அண்ணன் எனும் உறவு மிகப் புனிதமானது.தகப்பனுக்கு
அடுத்து அந்த இடத்தை நிறப்புவது அண்ணணே.
அதை உணர்ந்து தன் தம்பியை தன் மகன் போலவே
வளர்த்தவரின் பிறந்த நாள் இன்று.
என் கணவரின் அண்ணன் சுப்ரமணியம் தான் அந்த
நல்லவர். இலங்கைக்கு எங்களை பார்க்க வந்த போது
அனைவரும் இவரை என் கணவரின் அப்பாவாக
(வயது வித்தியாசம் அதிகம்)நினைத்து கேட்க,
“ஆமாம்! என்றே சொல்லேன்! என்ன போச்சு?
அண்ணன் என்றாலும் அப்பா என்றாலும் ஒன்றுதானே!”
சொன்னார்.
தம்பியின் மீது எந்த அளவு பாசமோ அதே அளவு
பாசம் தம்பியின் மனைவியாகிய என்மீதும்.
எனக்கு திருமணமான புதிதில,”அம்மா! இது உன் வீடு.
உன் வீட்டில் எப்படி இருந்தாயோ அதே போன்று
இங்கேயும் இருக்க வேண்டும்” என்று கூறிய நல்ல உள்ளம்.
அழைக்கும் வார்த்தையிலேயே வாஞ்சை தெரியும்.
ஆண்டவன் அவருக்கு நல்ல ஆயுளையும், திடகாத்திரத்தையும்
தந்து சந்தோஷமான வருடங்களைத் தரவேண்டும் என
பிரார்த்திக்கிறேன்.
*********************************************************
தேடுகின்ற கண்களுக்குள் குடியிருக்கும் சாமி,
திருவிளக்கின் ஒளியிலே குடியிருக்கும் சாமி,
ஐயப்ப சாமி, அருள் புரி சாமி.
அன்னை உண்டு தந்தை உண்டு எந்தன் மனையிலே
ஒரு தம்பி மட்டும் வேண்டும் உந்தன் உருவிலே
என்ற ஐயப்பன் படப் பாடல் ஒன்று உண்டு.
இதே போல் நானும் பாடி, வேண்டி சபரிமலையில்
மணிக்கட்டி எனக்கு 8 வருடங்கள் கழித்து
என் தனிமை தீர்க்க தம்பி பிறந்தது இன்றுதான்.
தம்பி என்றாலும் என் மூத்தமகனாக வளர்த்தேன்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவ்வேளை
உனக்கு எல்லா வளங்கள் நிறைந்ததாகவும்,
சீக்கிரம் திருமணம் முடித்து இல்வாழ்வில்
எல்லா சந்தோஷங்களையும் பெற
ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
9 comments:
என்னோட வாழ்த்தையும் மறக்காம அவங்களுக்கு சொல்லிடடுங்கக்கா.
கண்டிப்பா சொல்லிடறேன் அப்துல்லா.
நம்ம வாழ்த்தையும் சேர்த்து அனுப்புங்க
சேர்த்தே அனுப்பிட்டேன் பிரபா
என்னோட வாழ்த்தையும் மறக்காம அவங்களுக்கு சொல்லிடடுங்கக்கா.
இது தான் நம்ம புதுகையின் மண்வாசம்
இருவருக்கும் எங்கள் வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் முறையே சொல்லி விடுங்கள் தென்றல்.
வாங்க தமிழகத்தின் தலைவன்,
புதுகையின் மண்வாசத்தோடு
வாழ்த்து சிங்கப்பூருக்கும், நெல்லூருக்கும் அனுப்பிட்டேன்.
இதோ இந்தப் பதிவின் சுட்டியை அப்படியே அனுப்பி விட்டேன்.
உங்க வாழ்த்தும், வணக்கமும் முறையே நீங்களே சொன்ன மாதிரி போய் சேர்ந்திடும்.
belated b'day wishes Karthik.
Post a Comment