நான் கொத்து பரோட்டா செய்வது எப்படின்னு பதிவு
போடுவதில்லை. கொத்து சப்பாத்தி செய்வது
எப்படின்னு தான் பதிவு போடப்போறேன்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 3
(நீங்க செஞ்சாலும் சரி, கடையில்
வாங்கிக் கிட்டாலும் சரி)
வெங்காயம்- 1 பொடியா நறுக்கியது
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது.
கறிவேப்பிலை, கடுகு, தாளிக்க எண்ணைய்.
உப்பு, பச்சை மிளகாய் - 1
தேங்காயப் பால் கட்டிப்பால் 1/4 டம்பளர்.
செய்முறை:
சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து
கடுகு, பச்சை மிளகாய் தாளித்து கறிவேப்பிலை
சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி
சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு வெட்டி வைத்திருக்கும் சப்பாத்தியை
அதில் சேர்த்து பிரட்டி உப்பு சேர்க்கவும்.
கடைசியில் தேங்காய்ப்பால் சேர்த்து
கிளறினால் கொத்துச் சப்பாத்தி ரெடி.
26 comments:
மது... has left a new comment on your post "கொத்து பரோட்டா. இல்லை இல்லை கொத்து சப்பாத்தி செய்வ...":
நான் தான் first ???!!!
நிஜமா நல்லவன் has left a new comment on your post "கொத்து பரோட்டா. இல்லை இல்லை கொத்து சப்பாத்தி செய்வ...":
அட ரொம்ப ஈஸியா( சப்பாத்தி கடைல வாங்கினா) இருக்குதே.....ட்ரை பண்ணி பார்த்துட வேண்டியது தான்:)
மது... has left a new comment on your post "கொத்து பரோட்டா. இல்லை இல்லை கொத்து சப்பாத்தி செய்வ...":
நைட் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று யோசிச்சிகிட்டு இருக்கும் போது நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க இப்போவே போயி செய்கிறேன். சாப்பிட்டு பார்த்துவிட்டு நானே சொல்கிறேன் எப்படி இருந்தது என்று
முத்துலெட்சுமி-கயல்விழி has left a new comment on your post "கொத்து பரோட்டா. இல்லை இல்லை கொத்து சப்பாத்தி செய்வ...":
ஓ அப்படி போடுங்க.. சரி .. கோலத்துக்கு பதிலா என்னாப்போடப்போறீங்க ? :))
ஆக்சுவலா கயல்விழிதான் பர்ஸ்டு.
கமணெட் மாடரேட் ஆகாமல் போச்சு. அதான் கட் காபி பேஸ்ட் செய்தேன்.
கயல்விழி,
கோலத்திற்கு பதில் மெஹந்தி பதிவு வரும் எதிர் பாருங்கள்.
ஈசிதான் நிஜமா நல்லவன்,
ருசியும் அபாரம்.
ஆஹா மது
செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க.
ஆடோ அனுப்பிடாதீங்கப்பா.
கோலத்திற்கு பதில் மெஹந்தி பதிவு வரும் எதிர் பாருங்கள்.//
;))
/
சப்பாத்தி - 3
(நீங்க செஞ்சாலும் சரி, கடையில்
வாங்கிக் கிட்டாலும் சரி)
/
ஏன் கொத்து சப்பாத்தியாவே கிடைக்காதா???
இது என்ன கொடுமை பதிவும் நீங்களே போட்டுகிட்டு எல்லார் பேருல கமெண்ட்டும் நீங்களே போட்டுகிட்டு!?!?!?
10
11
//ஏன் கொத்து சப்பாத்தியாவே கிடைக்காதா???//
:-)))))))))
அக்கா, நீங்க சப்பாத்தி கூட முழுசா எடுக்காம, கல்லுல இருந்து கொத்தி எடுத்த கதைய எழுதியிருக்க போறீங்களோனு நினைச்சேன், சூப்பர் சாப்பாட்டுக்கு வழி சொல்லியிருக்கீங்க. ஏனுங்கக்கா இதை காலைல செஞ்சு ஆபீசுக்கு எடுத்துட்டு போயி சாப்பிட முடியுமா? தேங்கா பால் ஊத்துறதால கெட்டுபோயிடாதே?
