Wednesday, June 04, 2008

ஏதோ நினைவுகள்.........

ஒவ்வொருவருக்கும் அவர்களது ஊரைப் பற்றிப் பெருமை உண்டு.
என் தாத்தா (அம்மாவின் அப்பா) மும்பை போனப் பிறகும்
வருடத்திற்கு ஒரு முறையாவது (பலமுறை வருவாரு) புதுகை
வந்துவிடவேண்டும். புதுகை விஜயம் முடிந்தபின் சலைன் பாட்டில்
ஏற்றியது போல் புத்துணர்ச்சியாகி விடுவார்.

எனக்கும் சில நாட்களாய் ஊர் ஞாபகம்.

எங்கள் ஊரில் என்னால் மறக்க முடியாத
ஞாபகங்கள் இவை:

1. வேதா டாக்டர் பத்து:

குங்குமம் மாதிரி இருக்கும். அதிகம் தடுமல் ஏறபடும்
நேரத்தில் இந்த பொடியை, சுடு தண்ணீரில் கலக்கி,
பொறுக்கும் சூட்டில் நெற்றியில், கழுத்தில், பத்து மாதிரி
போட்டால் நீர் இறங்கி விடும். அந்த வாசனைக்காகவே
ஜலதோஷம் அடிக்கடி வராதா என்று இருக்கும்.

2. பாகவதர் வீட்டு மருந்து:

அங்கு ஒரு பாட்டி இருப்பார். அவர் மஞ்சள் காமாலைக்கு
கீழாநெல்லி இலை மற்றும் நில வேம்பு சேர்த்து கஷாயம்
செய்து கொடுப்பார்.

கணை நோய் கண்ட பிள்ளைகளுக்கு கணை எண்ணைய் செய்து
தருவார். அதை தேய்த்து ஒத்தடம் கொடுப்பார்கள்.

குழிப்புண்ணிற்கு மணத்தக்காளி இலையைக் கசக்கி
காய்ச்சாத பாலில் கலக்கி வெறும் வயத்தில் கொடுப்பார்
அந்தப் பாட்டி.

மருந்துக் குடிக்க அழும் குழந்தை மிரட்டி
குடிக்க வைத்து பிறகு சர்க்கரையோ கல்கண்டோ
கொடுப்பார். (கொஞ்சமாத்தான்)

3. தையல்நாயகி அம்மாள் மச்சுவாடியில் இருந்தார்.
அவர்களது வீட்டில் வேப்பெண்ணைய்,
விளக்கெண்ணைய் சுத்தமாக கிடைக்கும்.
அம்மம்மா அந்த விளக்கெண்ணைய் வாங்கித்தான்
கண்மை செய்வார்.

சின்ன வயதில் (10 வயதுக்குள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்)
வியாழக்கிழமைகளில் கையில் பத்து காசுடன்
வாசலில் உட்கார்ந்து கொள்வேன்.
கையில் மயிலிறகோடு, தீபம் ஏந்தி
நாகூர் தர்காகாரர் ஒருவர் வருவார்.
அவர் மந்திரித்து ஓதுவார். நாங்கள் இந்து
மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும் எனக்கு
இது மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது.

எத்தனையோ டாக்டர்கள் இருந்தாலும்
நமக்குப் பிடித்த டாக்டரிடம் மட்டும்தான்
போவோம்.
என் சிறுவயதில் நரசிம்மன் டாக்டரிடம்
மட்டும்தான் போவேனாம். சரியாக
சாப்பிடமாட்டேன். வயிறு "மப்பு"
தட்டிக்கொண்டு ஜுரம் வரும்.
அதற்கு அவர் தரும் மருந்துதான்
சரி எனக்கு.

அங்கிருந்து நேராக அம்மா அழைத்துச்
செல்லும் இடம் பள்ளிவாசல் அருகில்
ஹஜரத் துஸ்ஸாரியா பள்ளிக்கு பக்கத்து
வீட்டிற்குத்தான்.

அங்கே அன்பே உருவான என்
பேகம் பாட்டி இருந்தார்.
அவரது கணவர் இப்ராஹிம் தாத்தா
பள்ளிவாசலில் அதிகாரியாகவோ,
பாங்கு ஓதிக்கொண்டே இருந்தார்.

(சரியாக ஞாபகம் இல்லை)

பாட்டியின் பெரிய மகன் ராஜா மாமா
வெளிநாட்டில் வேலைப் பார்த்துவந்தார்.
சின்னமகன் நவாப் மாமாதான் அங்கு
இருந்தார்.

