Wednesday, May 21, 2008

Angeethi - பஞ்சாபி விருந்து.

ஒரு இடத்துக்கு போயிட்டுவந்தா அதப்பத்தி எல்லோருக்கும்
சொல்லிப்புடணும். முக்கியமா ஹோட்டல். அப்பத்தான்
ரசிகன், மங்களூர் சிவா எல்லோரும் வந்து காதுல புகை
விடுவாங்க. ஏதோ நம்மால ஆனது. :)

சரி எங்கபோனேன்னு சொல்றேன். ஒரு சாயங்கால நேரம்
பசங்க எங்கயாவது போகமாலாம்ப்பான்னு கேட்க
கிளம்புங்கன்னு அயித்தான் கூட்டிக்கிட்டு போனது
பஞ்சாராஹில்ஸ்.

அந்தக் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் நுழைந்த எனக்கு
ஒரு ஷாக். இது என்ன "தாபா" (DABBA)
மாதிரி இருக்குன்னு. அது "தாபா"தான்னு அயித்தான்
கன்ஃபார்ம் செஞ்சாரு.அப்படியே தாபா எஃபக்ட். பஞ்சாபி ஷ்பெஷல் உணவு.
ரேட்டு கொஞ்சம் ஜாஸ்திதான். இருக்குற இடம் அப்படி. :)
(பஞ்சாரஹில்ஸ், ஜுப்ளிஹில்ஸ் எல்லாம் ரொம்ப பெரிய
இடம்.)


மெனுகார்ட் கேட்டா நியூஸ் பேப்பர் கொண்டுவந்து
கொடுத்தாங்க. "என்ன கொடுமை"ன்னு பாத்தா
மெனுகார்ட் நியூஸ் பேப்பர் மாதிரி போட்டிருக்காங்க.
வெஜ், நான் வெஜ் இரண்டும் கிடைக்கும்.

சரி இப்ப ஒரு ஜோக் சொல்லட்டுமா?

பஞ்சாபில் வாஷிங்மெஷின் விக்கிற பன்னாட்டு
நிறுவனம் விற்பனை கன்னா பின்னான்னு எகிறி
இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போனாங்களாம்!
அதை வாங்கினவங்க எல்லோரும் "தாபா" உரிமையாளர்கள்
என்பதை கண்டுபிடிச்சாங்க. மேலும் ஆச்சரியம் ஆச்சு.
அவங்க எதுக்கு உபயோகிச்சிருக்காங்கன்னு கண்டுபிடிச்சப்ப
ஷாக் ஆகிட்டாங்க.:)

"லஸ்ஸி" தயாரிக்க வாஷிங் மெஷினை உபயோகப்படுத்தியிருக்காங்க.
கம்பெனி காரங்க அதிக ஷாக் ஆனது தாபா
உரிமையாளர்கள் வாஷிங்மெஷினின் டிரைன் பைப்பை
லஸ்ஸி ஊத்த பயன் படுத்தினதை தெரிஞ்சிக்கிட்ட போதாம்.

(உபயம்: அங்கித்தி மெனுகார்ட்)

பஞ்சாபை பத்தின சிறு தகவல்:

இந்தியாவிலேயே கோதுமை அதிகம் உற்பத்தி ஆவது இங்குதான்.
Per capita income (சராசரி மனிதனின் வருமானம்)
இங்குதான் அதிகம்.


சர்தார்ஜி ஜோக் ஒன்று:

ஒருநாள் சன்டா பன்டாவை முட்டாள் ஆக்க விரும்பினார்.
50ஆவது மாடியில் இருக்கும் தன் வீட்டிற்கு அழைக்கிறார்.
அழைப்பை ஏற்று வந்த பன்டா கட்டிடத்திற்கு
வந்த பிறகு தான் லிஃப்ட் இல்லை என்பதை அறிகிறார்.
கஷ்டப்பட்டு படிகளில் ஏறி வந்தால்," ஹே! ஹே! ஹே!
உன்னை முட்டாள் ஆக்கிட்டேனே!!!" என்று எழுதிய
வாசகத்தையும், மூடியிருந்த வீட்டையும் பார்க்க நேர்கிறது.
ஆஹா! அப்படியா என்று கோதாவில் இறங்கிய நம்மாளு
பன்டா "ஹே!ஹே!ஹே!, நான் தான் இங்கே வரவே
இல்லையே- பன்டா" அப்படின்னு எழுதி வைச்சுட்டு
போயிடறாரு. :))))))

