Thursday, May 01, 2008

வேலை!! வேலை!! வேலைக்கு இல்லை வேளை!!!!!

என் கணவரின் நண்பர் விருந்துக்கு அழைத்திருந்தார். இரவு 9 மணிக்கு அவரது வீட்டிற்கு சென்றோம். இப்போ வந்து விடுவார் என்று அவரது மனைவி சொன்னார். மணி 10.00ஆகிவிட்டது ." மன்னிக்கவும் இன்று கொஞ்சம் தாமதமாகி விட்டது"!!! என்று சொல்லிக்கொண்டு 11 மணிக்கு வந்தார். அவரது மகள் உடன், " எப்பவுமே அப்பா இந்த நேரத்துக்குத்தான் வருவார்", என்றார்.

நண்பர் ஒருவரை குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்திருந்த போதும் இப்படித்தான்... 8 மணிக்கு அங்கிருப்பேன் என்று சொன்னவர் வந்த போது பிள்ளைகள், உண்டு தூங்கி ஒரு சாமம் ஆகியிருந்தது.



அவர்களை குற்றம் சொல்ல இதை எழுதவில்லை. மனம் பதைக்கிறது.
குமுதம் இதழில் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் சொல்லியிருப்பதுதான்
இப்போதைய நிலை.

" இந்தியாவில் வந்து குவியம் பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நம் இளைய சமுதாயத்தின் மீது நேர அவதியைதான் முதலின் திணிக்கின்றன.

நிமிடத் துல்லியமாக அலுவலகத்தின் உள்ளே நுழை! ஒரு நிமிடத்தைக் வீணாக்காமல் உழை. ஆனால் நேரம் பார்க்காமல் பாடுபட்டு. வீட்டிற்கு பூவதில் அவதி காட்டாதே! வீட்டிற்கு சாவகாசமாகப் போகலாம்.
டார்கெட் உண்டு உனக்கு! அதை முடிக்காமல் போகாதே! முடிக்காமல் போகப் பார்க்கிறாயா? ஒரேயடியாகப் போய்விடு என்கின்ற பல்லவியைத்தான்
நாகரிகமாக இளைய தலைமுறையின் தலைக்குள் பதிக்கின்றன.




இதற்கு ஈடு கொடுக்க முடியாவிட்டால் இனி எந்த வேலையிலும் தாக்குப்படிப்பது கடினம் ! இவை அவரின் கருத்துக்கள்.

9 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினால்," என்ன இன்றைக்கு சீக்கிரம் கிளம்புகிறாய் ?"என்று கேள்வி கேட்கு உயர் அதிகாரி, மனச்சோர்வு , மனஅழுத்தம், மனஉளைச்சல்,
நேரம் காலம் பார்க்காமல் அலுவலகமே கதி என்று கிடப்பதால் வீட்டிலும் அமைதி இல்லை, அலுவலக வேலையின் நெருக்கடியினால் வரும் அலுப்பு,
இவை நம்மை இட்டுச் செல்லும் இடம் இதய மருத்துவமனை தான்.
அவர்களுக்கு நல்ல வருமானம் நம்மால்.

இதற்கு என்னதான் தீர்வு? எங்கே செல்லும் இந்தப் பாதை ?????????????...............................

28 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப சரியா சொன்னீங்க .. இது ஏறக்குறைய நிறையபேர் அனுபவம் தான். .. அவங்களுக்கும் உடல்நிலை மனநிலை கெடும் குடும்பத்தினருக்கும் தான்.
பணம் ,வேலை போட்டி என்று எதையும் குறைக்க வழி இருப்பதாக தெரியவில்லையே..

துளசி கோபால் said...

அடக்கடவுளே.....

இதெல்லாம் நல்ல வேளைக்கு நமக்கில்லை.

எட்டரை மணியானா எங்க ரங்கமணிக்குக் கண்ணைச் சுத்திக்கிட்டுத் தூக்கம் வந்துரும்:-))))

இங்கே கிவிகள் வீட்டில் மாலை 6 மணிக்கு இரவுச்சாப்பாடு.

