Saturday, May 10, 2008

கொசுவத்தி

நிஜமா நல்லவன் தன்னோட கொசுவத்தியை சுத்திட்டார். அதைப்
படிச்சதும் எனக்கும் ஃபீலிங்க்ஸ் ஜாஸ்தி ஆகிடுச்சு. (நீங்க இன்னும்
நிஜ்மா நல்லவன் கொசுவத்தியைப் படிக்கலைன்னா
http://nejamanallavan.blogspot.com/2008/05/blog-post_10.html

அழகன் படத்தில ஒரு வசனம் வரும். அந்தக் கண்ணாடிப் போட்ட
பையன்,"நாம் பேசாம வேற வீட்டிலயே பிறந்திருக்கலாம்",
அப்படின்னு அடிக்கடி சொல்வான். நான் அடிக்கடி நினைத்த
வசனம் அது.
அப்பா எதுக்கு திட்டுவாரு, எதுக்கு திட்டமாருன்னு
சத்தியமா புரிஞ்சுக்கவே முடியாது. ரொம்ப சின்ன வயசுல
வீட்டை விட்டுக் கிளம்பின அப்பாவை ரோட்டில்
கூப்பிட்டதற்காக திரும்பிவந்து கண்னத்தில் கொடுத அறையில்
3 கோடு விழுந்து கன்னம் வீங்கிபோச்சு.

கோபம் வந்தால் அமிலம் கக்கும் வார்த்தைகளால் திட்டு,
சீப்பை திரும்பி வைத்து உச்சி மண்டையில் அடி.
(தப்பே பண்ணாம அடிவாங்கறது கொடுமை.:( )
ஏண்டா இங்க புறந்தோம். நம்மள புண்ணாக்குக்கு
வாங்கிடாங்களானு தோணும். ஆனாலும் பெண்குழந்தைகளுக்கே
இருக்கும் அப்பா பாசம் எனக்கும் உண்டு.

அப்பா டூர் போனால் ஜுரம் கண்டிப்பாய் வரும்.
அப்பா ஊரில் இல்லாத நாட்களில் அப்பாவின்
லுங்கியை தலையணையில் வைத்துக்கொண்டுதான்
தூங்குவேன். (22 வயது வரை அப்படித்தான்)

திருமணம் முடிந்ததும் வித்தியாசமான அப்பாவைப்
பார்த்தேன். அடிக்கடி ஹைதராபாத் வந்துவிடுவார்.
காலையில் வந்துவிட்டு, சாயந்திரம் டிரையினில்
கிளம்பிவிடுவார். புதுகை-திருச்சி-சென்னை-ஹைதராபாத்
நெடுந்தூரப் பயணம். டிக்கெட் ரிசர்வ் செய்ய
நேரமில்லாமல் வந்து பார்த்துவிட்டு போனவரை
அதிசயமாக என்னக்கொடுமை இதுன்னு!!!
பார்த்தேன்.

பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு போனபோது ராஜ உபசாரம்.
நள்ளிரவில் பிரசவவேதனையில் மருத்துவமனையில்
நான் துடிப்பதைக் கண்டு தாங்கமுடியாமல் மருத்துவமனை
வாசலில் அழுதிருக்கிறார். அந்த நேரத்தில் வேறு ஒருவருக்கு
துணையாக வந்திருந்த அப்பாவுடன் வேலை செய்யும் நண்பர்,
ரமணிசார் கண்ணில் தண்ணீரா? என்று ஆச்சரியப்பட்டு
மறுநாள் என்னிடம் வந்து சொன்னார்.

பேரனைக்கூட கொஞசவில்லை வந்து,"அம்மாடி எப்படி
இருக்க", என்ற வார்த்தை என்னாச்சு இவருக்கு என்று
புருவம் உயர்த்தினேன். " இத்தனை நாள் எப்படி திட்டி.
அடித்து எல்லாம் செய்துவிட்டு இப்படி கண் கலங்குகிறானே
என்று பார்க்கிறாயா? பெண்குழந்தை. நாளை வேறு வீட்டுக்கு
போய்விடுவாய். நான் என் பாசத்தை வெளிக்காட்டினால்
அப்பா, அப்பா என்று அங்கு உன்னை அட்ஜஸ்ட் செய்து
கொள்ளமுடியாது போனால் கஷ்டம். அதான்", என்ற போது
அவரின் பாசம் புரிந்தது.

