Wednesday, July 09, 2008

TA RA RUM PUM - ஒரு விமர்சனம்.

ராணிமுகர்ஜி, சாயிஃப் அலிகான் இவர்கள் ஜோடியாக
நடித்து சென்ற வருடம் வெளிவந்த திரைப்படம்
தா ரா ரம் பம்.

மிக அருமையானக் கதை, நல்ல நடிப்பு,
பாடல்கள் அருமை என சரியானக் கலவையாக
இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் ஓஹோ வென்று
இல்லாவிட்டாலும் நல்ல கலெக்‌ஷன் தந்தது.




யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின்
கதை இதுதான்.

கார் ரேஸ் களத்தில் டயர் சேஞ்சராக இருந்த ராஜ்வீர் சிங் ( சயிஃப்),
ரேஸ் ஓட்ட மிக்க விருப்பம் கொண்டவர். ஜாவித் ஜாஃப்ரி யை
சந்தித்த பிறகு ஜாஃப்ரி மானேஜராக பணிபுரியும் ஸ்பீடிங் சாடில்ஸ்
நிறுவனத்தில் ரேஸ் கார் ஓட்டுனர் ஆகிறார்.R.V என்று நாமகரணம் ஆகிறது.
பெரும் புகழ் அடைகிறார் R.V (RAjveender)

ராணிமுகர்ஜியை சந்தித்து இருவரும் காதலித்து திருமணம்
(தந்தைக்கு எதிராக )முடிக்கிறார்கள். R.V பெரிதாக
படிக்கவில்லை, எந்த பெரிய சேமிப்பும் கிடையாது.
தான் ஓட்ட ரேஸ் கார், இருக்க வீடு இப்படி எல்லாம்
லோனில் வாங்குகிறார்.




2 குழந்தைகள் சாம்ப் & பிரின்ஸஸ். எல்லாம் நல்லபடியாக இருக்கிறது.
அந்த கோர விபத்து ஏற்படும் வரை.

ஒரு கார் ரேஸில் ரஃப்டி எனும் கார் ரேஸ் வீரர் வந்து இடிக்க
R.vன் கார் விபத்துக்குள்ளாகி 1 வருடம் ரேஸ் ஓட்ட
இயலாமல் போகிறது. 1 வருடம் கழித்து மீண்டும் ரேஸ் கார்
ஓட்ட தயாராகும் R.V, மைதானத்தில் இறுதிச் சுற்றில்
ரஃப்டி தன்னை விபத்துக்குள்ளாக்கியது நினைவு வர
முதலிடம் பெறாமல் தோற்றுப் போகிறார்.

அத்துடன் ஸ்பீடிங் ஸாடில்ஸ் தனது கதவை R.vக்காக
மூடி விட்டு ரஃப்டியை குழுவில் இணைக்கிறது.
தன் சொந்த காரணங்களால் வேலையை விட்டு வர முடியாத
ஹாரி (ஜாஃப்ரி)யுடன் கோபப்பட்டு வருகிறார் R.V

இனி ரேஸ் ஓட்ட முடியாத சூழ்நிலை. போதிய படிப்பு இல்லாததாலும்,
வேறு எந்த அனுபவமும் இல்லாத சூழ்நிலையிலும்
வேலை அற்றவனாக வீடு திரும்பும் R.Vக்கு காத்திருக்கிறது
அதிர்ச்சி.


விபத்துக்கு பிறகு ரேஸ் ஓட்டாததால் வருமானம் இல்லாமல்
வீடு, கார், திருமண மோதிரம் வரை விற்று கடன் அடைத்து
கையில் வெறும் 2000 டாலர்களுடன் மிகச் சாதாரண
பகுதிக்கு குடி போகிறார்கள்.

நமக்கு என்ன ஆச்சு என்று கேட்கும் பிள்ளைகளிடம்
ரியாலிட்டி ஷோவிற்காக இந்த வீட்டை விட்டு
விட்டு ஏழைப்போல் வேறு வீட்டில் இருக்கப்போகிறோம்
என்று கூறுகிறார்கள்.

