Thursday, June 12, 2008

விளம்பரத்தால் வந்த வினை...... :))))

ஒரு பொருளுக்குச் செய்யப்படும் விளம்பரம் எந்த
அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும்
அறிந்ததே..

சில நொடிகளில் கதை, கவிதை சொல்லும் விளம்பரங்கள்
பல மறக்க முடியாத காவியங்களாகி விடுகின்றன.

தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் விளம்பரங்களுக்கு
இணையானவை பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் வரும்
விளம்பரங்கள். அப்படிப்பட்ட ஒரு விளம்பரத்தினால் நான்
பட்ட பாடு.................

அப்போது நான் மும்பையில் இருந்தேன். அலுவலகம்
செல்லும் முன் அந்த பரபரப்பிலும் நியூஸ் பேப்பர்
படிக்க வேண்டும் என்பது மாமாவின் கட்டளையாக
இருந்தது பின்னர் பழக்கமாகிப்போனது.
(சுடச்சுட காபி, சுடச்சுட நீயூஸ்....)

அப்படி பேப்பர் பார்த்த ஒரு நாள் ஒரு விளம்பரம்
என்னை மிகவும் கவர்ந்தது. பெரிதாக ஒன்றும்
எழுதி விடவில்லை. ”இன்னும் சில நாட்களில்
தங்களை மிகவும் கவரப்போகும் விளம்பரம் இந்த
பக்கத்தில் வரப்போகிறது” இவ்வளவுதான்.

அடுத்த நாள் அந்த பக்க விளம்பரத்திற்காக
காத்திருந்தேன்... இப்படி 5 நாட்கள் ஓடிவிட்டது.
தினமும் ஒரு வரி விளம்பரம் மாத்திரம் தான்
இருக்கும்.

சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. மாமாவிடம்
வேறு”அது என்ன என்று பார்த்து வாங்கிவிட
வேண்டும்”, என்று சொல்லி வைத்திருந்தேன்.
அதுகென்ன பாரு” என்று மாமா சொன்னார்.

6 ஆவது நாள் அந்தக் கம்பெனியின் லோகோவைப்
போட்டு நாளை அந்த பொருளின் பெயர் வரும்
என்று போட்டிருந்தார்கள்.

அடுத்த நாளுக்காக மிக மிக ஆவலாக காத்திருந்தேன்.
என்ன என்று பார்த்துவிட்டு, உடன் வாங்க வேண்டும்
என்று முடிவு கட்டியாகிவிட்டது. (அதற்கு முன் தான்
சின்ன சஸ்பென்ஸோடு “லிட்டில் ஹார்ட்ஸ்”
பிஸ்கட் அறிமுகமாகி உடன் வாங்கி வந்து
வீட்டில் அனைவருக்கும் கொடுத்தேன். )

என்னவாக இருக்கும் மாமா? என்று பேச்சு
அதைப் பற்றியே இருந்தது. காலை எழுந்ததும்
முதலில் பேப்பரை எடுத்து நான் பார்த்துவிடவேண்டும்
என்று முடிவு கட்டிவிட்டேன்.
(போட்டியாளர்கள் வீட்டில் ஜாஸ்தி)

அஹா!!! அந்த நாளும் வந்தது.
மாமா! பேப்பர் வந்தாச்சு” என்று கத்திதான் மாமாவை
எழுப்பினேன். தலை தெறிக்க ஓடி வந்தார் மாமா.
அவருக்கு முன் உருண்டு ஓடி வந்தாள் மாமாவின்
3 வயது பெண். என் கத்தலில் மொத்தக் குடும்பமும்
பேப்பருக்கு முன்னால். பேப்பரை தரையில் விரித்து
திகில் படம் பார்க்கிற மாதிரி மெல்ல, பேக்ரவுண்ட்
மீஜிக்கோடு பக்கம் பக்கமாக திருப்பி.. திருப்பி..னால்...

?
?
?
?
?
?
?
?
அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் மொத்தக் குடும்பமும்
ஹோ! என்று கத்தி என்னை ஏளனமாக பார்த்தனர்.

மாமாவைப் பற்றி கேக்கவே வேண்டாம்.
கைக்கொட்டி சிரிக்கவே ஆரம்பித்துவிட்டார்.
என் முகம் போன போக்கு.. கேட்கவே வேண்டாம்.

ஏதாவது ஏடாகூடாமாக நினைக்கும் முன் நானே
சஸ்பென்ஸை உடைத்து விடுகிறேன்.

அத்தனை நாட்களாக சஸ்பென்ஸ் தந்து,
என்னை அதிக எதிர் பார்ப்புக்கு உள்ளாக்கியது

FOUR SQUARE CIGERETTE :)))))))))))


அதற்கப்புறம் மாமா அந்த சிகரெட்டை என்
பிராண்ட், என் பேவரிட் பிராண்ட் என்றே
கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

திருமணம் நிச்சயமானதும் அயித்தானிடம் வேறு
”உன் மனைவிக்கு பிடித்தமான பிராண்ட் இது”
என்று சொல்லி கொடுத்து ஆப்பு வைத்தது தனி
டிராக்.

27 comments:

நிஜமா நல்லவன் said...

Me the first?

புதுகை.அப்துல்லா said...

//ஏதாவது ஏடாகூடாமாக நினைக்கும் முன் நானே
சஸ்பென்ஸை உடைத்து விடுகிறேன்//

யக்கா
நம்மாளுங்க புத்திய பத்தி ஓங்களுக்கு நல்லாவே தெரியுது.
(என்னையும் சேத்து தான் சொல்றேன்)

நிஜமா நல்லவன் said...