எம்டன் மகன் படம் பார்த்தபோது கூட ஆஹா பரத்தின்
கேரக்டர் நம்மளை மாதிரி இல்ல இருக்கு. திருமுருகன்
என்னைக் கதைக் கேட்கலையே என்று யோசித்தேன்.
சென்ற வருடம் இலங்கை வ்ந்திருந்த அப்பாவிற்கு
எம்டன் மகன் கேசட் போட்டு காட்டினேன். அவராகவே
"நாசர் கேரக்டர் கிட்டதட்ட என்னுடையது, பரத்தின்
கேரக்டர் உன்னுடையது. கடைசியில் சொல்லும்
வார்த்தைகள் நான் உனக்கு ",என்ற போது
அப்பா என்னைப் புரிந்துகொண்டுள்ளார் என்று
தெள்ளத்தெளிவாக புரிந்து நானும் அப்பாவின்
அன்பை கச்சிதமாக புரிந்துகொண்டேன்.

இதோ இந்தக் கட்டுரை எழுதும் இந்நேரம்
அப்பா என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.

ஐ லவ் யூ அப்பா.

21 comments:

ஆயில்யன் said...

ஏற்கனவே நி.நல்லவன் பதிவு காலையில படிச்சு ஒரே கண்ணீர்! இப்ப திரும்ப அப்பா பதிவு!

தனியா இருக்கற எங்கள ரொம்ப சோதிக்காதீங்க அக்கா:(

(நாங்க அழுதா அடங்க ரொம்ப நேரமாகும் தெரியுமாஆஆஆஆ)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

அப்பா கொசுவத்தி தொடரா ..

நிஜமா நல்லவன் said...

ஆஹா அப்பா வீட்டுக்கு வந்திருக்கிற நேரம் பார்த்து சரியாத்தான் கொசுவத்தி சுத்தி இருக்கீங்க. அன்பை வெளிப்படுத்துற விதத்தில வித்தியாசங்கள் இருந்தாலும் எல்லோருமே பாசக்காரங்க தான்.

நிஜமா நல்லவன் said...

உங்க பதிவுல எனக்கு ஒரு விளம்பரம் கிடைச்சிருக்கு. நன்றி.

ரசிகன் said...

//நிஜமா நல்லவன் தன்னோட கொசுவத்தியை சுத்திட்டார். அதைப்
படிச்சதும் எனக்கும் ஃபீலிங்க்ஸ் ஜாஸ்தி ஆகிடுச்சு. //

பத்த வைச்சுட்டியே பரட்டை:))))))

ரசிகன் said...

//அப்பா டூர் போனால் ஜுரம் கண்டிப்பாய் வரும்.
அப்பா ஊரில் இல்லாத நாட்களில் அப்பாவின்
லுங்கியை தலையணையில் வைத்துக்கொண்டுதான்
தூங்குவேன். (22 வயது வரை அப்படித்தான்)//

அண்ணி இதை விஜய் நடிச்ச ஏதோ ஒரு பாசமலர் படத்துல பாத்ததா ஞாபகம்:P

ரசிகன் said...

//நள்ளிரவில் பிரசவவேதனையில் மருத்துவமனையில்
நான் துடிப்பதைக் கண்டு தாங்கமுடியாமல் மருத்துவமனை
வாசலில் அழுதிருக்கிறார். அந்த நேரத்தில் வேறு ஒருவருக்கு
துணையாக வந்திருந்த அப்பாவுடன் வேலை செய்யும் நண்பர்,
ரமணிசார் கண்ணில் தண்ணீரா? என்று ஆச்சரியப்பட்டு
மறுநாள் என்னிடம் வந்து சொன்னார்.//

உண்மையிலேயே.. தாய்பாசம் மட்டுமல்ல.. மகளை புக்கம் அனுப்பிய தந்தையின்பாசமும் நெகிழ வைப்பது தான்.

