வணக்கம் விசு சார்,
நல்லா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். (இதுக்கு பதில்
குடும்பம் ஒரு கதம்பத்தில் சொல்ற மாதிரி சொல்லி
எங்களை முடியை பிச்சுக்க வைக்கக்கூடாது... :)) )
இந்தப் பதிவு உங்கிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கத்தான்
சார். உண்மையைச் சொன்னா வேண்டுகோள் என்பதை
விட ஞாபகப் படுத்துதல்னு கூட சொல்லலாம்.
என்ன சார் புரியலையா!!!! உங்களுடைய ஒரு திரைப்படத்தில்
நீங்கள் கடைசியில் கொடுத்திருந்த வாக்குறுதியை
நிறைவேத்தும் படி கேக்கறேன் சார்.
அதாவது உத்திரமேருர் நாரதர் நாயுடுவாக நீங்க
அவதாரம் எடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு சார்.
ஆமாம் இப்போது நீங்க நாரதர் நாயுடுவா நடிச்சு
”மணல் கயிறு” திரைப்படத்தை ரீ மேக் செய்யணும்
ஆனால், சில மாறுதல்களுடன்.
(கிழிஞ்சதுங்கறங்கீளா! கிழிஞ்சாலும் ஆடணும் சாரி
இயக்கணும்)
ரொம்ப மெனக்கெட வேண்டாம் சார்.
இப்ப நீங்க அப்பீல் ஆக வேண்டியது கிட்டுமணிக்காக.
பழைய மணல் கயிறு படத்தில் கிளைமேக்ஸில்
“வளர்ந்து பெரியவனாகி கண்டீஷனெல்லாம்
போட்டா நாரதர் நாயுடு திரும்ப வருவேன்னு”
சொல்வீங்க.
வாங்க சார் நாரதர் நாயுடு, வாங்க.
இப்ப கண்டீஷன் போடறது கிட்டுமணி இல்ல சார்.
உமா தான். (நல்ல முன்னேற்றம் தான்)
கண்டீஷன் போட்ட கிட்டுமணியை ஏமாற்றி
கல்யாணம் செஞ்சு வெச்சீங்க. இப்ப கண்டீஷன்
போடற உமாவை ஏமாற்றி கல்யாணம் செய்யற
மாதிரி படம் எடுக்க வேண்டிய கட்டாயம் சார்.
உங்க பழைய மணல் கயிறுவில் 8 கண்டீஷன்
தான் வெச்சீங்க. இப்ப 16 இல்ல அதுக்கும் மேல
வைக்கலாம் சார். ஓவரா சொல்றேன்னு நினைச்சீங்கன்னா
ஏதாவது ஒரு மெட்ரிமோனியலில் ப்ரவுஸ் செஞ்சு பாருங்க
நான் சொன்னதுக்கும் மேலேயே கண்டீஷன்கள் கிடைக்கும்.
:)
இப்ப உமாக்கள் போடுகிற கண்டீஷன்களால கிட்டுமணிகள்
முதிர்பையன்கள் ஆக இருக்காங்க சார்.
என் பையனுக்கு நல்ல பெண்ணா கிடைக்குமான்னு
பெத்தவங்க காத்திருக்க கொடுமை நடக்குது சார்.
வர்ற பொண்ணு நல்லவளா இருக்கணும்.
இப்படி பட்ட வேண்டுதல்கள் இப்போது
பையனைப் பெற்ற்வர்கள் சொல்லிக்கிட்டிருக்காங்க.
இன்னும் அடிப்பிரதட்சணம், அம்மன் தவசு மாதிரி
அய்யன் தவசு இதெல்லாம் தான் பாக்கி. பையனுக்கு
நல்ல இடத்தில கல்யாணம் ஆகனும்னு பூஜை செய்ற
பெத்தவங்க ஜாஸ்தி.
அன்னைக்கு உமாக்களுக்காக வாதடின நீங்க,
இன்னைக்கு கிட்டுமணிகளுக்காக வாதடணும்
என்பது காலத்தின் அவசியம் ஆயிடுச்சு சார்.