இதெல்லாமும் அங்கித்தி மெனுகார்டில் இருந்து சுட்டதுதான். :)
ஹோட்டலுக்குள்ள எப்படி இருக்கு பாத்தீங்களா?!!!!!!!


அருமையான சாப்பாட்டுக்கு அப்புறம் ஒரு சூப்பர் "மீடா பான்"
ம்..ம்...ம்..

போயிட்டு வந்த இடத்து அட்ரஸ் மத்த டீடைல்ஸ் கொடுக்காட்டி
சாமி குத்தமாயிடும்.

ANGEETHI,
701,703, 7TH FLOOR, RELIANCE CLASSIC,
ROAD NO.1, BANJARA HILLS,
HYDERABAD - 34
PHONE: 0091 40 6625550.

www.bjnhotels.com

34 comments:

மதுரையம்பதி said...

adutha murai varupothu kavanikaren... :)

நிஜமா நல்லவன் said...

ம்ம்ம்ம்ம்.....

மங்களூர் சிவா said...

/
"லஸ்ஸி" தயாரிக்க வாஷிங் மெஷினை உபயோகப்படுத்தியிருக்காங்க.
/

சர்ஃப் யூஸ் பண்றாங்களா!? இல்லை ஏரியலா!?!?

சொல்லவே இல்லையே பதிவுல :(

மங்களூர் சிவா said...

/
அப்பத்தான்
மங்களூர் சிவா எல்லோரும் வந்து காதுல புகை
விடுவாங்க. ஏதோ நம்மால ஆனது. :)
/

நாங்கதான் ஜெயந்தி கல்யாண ரிசப்சன்ல செம கட்டு கட்டிட்டு அந்த மப்பே இன்னும் தெளியாம இல்ல இருக்கோம்

அதனால no புகை !!!

(எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு :(( )

மங்களூர் சிவா said...

/
"லஸ்ஸி" தயாரிக்க வாஷிங் மெஷினை உபயோகப்படுத்தியிருக்காங்க.
/

Front Loading-ஆ இல்ல Top Loading-ஆ ????

பதிவு வெவரமா போட வேணாமா!?!?!?

:))))))))))))))

மங்களூர் சிவா said...

/
போயிட்டு வந்த இடத்து அட்ரஸ் மத்த டீடைல்ஸ் கொடுக்காட்டி
சாமி குத்தமாயிடும்.

ANGEETHI,
701,703, 7TH FLOOR, RELIANCE CLASSIC,
ROAD NO.1, BANJARA HILLS,
HYDERABAD - 34
PHONE: 0091 40 6625550.
/

ப்ளைட் டிக்கெட் எப்ப அனுப்ப போறீங்க சும்மா அட்ரஸ் மட்டும் அனுப்பிருக்கீங்க!?!?!?

இராம்/Raam said...

பெங்களூரூலேயும் இந்த ஹோட்டல் இருக்கு.... :)

புதுகைத் தென்றல் said...

வாங்க மதுரையம்பதி,

போயிட்டு வந்து சொல்லுங்க.

டோண்ட் மிஸ் இட் :))))

புதுகைத் தென்றல் said...

வாங்க நிஜமா நல்லவன்,

வருகைக்கும் ம்ம்ம் கும் நன்றி

புதுகைத் தென்றல் said...

லஸ்ஸி தயாரிக்க வாஷிங் மெஷினை உபயோகிச்சாங்கன்னு சொன்னா
அதுல சர்ஃப் எதுக்கு போடப்போறாங்க சிவா?