ரசிகன் said...

//இதோ இந்தக் கட்டுரை எழுதும் இந்நேரம்
அப்பா என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.

ஐ லவ் யூ அப்பா.//

அப்பாவை விசாரிச்சதா சொல்லுங்க அண்ணி:)

Anonymous said...

ஆஹா, நேத்துதான் நான் ஒரு கொசுவத்தி பதிவு போட்டேன். இப்ப நீங்களுமா?? இது கொசுவத்தி வாரம் போல இருக்கு.

கோபிநாத் said...

யக்கா...ஒரே பீலிங்ஸ்..;(

எங்க அக்காவும் இப்படி தான் சொல்லிக்கிட்டு இருக்கா! ;)

எம்டன் மகன்...;)))...சேம் பிளட் ;))

\\இதோ இந்தக் கட்டுரை எழுதும் இந்நேரம்
அப்பா என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.\\

பதிவையும் பின்னூட்டத்தையும் அப்பாவுக்கு காட்டுங்க ;))

pudugaithendral said...

அழாதீங்க ஆயில்யன்.

ஒரு ஃபீலிங்கஸ் படிச்சவுடன் இன்னொரு ஃபீலிங்கஸ் பொங்கி வந்திடுச்சு.

pudugaithendral said...

வாங்க கயல்வழி,

அப்பா கொசுவத்தி தொடர் எல்லாம் இல்ல. அதுக்கு ஒரு தனி வலைப்பூவே ஆரம்பிக்க வேண்டும்.

அதனால் தான் சிம்பிளா "எம்டன் மகன்" படத்தை எடுத்துக்காட்டிடேன்.

:)))))

pudugaithendral said...

ஆஹா அப்பா வீட்டுக்கு வந்திருக்கிற நேரம் பார்த்து சரியாத்தான் கொசுவத்தி சுத்தி இருக்கீங்க. அன்பை வெளிப்படுத்துற விதத்தில வித்தியாசங்கள் இருந்தாலும் எல்லோருமே பாசக்காரங்க தான்.//

அவங்க அன்பைத் தான் காடறாங்கன்னு புரியாதவகையில் முரட்டுதனமா இருப்பது சில சமயங்களில் எதிரி மறையான விளைவுகளை உருவாக்கும்.

முக்கியமா ஆண்பிள்ளைகளிடம்.

pudugaithendral said...

சிலசமயம் என் வாழ்க்கையிலேர்ந்து பிட் பிட்டா எடுத்துதான் படத்துல காட்டுறாங்களோன்னு நினைப்பேன் ரசிகன்.

நான் ஒரு "எம்டன் மகள்". :)))))

pudugaithendral said...

விசாரிச்சதா சொல்லிப்புடுவோம்.

pudugaithendral said...

ஓஹோ நீங்களும் சுத்திட்டீங்களா!!!1

இருங்க வந்து படிக்கிறேன்.

pudugaithendral said...

வாங்க கோபிநாத்,

எல்லோரும் சேம் ப்ளட்தான் போலிருக்கு.

கண்டிப்பா அப்பாவுக்கு காட்டுவேன்.

மங்களூர் சிவா said...

ம்

நல்லா எழுதிருக்கீங்க!

ரமணி சாரை விசாரிச்சேன்னு சொல்லுங்க!

பாச மலர் / Paasa Malar said...

கொசுவத்தி சுத்தி என்னையும் கொஞ்சம் சுத்த வச்சுட்டீங்க..

pudugaithendral said...

ரமணிசாரை விசாரிச்சதா சொல்லிட்டேன்.

அவரும் தன் விசாரிப்புக்களைச் சொல்லச் சொன்னார் சிவா.

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

இது கொசுவத்தி வாரம்.....