///தினமும் ஒரு வரி விளம்பரம் மாத்திரம் தான்
இருக்கும். ///


நம்ம நாட்டுல ஏகப்பட்ட வரி போடுவாங்க. அது என்ன வரி விளம்பரங்க?

புதுகை.அப்துல்லா said...
This comment has been removed by the author.
pudugaithendral said...

வாங்க பாரதி
நீங்கதான் இன்னைமு பர்ஸ்டு

pudugaithendral said...

ஆஹா அப்துல்லா

வாங்க எல்லாம் ஒரு அனுபவம் தான்.

:)))))))

pudugaithendral said...

நிஜமா நல்லவன்,

வரி விளம்பரம்னா அது “வரி” இல்லை
ஒரு” வரி” வாக்கிய விளம்பரம்.

இதுகெல்லாம் டீடெயிலு கேக்கறாகளே!!!

அவ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
FOUR SQUARE CIGERETTE :)))))))))))


அந்த சிகரெட்டை என்
பிராண்ட், என் பேவரிட் பிராண்ட்
/



தகவலுக்கு நன்றி

மங்களூர் சிவா said...

/
/
FOUR SQUARE CIGERETTE :)))))))))))


அந்த சிகரெட்டை என்
பிராண்ட், என் பேவரிட் பிராண்ட்
/



தகவலுக்கு நன்றி
ஆனா அது இங்க மங்களூர்ல கிடைக்கறதில்லையே :(

VIKNESHWARAN ADAKKALAM said...

//உன் மனைவிக்கு பிடித்தமான பிராண்ட் இது”
என்று சொல்லி கொடுத்து ஆப்பு வைத்தது தனி
டிராக்.//

பாவம்ங்க நீங்க... :-(

மங்களூர் சிவா said...

10

சின்னப் பையன் said...

நான் ஏதோ புள்ளிராஜா மாதிரி இருக்கும்னு நினைச்சேன்.....

Athisha said...

//திருமணம் நிச்சயமானதும் அயித்தானிடம் வேறு
”உன் மனைவிக்கு பிடித்தமான பிராண்ட் இது”
என்று சொல்லி கொடுத்து ஆப்பு வைத்தது தனி
டிராக்.//

;-)))

cigrette smoking is injurious to health

அப்டினு சப்டைட்டில் போடுங்க இப்பலாம் அதான் டிரெண்டு

கோபிநாத் said...

\\திருமணம் நிச்சயமானதும் அயித்தானிடம் வேறு
”உன் மனைவிக்கு பிடித்தமான பிராண்ட் இது”
என்று சொல்லி கொடுத்து ஆப்பு வைத்தது தனி
டிராக்.\\

சூப்பர்..;)))))))

pudugaithendral said...

தகவலுக்கு நன்றி//

ஏன் சிவா இந்த மர்டர் வெறி.

//ஆனா அது இங்க மங்களூர்ல கிடைக்கறதில்லையே :(//

இப்ப எங்கியும் கிடைக்காது போல இருக்கு.

pudugaithendral said...

வாங்க விக்னேஸ்வரன்.

:(

pudugaithendral said...

வாங்க ச்சின்னப்பையன்,

இதனால தானே பதிவுல இப்படி ஒரு வாக்கியத்தைச் சேத்தது. :)))

ஏதாவது ஏடாகூடாமாக நினைக்கும் முன் நானே
சஸ்பென்ஸை உடைத்து விடுகிறேன்

pudugaithendral said...

வாங்க அதிஷா,

வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

வாங்க கோபிநாத்.

என்னத்த சூப்பரு. :(((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லகாமெடிப்பா தென்றல்.. :))

pudugaithendral said...

வாங்க கயல்விழி,

காமடிதான். இப்ப நினைச்சாலும்
சிரிப்பா இருக்கு.

சென்ஷி said...

ஹா..ஹா.. செம்ம காமெடிதான் :))

pudugaithendral said...

காமெடியா ஒண்ணும் இல்லையா,

15 வருஷத்துக்கப்புறமும் எங்க
வீட்டுல இதுக்குத்தான் மிகச்சிறந்த
காமெடின்னு பட்டம் கொடுத்து வெச்சிருக்காக என் ரெண்டு மாமாக்களூம் சென்ஷி..

ஆயில்யன் said...

//திருமணம் நிச்சயமானதும் அயித்தானிடம் வேறு
”உன் மனைவிக்கு பிடித்தமான பிராண்ட் இது”
என்று சொல்லி கொடுத்து ஆப்பு வைத்தது தனி
டிராக்.//

:)))))

pudugaithendral said...

வாங்க ஆயில்யன்,

எல்லோரும் கரீக்கிட்டா அந்த லைனுக்கு மாத்திரம் ஸ்மைலி போடறீங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கிரி said...

நல்ல வேளை கடைசியா விளம்பரம் ஒண்ணும் ஒரு வாரம் ஆகும் ..இன்னும் அது வரைக்கும் காத்திருக்க சொல்லாம இருந்தாங்களே :-))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== நியூஸ் பேப்பர்
படிக்க வேண்டும் என்பது மாமாவின் கட்டளையாக
இருந்தது பின்னர் பழக்கமாகிப்போனது ==>
ஒண்ணு மட்டும் தெளிவாப் புரியுது. உங்களுக்கு எல்லாத்துக்கும் "கட்டளை" கொடுத்திருக்காங்க.