, ஹம்பன் தோட்ட,
திஸ்ஸா சென்றும் செல்லலாம்.
ரத்னபுரி வழியாகச் செல்லும்போது, வழியில்
உடவளவு சரணாலயம் பார்க்கலாம்.
காசு கொடுத்து ஜீப்பில் பார்க்க வருபவர்களைத்
தவிர்த்து மின் கம்பிகளுக்கு அப்பால்
அசால்டாக நின்று கொண்டிருக்கும்
யானையைப் பாருங்கள்.உடவளவு நீர்த்தேக்கம் (UDAWALAVE)
இதோ கோயிலினுள் நுழையப் போகிறோம்.


கோயிலின் முகதுவாரம்.
வேலுண்டு வினையில்லை கந்தைய்யா!


யானை வந்து மலர் வைத்து வணங்கியதும்
கோயில் திறக்கபடுகிறது.மற்றொரு கோணத்திலிருந்து கதிர்காமக் கோயில்.


இதோ கோயில்னுள்ளே உள்ளே நாம்.இதுதான் கதிர்காமக் கந்தன். இங்கு சிலை வழிபாடுஸ்தல தீர்த்தமான மாணிக்க கங்கையில் மீன்கள்...


சுழித்து ஓடும் மாணிக்க கங்கை.


செல்லக் கதிர்காமம்:
கதிர்காமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில்
இருக்கிறது செல்லக் கதிர்காமம்.

செல்லக் கதிர்காமத்தில் தான் விநாயகர் யானனயாய்
வந்து வள்ளியை பயமுருத்தி முருகன் வள்ளித்
திருமணம் செய்துகொள்ள உதவினார்.
கதிர்காமம் பற்றிய பல அறியத் தகவல்களுக்கு
இங்கே பார்க்கவும். http://www.katargama.org/
கந்தன் என்ற பெயர் சொன்னால்
கடிதாக நோய்தீரும்.
கந்தா சரணம் கடம்பா சரணம்
சரவண பவ குகா சரணம் சரணம்,
குருகுகா சரணம்! குருபரா சரணம்.
சரணம் அடைந்திட்டேன்
ஸ்கந்தா போற்றி.
காத்திடுவாய் காத்திடுவாய் கந்தகுரு நாதா!
போற்றிடுவேன்! போற்றிடுவேன்
புவன குரு நாதா!
போற்றி போற்றி கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி.

வேண்டுகோள்:
இலங்கையைப் பற்றி எழுத வேண்டாம் என
திட்டி பின்னூட்டம் இட வேண்டாம்.
இது எனது 100ஆவது பதிவு.
அதனால் தான் கதிர்காமம்
குறித்து எழுதுகிறேன்.
இப்பதிவு என்னப்பன் கந்தனுக்கு சமர்ப்பணம்.


27 comments:

SanJai said...

100 க்கு வாழ்த்துக்கள்.(டயல் பண்ணதும் உதவுக்கி வராங்களாம்ல.. அதான் வாழ்த்துக்கள் :P )

அட நம்ம கலா மேடம் 100வது பதிவு போட்டாங்க இல்ல?.. ய்யக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள்.பதிவு படிச்சிட்டு நேரமிருந்தா பின்னூட்டறேன். :)))
கலக்குங்க. :)

பாச மலர் said...

100 க்கு வாழ்த்துகள்..

மங்களூர் சிவா said...

உள்ளம் உருகுதய்யா முருகா
உன் எழில் காண்கையிலே

அள்ளி அணைத்திடவே
அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசையும் பெருகுதய்யா!!

100க்கு வாழ்த்துக்கள்!

மகளிர் தின வாழ்த்துக்கள்!

Baby Pavan said...

வேண்டுகோள்:இலங்கையைப் பற்றி எழுத வேண்டாம் எனதிட்டி பின்னூட்டம் இட வேண்டாம்.இது எனது 100ஆவது பதிவு. அதனால் தான் கதிர்காமம்குறித்து எழுதுகிறேன். இப்பதிவு என்னப்பன் கந்தனுக்கு சமர்ப்பணம்.