லஸ்ஸி தயாரிக்க தயிர், சர்க்கரைதான் தேவை. தயிரை அடிக்க வாஷிங் மெஷினை உபயோகிச்சு,

அதை டிரைன் ட்யூப் ஆல எடுத்தாங்க

புதுகைத் தென்றல் said...

கடவுளே! சிவா நல்லாத்தானே இருந்தாரு, இப்படி உப்பு, புளி போட்டு விளக்கறமாதிரி ஏன் ஆயிட்டாரு??????
(சின்ன விசயத்தைக்கூட விளக்கி விவரம சொல்லவேண்டியாதா பூட்சே!!)

:))))))))))))))))))))))

புதுகைத் தென்றல் said...

சிவா,

இனிமே ஹைதராபாத் வர்றவங்க டிரையினில் தான் வருவாங்க.

ஷம்சாபாத் விமான நிலையத்திலேர்ந்து சிட்டிக்கு வர்ற காசுக்கு டிரையினில் அழகுபோல தூங்கி நிம்மதியா வரலாம்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ராம்,

ஆமாம் அங்கையும் இருக்கு. லண்டனிலும் சீக்கிரம் ஒரு பிரான்ச் துவங்கப்போறாங்களாம்.

பாச மலர் said...

நல்ல டிப்ஸ்..ஊரைப் பத்தி நிறையப் பதிவுகள் எழுதுங்க..

ambi said...

As said my Royal Raam, பெங்களூர்லயும் மியூசியம் ரோடுல இருக்கு. 4 வது மாடினு நினைக்கறேன்.
பபே மீல்ஸ் சூப்பரா இருக்கும்.
1)பித்தளை டம்ளர் வைப்பாங்க.
2)அங்கங்க லாந்தர் விளக்கு தொங்கும்.
3)நட்ட நடுவுல ஒரு கிண்று செட்டப் இருக்கும்.
4)மேலும் 80களில் வந்த ஹிந்தி பட போஸ்டர் ஒட்டி இருக்கும்.
5) அதே வருட பாடல்கள் தான் போடுவாங்க.

மதுரையம்பதி அண்ணா, நான் வேணா உங்களை கூட்டிட்டு போகவா? பில்லை மட்டும் நீங்க பாத்துகங்க என்ன? :p

ambi said...

இது மங்களூர் சிவாவுக்கு,

டாப் டக்கர் பஞ்சாபி பிகர்கள் எல்லாம் இங்க தான் வரும்.

இப்ப சொல்லுப்பா, புகையுதா? இல்ல எரியுதா? :p

@புதுகை, இப்படி விவரமா சொல்லனும் நம்ம சிவாவுக்கு. :))

துளசி கோபால் said...

ஜமாய் ராணி ஜமாய்.

நானும் ஞாயித்துக்கிழமை ஒரு 'தாய் ரெஸ்ட்டாரண்ட். பேர் பெஞ்ஜோராங்' போய்வந்தேன்.

ஃப்ரைட் ரைஸ் சகிக்கலை. மொசமான் கறின்னு ஒன்னு வந்துச்சு.

மகள், அப்பா, மருமகன் எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

முஸல்மான் கறின்னு நினைக்குறேன்.

இடத்தோட அலங்காரம் பிரமாதம். யானையோ யானைகள். கொடுத்த காசுக்கு யானைக்குச் சரியாப் போச்சு:-))))

இறக்குவானை நிர்ஷன் said...

//அப்பத்தான்
ரசிகன், மங்களூர் சிவா எல்லோரும் வந்து காதுல புகை
விடுவாங்க.//

அப்படி தெரியலையே??

புதுகைத் தென்றல் said...

வாங்க பாசமலர்,

எழுதிடுவோம்.

புதுகைத் தென்றல் said...

வாங்க அம்பி,

சரியா சொன்னீங்க. பாக்க நல்ல இருக்கும்

புதுகைத் தென்றல் said...

