Wednesday, June 11, 2008

ஒரு நொந்த அனுபவம் :((

வீட்டில எந்த விசேஷ்ம்னாலும் சரி கான்ட்ராக்டர் கிட்ட
கொடுத்துப்பிட்டா சரி. அவங்க பாத்துப்பாங்கன்னு
அப்படின்னு சொல்றவங்களா நீங்க!!!????

அப்ப இதைக் கண்டிப்பா படிங்க.

கான்ட்ராக்டர் கிட்ட கொடுத்தா செய்வாங்க. கான்ட்ராக்டர்
கிடைக்கணுமே!

சென்ற வருடம் வீட்டில் ஒரு விசேடம் இருந்தது.
நாங்க இலங்கையில் இருந்ததால் இங்கே வந்து
தங்கி ஏற்பாடு செய்ய இயலாமல் கான்ட்ராக்டரிடம்
கொடுத்து விடலாம்னு முடிவு செஞ்சோம்.

அங்கதான் வந்தது பிரச்சனையே!!!!!
பிரபல நாளிதழ்களில் வந்திருந்த விளம்பரங்களாப்
பாத்து அயித்தான் கிட்ட கொடுத்து இந்தியா
போயி இவங்களை எல்லாம் கூப்பிட்டு விசாரிச்சுகிட்டு
வாங்கன்னு சொன்னேன்.

அயித்தானும் செஞ்சாரு. அடா.. அடா...
வந்த் ரெஸ்பான்சை பார்க்கணுமே!!!

இவங்க விளம்பரத்துல கொடுக்கறது என்னனா?
எந்த விசேடம்னாலும் எடுத்துச் செய்வோம்னு.
சின்ன விசேடம்லாம் செய்ய மாட்டேன்னு ஒருத்தர்!

சின்ன விசேடத்திற்கே திருமண அளவுக்கு ரேட்டு
கேக்கறது ஒருத்தர்!!

உங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி நின்னு
செஞ்சு தருவோம்னு விளம்பரத்துல
சொன்னவங்க பேசுற முறையே சரியில்லையாம் :)

இந்த அழகுல மாம்பலத்துல இருக்குறவரு
குரோம்பேட்டையில் வந்து செய்யணும்னா
5000 கூட செலவாகுமாம். (போக்குவரத்து
செல்வாமே)

மாம்பலத்துக்கும் குரோம்பேட்டைக்கும் எம்புட்டு
தூரமுங்க??????????????

எந்த விசேடத்துக்கும் வர்றவங்களை நல்ல
உணவு கொடுத்து உபசரிக்கணும். அதனாலத்தானே
நல்ல கான்ட்ராக்டரிடம் கொடுக்கணும்னு தேடுறது?

அப்பபா... இவர்களிடம் நாங்கள் பட்ட கஷ்டம்...

சொல்லில் அடங்காது.....

ஒரு அம்மா வேனுக்குளேயே உட்கார்ந்து கிட்டு
விசிட்டிங்கார்டை மட்டும் கொடுத்தனுப்பி விட்டாக.
நேரில் வந்து பேசவே இல்லை.:)

இன்னொருவர் கொடுத்த பட்ஜெட்டில் ஒரு
திருமணமே செய்துவிடலாம்.



இப்படி சொல்வது ஒன்று செய்வது ஒன்றுன்னு
இருக்காங்களே இவங்களை கேக்கறது யாரு?


பெருசு பெருசா முழுப்பக்க விளம்பரங்கள்
போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்..


சத்திரம் கூட நல்ல படியாய் கிடைத்துவிடும்போலிருக்கிறது.


ஆனால் நல்ல கான்ட்ராக்டர்கள் கிடைப்பது முன் ஜென்மத்து
புண்ணியம் போலிருக்கிறது.


காளான்கள் போல் இப்போது கான்ட்ராக்டர்கள் பெருகி
இருக்கிறார்கள். இவர்களை சரியாக ஒருங்கிணைத்து
மக்களுக்கு நல்லது யாராவது செய்வார்களா?

திருமணத்தைத் தவிர வேறு எந்த ஒரு விசேடத்தையும்
இவர்கள் விசேடமாக மதிப்பதே இல்லை.
இதுதான் என் மோசமான அனுபவம்.

:((((((((((((((((((((

25 comments:

மங்களூர் சிவா said...

:((((

rapp said...

எங்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டு பின்னர் எல்லாவற்றையும் நல்ல ஹோட்டல்களில் செய்ய ஆரம்பித்து விட்டோம். இங்கு முக்கால்வாசி எந்த விதத்திலும் பெரிய தொல்லைகள் கொடுப்பதில்லை அதோடு செலவும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் ஆகிறது. எந்த எக்ஸ்ட்ரா செலவுகளோ இல்லை திடீர் பிரச்சினைகளோ இங்கு முளைப்பதில்லை.

யாத்ரீகன் said...

there are few small groups youngsters who are doing such outsourced works and they do things responsibly as its an opportunity for thier growth.

one of my collegemate is doing similar activitiy (he hasn't yet taken marriage organizations, but does other event management).. he used to say that its tough to find contacts of such young groups but once done they do respond very well.. they might not be having enough financial support for such wide marketing

நிஜமா நல்லவன் said...

:((

வல்லிசிம்ஹன் said...