ஹிஹிஹி நாங்க திட்டி பின்னூட்டம் எல்லாம் போட மாட்டோம் , பதிவு போட்டு ஆப்பு வைப்போம்....

99 பதிவு தான் இருக்கு எப்படி 100 உங்களுக்கு ஆச்சி...

Baby Pavan said...

100 அடிக்க வாழ்த்துக்கள்....

புதுகைத் தென்றல் said...

மொத போணி சஞ்சயா!!!

வாழ்த்துக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க பாசமலர்,

வாழ்த்துக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கு நன்றி
சிவா.

ரசிகன் said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணி.:)
படங்கள் அருமை..
ஆமாம்,நம்ம சிவாவுக்கு,திடீருன்னு என்ன பக்திரசம் பொங்கி வழியுது?சாமியாரா போக பிளான் ஏதாவது இருக்கா?:)))))))))))))

புதுகைத் தென்றல் said...

நன்றி பவன்,

99 பதிவுதான் வந்திருக்கு.

இப்ப 100 வது பதிவு போட்டுட்டேன்.

சுட்டி காட்டியதற்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க ரசிகன்.

வாழ்த்துக்கு நன்றி.

மங்களூர் சிவா said...

//
ரசிகன் said...
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணி.:)
படங்கள் அருமை..
ஆமாம்,நம்ம சிவாவுக்கு,திடீருன்னு என்ன பக்திரசம் பொங்கி வழியுது?சாமியாரா போக பிளான் ஏதாவது இருக்கா?:)))))))))))))

//

என்னைய சாமியாரா அனுப்பீட்டு நீ ஆட்டைய போட்டுடலாம்னு பாக்கிறியா

நடக்காது நடக்கவும் விடமாட்டேன்!!

SP.VR. SUBBIAH said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே!

நிஜமா நல்லவன் said...

கதிர்காமம் பற்றிய தகவல்களுக்கு ரொம்ப நன்றி. கந்தர் அனுக்கிரகம் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சுப்பையா சார்,

முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கானா பிரபா said...

கதிர்காமம் போக இன்னும் எனக்கு வாய்ப்புக்கிடைக்கவில்லை. படங்கள் மூலம் தரிசிக்க வைத்தமைக்கு நன்றி

G.Ragavan said...

முருகன் எனும் திருநாமம்
முழங்குமிடம் கதிர்காமம்
குருபரணே சரணம் உந்தன் சேவடி
தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி

சிறுவயதிலேயே மிகவும் பிடித்த பாடல் இது..

அதே போல வருவான் வடிவேலன் என்ற படத்தில் வரும்,

நீயின்றி யாருமில்லை விழி காட்டு என்ற பாடலில்.. வாணி ஜெயராம் அவர்கள் "நாங்கள் கதிர்காமம் வந்ததற்குப் பலன் இல்லையோ" என்று கதறி அழும் கட்டம் மிகமிக உருக்கும். அப்பொழுதெல்லாம் நான் கதிர்காமத்திற்குச் செல்லும் பலனை கந்தன் என்று தருவானோ என்ற ஏக்கம் பிறக்கும்.

தில்லானா மோகனாம்பாள் என்ற கதையைப் படித்திருக்கின்றீர்களா? இல்லையென்றால் படிங்கள். கதையின் இரண்டாம் பாகம் முழுதும் இலங்கையில்தான். அப்பொழுது சண்முக சுந்தரம் செட்டும் மோகனாங்கி செட்டும் கதிர்காம யாத்திரை செல்வார்கள். அந்த யாத்திரையை மிக அழகாக விவரித்திருப்பார் கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு.

நூறாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க கானா அண்ணா,

நான் இதுகாறும் 4 முறை தரிசித்து விட்டேன்.