ஏதோ கிட்டுமணிகள் ரங்கமணிகள் (அதாவது
எங்க வலைப்பூ பாஷையில் கல்யாணம்
ஆன ஆண்பிள்ளைகள்னு அர்த்தம்) ஆகணும்,
காலாகாலத்தில அவங்க வாழ்க்கையில்
வசந்தம் (!) வீசனும் என்கிற ஆதங்கத்தில்
இதை எழுதுகிறேன் சார்.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் நாரதர் நாயுடுவுக்கே!!!!
டிஸ்கி: மணல் கயிறு படம் பாக்கதவங்க
இங்க போயி ஒரு முறை பாக்கலாம்.
41 comments:
Saturday nnu sonneenga...Friday ve pottacha??? :-)
ohh...naanthan first ahh? :-)
தேவதையின் முதல் வருகைக்கு நன்றி.
சனிக்கிழமை வார இறுதிநாளில் சிலர் கணிணியைத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்காவிட்டால் சோறு கிடைக்காது என்பதால் சத்தியம் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் தங்களின் சத்தியத்தை மீறாமல் இருக்கத்தான் ஒரு நாள் முன்னாடியே போட்டு விட்டேன்.
:)))))))))))
தேவதையே
நான் தான் ஃபர்ஸ்டான்னு கேக்கப்பிடாது.
மீ த பர்ஸ்டான்னு கேக்கணும். இது வலையுலக பாஷை.
:)))))))))))))
//புதுகைத் தென்றல் said...
தேவதையே
நான் தான் ஃபர்ஸ்டான்னு கேக்கப்பிடாது.
மீ த பர்ஸ்டான்னு கேக்கணும். இது வலையுலக பாஷை.
:)))))))))))))
//
ரிப்பீட்டே :))
(இது கூட வலையுலக பாஷைதான்)
வாங்க சென்ஷி,
தங்களின் வருகைக்கும் ரிப்பீட்டுக்கும் நன்றி.
உண்மைதான்க்கா!யாரு பண்ணுன புண்ணியமோ நமக்கு காலாகாலத்து கல்யாணமாயிருச்சு.அதுவும் ரொம்ப நல்ல wife ஆ போச்சு( நம்ப தங்கமணியும் படிக்குதுல). எங் கூட 2000 தில எம்.பி.ஏ முடிச்ச ரொம்ப பய இன்னும் கல்யாணம் ஆகாமலேயே திரியிராய்ங்க(சுருக்கமா சொல்றதுன்னா சந்தோஷமா இருக்காய்ங்க)
ஆஹா,
வாங்க அப்துல்லா,
இப்பத்த நிலைமை அப்படி இருக்கு.
எங்க சந்தோஷமா இருக்காங்க. கேட்டுப்பாருங்க, உனக்கென்னடா மாப்பி கல்யாணம் ஆயிடிச்சின்னு..
புலம்புவாங்க.
40 வயசுக்கு கூட கல்யாணம் ஆகாத
ஆண்கள் இருக்காங்க.
அவங்களுக்காக வரும் விளம்பரங்க்ளைப் பார்க்கும் போது பகிர்னு இருக்கு.
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
உண்மைதான்க்கா!யாரு பண்ணுன புண்ணியமோ நமக்கு காலாகாலத்து கல்யாணமாயிருச்சு.அதுவும் ரொம்ப நல்ல wife ஆ போச்சு( நம்ப தங்கமணியும் படிக்குதுல). எங் கூட 2000 தில எம்.பி.ஏ முடிச்ச ரொம்ப பய இன்னும் கல்யாணம் ஆகாமலேயே திரியிராய்ங்க(சுருக்கமா சொல்றதுன்னா சந்தோஷமா இருக்காய்ங்க)
//
அப்படி போட்றா அருவாளைன்னானாம் :))
//புதுகைத் தென்றல் said...
தேவதையின் முதல் வருகைக்கு நன்றி.
//
முதல் வருகை இல்லை....அடிக்கடி வந்திட்டுதான் இருக்கேன், இப்போதான் first comment :-)
மணல்கயிறு உரல் தந்ததற்கு நன்றி.... நல்ல நகைச்சுவைப் படம்....