நாங்கதான் கொஞ்சம் லேட்டாச் சாப்புடுவோம் 8 மணிக்கு.

pudugaithendral said...

வாங்க கயல்விழி,

//பணம் ,வேலை போட்டி என்று எதையும் குறைக்க வழி இருப்பதாக தெரியவில்லையே//

மிகச் சரியா சொன்னீங்க. ஆனாலும் எதாவது செய்யனும்னு மனசு ஆதங்கப்படுது.

pudugaithendral said...

ஆஹா, துளசி அக்கா வாங்க வாங்க,
உங்க வீட்டுல அப்படி இல்லாதது மனதுக்கு இதமா இருக்கு.

pudugaithendral said...

இலங்கையில் நாங்க இருந்த போது அதிகம் போனால் மணிக்கு அயித்தான் வீட்டுக்கு வந்திடுவார். வேலைக்கும் வீட்டுக்கும் சமமாக நேரம் ஒதுக்க முடிந்தது. quality of life என்பார்களே அது என்ன?என்பது அங்கு உணர்ந்தேன். ..நம் தாய் திரு நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை?

pudugaithendral said...

5 மணிக்கு வந்திடுவார் என்பது சரியா டைப் ஆகல. :))))

மங்களூர் சிவா said...

உலகம் மிகப்பெரிய ஓட்டப்பந்தயம் நடக்கும் இடம்

ஓடித்தான் ஆகணும்.

வல்லிசிம்ஹன் said...

இதைப் பற்றி நாம் தான் வித்தியாசப் படுகிறோம் தென்றல்.

நாட்டு முன்னேற்றத்துக்கு இந்தக் கலாசாரம் அவசியம் என்று நேற்று ஒருவர் அழுத்தம் திருத்தமா சொல்லிட்டுப் போனார். வயசான்வங்களுக்கு இது ஜெனரேஷன் காப் அப்டீனு பதில் சொன்னார். இயற்கைக்கு மாறாக வேலை செய்யறதுதான் முன்னேற்றாமா. தெரியவில்லை.

எல்லோரும் விரும்புவது said...

husssssssss apppaaaaaaaaaaa.....

Ippavee kanna kattuthey..........

Oru pattu than nyabagam varuthu

"THOOKAM VITRUTHANEY ORU KATTIL VANGA ASAI...."

:(

pudugaithendral said...

வாங்க சிவா,
ஓட்டப்பந்தயத்துல ஓடலாம் தப்பில்ல. ஊடினதுக்கு உங்களுக்கு கிடைச்சது
என்ன?

pudugaithendral said...

வாங்க வல்லி சிம்ஹன்,

//இதைப் பற்றி நாம் தான் வித்தியாசப் படுகிறோம் தென்றல்.//

//நாட்டு முன்னேற்றத்துக்கு இந்தக் கலாசாரம் அவசியம் என்று நேற்று ஒருவர் அழுத்தம் திருத்தமா சொல்லிட்டுப் போனார்.//

இதெல்லாம் டூ மச்.

//வயசான்வங்களுக்கு இது ஜெனரேஷன் காப் அப்டீனு பதில் சொன்னார்.

இயற்கைக்கு மாறாக வேலை செய்யறதுதான் முன்னேற்றாமா. தெரியவில்லை.//

சரியா கேட்டீங்க ....

pudugaithendral said...

வாங்க சந்தோஷ்,
தூக்கம் விற்று கட்டில் வாங்கி என்ன செய்ய?
ஆடம்பரமா வாங்கின அபார்ட்மென்டில் ஹெலோன்னு சொல்ல
யாருமே இல்லையே????????????

நிஜமா நல்லவன் said...

///இதற்கு என்னதான் தீர்வு?///


தீர்வுகளை பற்றி யோசிக்க கூட நேரம் இல்லையே:(

pudugaithendral said...

//யோசிக்கக் கூட நேரம் இல்லை //

அப்புறம் எதுக்கு தாங்க நேரம் இருக்கு நிஜமா நல்லவன்?

Sanjai Gandhi said...

