Monday, June 02, 2008

தேநீர் மகத்துவம்.....

சேவல் கூவி பொழுது விடிகிறதோ இல்லையோ, டீக்கடை ரேடியோ சத்தம் கேட்டுத்தான் பாதிப் பேருக்கு பொழுதே விடியும். அதிகாலையில் டீ குடித்த பின் தான் நாள் துவங்கியது போலிருக்கும். காபியை விட டீ உடம்புக்கு நல்லது. ஆனால் நாம் குடிக்கும் பால் டீ அல்ல. தேன் கலரில் அப்படியே பிளாக் டீ போட்டு குடிச்சா நல்லது. சர்க்கரைக்கு பதில் தேன்,கருப்பட்டி சேக்கலாம். ஆனா சர்க்கரையே போடாமல் குடிப்பது இன்னும் நல்லது.




ஆஹா! டீயைப் பாத்ததுமே குடிக்கணும்னு தோணுது இல்ல.......

Get this widget | Track details | eSnips Social DNA


சாய் அதாவது டீ பத்தி மெகாஸ்டார் சிரஞ்சீவி பாடின இந்த
தெலுங்கு பாட்டைக் கேளுங்க.

(விளக்கம்/ தெளிவுரை தனி பதிவா போடறேன்.):)))))))))))

கொதிக்கற தண்ணியில டீத்தூளைப் போட்டு, பால் சர்க்கரை சேர்த்து வடிகட்டி குடிச்சா போதும்னா உங்களுக்கு டீ குடிக்கத் தெரியலைன்னு அர்த்தம்.


வகை வகையா டீ குடிக்கலாம் வாங்க:

1. பிளாக் டீ: இதுக்கு டீத்தூளை போடறதை விட டிப் டீ பேக் களை தண்ணீரைச் சூடாக்கி போட்டு குடிச்சுப் பாருங்க.


2. லெமன் டீ : பிளாக் டீயில் எலுமிச்சம் ஜூஸ் கொஞ்சம் பிழிஞ்சா அதான் லெமன் டீ.


3.துளசி டீ: டீத்தூள் கொதிக்கும் போது அதில் கொஞ்சம் துளசி இலைகளைச் சேர்த்தா சளி, இருமலுக்கு நல்லது.


4. இஞ்சி டீ. தண்ணீரில் இஞ்சியை நசுக்கிப்போட்டு அது கொஞ்சம் கொத்தித்ததும், டீத்தூளைப் போட்டு குடிக்கலாம். இஞ்சியோடு கொஞ்சம் ஏலக்காய் சேர்த்து நசுக்கி சேர்க்கலாம்.



5. மசாலா டீ : வீட்டிலேயே செய்யலாம் டீ மசாலா. சுக்கு, மிளகு, லவங்கப்பட்டை, லவங்கம், ஏலக்காய், எல்லாம் வகைக்கு 50 கிராம், ஜாதிக்காய் - 1 எல்லாத்தையும் 1 நிமிடம் அவன்ல வெச்சு சூடாக்கியோ அல்லது வாணலியில் ஸ்லைட்டா வறுத்தோ பொடி செஞ்சு
வெச்சுகிட்டா, டீ தயாரிக்கும்போது சேர்த்துக்கலாம். இப்ப மசாலா டீ ரெடி.


இது எல்லாத்தையும் விட ரொம்ப நல்லது இந்த கீரீன் டீ.




சீன மக்களின் பாரம்பரியம் இந்த டீ. Camellia Sinensis எனப்படும்
செடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது இந்த டீ. சீனா, ஜப்பான்
காரங்க தண்ணீருக்கு பதில் இந்த டீயைத்தான் குடிக்கிறாங்களாம்.

சரி இதனால என்ன பலன்?
அழகும், இளமையும் வேணும்னா இதைத்தான் சிறந்ததா
சொல்றாங்க. கீரீன் டீ குடிப்பதால் உடம்பில்
கொழுப்பு குறைந்து ஸ்லிம் ப்யூட்டியா இருக்கலாம்.

இந்த டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்டு கீரீன் டீயை
மருத்துவக் குணமுள்ளதா மாத்தி நம்ம உடல் நலத்திற்கு
பல விதத்துலையும் உதவுதாம்.

கீரீன் டீயும் பால் சர்க்கரை சேர்க்காமல்
அருந்த வேண்டும்.

இதைக் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
உடல்பருமன், மூட்டுவலி, கேன்சர், நீரிழிவு நோய்
இவற்றிலுருந்து தப்பிக்கணும்னா இந்த டீயை
குடிக்க ஆரம்பிங்க.

தேநீர் அருந்துவோம், ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

32 comments:

மங்களூர் சிவா said...

ம் நல்ல பதிவு.

மங்களூர் சிவா said...