//காலாகாலத்தில அவங்க வாழ்க்கையில்
வசந்தம் (!) வீசனும் என்கிற ஆதங்கத்தில்
இதை எழுதுகிறேன் சார்//
அதான் தங்கமணிகள் தினமும் ஏதாவது எடுத்து வீசிக்கிட்டே இருக்காங்களே....
//வாங்க சார் நாரதர் நாயுடு, வாங்க//
வாங்க வாங்க
மணல்கயிறு படத்தில் ஒரு வசனம் வரும்.
“தேவதைப் போல வந்து விசயத்தைச் சொல்லிட்டு மறஞ்சுட்டீங்களே பாட்டின்னு” அது உங்களுக்கும் பொருந்தும் போல.
தேவதை அடிக்கடி வந்து படிச்சிட்டு மட்டும் போய்கிட்டு இருந்தது போல.
:))))))))))
வாங்க ச்சின்ன்ப்பையன்,
அது நகைச்சுவைப் படம் மட்டும்மல்ல.
மிக மிக நல்லப் படம். திருமணம் என்கின்ற பெயரில் நடக்கும் கூத்துக்களை பரை சாற்றும் படம்.
விசுவின் டவுரி கல்யாணம் படம் பாத்திருக்கிறீர்களா?
ஓ அனுப்வம் பேசுதோ ச்சின்னப் பையன்....
:))))))))))))
///சென்ஷி said...
//புதுகைத் தென்றல் said...
தேவதையே
நான் தான் ஃபர்ஸ்டான்னு கேக்கப்பிடாது.
மீ த பர்ஸ்டான்னு கேக்கணும். இது வலையுலக பாஷை.
:)))))))))))))
//
ரிப்பீட்டே :))///
ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டேய்.....(இதுவும் வலையுலகில் சகஜம்தாங்க)
மங்களூர் சிவா ஏன் முதலில் வரவில்லை?
//Heidi ~ The Angel said...
முதல் வருகை இல்லை....அடிக்கடி வந்திட்டுதான் இருக்கேன், இப்போதான் first comment :-)//
இது உங்க டெம்ப்ளேட் கமெண்ட்டா? அபி அப்பா பதிவிலும் இதே கமெண்ட் போட்டு இருந்தீங்க.
///இப்ப கண்டீஷன் போடறது கிட்டுமணி இல்ல சார்.
உமா தான். (நல்ல முன்னேற்றம் தான்)
கண்டீஷன் போட்ட கிட்டுமணியை ஏமாற்றி
கல்யாணம் செஞ்சு வெச்சீங்க. இப்ப கண்டீஷன்
போடற உமாவை ஏமாற்றி கல்யாணம் செய்யற
மாதிரி படம் எடுக்க வேண்டிய கட்டாயம் சார்.///
காலம் மாறினாலும் ஏமாத்துறது மட்டும் மாறாது போல.
வாங்க நிஜமா நல்லவன்,
சிவாவைத்தான் இப்போதெல்லாம் பார்க்கவே முடியறது இல்லையே....
வாங்க நிஜமா நல்லவன்,
சிவாவைத்தான் இப்போதெல்லாம் பார்க்கவே முடியறது இல்லையே....
நிஜமா நல்லவன்,
அப்ப கிட்டுமணி கண்டீஷன் போட்டது தப்பு. அர்த்தம் இல்லாத கண்டீஷன் போட்டா ஏமாற்றித்தானே கல்யாணம் செய்வாங்க!
இப்போ உமாக்கள் போடுகிற கண்டீஷஙளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கிட்டுமணிகள் கல்யாணக் கனவுகளோடு வாழ்கிறார்கள்.
இது தான் இன்றைய மோசமான நிலை.
அக்கா!! அக்கா!!
//புதுகைத் தென்றல் said...
தேவதையே
நான் தான் ஃபர்ஸ்டான்னு கேக்கப்பிடாது.
மீ த பர்ஸ்டான்னு கேக்கணும். இது வலையுலக பாஷை.
