Friday, March 07, 2008

C M W

C M W

I CAN DO, I MUST DO, I WILL DO.

இது தாரக மந்திரமாக எங்கள் வீட்டில்
எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

என்னால் முடியாது என்று சொல்லும்
குழந்தைக்கு, இதைச் சொல்லிக் கொடுத்து
அதன் அர்த்ததை புரியவைப்பது என்று
நான் மாண்டிசோரி பயிற்சியின் போது
கற்றுக்கொண்டேன்.


என் மகள் கொஞ்சம் பயந்த சுபாவம்.
புதிதாக முயற்சி செய்யத்தயங்குவாள்.

அவளுக்கு C.M.W சொல்லிக்கொடுதேன்.
இதைச் சொல்லிவிட்டு செய்ய
முயற்சி செய், உன்னால் முடியும்
என்று பழக்கினே. அவளிடம்
"வொர்க் அவுட்" ஆனது.

எப்படியோ எங்கள் வீட்டில்
கணவரும், பிள்ளைகளும் கூட
இந்த மந்திரத்தைச் சொல்ல
ஆரம்பித்தனர்.

பரிட்சை எழுதி வெகு நாளாகிவிட்டது.
ஆசிரியைப் பயிற்சிக்கு கடைசியில்
பரிட்சை எழுதவேண்டுமே.

எனது ஆசிரியையோ கேள்வி, பதில்
மாதிரி பரிட்சை வைக்காமல்,
மொத்த பாடத்தையும், (மாண்டிசோரி
முறை உபகரணங்கள், பயிற்றுவிக்கும் முறை.
எந்த வயதுக்கு பயன் படுத்துவது,
என்ன பலன், எல்லாம் 4 பாடத்திற்கும்)
எழுத வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

எதன் பிறகு எது வரவேண்டும், எல்லாம்
அவர் கற்றுத்தந்த படியே வரவேண்டும்.
ஒன்றும் மாறக்கூடாது.

கேள்வி கேட்டால் பதில் எழுதலாம்.
எல்லாம் வரிசையாக ஞாபகம் வைத்திருக்க
வேண்டுமே என்று டென்ஷன்.

பரிட்சைக்குத் தயாராகினேன். (கணவர்
DADDY DAY CARE Eddy Murphy மாதிரி
பிள்ளைகளை கவனித்துக்கொள்ள
நான் ஞாயிற்றுக்கிழமைகளில் படிக்க
போனது. )பரிட்சையின் போது
கணவர் பிள்ளைகள் இருவரும் மிக
உதவியாக இருந்தார்கள்.

அந்த நாளும் வந்தது. என்னை
கணவரும், பிள்ளைகளும் உடன்
வந்து காரில் இறக்கிவிட்டனர்.
படித்துக்கொண்டே வந்தேன்.
(கணவர் யேசுதாஸ் பாட்டை
போட்டு ரிலாக்ஸ் ஆகு என்றார்.)

கிளாஸ் வந்துவிட்டது. இறங்கும்போது
மகள்," AMMA Say C.M.W. U can do it"
என்றாளே பார்க்கலாம்.

சத்தியமாக அந்த நிமிடம் அந்த
வார்த்தைகள் தந்த உத்வேகம்,
சின்ன மகள் ஞாபகமாக சொன்ன
சந்தோஷம் எல்லாம் ஒன்றாகச்
சேர நன்கு செய்து நல்ல மதிப்பெண்
கிடைத்தது.

13 comments:

நிஜமா நல்லவன் said...

அம்ருதா ரொம்ப சமர்த்து பிள்ளை தான்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

இன்னைக்கு நீங்க துண்டைப் போட்டு முதலிடம் பிடிச்சீட்டீங்க போல :)

வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

CMW க்கும் 'திங்க் பிக்'கும் சம்பந்தம் இருக்க மாதிரி இருக்கே.

CMW ம் பாலோ பண்ணிக்கிறேன்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
என் மகள் கொஞ்சம் பயந்த சுபாவம்.
புதிதாக முயற்சி செய்யத்தயங்குவாள்.
==>
ungalai maahiriyaa? =)))

pudugaithendral said...

வாங்க சிவா,

கண்டிப்பா வொர்க் ஆவுது.

pudugaithendral said...

வாங்க சிவா,

பயந்த சுபாவம்னா என்னன்னு கேக்கறவ நான்.

:))))))))))))))))))))))

பாச மலர் / Paasa Malar said...

நல்ல விதிகள் செய்து கொண்டே இருக்கிறீஎகள்..வாழ்த்துகள்

pudugaithendral said...

வாங்க பாசமலர்,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

கீழை ராஸா said...

//I CAN DO, I MUST DO, I WILL DO.//
நல்லதுக்கு மட்டும்...

கீழை ராஸா said...

"I CAN DO, I MUST DO, I WILL DO.'
நம்பிக்கை மிளிர வைக்கும் வாசகம்..

நிஜமா நல்லவன் said...

புதுகைத் தென்றல் said...
வாங்க நிஜமா நல்லவன்,

இன்னைக்கு நீங்க துண்டைப் போட்டு முதலிடம் பிடிச்சீட்டீங்க போல :)




சிவா என்ன ஆச்சு?

pudugaithendral said...

வாங்க கீழை ராசா,

இந்த மந்திரத்தை ஜபிப்பதால்
தன்னம்பிக்கை நிச்சயம் மிளிரும்.

நம்மால் சாதிக்க முடியும் என்பது
உறுதியாகும்.

ஆம். நல்லதற்கு மட்டுமே.

pudugaithendral said...

சிவா சிவராத்திரி விரதம் பிடிச்சிருப்பாரு
நிஜமா நல்லவன் :)))))