இந்தவாரம் தயிரை வைத்துச் செய்யப்படும் உணவை
பதிவாக போட வேண்டும் என்பது தமிழ் வலைப்பூ சமையல்
திரட்டியின் வாரத்திட்டம்.
என்னுடைய பதிவு கடி பக்கோடி: KADI PAKODI
கடி இது தயிரில் தயாரிக்கப்படுவது. பாசிப்பருப்பு, அல்லது
மைசூர் பருப்பில் செய்யப்படும் கிச்சடி (பொங்கலுக்கு)
சூப்பர் ஜோடி இந்தக் கடி. கடிக்காகவே இன்னும் ரெண்டு
கரண்டி கிச்சடி சாப்பிடுவீங்க.
தேவையான பொருட்கள்:
கடி செய்ய:
தயிர் - 400 கிராம்.(கடைந்து வைத்துக்கொள்ளவும்)
கடலை மாவு - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை அளவு.
உப்பு தேவையான அளவு.
பச்சை மிளகாய் - 2
கடுகு,சீரகம் தாளிக்க எண்ணைய்.
தண்ணீர் 2 கப்.
பக்கோடி செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1/2 கப்
விரும்பினால் சோடா- 1 சிட்டிகை.
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.
கொத்தமல்லித்தழை கொஞ்சம்.(பொடியாக அரிந்தது)
பெருங்காயம் சிறிதளவு.
(விரும்பினால் மசித்த உருளைக்கிழங்கு 1/4 கப்)
பொறிக்க எண்ணைய்.
செய்முறை:
பக்கோடி செய்முறை. மேற்சொன்ன சாமான்கள்
அனைத்தையும் ஒன்றாக பிசைந்து (தேவையானால்
கொஞ்சம் நீர் சேர்த்து) உருண்டையாகவோ,
சிறிய தட்டையாகவோ தட்டி எண்ணையில்
பொறித்து வைத்துக்கொள்ளவும்.
கடி செய்முறை:
கடலைமாவில் நீர் சேர்த்து கலந்து அடுப்பில்
வைத்து கொதிக்க விடவும். பச்சை வாடை
போக கொதித்ததும், கடைந்து வைத்துள்ள
தயிரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி
வைத்து கடுகு, பச்சைமிளகாய், சீரகம் தாளிக்கவும்.
பரிமாறுவதற்கு சற்றுமுன் பக்கோடியைச் சேர்த்து
பரிமாறாவும்.
15 comments:
மீ த ஃபர்ஸ்டு
தங்கமணிக்கு தகவல் சொல்லி இதைப் படிக்கச்சொல்லிட்டேன்
வாங்க அப்துல்லா,
அடுத்தமுறை புதுகை போகும்போது செஞ்சு கொடுக்கச்சொல்லிச் சாப்பிட்டு பாருங்க.
ஒரு மாறுதலுக்காக
சாப்பிடுவோம்
ஓ இதென்ன இலங்கையா - இல்லை ஹைதராபாத்தா ? - புதுகையில் இது உண்டா என்ன
கடி பகோடி - செஞு சாப்பிட்டுப் பாக்கனும் - பலே பலே
வாங்க சாரல்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
வாங்க சீனா சார்,
இது இலங்கை, ஹைதராபாத், புதுகை எங்கும் இல்லை.
இது குஜராத்தி உணவு.
ஆகா உடனே செய்து பார்த்திடுறேன்..::)
No, Sir.
It is a food item that is found in many Northern and North-western States of India, including Gujarat.
It is one of the favorite dishes at my home, we live in North India, but not in Gujarat.
புதுகைத் தென்றல்!
பர்ர்க்கவே அருமையாயிருக்கு! செய்து ருசித்தாலும் அப்படித்தானிருக்கும்.
செய்து ஒரு கை பார்த்துவிடுவது!!!
வாங்க தூயா,
செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க.
வாங்க கரிகுலம் சார்,
வருகைக்கு நன்றி.
வாங்க நானானி,
செஞ்சு ஒரு கை என்ன 2 கை கூடப் பாருங்க.
சூப்பர் டேஸ்டா இருக்கும்.
கிச்சடிக்கு இது சூப்பர் ஜோடி. :)
புதுமையான நல்ல டிஸ். நிச்சயம் ரேஸ்டாக இருக்கும் போல் தெரிகிறது. முடியும்போது செய்து பாரக்கிறேன்.
பாராட்டுக்கள்.
அருமையாக இருக்கிறது உங்கள் ரெசிப்பி .நான் சமீபத்தில் வாழைத்தண்டு பொரியல் செய்வது பற்றி http://www.valaitamil.com/poriyal-valai-thandu-poriyal_3779.html என்ற
வலைதள முகவரியை பார்த்து செய்தேன். வாழைத்தண்டு பொரியல் மிகவும் அருமையாக இருந்தது, நீங்களும், பார்த்து செய்து பாருங்களேன்.
Post a Comment