:)))))))))))))
//
ரிப்பீட்டே :))
(இது கூட வலையுலக பாஷைதான்)
/
Heidi ~ The Angel said...
ohh...naanthan first ahh? :-)
/
ஆமாங்க நீங்கதானுங்க ஃபர்ஸ்ட்டு
:))
சாதனைக்கு வாழ்த்துக்கள்
மணல்கயிறு உரல் தந்ததற்கு நன்றி.... நல்ல நகைச்சுவைப் படம்....
/
ச்சின்னப் பையன் said...
//காலாகாலத்தில அவங்க வாழ்க்கையில்
வசந்தம் (!) வீசனும் என்கிற ஆதங்கத்தில்
இதை எழுதுகிறேன் சார்//
அதான் தங்கமணிகள் தினமும் ஏதாவது எடுத்து வீசிக்கிட்டே இருக்காங்களே....
/
ஸொ ஸேட்
:((
/
நிஜமா நல்லவன் said...
மங்களூர் சிவா ஏன் முதலில் வரவில்லை?
/
ரிப்பீட்டேஏஏஏஏஏஏய்
/
நிஜமா நல்லவன் said...
//Heidi ~ The Angel said...
முதல் வருகை இல்லை....அடிக்கடி வந்திட்டுதான் இருக்கேன், இப்போதான் first comment :-)//
இது உங்க டெம்ப்ளேட் கமெண்ட்டா? அபி அப்பா பதிவிலும் இதே கமெண்ட் போட்டு இருந்தீங்க.
/
ரொம்ப உன்னிப்பா ஃபாலோ பண்ணுறீங்க போல நி.நல்லவரே!!!!!
:)))))
/
புதுகைத் தென்றல் said...
சிவாவைத்தான் இப்போதெல்லாம் பார்க்கவே முடியறது இல்லையே....
/
கண்ணாடிய தொடைச்சிட்டு போட்டு பாருங்க!!
:))))
//நிஜமா நல்லவன் said...
இது உங்க டெம்ப்ளேட் கமெண்ட்டா? அபி அப்பா பதிவிலும் இதே கமெண்ட் போட்டு இருந்தீங்க.//
ஐயையோ ஐயையோ college, கோயில் இங்கேதான் follow பண்ணுவாங்கன்னு நினைச்சா இங்கேயுமா?? :O
//நிஜமா நல்லவன் said...
இது உங்க டெம்ப்ளேட் கமெண்ட்டா? அபி அப்பா பதிவிலும் இதே கமெண்ட் போட்டு இருந்தீங்க.//
டெம்ப்ளேட் கமெண்ட்டா????? அப்படின்னா????
//Blogger மங்களூர் சிவா said...
ஆமாங்க நீங்கதானுங்க ஃபர்ஸ்ட்டு
:))
சாதனைக்கு வாழ்த்துக்கள்//
நன்றிங்க :-)
வாங்க த.தலைவன்,
வருகைக்கு நன்றி.
உங்களுக்கு போட்டியா மீ த ஃபர்ஸ்டுன்னு போட ஒத்தவங்க வந்துட்டாங்களே சிவா!!!!
மணல் கயிறு ஒரு நல்ல நகைச்சுவைப் படம் மட்டுமல்ல.
மிகச் சிறந்த கதை, தேர்ந்தெடுத்த கதா பாத்திரங்கள், சமூகத்தில் நடைபெறும் அவலம் எல்லாம் மிகச் சரியான கலவையில் அமைந்தப் படம்.
மிகவும் பிடித்தது கிளைமாக்ஸ் தான்.
கைப்புண்ணிற்கு கண்ணாடி எதுக்கு சிவா. ( நான் கண்ணாடி போடற்து இல்லை))
தலைமறைவா இருக்கீங்க, அப்பப்ப அசிரீரி மாதிரி வந்து பின்னூட்டம் போடறீங்க.
மறுமொழியாளர்கள் லிஸ்டில் உங்கள் பெயர் போல்டாக தெரியும் அளவு.....
பின்னூட்டம் போடறீங்க்.
போதுமா..........
Post a Comment