பங்களா வாசியாக இருந்தவர்கள் 1 அறை மட்டுமே
இருக்கும் மிகச் சாதரணமான இடத்தில் வாழுகிறார்கள்.
பியானோ வாசித்து வரும் பணத்திலும், R.v
ரேஸ் தளத்தில் டயர் சேஞ்சராக பணியாற்றியும்
வரும் பணம் கைக்கும் வாய்க்கும் மட்டுமே
போதுகிறது.

பிள்ளைகள் அதே பள்ளியில் தொடர
அடுத்த டர்ம் பணம் 3000 டாலர் கட்டியாக
வேண்டும். இந்த நிலையில் ஹாரி வந்து
டாக்ஸி லைசன்ஸ் கொடுக்கும்போது
ஆர்வி அதை ஏற்க மறுக்கிறார்.


நான் டயர் சேஞ்சராக இருந்தாலும் இருப்பேனே
தவிர,டாக்ஸி ஓட்ட மாட்டேன் என்று மனைவியிடம்
சண்டை போடும் R.V, குடும்ப நிலைக்காக
டாக்ஸி ஓட்டுகிறார்.








நீ டயர் சேஞ்சராக இருந்தாலும் சரி,
கார் ரேஸராக இருந்தாலும் சரி நான்
உனக்கு எந்த நிலையிலும் துணை இருப்பேன்
என்று மனைவி கூறுகிறாள்

தந்தையும், தாயும் தாம் நிஜமாகவே ஏழைகள்
ஆகிவிட்டோம் என்று பேசிக்கொள்வதை
கேட்ட மகள் பிரின்ஸஸ், தனது பள்ளியை
விட மனமில்லாமல், தானும் தனது தம்பியும்
சேர்ந்து மதிய உணவுக்காசை மிச்சம் பிடிக்கின்றனர்.

பசி பொறுக்க முடியாத மகன் சாம்ப்,
குப்பைத் தொட்டியில் வீசப்படும் உணவை
எடுத்து உண்கிறான்.

இந்த நிலையில் தனது சக டாக்ஸி டிரைவர்களிடம்
தனது மகளுக்கு நிமோனியா ஜுரம் ஏற்பட்டதாக
கூறி பணம் கடன் வாங்கி(1000 டாலர்)
பிள்ளைகளின் பள்ளி ஃபீஸ் கட்டுகிறார் R.V.

மகளின் ஏழை நிலையை அறிந்த பணக்கார
தந்தை 50000 டாலர் செக் பணம் கொடுத்து
மாப்பிள்ளையை இழிவாக பேசுகிறார்.
நீங்கள் தந்த பணம் வேண்டாம் என்று கூறி
செக்கை கிழித்து போட்டுவிட்டு வருகிறார் ராதிகா.




சாம்பின் பிறந்தநாள் கோலகலமாக கொண்டாடி
விட்டு வரும்போது டாக்ஸி டிரைவர்கள்
குழந்தையின் உடம்பை பார்த்துக்கொள்ளுமாறு
கூறும்போது சந்தேகப் பட்டு, மனைவி வீடு
வந்ததும் கேட்க, தான் கடன் வாங்கிய செய்தியைச்
சொல்கிறார் R.V.

கோபப்பட்ட மனைவி இந்த நிலையை விட
பிள்ளைகளிடம் உண்மையைச் சொல்லிவிடலாம்
என்று மகனை எழுப்ப, அவன் வாயில் ரத்தம்
ஒழுகுகிறது.

மெடிக்கல் இன்சூரன்ஸ் கூட எடுத்திருக்காத நிலையில்
பெரிய தொகை கட்டணம் கட்டி ஆபரேஷன்
செய்தால்தான் மகன் பிழைப்பான் என்ற நிலையில்
ஸ்பீடிங் சாடில்ஸ் அதிபரிடம் போய் கேட்க
அவர் கேவலப்படுத்துகிறார்.