/
துளசி டீ
/

நான்கூட இது துளசி ரீச்சர் போடற 'டீ'யோன்னு நினைச்சேன்
:)

மங்களூர் சிவா said...

வடிவேலு ஒரு படத்துல ஒட்டகப்பால் டீ பத்தி சொல்லுவாரே அதைபத்தி நீங்க எதும் சொல்லலையே !?!?!

மங்களூர் சிவா said...

மீ த பர்ஸ்ட்ட்டா!?!?!!?

மங்களூர் சிவா said...

அட ரெண்டாவதூ , மூனாவது கூட நாந்தான்!!!!

Athisha said...

ஏனுங்க அந்த நாயர் கட டீய விட்டு''டீ'' ங்களே

புதுகை.அப்துல்லா said...

அககா உங்க பதிவு எனக்கு நம்ப ஊர் நாணாஸ் காபிய நினைவூட்டூகிறது.

pudugaithendral said...

வாங்க சிவா,

வாழ்த்துக்கு நன்றி.

ஒட்டகப்பால் டீ எனக்குத்தெரியாது.

pudugaithendral said...

தெரிஞ்சதைப் பதிவா போட்டாலே
பிரச்சனை ஆவுது.

தெரியாதைச் சொல்லி மாட்டிக்கவா!!!!!

pudugaithendral said...

நாயர் கட டீ பத்தி போட்டிருக்கணும்.

டீ அப்படின்னாலே அவங்கதானே ஞாபகத்துக்கு வருவாங்க.

சந்திரமண்டலத்துக்கு போனாலும் சார் சாயா அப்படின்னு கேக்க ஒரு மல்லு இருப்பாருன்னு ஜோக் படிச்சிருக்கேன்.

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

நாணாஸ் டீ மறக்க முடியாது.

சுப்பராமய்யர் பள்ளியில் வேணுசார்னு
ஒருத்தர் வேலை பாத்துகிட்டு இருந்தார்.

சாயந்திரம் 4 மணிக்கு அவருக்கு அங்கேயிருந்து தான் டீ கொண்டு வருவாங்க.

குசும்பன் said...

இந்த சாயா பிடிக்காக்காடுது

சாயாவோட சிங் சேர்த்தா வருமே சாயா சிங் அது அவுங்களை பிடிக்கும்.:)))

pudugaithendral said...

சாயாவோட சிங் சேர்த்தா வருமே சாயா சிங் அது அவுங்களை பிடிக்கும்.:)))//

இது உங்க தங்கமணிக்கு தெரியுமா
குசும்பன்? :)))))))))))))))))))))))))))))))

puduvaisiva said...

வடிவேலு ஒரு படத்துல ஒட்டகப்பால் டீ பத்தி சொல்லுவாரே அதைபத்தி நீங்க எதும் சொல்லலையே !?!?!


ஸ்ஸ்ஸ்ஸ்........ இப்பவே
கண்ணகட்டுதே\\

புதுவை சிவா.

pudugaithendral said...

வாங்க புதுவை சிவா,

தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

டீ பத்தின பதிவுக்கு கமெண்டைக் கானோம் ஒட்டகப்பால் டீயைப் பத்தியே எல்லோரும் பேசறாங்களே!!!

:)))))))))))))))))))

pudugaithendral said...

ம்ம்ம்ம்ம்ம்ம்முடியல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல

passerby said...

The first photo was mouth-watering. But the second is misleading.

It appears that there is a cockroach in the cup. When the photo is to describe a chinese custom of tea drinking, I almost thought they drop a cockroach in the tea decoction and drink it.

Wherefrom do you get such bizarre photos that frighten me!

You appear to be a sophisticated guy to whom it is news that in TN people drink tea and coffee without white sugar. It is not news to me!

Down south, in Tuti-Tirnel-KK districts, people generally boil water, with palmyra jaggery (karuppukkaatti, pronounced as karuppatti) and when it boils, they add one and a half teaspoon of coffee powder or a sachet of tea powder and, after a few seconds, take the pot off from the oven.

Some add a two teaspoon of milk on the 'coffee' only after it is taken out from the oven!

No hospitality is complete unless the guest is greeted with a tumbler or glass of such karuppatti kaapi.

It is not black kaapi. It is the blackest kaapi.

This is called karuppatti kaapi.

It is rejuenating; it is also, as you have correctly observed, healthy.

pudugaithendral said...

It appears that there is a cockroach in the cup. When the photo is to describe a chinese custom of tea drinking, I almost thought they drop a cockroach in the tea decoction and drink it.

Wherefrom do you get such bizarre photos that frighten me!//

ஐயோ! அது கரப்பான் பூச்சி இல்லீங்க.

டீ பேக். :))))))))))))

கூகுள் மாமா இருக்க கவலை ஏன்?
போட்டோ அங்க சுட்டதுதான்.

pudugaithendral said...

