Monday, July 07, 2008

தெரிஞ்சா சொல்லுங்களேன்.

இங்கே கொடுத்திருக்கும் பாடலை பாருங்களேன்.

மறக்க முடியாதப் பாடல் இது. அத்தனை மொழியுலும்
இந்தப் பாடல்வர்களாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும்
நம் மனதில் நீங்காத இடத்தைப் பெற்ற பாடல்.




இதே போன்று இன்னோரு பாடல் உண்டு.

பாட்டின் வரி ஞாபகம் இல்லை.
பாடல் காட்சி மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது.

கபில்தேவ், பி.டி,உஷா போன்றோர் ஒலிம்பிக் தீபம்
கையில் ஏந்தி வருவார்கள். அந்தப் பாட்டின் வரிகள்,
பாடலின் வீடியோ இருந்தால் கொடுங்கள்.
ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

6 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

இருந்தால் கொடுக்க மாட்டேனா... என்னிடம் இல்லையே... :(((

புதுகை.அப்துல்லா said...

அக்கா

எனக்கு அந்த பாட்டின் இந்தி மற்றும் பிற மொழிகளின் வரிகள் தெரியாது ஆனால் தமிழில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய வரிகள் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நினைவில் உள்ளது.அந்த வரிகள்

இசைதான்
நம் அனைவரின்
உயிரும் ஸ்வரமாகும்!

இசை வேறானாலும்
ஆழிசேர் ஆறுகள்
கடலில் வீழ்வது போல்
இசை...நம் இசை!

மொத்த பாடலின் ட்யூன் கூட நினைவில் உள்ளது. நீங்க சென்னையோ புதுகையோ வரும்போது ஹம் செய்து காட்றேன்.

pudugaithendral said...

வாங்க விக்னேஸ்வரன்,

இருந்தால் கொடுக்க மாட்டேனா... என்னிடம் இல்லையே...

:)))))))))))

pudugaithendral said...

அப்துல்லா அந்த பாட்டின் வீடியோதான் நான் கொடுத்திருப்பது.

நான் கேட்ட பாட்டு வேற.

புதுகை.அப்துல்லா said...

அக்கா என் சிஸ்டம்ல உங்க பாடல் சுட்டி வேலை செய்யவில்லை.அதனால் நீங்க குடுத்து இருக்கும் பாடல் என்னனு தெரியல! கபில்.பி.டி.உஷா, ஸ்ரீகாந்த் லதாமங்கேஸ்வர் இவங்க எல்லாம் வருகிற அந்த பாடல் வரிகள் தான் நான் குடுத்தது..

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் சொல்லும் பாட்டு எனக்கும் நினைவில் உள்ளது தென்றல். நேற்று பூரா தேடினேன். அது பரத் பாலா என்பவர் தயாரித்த மேரா பாரத் மஹான் என்ற தலைப்பில் வரும். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லைப்பா.