யக்கோவ்.. இதுல நம்ம சுயநலமும் இருக்கு... இந்த பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் வரதுக்கு முன்னாடி எல்லாரும் அரசாங்க வேலைக்கு தான் ஆசை பட்டாங்க. 9 - 5 வேலை. குறைவான சம்பாத்யம். அளவான வாழ்க்கை. ஆனால் இப்போ நம்ம அம்மா அப்பா வாழ்ந்த மாதிரியான வழ்க்கையா நாம வாழறோம்? தேவை இல்லாத ஆடம்பர வாழ்க்கை. நாம் இன்று செய்யும் செலவில் பாதி வெத்து பந்தாவிற்க்காகத் தான். இரண்டு பெரியவர்கள் 2 சிரிவர்கள் வாழ்வதற்கு 4 பெரியவர்கள் 4 சிறியவர்கள் வாழ்வதற்கான வீட்டில் குடி இருப்போம். பஸ்ஸில் போகும் இடத்திற்கு நெரிசலை தவிற்கிறேன் பேர்வழி என்று சுகமாக ஆட்டோ , டாக்சி அல்லது சொந்த காரில் போகிறோம். இந்த மாதிரி வாழ்க்கை வேண்டும் என்றால் சில விசயங்களை விட்டு கொடுக்க அல்லது சமரசம் செய்யத் தான் வேண்டும்.

இவ்வளவு சிரமப் படுகிறவர்கள் அரசாங்க வேலைக்கான தேர்வு எழுதி அரசாங்க வேலைக்கு தான் போக வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு போகக் கூடாது. நம் பன்னாட்டு நிறுவன மக்கள் நேரம் இல்லை என்று வெளியே சொல்லிக்கொண்டு எப்போதும் இணைய அரட்டையில் தான் இருக்கிறார்கள்..... :))

என்னமோ நடக்குது .. மர்மமாய் இருக்குது.. ஒண்ணுமே புரியலே உலகத்திலே.. :))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
இதற்கு என்னதான் தீர்வு? எங்கே செல்லும் இந்தப் பாதை ?????????????...............................
==>
ஏதோ நீங்க தீர்வ சொல்லுவீங்கன்னு பார்ர்த்தா ....
சன்ஞை, நீங்க சொல்ரது சரி.

எங்கியோ படிச்சது. இந்த அயராது உழைப்பு நம்மோட ஹெல்த் இன்சுரன்சுல தெரியுமாம். அதாவது அடிக்கடி முடியாம போயி டாக்டரிடம் காட்டினால், அவனுக்கு ஃபீஸ் கொடுத்து இன்சுரன்ஸ் கம்பெனிக்கு கட்டுபடியாகாதாம்.அந்த மாதிரி பிரச்னை வரும்போது இதற்க்கும் தீர்வு வருமொ என்னவொ?(இந்தியாவுல வெளி நோயாளீ இன்சுரன்ஸ் இப்ப இல்லேன்னாலும், இன்னும் கொன்ச நாள்ள வந்துடும்னு நம்பலாம்)

ரசிகன் said...

அண்ணி, நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்:)& நன்றிகள்:)நாங்களும் ஃபாலோ பண்ணுவோம்ல்ல:))

(ஆமா.,., ஸ்ரீராம் அண்ணாவுக்கு உள்குத்து ஏதும் இதுல இல்லையே:P)

சுரேகா.. said...

நேரக்குடுவைக்குள் தன்னைத்திணிச்சுக்கிட்டு
வெளில வர முடியலைன்னு
சொல்றாங்க!

அப்ப...2 தீர்வுதான் இருக்கு!
ஒண்ணு சஞ்சய் சொல்றமாதிரி..இந்த வேலையே பாக்கக்கூடாது
அல்லது

போராடணும்.

இவங்க 2மே பண்ணமாட்டாங்க!

11 மணிக்கு வீட்டுக்கு வந்து புலம்பத்தான்முடியும்.

pudugaithendral said...

ஆஹா வாங்க சஞ்சய்,
அரசாங்க அலுவலகத்திலும் மிகக் கடுமையாக வேலை பார்க்றவங்களும்
இருக்காங்க.

இதே பன்னாட்டு நிறுவன வேலைகளிலும் அடுத்தவர்கள் உழைப்பில் குளிர்காயும் ஆட்களும் இருக்காங்க.

