Thursday, May 22, 2008

சம்மர் ஷ்பெஷல்


சரியா வெயில்காலத்துல இந்தியா போறியேன்னு கேட்ட
தோழிகள் எல்லாம் கூட பெருமூச்சு விட்ட அயிட்டம்
நுங்கு, சீசன் பழமான மாம்பழம்....

கோடைவெயில் கொளுத்தினாலும், இதெல்லாம்
நல்ல எஞ்சாய் செஞ்சுட்டோம்ல.. :)

இந்த அயிட்டங்களும் நல்லா இருக்கும்
முதலில் பார்க்கப்போவது "ஜால் ஜீரா"
இது பஞ்சாபி அயிட்டம். சும்மா சூப்பரா
இருக்கும். என்னிய மாதிரி நோகாம நோன்பு
கும்பிடறவங்களுக்கு இந்த ரெசிபி:)
ஒரு பாக்கெட் எவரெஸ்ட் ஜால் ஜீரா, பவுடர், 1 எலுமிச்சம்பழம்,
கொஞ்சம் உப்பு, ஜில்லுத்தண்ணி. காராபூந்தி (காரம் சேக்காமல்)

ஜில்லுத்தண்ணியில் 1 ஸ்பூன் ஜால் ஜீரா பவுடரைப்போட்டு
கலக்கி, உப்பு எலுமிச்சம் பழம் ஜூஸ் சேத்துக் கலக்கி, மேலே
பூந்தியை மிதக்க விட்டு குடிச்சா......
(செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க)

கொஞ்சம் மெனக்கெடலாம் அப்படின்னு நினைக்கறவங்களுக்கு:
1 கப் - கொத்துமல்லித் தழை
1/2 கப் - புதினா இலை.
1 ஸ்பூன் - ஆம்சூர் பவுடர் (காய்ந்த மாங்காய்த்தூள்)
காலா நமக் அல்லது கல் உப்பு கொஞ்சம்
எலுமிச்சை - 1 பழம் (எசன்ஸ்)
5 லிட்டர் தண்ணி,
காராபூந்தி - கொஞ்சம்.

புதினா, கொத்தமல்லியை மைய விழுதா அரைத்து
தண்ணீரில் கலக்கவும். அதில் ஆம்சூர் பவுடர்,
எலுமிச்சை ஜூஸ், உப்பு சேர்த்து கலக்கி
டம்பளரில் பூந்தியை மிதக்க விட்டு கொடுக்கவும்.
(சாப்பாட்டுக்கு முன்னாடி குடிங்க. நல்லா
பசியைக் கிளப்பிவிடும்)






அடுதது ஆம் கா பன்னா (aam ka panna)
இதைக் குடிச்சா சும்மா கூலாயிடும் உடம்பு.
இதுக்கு மட்டுமல்ல மேலும் பல சுவையான
ரெசிப்பிக்கு இங்க பாருங்க.


பாம்பேயில் இருந்த போது மாமா பழக்கப்படுத்திவிட்டது
இந்தக் காம்பினேஷன். ஒவ்வொரு மாம்பழ சீசனிலும்
எங்க வீட்டில் தவறாமல் செய்வோம்.
பூரி, ஆம் ரஸ். (aam ras)

பூரி செய்ய ரெசிபி கொடுக்கத் தேவையில்லை.
ஆம் ரஸ்:
500 கிராம் - மாம்பழ பல்ப்,
விரும்பினால் - 1 ஸ்பூன் சர்க்கரை.
கொஞ்சம் ஏலக்காய்த்தூள்.
1 ஸ்பூன் தண்ணீர்.

மாம்பழ பல்புடன், சர்க்கரை,ஏலத்தூள் தண்ணீர்
சேர்த்து மிக்ஸியில் அடித்து கொஞ்ச நேரம்
ஃபிர்ஜ்ஜில் வைத்து,பூரியுடன் சாப்பிட அருமையா
இருக்கும்.
சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.



பூரியோடு இன்னோரு ஜோடி ஸ்ரீகண்ட்.
இது குஜராத்தி டிஷ். பெரிய பெரிய டிபார்மெண்டல்
கடைகளில் அமுல் ஸ்ரீகண்ட் கிடைக்கும்.
வீட்டிலும் செய்யலாம்.
500 கிராம் தயிரை துணியில் கட்டி தொங்கவிடவேண்டும்.
நீர் இறங்கி சக்கை போல் இருக்கும். அதை சர்க்கரை,
ஏலம், சேர்த்து அடித்து, குங்குமப்பூ (விரும்பினால்)
சேர்த்து கலக்கி ஃப்ரிஜ்ஜில் வைத்தால் கொஞ்சம்
கெட்டியாகும். பூரி, சப்பாத்தியோடு சாப்பிடலாம்.

17 comments:

Anonymous said...