:)))))))))))))))

புதுகைத் தென்றல் said...

வாங்க ராகவன்,

நீங்கள் சொன்ன பாடல்கள் நானும் கேட்டிருக்கிறேன்.

வருவான் வடிவேலனில் மலேசியா பத்து மலை முருகன், மற்றும் சிங்கப்பூர் முருகன், கதிர்காமம் முருகன். இந்த 3 கோயில்களையும் காட்டுவார்கள்.

வாழ்வில் ஒரு முறையேனும் கதிர்காமமும் நல்லூர் கந்தனையும்
தரிசிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

கதிர்காமக் கந்தனை ஆசை தீர தரிசித்துவிட்டேன்.

நல்லூர்கந்தனைப் பார்க்க முடியவில்லை.

அவனருளால் அந்த ஆசையும் நிறைவேறும்.

வாழ்த்துக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

//ஆமாம்,நம்ம சிவாவுக்கு,திடீருன்னு என்ன பக்திரசம் பொங்கி வழியுது?சாமியாரா போக பிளான் ஏதாவது இருக்கா?:)))))))))))))//


//என்னைய சாமியாரா அனுப்பீட்டு நீ ஆட்டைய போட்டுடலாம்னு பாக்கிறியா

நடக்காது நடக்கவும் விடமாட்டேன்!!//

இதென்ன தனி டிராக் ஓடிகிட்டு இருக்கு !!!!!!!!!!!!!!

பொன்வண்டு said...

200,300 அப்புடின்னு போய்கிட்டேயிருக்க வாழ்த்துக்கள் !!!!! :)

புதுகைத் தென்றல் said...

வாங்க பொண்வண்டு,

வாழ்த்துக்கு நன்றி.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
புதுகைத் தென்றல் said...
//ஆமாம்,நம்ம சிவாவுக்கு,திடீருன்னு என்ன பக்திரசம் பொங்கி வழியுது?சாமியாரா போக பிளான் ஏதாவது இருக்கா?:)))))))))))))//


//என்னைய சாமியாரா அனுப்பீட்டு நீ ஆட்டைய போட்டுடலாம்னு பாக்கிறியா

நடக்காது நடக்கவும் விடமாட்டேன்!!//

இதென்ன தனி டிராக் ஓடிகிட்டு இருக்கு !!!!!!!!!!!!!!

8 March, 2008 4:44 PM
===>

===))))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
இது எனது 100ஆவது பதிவு. அதனால் தான் கதிர்காமம்குறித்து எழுதுகிறேன். இப்பதிவு என்னப்பன் கந்தனுக்கு சமர்ப்பணம்.
==>
நீங்க 100வது பதிவு போடாட்டிதான் ஆச்சரியம். ஒரு வெறியோடல்ல பதிவிட்டுட்டு இருக்கீங்க.

புதுகைத் தென்றல் said...

வாங்க சாமன்யன்,
//நீங்க 100வது பதிவு போடாட்டிதான் ஆச்சரியம். ஒரு வெறியோடல்ல பதிவிட்டுட்டு இருக்கீங்க//

என்னடா, அண்ணனை இன்னும் காணமேன்னு பாத்துக்கினு இருந்தேன்.

வாங்கண்ணேண்!

cheena (சீனா) said...

ம்ம்ம் - புதுகைத்தென்றல்

100வது பதிவாக, கந்தனுக்குச் சமர்ப்பித்த, கதிர்காமத்தினைப் பற்றிய ஒரு அருமையான பதிவு. படித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன்.

பல புதிய தகவல்கள் - ம்ம்ம்

நல்வாழ்த்துகள்

சயந்தன் said...

நீங்கள் 2002 - 2005 காலப்பகுதியில் இலங்கையில் இருந்திருந்தால் அதை விட வாய்ப்பான காலம் நல்லூரை சென்றடைய இருந்திருக்காது.

இனி எப்ப வருமோ..? :(