பரமபத விளையாட்டில் பாம்பு வாயில் கடிபட்டு
இறங்காமல் வருவது கஷ்டம். அது மாதிரி
நம்ம வலையுலகில் டாக்கில் மாட்டாமல்
இருப்பதும் கஷ்டம். நானும் மாட்டிட்டேன். :(
மாட்டிவிட்ட சென்ஷி நல்லா இருங்க (வாழ்த்துதான் :) )
காதல். உச்சரிக்கும்போதே உள்ளத்தில் ஒரு உற்சாகம்.
காதலில் தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை,
ஆனால் காதிலில் விழாதது கொடுமை
என்று எங்கோ எப்போதோ படித்திருக்கிறேன்.
காதல் அவசியமானது.
நீரின்றி மட்டுமல்ல காதல் இன்றிக்கூட அமையாது உலகு.
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியம், இனிமை.
திருமணத்திற்கு பிறகு வரும் காதல் மிக அழகானது.
(காதல் திருமணங்களில் திருமணத்திற்கு பிறகு காதல்
காணாமல் போய்விடுகிறதே..)
ஆனாலும் என்னைக் கவர்ந்த காதல் வயோதிக் காதல் தான்.
இளமைக்காலத்தில் வேலை, பிள்ளை வளர்ப்பு என்று தன் துணையுடன்
நேரம் செலவிட முடியாமல் போகிறது.
வயதான பிறகும் காதல் மிச்சமிருந்தால்
வேறு என்ன வேண்டும்.
50 வயதிற்கு பிறகு அன்னியோன்யாமாக ஒருவர் கைபிடித்து
ஒருவர் நடக்க,
ஒருவருக்கு ஒருவர் துணையாக ஆஹா, நினைத்துப்பார்கையில்
மனம் சிலிரிக்கிறது.
இதோ உங்களுக்காக இந்த வீடியோ.
காதல் அவசியமானது, கட்டுப்பாடுகள் அற்றது.
காதல் காதல் காதல். காதல் போயின் சாதல்.
காதலியுங்கள் உங்கள் வேலையை, பிள்ளைகளை
மட்டுமல்ல. மனைவியையும் தான்.
சரி நான் தொடர அழைப்பது
புதுகை அப்துல்லாவை.
33 comments:
மீ த பர்ஸ்ட்டு?
:-)
உடனே பதிவு வந்தாலும் நல்லா எழுதி இருக்கீங்க.
//நம்ம வலையுலகில் டாக்கில் மாட்டாமல்
இருப்பதும் கஷ்டம். நானும் மாட்டிட்டேன். :(//
இதெல்லாம் ஒரு கஷ்டமா? என்னைய பாருங்க. எதுவுமே எழுதாம ஆனா எதோ எழுதின மாதிரி எப்படியோ ஒவ்வொரு தடவையும் தப்பிக்கிறேன்:)
//மாட்டிவிட்ட சென்ஷி நல்லா இருங்க (வாழ்த்துதான் :) )//
வாழ்த்து மாதிரியும் தெரியுது....
//காதல். உச்சரிக்கும்போதே உள்ளத்தில் ஒரு உற்சாகம்.//
எஸ்ஸு....
//காதலில் தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை,
ஆனால் காதிலில் விழாதது கொடுமை
என்று எங்கோ எப்போதோ படித்திருக்கிறேன்.///
விழாதே கொடுமையா? நான் காதலில் விழவே இல்லையே? என்ன கொடுமை இது?
வாங்க நிஜமா நல்லவன்,
//உடனே பதிவு வந்தாலும் நல்லா எழுதி இருக்கீங்க.//
மிக்க நன்றி.
விழாதே கொடுமையா? நான் காதலில் விழவே இல்லையே? என்ன கொடுமை இது?
ஹலோ என்னதிது நிஜமா நல்லவன். :)
அதான் கல்யாணம் ஆகிடிச்சில்ல.
கல்யாணத்துக்கப்புறமாவது மனைவியை காதலிக்கனுமப்பு
வாங்க தேவதை,
ஸ்மைலிக்கு நன்றி.
வீடியோ ரொம்ப நல்லா இருக்கு.
//திருமணத்திற்கு பிறகு வரும் காதல் மிக அழகானது.
(காதல் திருமணங்களில் திருமணத்திற்கு பிறகு காதல்
காணாமல் போய்விடுகிறதே..)///
இப்படி எல்லாம் சின்ன புள்ள என்னை பயமுறுத்த கூடாது:(((((((
இப்படி எல்லாம் சின்ன புள்ள என்னை பயமுறுத்த கூடாது:(((((((
அட இதப்பார்றா. இன்னமும் தன்னை சின்னப்புள்ளைன்னு சொல்லிக்கிறாரு.