You appear to be a sophisticated guy to whom it is news that in TN people drink tea and coffee without white sugar. It is not news to me!

Down south, in Tuti-Tirnel-KK districts, people generally boil water, with palmyra jaggery (karuppukkaatti, pronounced as karuppatti) and when it boils, they add one and a half teaspoon of coffee powder or a sachet of tea powder and, after a few seconds, take the pot off from the oven.//

இது எனக்கு நீயூஸ் இல்லீங்கோ. நானும் தென்தமிழ் நாட்டைச் சேர்ந்தவள். புதுக்கோட்டை.


எங்க ஊர் பக்கம் வரக்காப்பின்னு சொல்வாங்க. கருப்பட்டி இல்லாட்டி பனைவெல்லம் வெச்சு நானும் குடிச்சிருக்கேன்.

pudugaithendral said...

கரிக்குலம் சார்,

அது உடம்புக்கு நல்லது என்பது
இலங்கை போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது.

இப்ப ரொம்ப விரும்பிச்சாப்பிடறது
பிளாக் டீ தான்.

cheena (சீனா) said...

புகைப்படம் அருமை புதுகைத் தென்றல் - பாத்த உடனேயே குடிக்கணும்னு தோணுது - எல்லா டீயும் நல்ல டீயே - டீத்தூளால் போடுன் வரையில்

நிஜமா நல்லவன் said...

நான் இங்க தினமும் குடிக்கிறது கிரீன் டீ தான். சில நேரங்களில் ப்ளாக் டீ. பதிவு சூப்பர்.

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

அப்படியே ஃபாலோ பண்ணூங்க

ரசிகன் said...

கிரின் டீயில் ஆன்டிஆக்சிடண்ட்கள் நிறைந்திருப்பதாய் நானும் படிச்சிருக்கேன். படங்கள் சூப்பர் அண்ணி:)

passerby said...

Should lemon juice be added while the tea is boiling?

I think not. Your receipe is misleading. As I understand, the juice should be added only after the pot is taken off from the oven. On the contrary, if you add lemon in the boiling water and allow it boil further, the tea will taste bitter.

I attend official tea parties, off and on, where when we extend the cup, the man pours the tea decoction first and ask us whether we desire to drink it as black tea. If we say, No, add milk. He adds till we say stop.

If we ask for lemon tea, the man extends the black tea first, takes a quarter of a cut-lemon, and squeezes it so as to allow only a few drops of juice to fall in; and then, stirs it. It tastes good. Healthy, too.

Please recheck.

pudugaithendral said...

vaanga rasigan,

varugaikku nandri. Tea kudinga.

pudugaithendral said...

If we ask for lemon tea, the man extends the black tea first, takes a quarter of a cut-lemon, and squeezes it so as to allow only a few drops of juice to fall in; and then, stirs it. It tastes good. Healthy, too.//

நீங்க நக்கிரன் மாதிரி போல...

சொற்குற்றம், பொருட்குற்றம் எல்லாம் பார்க்கரீங்க....

அவ்வளவு ஆராயத்தேவையில்லை சார்.

டீ போடறது எல்லாம் பொம்பளைங்கதான்
செய்றாங்க சார். அதனால அவங்களுகுத்தெரியும் எலுமிச்சம் பழம் எப்படி எப்ப பிழியணும்னு!!!!

pudugaithendral said...

உங்க அலுவலக பார்ட்டிகளில் செய்வதுதான் சரி.

புதுகை.அப்துல்லா said...

dear sister,
kindly visit my page and give me a feed back

passerby said...

கரிக்குலம் சார்,

அது உடம்புக்கு நல்லது என்பது
இலங்கை போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது.

இப்ப ரொம்ப விரும்பிச்சாப்பிடறது
பிளாக் டீ தான்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

'குலமா'?

எனக்கு குலம் கிடையாது.

'குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்கள் ஈந்திலும் வெண்றிலேன், பொறியிலேன், புனித! நின்
இலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்று இலேன் எம் ஈசனே!

என்று தன்னைப்பற்றி சொல்லிக்கொண்ட திருமழியிசை ஆழ்வார் கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். எங்களுக்கு குலங்கள் கிடையா.


என்பெயர், கரிக்குளம் என்பதே சரி. பெயர்க்கரணியம், எனது வலைபதிவில் சொல்லப்படும். இன்னும் தயாராகவில்லை.

நன்றி சார். வாய்ப்பு கொடுத்தமைக்கு.

pudugaithendral said...

மன்னிச்சுக்கோங்க கரிக்குளம் சார்,

ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் ஆகிடுச்சு.

தங்களது மனதை புண்படுத்தியிருந்தால்
மீண்டும் மன்னிக்கவும்.