Friday, August 01, 2008

உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்.

6 வருடங்களுக்கு முன்பு அயித்தானுக்கு இலங்கை மாற்றுதல்
ஆன போது, எல்லோரும்,அங்கே ஏன் போகிறீர்கள்? யுத்தம் நடக்கிறதே!
பயமாக இல்லை? என்று பலரும் பலக்கேள்விகள் கேட்டார்கள்.
அந்த பயம் எங்குதான் இல்லை? இலங்கையில் யுத்தம் சரி.
நம் நாட்டில் என்ன நிலமை நன்றாகவா இருக்கிறது.


மும்பை லோக்கல் ரயில்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு,
கோயம்புத்தூர் குண்டு தாக்குதல், இந்தோ பங்களூரு பயங்கரம்,
அகமதாபாத் அவலம் எல்லாம் எங்கே நடக்கிறது?
நம் இந்தியாவில் தானே?


உலகத்தின் எந்த மூலையிலும் உயிர் பயம் இருக்கத்தான்
செய்கிறது. அது இயற்கையின் சீற்றமோ, இருப்பவர்களின்
சீற்றமோ உயிர் பலியாகிக்கொண்டுதான் இருக்கிறது.



மதத்தின் பேரால் குஜராத்தில் ரயில் எரிந்ததைச் சொல்வதா,
மதத்தின் பெயரால் சார்மினார், லும்பினி பார்க்கில் குண்டு
வெடித்ததைச் சொல்வதா. பாவம். கோகுல் சாட்டில்
சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் மாண்டார்களே!



இதற்கு தீர்வுதான் என்ன? நம் இந்திய நாட்டில் நமக்கு
இருக்கும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு இடையே
இப்போது இந்த உயிர் பயம் மிகப் பெரிய பிரச்சினையாக
இருக்கிறது.



நாங்கள் இலங்கையில் இருந்தவரை செய்திகளில்
இலங்கையைப் பற்றிய எந்த செய்தி வந்தாலும்
உறவினர்கள், நண்பர்கள் கண்களின் நாங்கள்
ஒருமுறை வந்து செல்வோமாம். உடனே
போன் வந்துவிடும்.


மங்களூர் சிவாக்கூட நான் இலங்கையிலிருந்து
சாட்டும் போது அடிக்கடி, ”யுத்த பூமியில்
உட்கார்ந்து கொண்டு ஜோக் அடிக்காதீங்க.
சீக்கிரம் கிளம்பி வாங்க தாயி!
என்பார்”.


சரி எதற்கு இந்த சீரியஸ் பதிவு? இதில் என்ன சிரிப்பு
என்கிறீர்களா? விதி வலியதுங்கோ.



லேட்டஸ்ட் நீயூஸ் தெரியுமா? பங்களூர்,
அகமதாபாத்திற்கு அடுத்து ஹிட் லிஸ்டில் இருப்பது
ஹைதை தான்.


அக்டோபரில் தீபாவளி வேண்டாம், ஆகஸ்ட் 15க்குள்
தீபாவளி கொண்டாடலாம் என்று இருக்கிறார்களாம்.


உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்!!!!!!

16 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிலநடுக்கமா யமுனை கரை தான் ..டார்கெட்.. குண்டுவெடிப்பா எப்பவும் டில்லி தான் ஹை அல்ர்ட் அதனால் அப்பப்ப இப்படி பயந்தபடி கால்வருவது சகஜம் தான்.. நானு உலகத்தை நினைச்சு சிரிச்சிக்கிட்டே தான் இருக்கேன்.. :)

pudugaithendral said...

வாங்க கயல்விழி,

நானும் அதைத் தான் சொல்கிறேன். தலைநகர் மட்டுமல்ல எந்த நகருமே இப்போ சேஃப்டி இல்ல.

செய்தியை விட இந்த போன் கால்கள் தான் பிரச்சனையே.

:)

rapp said...

:(:(:(:(:(

pudugaithendral said...

vanga rapp.

:(

நிஜமா நல்லவன் said...

உயிருக்கு பயந்தா வாழ முடியுமா? நடக்கிறது நடக்கட்டும் என்று போய்கிட்டே இருக்கவேண்டியது தான். நான் 'சேப்' ஆனா இடத்தில் இருக்கிறதால இப்படி சொல்லுறதா நினைக்காதீங்க. எங்க இருந்தாலும் என்னோட நிலை இது தான்.பூசல்கள், குண்டு வெடிப்புகள், போர்கள் அற்ற சமுதாயம் என்றாவது ஒருநாள் மலரலாம். நாம் அன்று இல்லாவிட்டாலும் நமது வாழ்த்துக்களையும் நல்ல எண்ணங்களையும் விட்டுச் செல்வோம் அப்படி ஒரு சூழ்நிலை மலர.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

இந்த உலகத்தில் எதுவுமே safe இல்லை .
ஆனால் எல்லா இடமும் safe thaan

புதுகை.அப்துல்லா said...

பிறப்பது ஒருமுறை!
இறப்பது ஒருமுறை!
எதற்கிந்த வன்முறை!

குரங்கு said...

====
மதத்தின் பேரால் குஜராத்தில் ரயில் எரிந்ததைச் சொல்வதா,
மதத்தின் பெயரால் சார்மினார், லும்பினி பார்க்கில் குண்டு
வெடித்ததைச் சொல்வதா. பாவம். கோகுல் சாட்டில்
சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் மாண்டார்களே!
====

அனைந்து மதங்களும் ஒழிந்ததான் நிம்மதியா வாழமுடியும் போல...

மங்களூர் சிவா said...

இது வேறு அது வேறு புதுகை அக்கா!!

மங்களூர் சிவா said...

/
முத்துலெட்சுமி-கயல்விழி said...

நானும் உலகத்தை நினைச்சு சிரிச்சிக்கிட்டே தான் இருக்கேன்.. :)
/

ரிப்பீட்டு

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,
உயிருக்கு பயமா? அந்த பயம் இருந்திருந்தா அங்க 6 வருடம் ஓட்டியிருக்க முடியாது.

நிலமைச் சொன்னேன். இந்தியா வந்திடுங்க வந்திடுங்கன்னு புலம்பிகிட்டு இருந்தாங்களே! இங்க நிலமை எம்புட்டு அழகா இருக்குன்னு சொன்னேன்.

pudugaithendral said...

இந்த உலகத்தில் எதுவுமே safe இல்லை .
ஆனால் எல்லா இடமும் safe thaan

எல்லா இடமும் சேஃபா இருக்கணும்னு தான் என் விருப்பமும் நண்பரே...

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,
மிக அழகான கவிதையா சொல்லிட்டீங்க.

வாழ்த்துக்கள், நன்றி

pudugaithendral said...

அனைந்து மதங்களும் ஒழிந்ததான் நிம்மதியா வாழமுடியும் போல...//

மிகச் சரியாக சொன்னீங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

pudugaithendral said...

எதுவும் வேற இல்ல சிவா,

எல்லாம் ஒன்றுதான்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
புதுகைத் தென்றல் said...
.....
செய்தியை விட இந்த போன் கால்கள் தான் பிரச்சனையே. ===>
எல்லாம் உஙகமேல உள்ள அதீத அக்கறைதான்.

நீங்க அச்சமயத்திலே இலங்கையிலே குடும்பத்தாருடன் சந்தோஷமா இருந்ததா, ப்ளாக்ல தினமும் போட்டிருந்தா,அவ்ளோ போன் கால் வந்திருக்காதோ என்னமோ.
சாம்பிளுக்கு