எனக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால்
பாட்டி மந்திரித்து ஓதினால்தான் சரியாகும்
என்பது அப்போது எனது திடமான நம்பிக்கை.
அதற்காகப் பாட்டி ஏதும் கட்டணம்
வசூலிக்க மாட்டார். பாட்டி வீட்டில்
நாய் பொம்மை வைத்த உண்டியல்
இருக்கும். முன்னால் காசை வைத்து
அழுத்தியதும் நாய் வந்து கவ்வி இழுத்துச்
செல்லும். அது எனக்கு மிகவும் வேடிக்கையாக
இருந்தது. அதில் 1 ரூபாயோ 50 பைசாவோ
என் உண்டியலில் இருந்துதான் எடுத்துப்போய் வைப்பேன்.

பாட்டியின் மீது வீசும் வாசமா!,
பேகம் பாட்டியின் கதகதப்பான ஸ்பரிசமா,
அன்பா, சிரித்த முகத்துடன் ஜபிப்பதா?
ஏதோ ஒன்று எனக்கு மிகவும் பிடித்து
பாட்டி ஓதினால் உடம்பு சரியாகும் என்ற
நம்பிக்கையை உருவாக்கியது.

இங்கே மதம் சம்பந்தமே இல்லை.
எங்கள் வீட்டினருக்கும் பேகம் பாட்டி வீட்டிற்கும்
ஒரு சம்பந்தமே இருந்தது. நட்பையும் மீறி
தன் குடும்பத்தினர் மாதிரி ஒரு பந்தம்.

எனக்கு 11 வயதில்மூளைக்காய்ச்சல்
வந்து சுப்பைய்யா டாக்டர்
ஆஸ்பத்திரியில் கட்டி கட்டியாக ஐஸ் வைத்துக்
கொண்டிருந்த போதும் என் வாய் பேகம்
பாட்டியைக் கூப்பிடு என்றுதான் புலம்பிக்கொண்டிருந்ததாம்.
அப்போது பாட்டி ஊரில் இல்லை. வந்து
இறங்கியதும் தகவல் கேட்டு அதே ரிக்ஷாவில்
ஹாஸ்பிடலுக்கே வந்துவிட்டார் பாட்டி.

"நான் வந்துட்டேன்னு சொல்லுங்க பேத்திக்கு
சரியாகும்", என்று நர்ஸிடம் சொல்ல
அவரை ரூமின் வாசலில் நின்று என்னை
அழைக்கச் சொல்லியிருக்கிறார் டாக்டர்.
பாட்டி மீது வைத்திருந்த என் நம்பிக்கையா,
மருத்துவமா தெரியவைல்லை உயிருக்கு
போராடிய நான் பிழைத்தேன்.

(அந்த வருடம் எங்கள் ஊரில் பல பிள்ளைகள்
அந்த நோயால் இறந்தனர். 2 பேர்தான்
பிழைத்தது. அதில் நானும் ஒருத்தி.)

யாருக்கோ உதவப் போய் பாட்டி
இறந்தார். என்னை அங்கு அழைத்து
வரவேண்டாம் என்று பாட்டி வீட்டில்
சொல்லிவிட்டார்கள். நான் அவர்களை
அவ்வளவு நேசித்தேன்.

மதங்களைக் கடந்தது பாசம், அன்பு.
அதுதான் இறைவன் என்பது என் எண்ணம்.

இன்று என் பேகம் பாட்டி இல்லை.
ஆனால் அவர்களை நினைக்காத நாள்
இல்லை என்றே சொல்லலாம்.

12 comments:

passerby said...

மதங்களைக் கடந்தது பாசம், அன்பு.
அதுதான் இறைவன் என்பது என் எண்ணம்.///

Your down memoray lane is interesting but melancholic. As a matter of fact, it is common that nostalgia always becomes melancholic. The reason may be that the mind tends to believe that all that is past is better than the present.

The extracts from your message quoted by me, is philosophical; and I hope, you extend the line of thought in your solitude; and, perhaps, give expressions to it, in your blog.

Your thoughts are echoed by Thirumazisai aalvaar. Thus, you have great company. Cheers!

அன்பிலன்றி ஆழியானை யாவர் காண வல்லரோ?

(Are you married or not?)

Unknown said...