@புதுகை, இப்படி விவரமா சொல்லனும் நம்ம சிவாவுக்கு. :))


ஹா ஹா

அதெல்லாம் நான் எப்படி சொல்ல முடியும் அம்பி :)))))

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி அக்கா,

இடத்தோட அலங்காரம் பிரமாதம். யானையோ யானைகள். கொடுத்த காசுக்கு யானைக்குச் சரியாப் போச்சு:-))))


இது பன்ச். உங்களுக்கும் யானைக்கும் ராசி போல இருக்கு.

புதுகைத் தென்றல் said...

நிர்ஷான் சிவா சமாளிச்சு பின்னூட்டம் போட்டிருக்கதை படிங்க :))))

மங்களூர் சிவா said...

/
ambi said...
இது மங்களூர் சிவாவுக்கு,

டாப் டக்கர் பஞ்சாபி பிகர்கள் எல்லாம் இங்க தான் வரும்.

இப்ப சொல்லுப்பா, புகையுதா? இல்ல எரியுதா? :p
/

அம்பி புகை மட்டும் இல்லய்யா தீஞ்சு கரிஞ்ச வாசனையே வருது.

சீக்கிரம் ஒரு பெங்களூர் ட்ரிப் அடிக்கணும்!!

மங்களூர் சிவா said...

/
ambi said...

@புதுகை, இப்படி விவரமா சொல்லனும் நம்ம சிவாவுக்கு. :))
/

வேணாம்

வலிக்குது


அழுதுடுவேன்......
அழுதுடுவேன்

புதுகைத் தென்றல் said...

சிவா பெங்களூர் மாத்திரம் இல்ல
ஹைதராபாத்துக்கும் வரலாம் :))))

நெல்லை கண்ணன் said...
This comment has been removed by a blog administrator.
புகழன் said...

அங்க போய் என்ன சாப்பிட்டீங்கன்னு எழுதவே இல்லையே?

ஏன்னா எங்க நண்பர் ஒருவர் அவங்க குடும்பத்தை இந்த மாதிரி வித்தியாசமான இடத்துக்கு கூட்டிட்டுப் போனார்
அங்க போயும் அவங்க கேட்டது என்ன தெரியுமா?
“இட்லி கிடைக்குமா?”

புதுகைத் தென்றல் said...
This comment has been removed by the author.
புதுகைத் தென்றல் said...

வாங்க புகழன்,

அப்படியும் சிலபேரு இருக்காங்க தான்.

நண்பர் ஒருவர் தனது குடும்பத்தை இலங்கையைச் சுற்றிப்பார்க்க அழைந்து வந்தபோது. நாங்கள் சென்ற எந்த ஹோட்டலிலும் அவரது பிள்ளைகள் மற்றும் மனைவிக்கு உணவு பிடிக்கவே இல்லை. உண்ணவே இல்லை என்றே சொல்லலாம்.

கொழும்பு வந்ததும் இந்திய ரெஸ்டாரண்ட் அழைத்து சென்றதும் முதலில் ஆர்டர் "இட்லி"யை ஆர்டர் செய்து அதைத்தான் வாயில் போட்டார்கள்.

:)))))))))))))))))

சுரேகா.. said...

நன்றிங்க!

நல்லா சாப்பிட்டுட்டு...படமும் போட்டுப்புட்டு!..


(ஏதோ தீயுற வாசனை வரலை?)

ஹும்.

படங்கள் சூப்பர்!

புதுகைத் தென்றல் said...

வாங்க சுரேகா,

தீயுற வாசனை வருது. :)))

அதுக்குத்தானே பதிவு போடறாது.

:))))))))))))))))))))))))))))

Vetrimagal said...

அப்பாடா! Hyderabad அங்கீதி பற்றி ஒரு பதிவு பார்த்தால் மகிழ்ச்சீஈஈஈஈஈஈஈ!

நன்றி.

Anand said...

நீங்க சொன்ன லக்சி விஷயம் புதுசா இருக்கு . ரெண்டு வருஷமா அங்கீதி'கு போயும் இந்த விஷயத்த மெனு card'ல Observe பண்ணல. ஆனா விலை ஒன்னும் அதிகம் இல்லை.