Friday, May 09, 2008

பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னது மாதிரி - 3

பொதுவா வீட்டில் பெரியவங்க இருந்தாலே எதோ
"நொய் நொய்னு" சொல்லிகிட்டே இருப்பாங்க.
ஆனா அந்த "நொய் நொய்" நம்ம நல்லதுக்குதான்
சொல்றாங்கன்னு தெரியும்போது நாம் அவங்களை
விட்டு தூரம் போயிருப்போம்.

என் அம்மமாவும் எனக்கு தலை ஜடை பின்னூம்போது
(அப்ப நீ.....ளக் கூந்தல் இருந்தது. அதைச் சிக்கெடுத்து
பின்னுரதக்கு ரொம்ப நேரம் ஆகும். ) ஏதாவது
சொல்லிக்கிட்டே இருப்பாங்க. தலையைக் கோதி
என்ணெய் வைக்கும்போதே தூக்கம் வர்றமாதிரி
இருக்கும். இதுல பேசினாங்கன்னா காதிலை விழுமா!!!

ஆனாலும் அம்மம்மா சொல்லுவாங்க, "நான் இப்ப
சொல்றதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம், தனியா
இருக்கும்போது உன் காதில டேப்ரிக்கார்டரை
ரீவைன்ட் செஞ்ச மாதிரி இருக்கும்னு". அதென்னவோ
சத்தியமான வார்த்தை. இன்றும் என்னை வழிநடத்துவது
பெரியவங்க சொன்ன வார்த்தைகள் தான்.

சரி இன்றைய அலசல் என்னன்னு பார்ப்போம்.
"சாப்பிடும் நேரம் ரொம்ப கொடுமையா இருக்கும்.
சமைச்ச உணவுகளை தனியா வைக்கணும்,
சமைக்காத அதாவது நெய், ஊறுகாய், தயிர்,
எண்ணைய், பொடிவகைகளைத் தனியா வைக்கனும்.

சமைத்ததில் போட்ட கரண்டி சமைக்காத அயிட்டத்தில்
போடக்கூடாது, ரசக் கரண்டியை காயில் போடக்கூடாது..
சாப்பாடே வேண்டாம்ன்டா சாமின்னு இருக்கும்னு,"
என் தோழி புலம்புவா.

ஏன் இப்படி சொல்றாங்கன்னு அம்மம்மாவைக் கேட்ட
போது கிடைத்த விடை என்னை யோசிக்க வைத்து
பெரியவங்க சொன்ன இந்த விடயத்தில் நியாயம்
இருப்பதாக பட்டது. நானும் அந்த முறையப் பின் பற்ற
ஆரம்பித்தேன்.

ஊறுகாய், நெய், பொடி போன்றவற்றின் மேல் சமைத்த
உணவு (ஒரு சோற்றுப் பருக்கை போதுமாம்) விழுந்தால்
அவை கெட்டுப்போகும். (பாக்டீரியா) ரசத்தில் இருக்கும்
"பருப்புதண்ணி" காய் கெட்டுப்போக போதுமாம்.

இதனால்தான் சமைத்த உணவைத்தொட்ட கையால்
சமைக்காத பதார்த்தங்களை தொடவேக் கூடாது
என்றார்கள்.

19 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்ப வேற வழியே இல்லையா கேட்டுத்தான் ஆகனுமா.. :)

Anonymous said...

காயில நாம தேங்கா போடுவோம். அப்பறம் அதே கரண்டியை ரசத்தில போட்ட ரசம் கெட்டுப்போகும். எங்க வீட்டுல ரெண்டாவது நாள் ரசத்துக்குத்தான் அடிதடி. பழைய ரசம் தான் ருசி

pudugaithendral said...

வாங்க கயல்விழி,

பாட்டி சொல்லைத்தட்டாதே படம்
பாத்திருக்கீங்களா!!! மனோரமா ஆச்சி பாடுவாங்களே"பாட்டி சொல்லைத் தட்டாதே பாட்டு" சத்தியமான உண்மைங்க அந்த பாட்டு

pudugaithendral said...

வாங்க சின்ன அம்மிணி,

பழைய ரசத்துல முதல் நாள் இரவே சோற்றை ஊறப்போட்டு வெச்சிருப்பாங்க. ம்ம்ம்ம். சரி ருசி.

அதையும் அம்மம்மா கையில் உருண்டை உருட்டி போட்டா....
சொர்க்கம் தான்.

நிஜமா நல்லவன் said...