நல்ல நேரம் பாத்து போட்டீங்க போங்க, இங்க சரியான குளிர் இன்னிக்கு, ஹீம் (பெருமூச்சுதான்)

pudugaithendral said...

வாங்க சின்ன அம்மிணி,

இங்கையும் 2 நாளா மப்பா இருக்கு.

ஜில்லுத்தண்ணி, தவிர்த்தா எப்ப வேணாம் சாப்பிடலாம்.

சும்மா டேஸ்ட் செஞ்சு பாருங்களேன்.

நிஜமா நல்லவன் said...

படிச்சு பார்த்து பெரு மூச்சு விட்டுக்க வேண்டியது தான். வேற ஒண்ணும் செய்றதுக்கு இல்ல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தில்லியிலேயே ஒரே குளிர் தாங்க முடியல இந்த சம்மரில் .. அடிச்சு பெய்யர மழையும் அதுவுமா..

20 டிகிரியாம்..

இந்த ஸ்ரீகண்ட் இருக்கே அதை சின்னபையனை குழந்தை உண்டாகி இருக்க்கும் போது அனீமிக் ரொம்பன்னு ( மத்த நேரமெல்லாம் என்ன நல்லாவா இருக்கேன்) சாப்பிட்டுப்பாத்தேன்.. அது நல்லதாமேன்னு ஆனா கஷ்டமாத்தான் இருந்தது.. நல்லதெல்லாம் ஆகாதே :))

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

வருகைக்கு நன்றி. :)

pudugaithendral said...

மத்த நேரமெல்லாம் என்ன நல்லாவா இருக்கேன்) சாப்பிட்டுப்பாத்தேன்.. அது நல்லதாமேன்னு ஆனா கஷ்டமாத்தான் இருந்தது.. நல்லதெல்லாம் ஆகாதே :))//

வாங்க கயல்விழி,
நல்லா சொல்லியிருக்கீங்க. :)

அனிமிக்கா இருந்தா நல்லா பாலக்கும், கோங்கூராவையும் சாப்பிடுங்க.

கானா பிரபா said...

சம்மர் ஸ்பெஷல் கலக்கல், ஆனா சின்ன அம்மணி சொன்னது மாதிரி நான் வாழும் நாட்டில் செம குளிர்

pudugaithendral said...

மிஸ் பண்ணீட்டீங்க ப்ரபா

மங்களூர் சிவா said...

/
நிஜமா நல்லவன் said...

படிச்சு பார்த்து பெரு மூச்சு விட்டுக்க வேண்டியது தான். வேற ஒண்ணும் செய்றதுக்கு இல்ல.

/

ரிப்பீட்டேய்

வல்லிசிம்ஹன் said...

ஜில்லுத் தண்ணி தாம்மா நமக்கு ஒத்துக்கலை.
மத்தபடி செமை ருசியா இருக்கும் போலத் தெரியுது.செய்துட்டு சொல்லறேன்.நன்றிப்பா.

இறக்குவானை நிர்ஷன் said...

சம்மர் ஸ்பெஷல்- கேக்குறதுக்கும் பாக்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கு!!!

ஆனால்...

pudugaithendral said...

வாங்க சிவா,

என்ன? உங்களை இப்பவெல்லாம் அடிக்கடி பாக்க முடியிறது இல்லை?!!!!

முன்னாடி எல்லாம் மீ த ஃபர்ஸ்டுன்னு வருவீங்க..


:))))))))))))))))))))))))))

pudugaithendral said...

வாங்க வல்லி சிம்ஹன்,

ஜில்லுத்தண்ணின்னு சொன்னாலே எனக்கும் ஆவாது. அதனால நானும் அதைத் தவரித்துடுவேன். கண்டிப்பா ருசியா இருக்கும்.

சீக்கிரம் செஞ்சு பாருங்க.

pudugaithendral said...

சம்மர் ஸ்பெஷல்- கேக்குறதுக்கும் பாக்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கு!!!

ஆனால்...//

அடுத்த ஃபிளைட்டுல வாங்க நிர்ஷான்.

நான் செஞ்சுத் தர்றேன்.

:)))))))))))))))

இறக்குவானை நிர்ஷன் said...

//புதுகைத் தென்றல் said...
சம்மர் ஸ்பெஷல்- கேக்குறதுக்கும் பாக்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கு!!!

ஆனால்...//

அடுத்த ஃபிளைட்டுல வாங்க நிர்ஷான்.

நான் செஞ்சுத் தர்றேன்.

:)))))))))))))))
//

ஓ.. நிச்சயமாக!

Uma said...

அப்படியே அவள் விகடன் 30 நாட்களில் 30 பாணங்கள் மாதிரி கலக்கீட்டீங்க‌

pudugaithendral said...

வாங்க உமா குமார்,

தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

எனது பதிவு தங்களுக்கு பிடித்திருந்து
மகிழ்ச்சி.