இப்படித்தான் இருக்கும்மா நிலமை. நாங்க ஏற்பாடு செய்த காண்ட்ராக்டர் முதல் நாள் கொடுத்த காசி ஹல்வா மோசமா இருக்கவே இன்னுமொருத்தரை அவசரமா தயாரிக்கவேண்டி வந்தது.

சென்னையை விட பங்களூரு இன்னும் மோசம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//ஆனால் நல்ல கான்ட்ராக்டர்கள் கிடைப்பது முன் ஜென்மத்து
புண்ணியம் போலிருக்கிறது//

இனி ஜாதகம் பார்த்துவிட்டு காண்ட்ராக்டர் தேடுங்க...

சின்னப் பையன் said...

:-(((((((

cheena (சீனா) said...

உண்மை உண்மை - நானும் பட்டிருக்கிறேன்

சுரேகா.. said...

அடக்கொடுமையே!

பாசத்துக்கே காண்டிராக்ட் பேசுற நம்ம சென்னையிலயா இப்படி?

இறக்குவானை நிர்ஷன் said...

/ஆனால் நல்ல கான்ட்ராக்டர்கள் கிடைப்பது முன் ஜென்மத்து
புண்ணியம் போலிருக்கிறது.
//

போன ஜென்மத்தில் நீங்கள் புண்ணியம் செய்யவில்லை.

Bleachingpowder said...

ஐம்பது அறூபது பேருனா பேசாம ஒரு நல்ல ஹோட்டல்ல Order பன்னுங்க அவங்களே டோர் டெலிவரி செங்சுருவாங்க அதுதான் cheap and best.

என்ன serve பன்றதுதான் கொஞ்சம் கஸ்டம்

Unknown said...

பெருசு பெருசா முழுப்பக்க விளம்பரங்கள்
போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்..

சொல்வது சரி

pudugaithendral said...

வாங்க சிவா,

!!!!!!!!!!!!!!!!

pudugaithendral said...

வாங்க rapp,

அந்தக் கருமத்தையும் ஒரு விசேடத்திற்கு செஞ்சு நொந்து போயிட்டோம்.

ஹோட்டல்களில் தரமான உணவா கிடைக்கவில்லை.

pudugaithendral said...

வாங்க யாத்திரிகன்,

இளைஞர்கள் செய்கிறார்கள் என்றால் வாழ்த்துக்கள்.

நிறுவனம் நன்கு வளர்ந்த பின்னும் கூட பழையதை மறக்காமல், கொள்கைகளைக் கைவிடாமல் செய்யவேண்டும்.

ஏன் என்றால் நல்ல பெயர் வாங்கினால் மட்டும் போதாது அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

வாங்க வல்லி சிம்ஹன்,

நிஜமாவே இப்படித்தான் நடக்குது. மும்பையில் இன்னும் மோசம்.

போன மாதம் தாத்தா, பாட்டி சதாபிஷேகத்திற்கு சமைக்க சொன்ன ஆளிடம் முதல் நாள் இரவு 100 பேருக்கு டிபன் சொல்லியிருக்க 30 பேருக்கு செய்து அடுத்தடுத்த பந்திகளுக்கு ஆளைபார்த்து பார்த்து தயார் செய்த கொடுமையில் நாங்கள் சாப்பிடவே முடியாமல் போனது.

pudugaithendral said...

வாங்க விக்னேஸ்வரன்,

//இனி ஜாதகம் பார்த்துவிட்டு காண்ட்ராக்டர் தேடுங்க//\\

எனக்கு ஜாதகம், ஜோஸ்யத்தில எல்லாம் நம்பிக்கை இல்லீங்க.

காஞ்சாலும் காயும், பேஞ்சாலும் பேயும்னு சொல்றமாதிரி சொல்லுவாங்க :))))))))))))))))))

pudugaithendral said...

வாங்க ச்சின்னப்பையன்,

வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

எல்லோருக்குமே இப்படி ஒரு அனுப்வமா? கடவுளே.

pudugaithendral said...

வாங்க சுரேகா,

சென்னையிலதான் எனக்கு இந்த நிலமையாச்சு.

pudugaithendral said...

வாங்க நிர்ஷான்,


//போன ஜென்மத்தில் நீங்கள் புண்ணியம் செய்யவில்லை//

அப்படித்தான் போலிருக்கு. :(

pudugaithendral said...

வாங்க பீளிச்சிங்க் பவுடர்,

50/ 60 அது எங்க வீட்டு ஆளுங்களே ஆகிடுவாங்களே!!!!

ஹோட்டலில் சொன்னால் நீங்கள் சொல்லியிருப்பது போல் செர்விங்க் பிரச்சனைதான். எல்லோருக்கும் புபே முறை பிடிக்காது.

pudugaithendral said...

வாங்க தமிழகத்தின் தலைவன்,

வருகைக்கு நன்றி.

கானா பிரபா said...

//இறக்குவானை நிர்ஷன் said...
/ஆனால் நல்ல கான்ட்ராக்டர்கள் கிடைப்பது முன் ஜென்மத்து
புண்ணியம் போலிருக்கிறது.
//

போன ஜென்மத்தில் நீங்கள் புண்ணியம் செய்யவில்லை.//

ரிப்பீடேஏஏஏஎ ;-)

தமிழ்மணத்தின் சூடான இடுகையில் வந்திருக்கு பாருங்க ;-)