///பொதுவா வீட்டில் பெரியவங்க இருந்தாலே எதோ
"நொய் நொய்னு" சொல்லிகிட்டே இருப்பாங்க.
ஆனா அந்த "நொய் நொய்" நம்ம நல்லதுக்குதான்
சொல்றாங்கன்னு தெரியும்போது நாம் அவங்களை
விட்டு தூரம் போயிருப்போம்.///


சரியா சொல்லி இருக்கீங்க.

நிஜமா நல்லவன் said...

நல்ல விஷயங்கள் சொல்லிக்கிட்டே போறீங்க. நன்றி.

நிஜமா நல்லவன் said...

///கயல்விழி முத்துலெட்சுமி said...
அப்ப வேற வழியே இல்லையா கேட்டுத்தான் ஆகனுமா.. :)///



கயலக்கா இதென்ன கேள்வி? கேட்டுத்தான் ஆகணும்:)

நிஜமா நல்லவன் said...

///சின்ன அம்மிணி said...
எங்க வீட்டுல ரெண்டாவது நாள் ரசத்துக்குத்தான் அடிதடி. பழைய ரசம் தான் ருசி///


எங்க பார்த்தாலும் இதே கதை தான் நடக்குதா?

ரசிகன் said...

//சமைச்ச உணவுகளை தனியா வைக்கணும்,
சமைக்காத அதாவது நெய், ஊறுகாய், தயிர்,
எண்ணைய், பொடிவகைகளைத் தனியா வைக்கனும்.//

பள்ளிக்குழந்தைகளின் சாப்பாட்டுப் பையில் இடமில்லாததால் எல்லாவற்றையும் ஒன்னா வைக்க்கும் பெற்றோர்கள் கவனிக்கனும்.
நல்ல விபரங்கள். நன்றிகள் அண்ணி.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

நல்ல விடயங்களைப் பகிர்ந்துகொள்ளலாமேன்னு தான் இதைப் பத்தி எழுத ஆரம்பித்தேன்.

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

pudugaithendral said...

பள்ளிக்குழந்தைகளின் சாப்பாட்டுப் பையில் இடமில்லாததால் எல்லாவற்றையும் ஒன்னா வைக்க்கும் பெற்றோர்கள் கவனிக்கனும்.
//

அடக்கடவுளே இப்படியும் கூட செய்வாங்களா என்ன? கொடுமை.

நீங்க கொடுத்திருக்கும் தகவலுக்கும் நன்றி ரசிகன்.

புகழன் said...

பகிர்தலுக்கு நன்றி

pudugaithendral said...

தங்கள் வருகைக்கும் நன்றி புகழன்.

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு. மைண்ட்ல வெச்சிருக்கேன்


படிக்க சொல்றேன்!!

நெல்லை சிவா said...

இன்னைக்குத்தான் உங்க பதிவுக்கு வர்ரேன்..நிறைய தகவல் பரிமாறி இருக்கீங்க...தொடரட்டும் நல்முயற்சி..பிள்ளையார் படமும் அருமை.

pudugaithendral said...

//படிக்க சொல்றேன்!!//

யாரை படிக்கசொல்றீங்க !!!!!!!!

காத்துல வர்ற செய்தி உண்மைதானா???????

யாராவது இருக்கீங்களா? சிவா என்ன சொல்றாரு கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க

:)))))))))))))))))))

pudugaithendral said...

வாங்க நெல்லை சிவா,

முதல் வருகைக்கு நன்றி.

பிள்ளையார் படம் உங்களுக்கும் பிடிசிருப்பது மகிச்சி.

passerby said...

There is no question of nalla vishayam or ketta vishayam here. It is not a moral issue.

What he has reproduced here as hearsay from his elders, are practical procedures in preservation of food items at homes.

Food items like pickles and the like are to be preserved for months. Hence, they need to be taken care of in order to ensure that they dont get contaminated and their life shortened.

On the other hand, food items that are to be consumed immediately after they are cooked, need have no such delicate care.

The pickle should not be touched with hands, nor with the same laddle or spoon with which you have already touched another food item. Correct? There are such donts concerning other items also.

The points the blogger make are too well known; however, thanks for sharing a great secret, Mr PT.

passerby said...

'Paatti sollaith thattaathee' - one member recalls; and the blogger (PT) says, 'saththiyamaa unmainga'.

I dont share such optimism. Mr PT and Kayalvizhi will change his and her opinions on such received wisdom (?) if they see the Bharatiraaja films. In another film, 'Karuppasaamy Kiuththaigaithaarar". In many families, the paattis are the agent provacateurs. The family feuds etc. are not resolved by them; but instigated by them.

We are today what we are, thanks to the elders. It means, our both sides: good and bad. You are here highlighting only the positive side.

(Mr PT, this does not refer to your elders who appear to be wise folks.

My points are general.)