அங்கிருந்து நேராக அம்மா அழைத்துச்
செல்லும் இடம் பள்ளிவாசல் அருகில்
ஹஜரத் துஸ்ஸாரியா பள்ளிக்கு பக்கத்து
வீட்டிற்குத்தான்.







நான் Pudukkottai தான்
west 3rd street
near taj mahall Co

மங்களூர் சிவா said...

மீ தி பர்ஸ்ட்டு

மங்களூர் சிவா said...

/
எத்தனையோ டாக்டர்கள் இருந்தாலும்
நமக்குப் பிடித்த டாக்டரிடம் மட்டும்தான்
போவோம்.
/

ஹி ஹி நான்கூட எனக்கு பிடிச்ச லேடி டாக்டராண்டதான் ...........

:)))))))))

மங்களூர் சிவா said...

/
எனக்கு 11 வயதில்மூளைக்காய்ச்சல்
வந்து சுப்பைய்யா டாக்டர்
ஆஸ்பத்திரியில
/

மூளைகாய்ச்சலா???? உங்களுக்கா!?!?!?

அது மூளை இருக்கவங்களுக்கு வரதாச்சே நமக்கெல்லாம் வராதே!!!!

:)))))))))))))))






சும்மா ஜோக்கு!!

Linq said...

Hi,

This is Alpesh from Linq.in. I loved your blog and I thought I would let you know that your blog has got the following Awards

1.Best blog of week in Languages Category for 03/16/08.
2.Best Languages Blog of all time.

Check it out here Award

Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest.
We offer syndication opportunities and many tools for bloggers to use in there
web sites such as the widget below:

Blogger Tools

Alpesh
alpesh@linq.in
www.linq.in

pudugaithendral said...

vaanga karikulam sir,thangalin varuagaikum pinnutathakum nandri.Tirumanamahi, 2 kulanthagal irukanga.1 magan, 1 magal.

pudugaithendral said...

vaanga thamilagathin thalaivan,

Namma oor karavugala paarkarathula santhosham.

Naanga vadakku 4.

varugaiku nandri.

pudugaithendral said...

vaangga siva,

me the firstnu neenga sollrathuku munnadiye karikulam sir me the first ayitaru.


:)))

pudugaithendral said...

Dear alpesh,

Thanks for the message.

I am very glad to know that my blog got awarded.

Thanks for the kind info.

நிஜமா நல்லவன் said...

ஆஹா அக்கா எப்படின்னு தெரியலை உங்களை மாதிரி தான் சில விஷயங்களில் நானும். எனக்கு சின்ன வயசுல அடிக்கடி உடல் நலம் இல்லாமல் போகும். சிதம்பரம் டாக்டர் வந்து ஊசி போட்டாதான் சரியாகும். அவரு கறுப்பா குண்டா இருப்பாரு. நான் அவர கரித்தவக்களைன்னு சொல்லி பசங்கள் கிட்ட கிண்டல் பண்ணுவேன். அவர கிண்டல் பண்ணினதை இப்ப நினைச்சா மனசுக்கு சங்கடமா இருக்கு.

எங்க ஒண்ணாம் வகுப்பு சார் அவர் பேரு மறந்து போயிடுச்சி. அவர எல்லோரும் பன்னாள் சார் அப்படின்னு தான் கூப்பிடுவோம். பன்னாள்ங்கிற கிராமத்தில் இருந்து எங்க ஊருக்கு வந்து செட்டில் ஆனதால அந்த பேரு. அவர் திருநீறு மந்திரிச்சி கொடுப்பாரு. காசு வாங்கவே மாட்டாரு. நெற்றில பூசிட்டு கொஞ்சமா வாய்ல போட்ட சற்று நேரத்துக்கெல்லாம் உடம்பு எல்லாம் வேர்த்து எவ்ளோ ஜுரம் அடிச்சாலும் சரி ஆகிடும். எப்படின்னு தான் தெரியவே இல்லை.

அப்புறம் மூளை காய்ச்சல். எனக்கு அப்போ ஏழு வயசு. பிரைவேட் ஆஸ்பத்திரியில எல்லாம் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். கடைசியா நாகப்பட்டினம் ஜி.ஹெச் ல கொண்டு போய் சேர்த்தாங்களாம். யாருக்குமே நான் பிழைப்பேன்னு நம்பிக்கையே இல்லையாம். ஒருவார போராட்டத்திற்கு பிறகு பிழைச்சதா சொன்னாங்க.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

எல்லோருக்கும் இப்படி ஒரு சம்பவம்
கண்டிப்பா இருக்கும்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.