Monday, May 19, 2008

புதுகையில் நரசிம்ம ஜெயந்தி.

நரசிம்ம ஜெயந்தி என்றாலே புதுகை கீழ 3ஆம் வீதி பூஜ்யஸ்ரீ. கோபாலகிருஷ்ண பாகவதர்
அவர்களின் நினைவுதான் வரும். புதுகையே விழாக்கோலம் பூண்டிருக்கும்.



மேமாதம் 10 நாட்கள் நடக்கும். இந்த 10 நாட்களும் ஜாதிமத பேதமில்லாமல்
எல்லா மதத்தினரும் நன்கொடை கொடுக்க விழா சிறப்பாக நடக்கும்.
அத்துடன் பாகவதர் அவர்கள் அன்றாடம் உஞ்சவர்த்தி செல்வார்கள்.

பாகவதர் அவர்களை அன்புடன் அப்பா என்றே அழைப்பார்கள்.





வெளியூரிலிருந்து ஏராளமான மெய்யன்பர்கள் வருவார்கள். உஞ்சவர்த்தியில்
அரிசி, துவரம்பருப்பு போன்றவைகளை பொதுமக்கள் அளிப்பார்கள்.
அனைவருக்கும் ஜாதிமத பேதமின்றி அன்னதானம் 10 நாளும்
வழங்கப்படும்.

ஒவ்வொரு இரவும் திவ்யநாமம், டோலோத்சவம், பவ்வளிம்பு போன்ற
நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மாலை நேரங்களில் கர்நாடக இன்னிசை விருந்து, கதாகாலேட்சபம்,
எல்லாம் நடைபெறும். மாபெரும் கலைஞர்கள் எல்லாம் வந்து
பங்கு பெறுவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற பெரும் கலைஞ்ர்கள்
வருவார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெயர் பெற்றவர்கள்
பலர். குறிப்பாக குன்னக்குடி ஸ்ரீ. வைத்தியநாதன் அவர்கள்.


பாகவதர் மற்றும் அவரது உறவினர்கள் 10 நாளும் உப்பில்லாத
ஆகாரம் எடுத்துகொள்வர். ஸ்ரீ லஷ்மி நரசிம்ம கல்யாண உறசவத்
தன்று எல்லோருக்கும் அறுசுவை உணவு கொத்து அவர்கள்
சாப்பிட்ட இலையில் நேர்ந்து கொண்டவர்கள் உருளுவார்கள்.
அந்த எச்சில் இலையை தலையில் வைத்து வீதி உலா வந்து
பல்லவன் குளத்தில் குளிப்பார்கள். (இறைவன் வந்து
உணவு அருந்தி இருப்பார் என்பது ஐதீகம்.)


மறுநாள் பக்தோத்சவம். ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி.
அதற்கு மறுநாள் ஸ்ரீராம நாம அகண்டதாரா
பஜனை. அதற்கு பிறகு விடையாற்றி உற்சவம்.

இவ்வாறு மிகச்சிறப்பாக நடைபெற்ற உற்சவம்,
இன்று கால நிலைக்கு ஏற்ப சுருக்கமாக
நடைபெறுகிறது.






சொர்ணக்காடு ராமர் பற்றி படிக்க.

சம்ப்ராதாய பஜனை
சம்ப்ராதய பஜனை


காலத்தால் அழிக்க முடியாதது ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஜெயந்தி.



13 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

சின்ன வயதில் பல வருடங்கள் இந்த விழாவினை கண்டு களித்திருக்கிறேன்.
இதற்காகவே மதுரையிலிருந்து பெரியம்மா வீட்டுக்கு வருவோம். கொசுவத்திக்கு நன்றி...

சுரேகா.. said...

ஸாரி வேலைப்பளுவில் போட்டோ எடுக்க விட்டுட்டேன்.

:(

துளசி கோபால் said...

படங்கள் நல்லா இருக்கு.

pudugaithendral said...

வாங்க மதுரையம்பதி,

உங்களைப் போல் பலர் நரசிம்ம
ஜெயந்திக்கு எங்கள் ஊருக்கு வருவார்கள்.

மறக்க முடியாத நாட்கள் அவை.

pudugaithendral said...

வாங்க சுரேகா,

பரவாயில்லை. :)

எப்படியோ வலைத்தளத்தில் கிடைத்தது.

pudugaithendral said...

வாங்க துளசி அக்கா,

வருகைக்கு நன்றி

Unknown said...

dear thendral,

balaiah school il paditha poothu school mudinthu en nanbargaludan rani school arugil bagavathar veetil nadakkum antha programs paarthathu(1981-88) innum kannukkul ullathu.. jaathi,matha difference illaamal nadakkum endru neengal sonnathu namma vooril mattum thaan possible.

abdulla(mmabdu@yahoo.com)
chennai

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

நம்ம ஊரா? பாலையா ஸ்கூல்ல
படிச்சீங்களா? சூப்பர்.

நீங்க சொன்னது மாதிரி அது நம்ம ஊர்லதான் சாத்தியம்.

நம்ம ஊர் மண் அப்படி?

அக்ரஹாரம்னு பேரு அங்கே தான் ஆர்டிஸ்ட் ராஜா அவங்க வீடு.

அடிக்கடி வாங்க

புதுகை.அப்துல்லா said...

akkaa namma vooru artist raja thaan indru naam paarkum pala swami padangalukku vuruvam thanthavar...kurippaaga thirupathi vengadajalapathi padam...aamaam neenga ravi bagavathar miruthangam keettu irukkingala??

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

அக்கா சொன்னீங்களா ஆஹா சொன்னீங்களா? தெரியலை :))))

ஆமாம் அவர்தான் சூப்பர் ஆர்டிஸ்ட்.

ரவி பாகவதர் மிருதங்கம் வகுப்பு எடுப்பதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

நம்மூர் வயலினிஸ்ட் என் மாமாக்கள். முடிஞ்சா கண்டுபிடிங்க எங்க மாமாக்கள் யாருன்னு பார்ப்போம். :)))))

புதுகை.அப்துல்லா said...

elder sister...yaru ambigaprasad and jaishankar ra?? correct ta?
illaatti yarunnu solla veenaam...naa kandupudikkiren

pudugaithendral said...

வாழ்த்துக்கள் அப்துல்லா,

கண்டுபிடிச்சிட்டீங்களே!!!!

ஜெய்சங்கரும், அம்பிகா பிரசாத்தும் என் அம்மாவின் கசின் பிரதர்ஸ்.

புதுகை.அப்துல்லா said...

namma yaaru singamla(?)