ஏன் கொத்து சப்பாத்தியாவே கிடைக்காதா???//
சிவா இது என் கண்டுபிடிப்பு. மார்கெட்ல ரெசிப்பியை இன்னும் சர்குலேட் செய்யவில்லை. இப்பத்தான் கொடுத்திருக்கிறேன்.
இது என்ன கொடுமை பதிவும் நீங்களே போட்டுகிட்டு எல்லார் பேருல கமெண்ட்டும் நீங்களே போட்டுகிட்டு!?!?!?
அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க சிவா,
பப்ளிஷ் ஆகாம கமெண்ட் ரிஜெக்ட் ஆகிடுச்சு.
மடலுக்கு வந்திருந்த பின்னூட்டங்களை கட் காபி பேஸ்ட் செய்தேன்.
ஏனுங்கக்கா இதை காலைல செஞ்சு ஆபீசுக்கு எடுத்துட்டு போயி சாப்பிட முடியுமா? தேங்கா பால் ஊத்துறதால கெட்டுபோயிடாதே?//
இப்பொழுது பொதுவாக அனைத்து அலுவலகங்களிலும் ஏஸி இருப்பதால் பிரச்சனை இல்லை என்றே நினைக்கிறேன்.
கொஞ்சம் டவுட் தான்.
(வெங்காயத்தாள், கேரட் துருவல், முட்டை கோஸ் பொடியாக அறிந்தது எல்லாம் சேர்த்து செய்தால் வெஜிடபள் சப்பாத்தி கொத்து)
நீங்க செஞ்சாலும் சரி, கடையில்
வாங்கிக் கிட்டாலும் சரி)
//
இல்ல இந்த ரெசிப்பிய குடுத்து கடைக்காரையே உங்க இன்ஃபுலுயன்ஸ பயன்படுத்தி செய்ய சொல்லி வாங்கிச் சாப்பிட்டாலும் சரி. :))
உங்க இன்ஃபுலுயன்ஸ பயன்படுத்தி செய்ய சொல்லி வாங்கிச் சாப்பிட்டாலும் சரி. :))
ஆஹா நல்லா செய்யலாம் அப்துல்லா.
நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க.
இதுக்கு பேர் கொத்துரொட்டி எங்க ஊர்ல :)
வாங்க தூயா,
அங்கதான் கத்துகிட்டேன். பரோட்டாவில் செய்தால் கொத்துரொட்டி, சப்பாத்தியில் செய்தால் கொத்து சப்பாத்தி :)
நான் வரும் சனிக்கிழமை 16 ஆகஸ்ட் அன்று இதை செய்ய போகிறேன். என்னை 16ஆம் தேதியில இருந்து பதிவுலகில் காணோம் என்றால் அக்காதான் அதற்கு முழுபொறுப்பு.
நாளைக்கு தங்ஸ்க்கு லீவு கொடுத்திட்டு புரோட்டவ கடையில வாங்கிட்டு வந்து செய்முறை செய்து பார்த்துவிடுகிறேன்.
நான் வரும் சனிக்கிழமை 16 ஆகஸ்ட் அன்று இதை செய்ய போகிறேன். என்னை 16ஆம் தேதியில இருந்து பதிவுலகில் காணோம் என்றால் அக்காதான் அதற்கு முழுபொறுப்பு.//
ஆஹா இது வேறயா! கந்தா காப்பாத்து(என்னையத்தான்) :)
நாளைக்கு தங்ஸ்க்கு லீவு கொடுத்திட்டு புரோட்டவ கடையில வாங்கிட்டு வந்து செய்முறை செய்து பார்த்துவிடுகிறேன்.//
ராஜநடராஜனின் தங்ஸை ஸ்பெஷலாக காப்பாத்துமாறு இறைவனுக்கு கோரிக்கை வெக்கணும்னு மொபைலில் செட் பண்ணிகிட்டேன்.
என் ரெசிப்பி மேல் சந்தேகம் இல்லை.
ஆனால் செய்யப்போவது ஜோசப் & ராஜ நடராஜன். அவங்க கிச்சனில் போய் சமைத்து அதற்கு பிறகு சமையற்கட்டை சுத்தம் செய்வதற்குள் தங்ஸ் பாவம் :(
Post a Comment