வேலை பார்க்கவேண்டும். ஆனா ஒரு திட்டமிடலுடன் சொந்த
நலனுக்கும் நேரம் ஒதுக்கிகொள்ள தெரியனும்.

மேச்சா கழுத இல்லாட்டி பரதேசம்னா எப்படி ?

pudugaithendral said...

வாங்க சாமான்யன்,
எனது பார்வையைச் சொன்னேன் . தீர்வு அவரவர் கையில் தான்.
இன்சுரன்ஸ் குறித்து நீங்கள் சொல்லியிருப்பது அருமை.

pudugaithendral said...

வாங்க ரசிகன்,
எனது விருப்பமும் அதுதான். இளைய சமுதாயம் தன்னை தளர்த்திகொள்ள,
மற்ற விடயங்களுக்கும் நேரம் ஒதுக்கி சந்தோஷமாக இருக்க தெரிந்துக்கொள்ள
வேண்டும். அது உடல் நலனுக்கும், குடும்ப நலன்க்கும் இன்றியமையாதது
என்பது என் கருத்து.

pudugaithendral said...

// ஸ்ரீராம் அண்ணாவுக்கு உள்குத்து ஏதும் இதுல இல்லையே:P)//

அவருக்கு ""உள்குத்து"" எதுக்கு? நான்தான் பக்கத்திலேயே இருக்கேனே? !!! :))))

pudugaithendral said...

வாங்க சுரேகா,
அதிக நேரம் வேலைப் பார்பதாலோ, விடுப்பு எடுக்காமல் அலுவலக வேலை பார்பதனாலோ அதிகமாக சம்பளம், அல்லது தலையில் கிரிடம் எதுவும் வைக்கப் போவது இல்லையே . வாங்கும் சம்பளத்துக்கு தக்க வேலை பார்த்தல் போதும்.

pudugaithendral said...

வேலை பார்ப்பதில் ஒரு லாஜிக் இருக்க வேண்டும்.
"காலைமுதல் மாலை varai வேலை பார்ப்பது போக அதிகாரி iravu 10 மணி வரை வேலை பார்கச்சொன்ன போது ஒருவர் வேலை பார்த்துவிட்டு ,6 மணியோடு அலுவலக நேரம் முடிந்தது, இதுவரை வேலை பார்த்ததற்கு ஓவர் டைம் சம்பளம் தரவேண்டும் என்றாராம்",. உண்மைதானே??

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
புதுகைத் தென்றல் said...
வேலை பார்ப்பதில் ஒரு லாஜிக் இருக்க வேண்டும்.
"காலைமுதல் மாலை varai வேலை பார்ப்பது போக அதிகாரி iravu 10 மணி வரை வேலை பார்கச்சொன்ன போது ஒருவர் வேலை பார்த்துவிட்டு ,6 மணியோடு அலுவலக நேரம் முடிந்தது, இதுவரை வேலை பார்த்ததற்கு ஓவர் டைம் சம்பளம் தரவேண்டும் என்றாராம்",. உண்மைதானே??

3 May, 2008 4:10 PM

==>
he he he.
I will write tomorrow

தென்றல்sankar said...

அட அத ஒன்னும் பன்ன முடியாதுங்க!நீங்க சொல்லுகிறவர் பரவாயில்லை வீட்டிற்கு தாமதமாதான் வருகிறார் சிலபேர் இரன்டு நாள் கழித்து வீட்டிற்கு வருபவர்கள் உண்டு.

pudugaithendral said...

ஹா ஹா ! காற்புள்ளி, முக்கார்புள்ளி எல்லாம் வெச்சு நீங்க கமெண்ட்

போட்டு ரொம்ப நாளாச்சேன்னு நினைச்சேன். வாங்க சாம்யன், வந்து

எழுதுங்க உங்க ஸ்டைல் கமெண்ட . :)))))

pudugaithendral said...

வாங்க தென்றல் சங்கர்,
அப்படிபட்டவங்களும் இருக்காங்க. அதனால் ஏற்படற விளைவுகள பத்தி
யோசிகனும்ல.