அண்ட சராசரங்கனளயும் காப்பவள் அன்னை.
அன்னையின் ஸ்லோகங்களிலேயே லலிதா ஸகஸர்நாமம்
சிறந்தது.
அன்னையின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்வதுதான்
இந்த ஸகஸ்ரநாமம். பிரம்மாண்ட புராணத்தில்
ஹயக்கீரிவருக்கு (குதிரை முகமாக விஷ்ணுவின் அவதாரம்)
அகஸ்த்திய முனிவருக்கும் இடையே நடக்கும்
பேச்சுதான் இந்த ஸ்லோகம்.
அன்னையின் கட்டளைக்கு இணங்க 8 வாக்தேவிகளும் இயற்றியது
இந்த ஸ்லோகம். அதனாலேயே அன்னையின் அருள் இல்லாவிட்டால்
லலிதா படிக்கவோ, கேட்கவோ இயலாது என்பார்கள்.
கேசாதி பாதம் (தலைமுதல் பாதம் வரை) அன்னையை வர்ணிக்கப்
படுகிறாள்.
அம்பிகையை உபாசிப்பவர்கள் லலிதா ஸகஸ்ர்நாமத்தை
பாராயணம் செய்வார்கள்.அன்னையின் அர்ச்சனை,
ஹோமம் போன்றவற்றிற்கும் இதுதான் முக்கிய ஸ்லோகம்.
வேற எந்த ஸகஸ்ர்நாமத்திலும் இல்லாத புதுமையாய்
லலிதாவில்தான் ஒரு முறை உச்சரிக்கப்பட்ட நாமம்
மறுமுறை வராது.
பஞ்சகிருத்ய பாராயணவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள் அன்னை.
பஞ்சகிருத்யம் என்றால் 5 முக்கியமான வேலைகள்.
ஸ்ருஷ்டி,(ஆக்குதல்) ஸ்திதி,(காத்தல்),
ஸம்ஹாரம்,(அழித்தல்) த்ருதோதனம்(மறைத்தல்)
அனுக்ரஹம் (ஆசிர்வாதம்) இவை பஞ்சக்ருதயம் எனப்படும்.
இச்சாசக்தி, ஞானசக்தி , க்ரியாசக்தியாக அருள் பாலிக்கிறாள்
அன்னை.
லலிதா ஸகஸர்நாமம் பாராயணம் செய்வதால்
கிட்டும் பலனைச் சொல்லி மாளாது.
ஒரு மண்டலம் (45 நாள்) அன்னையின் ஸகஸர்நாமம்
படித்தால் வேண்டியது கிட்டும்.
வெள்ளிக்கிழமைகளில் படிக்க அன்னை அங்கேயே
கொலுவிருப்பாள்.
நவராத்திரி 10 நாளும் லலிதா படித்தவர்களுக்கு
வேண்டியது வேண்டியபடியே கிட்டும்.
லலிதா ஸகஸர்நாமம் படித்தபிறகு
லலிதா ஸகஸர்நாம பலச்ச்ருதி ஸ்லோகத்தில்
7 ஸ்லோகம் படித்தல் வேண்டும்.
அன்னையை பூஜித்து அப்பனை பூஜிக்காமல்
விடக்கூடாது.
லலிதா படித்தால் லிங்காஷ்டகம் அல்லது
சிவஸ்துதி ஒன்று கட்டாயம் படிக்க வேண்டும்.
வரும் வாரங்களில் லலிதா சக்கரங்களில்
கொலுவிருக்கும் அழகை எழுதவிருக்கிறேன்.
6 comments:
நல்லதொரு தொடக்கம். எழுதிய அத்தனையும் உண்மை. தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளேன்.
கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி பார்க்கலாமோ?
வாங்க அம்பி,
வருகைக்கு நன்றி.
எழுத்துப்பிழைகளை சரிசெய்துவிட்டேன்.
நன்றி.
அன்னையின் ஆயிரம் திரு நாமத்தினை உசரைத்த பிறகு தான் அப்பனைப் பூஜிக்க வேண்டுமா ? பலே பலே ! அருமையான பதிவு
நல்வாழ்த்துகள்
அக்கா எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது.ஆனால் எந்த மதத்தில் என்ன சொல்லி இருந்தாலும் அது கண்டிப்பாக மக்களின் நன்மைக்காகத்தான் இருக்கும்
அன்னையின் ஆயிரம் திரு நாமத்தினை உசரைத்த பிறகு தான் அப்பனைப் பூஜிக்க வேண்டுமா ?
வாங்க சீனா சார்,
அன்னையை மட்டும் பூஜித்தால் போதாது என்பார்கள்.
அது மாதிரி விஷ்னு சகஸ்ரநாமம் படித்தால் லக்ஷ்மி ஸ்லோகம் கட்டாயம் படிக்க வேண்டும் என்பார்கள்.
அக்கா எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது.ஆனால் எந்த மதத்தில் என்ன சொல்லி இருந்தாலும் அது கண்டிப்பாக மக்களின் நன்மைக்காகத்தான் இருக்கும்
வாங்க அப்துல்லா,
ரொம்ப சரியா சொன்னீங்க.
Post a Comment