பொங்கி வெளியே வரும்போது ஹாரி ஸீபிடிங்
ஸாடில்ஸ் வேலையை விட்டுவிட்டு தனது
கையிருப்பு தொகையை வைத்து R.vக்காக
டீம் ஏற்பாடு செய்து பதிவு செய்து ரேஸ்ஸிற்கு
ஏற்பாடு செய்கிறார்.

R.V ஜெயித்து தன் மகனை காப்பாற்றுகிறாரா
என்பது தான் கிளைமாக்ஸ்.

படத்தில் நெகிழ்ச்சியான, பாடம் சொல்லும்
காட்சிகள் பல.

1. ஏழ்மையான நிலையை அடைந்ததும்
உண்ண உணவில்லாமல் தவிக்கும்போது
நாயை அனுப்பிவிடும் காட்சி.

2. பர்த்டே பார்டிகளிலும், ஹோட்டல்களிலும்
பியானோ வாசித்து பணம் சம்பாதிக்கும் ராதிகா,
ஒரு பர்த்டே பார்டியில் உணவு மேசையில்
உணவைக் கைப்பையில் அடைத்துக்கொண்டு
வருவது கண்களில் நீரை வரவழைக்கும் காட்சி.

3. மதிய உணவு நேரத்தில்,” ரொம்ப பசிக்குது,
ஒரே ஒரு டோனட் சாப்பிடவா”? என்று சாம்ப் கேட்கும்
காட்சி.

இப்படி எத்தனையோ!




கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

9 comments:

MyFriend said...

நானும் பார்த்தேன். சிக்கனம் எவ்வளவு அவசியம்.. வீண் செலவு என்ன மாதிரியான பிரச்சனைகளில் கொண்டு விடும் என்று நல்ல பாடம் புகட்டியிருக்கிறார் இயக்குனர். :-)

pudugaithendral said...

வாங்க மை ஃபிரண்ட்,

ஆமாம். நல்ல கருத்துச்செறிவுள்ள படம்.

வருகைக்கு நன்றி

சுரேகா.. said...

ஐனாக்ஸில்....உன்னாலே உன்னாலே பார்க்கப்போய்

தமிழ்ப்படத்தை அப்புறம் பாத்துக்கொள்ளலாம்..இந்தப்படத்தின்
போஸ்டர் நன்றாக உள்ளதே என்று சென்று பார்த்துவிட்டு, கனத்த மனதுடன் வெளிவர வைத்த படம்.

அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள்.

கானா பிரபா said...

வாடகைக்கு எடுத்துக் கொஞ்சம் பார்த்தேன், வேறு வேலைகளால் முழுமையாகப் பார்க்கமுடியவில்ல. விமர்சனத்துக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சுரேகா,

ஆமாம். நீங்கள் சொன்னது போல மனம் கனத்துதான் போனது.

ஒவ்வொருவரின் வாழ்விலும் சில சம்யம் டவுன்ட்ரேட் உண்டு. அதிலிருந்து எப்படி எழுகிறோம் என்பதுதான் வாழ்க்கை.

pudugaithendral said...

நான் விழுந்ததே இல்லை என்று சொல்பவரை விட, விழுந்து எழுந்து நிற்பவரே எழுதல் மற்றும் எழுந்து நிற்தலை கற்றவராகிறார் அல்லவா.

pudugaithendral said...

வாங்க பிரபா,

நேரம் கிடைக்கும்போது முழுமையாக பார்த்துவிடுங்கள்.

எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறையாவது இப்படம் பார்க்கப்படும்.

பிள்ளைகள் மிகவும் விரும்பும் ஒரு படம் ஆகிவிட்டது.

புதுகை.அப்துல்லா said...

உஸ்..அப்பாடி நீங்களாவது தசாவதாரத்துக்கு எழுதாம வெற படத்துக்கு விமர்சனம் எழுதுனீங்களே!வாழ்க நீங்க..

மங்களூர் சிவா said...

விமர்சனமே இவ்ளோ நல்லா இருக்கு!

பாத்துடுவோம்!