கொடுமைதான் சரவணன்.
:)))))))))))))))))))))))
\\பரமபத விளையாட்டில் பாம்பு வாயில் கடிபட்டு
இறங்காமல் வருவது கஷ்டம். அது மாதிரி
நம்ம வலையுலகில் டாக்கில் மாட்டாமல்
இருப்பதும் கஷ்டம்//
நல்லாச்சொன்னீங்க..ஆனா அது தானே ஆட்டத்தின் சுவாரசியமே... :))
காதலியுங்கள் உங்கள் மனைவியையும் தான்.//
அய்யய்ய! இப்படி அடுத்தடுத்து அதிர்சியக் குடுத்தா என்ன பண்றது.
/
குசும்பன் said...
//திருமணத்திற்கு பிறகு வரும் காதல் மிக அழகானது.
(காதல் திருமணங்களில் திருமணத்திற்கு பிறகு காதல்
காணாமல் போய்விடுகிறதே..)///
இப்படி எல்லாம் சின்ன புள்ள என்னை பயமுறுத்த கூடாது:(((((((
/
ரிப்ப்ப்பீட்ட்ட்ட்டு
/
"காதல் எனப்படுவது யாதெனில்............."
/
'நச்'னு ஒரு நயந்தாராவை பார்த்தவுடன் வருவது
அப்படின்னு வெளில பேசிக்கிறாய்ங்களே!?!?
//
சரி நான் தொடர அழைப்பது
புதுகை அப்துல்லாவை.//
அய்யோ!சாமீமீமீமீ! மாட்டிக்கிட்டியேடா கைப்புள்ள! ஒ.கே ஒத்துக்கறேன். தென்றல் அக்கா உங்களுக்கு ஊர்காரனா இருந்தா இப்படியெல்லாம் கொடுமைய அனுபவிக்கனும்கறத ஒத்துக்கறேன். ஆணி எல்லாத்தையும் புடுங்கிட்டு ஒரு டூ டேஸ்ல எழுதிர்ரேன்.
வாங்க கயல்விழி,
சரியாச் சொன்னீங்க. ஆட்டத்தின் சுவாரசியம் அதுதான்.
அய்யய்ய! இப்படி அடுத்தடுத்து அதிர்சியக் குடுத்தா என்ன பண்றது.
அப்துல்லா நான் ஊருக்கு வரும்போது உங்கள் மனைவியிடம் பேசிக்கொள்கிறேன்.
:))))))))))
//'நச்'னு ஒரு நயந்தாராவை பார்த்தவுடன் வருவது//
கொடுமை
கொடுமை
கொடுமை
கொடுமை
'நச்'னு ஒரு நயந்தாராவை பார்த்தவுடன் வருவது
அப்படின்னு வெளில பேசிக்கிறாய்ங்களே!?!?
நய்நதாராவை நீங்க பார்த்து உங்களுக்கு காதல் வருவதை விட நயனுக்கு காதல் வரணுமே!
அது மேட்டர்.
நயன் தாராவா? இருக்கட்டும்.
பேசிக்கிறேன்.
அப்துல்லா,
இதெல்லாம் டிராபிக்கை உங்க பிளாக் பக்கம் திருப்ப வழி.
அம்புட்டுதான்.
நல்லா இருக்குங்க.... :))
சுருக்கமா இலகுவா சொல்லிட்டிங்க!
தொடர்ல மாட்டினாலும் பதிவில இருந்து தப்பிச்சுட்டிங்க...:)
///காதலில் தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை,
ஆனால் காதிலில் விழாதது கொடுமை
என்று எங்கோ எப்போதோ படித்திருக்கிறேன்///
நல்ல விசயம்தான் படிச்சிருக்கிங்க..;)
ஆமா...நீங்க...???? :)
//திருமணத்திற்கு பிறகு வரும் காதல் மிக அழகானது.
(காதல் திருமணங்களில் திருமணத்திற்கு பிறகு காதல்
காணாமல் போய்விடுகிறதே..)///
உண்மையாவா....:))
இதோட குசும்பன்சார் 'கமன்டுக்கும்'
ரிப்பீட்டு..
நல்லாருக்கு...:)
வாங்க சென்ஷி,
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
ஆமா...நீங்க...???? :)
கல்யாணத்துக்கப்புறம் அயித்தானை இன்னமும் காதலிச்சுகிட்டுத்தானே இருக்கேன்.
காதல் மாறததுங்கோ!!
தமிழன்... said...
நல்லாருக்கு...:)
நன்றி தமிழன்
//என்னைக் கவர்ந்த காதல் வயோதிக் காதல் தான்.
Yeah, Its true!
:)
Post a Comment