நண்பர் விசயகுமார் பேரண்ட்ஸ் கிளப்பில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு பெற்றவர்கள் எவ்வாறு
பதில் சொல்ல வேண்டும் என்று. என் மகனுக்கு என்னால்
பதில் கூற முடியவில்லையே!!!
இப்போது என் மகன் என்னைக் கேட்கும் கேள்விகளுக்கு
என்னால் பதில் கூற முடியவில்லை.
அப்படி என்ன கேட்டுபுட்டான்னு கேக்கறீங்களா?
அதை கடைசியில் சொல்றேன்.
மகனது வகுப்பில் புதிதாக சேர்ந்திருந்த மாணவன்,
கொஞ்சம் ஓவர் மெட்சூர்டு கேரக்டர்.
படிப்பது என்னவோ 7 ஆம் வகுப்பு தான், ஆனால்
ஐயா அதற்குள் தன்னை ஒரு பெண் ப்ரபோச்
செய்துள்ளதாக கூறும் அளவுக்கு மெட்சூர்டு.
தனது சக மாணவி ஒருவரே தனக்கு
ப்ரபோஸ் செய்ததாக கூறியிருக்கிறார்.
இது அந்த மாணவிக்கு ஒன்றும் தெரியாது.
இது பெரிதாகி கிளாஸ் டீச்சர் வரை சென்றுள்ளது.
இதைப் பார்த்த சம்பந்தப் பட்ட பெண்ணின் கண்ணில்
கண்ணீராம். நம்மை சுற்றி இவ்வளவு நடந்திருக்கிறதே
என்று வருத்தப்பட்டு அழுதாளாம். பாவம்.
அந்த மாணவனுடன் மேலும் 2 பையன்களைக்
காட்டி இவர்களும் தான் என்னுடன் இந்த விடயத்தில்
பேசினார்கள் என்று கூற, அதில் ஒருவன் என் மகனைக்
காட்டி இவனுக்கும் தோழி இருப்பதாக சொல்லியிருக்கிறான்
என்று சொல்ல ஆசிரியை மகனையும் அழைத்து
பேசியிருக்கிறார்.
விசாரித்ததில் என் மகன் தனது 1 ஆம் வகுப்பு
தோழி(இலங்கையில் உடன் படித்த பெண்)
குறித்து பேசியதைச் சொல்லியிருக்கிறார்.
நான் செய்த ஒரேத் தவறு GIRL FRIEND
என்ற வார்த்தையை உபயோகித்தது தான்
என்று வருத்தப்பட்டிருக்கிறான்.
அந்த பள்ளியில் மகனைச் சேர்த்து 3 மாதங்கள்
ஆகின்றது. ஆகையால் டீச்சர் மற்ற
பெண்பிள்ளைகளிடமும் என் மகனை பற்றி
விசாரித்து நல்ல பெயர் இருப்பதைத் தெரிந்து
கொண்டு, ஓவர் மெட்சூர்ட் பையனை
டெர்மினேட் செய்து(மேலும் பல காரணங்கள்
இருப்பதால்)அனுப்பிவிட்டு, என் மகனைத் தவிர
மற்றவர்களுக்கு வார்னிங் செய்து அனுப்பி
விட்டார்கள்.
வீட்டிற்கு வந்து மகன் சொன்னான். நடந்ததைச்
சொன்னவன் கேட்ட கேள்விக்குத்தான் என்னிடம்
பதிலே இல்லை.
1: நட்பில் ஆண்/பெண் வித்தியாசம்
ஏனெம்மா?
2 நல்ல ஃப்ரண்டாக ஒரு பெண் இருக்கக் கூடாதா?
(நியாயமான கேள்விதான். பதில்?)
3. நட்பிற்கும் அஃபையருக்கு வித்தியாசம் நீங்கள்
எனக்கு சொல்லிக்கொடுத்தீர்களே? அது அவங்க அம்மா
ஏன் அவனுக்கு சொல்லி கொடுக்க வில்லை?
(இதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?
அவ்வ்வ்வ்வ்வ்)
4. நான் இதுவரைக்கும் அங்கே (முன்பு படித்த பள்ளியில்)
என் வகுப்புத் தோழிகளுடன் பேசியிருக்கிறேன்.
இங்கே மட்டும் ஒரு பெண்ணுடன் பேசினாலே
அதைத் தப்பா ஏன் அம்மா பார்க்கிறாங்க?
அந்தப் பையனின் தந்தை கணவரின் நீண்ட
கால நண்பர். மிக நல்ல மனிதர். அவரைத்
தெரியாதவர்களே கிடையாது. பரோபகாரி.
அன்பானவர், மரியாதை மிகுந்தவர்.
5. அந்த அங்கிளின் பையன் ஏன் அம்மா
இப்படி எல்லாம் செய்கிறான்?
என்ன பதில் சொல்வேன்?
35 comments:
1.நட்பில் பேதமில்லை......ஆண் பெண் என்று பேதம் பார்ப்பவர்களிடம் உண்மையான நட்பு இருப்பதில்லை.
2.முதல் பதிலிலேயே பேதமில்லை என்பதால் நல்ல நட்பு யாரிடம் இருந்து வேண்டுமானாலும் வரலாம். நட்பை போற்ற தெரியாதவர்களை பற்றி நாம் கவலை பட ஒன்றும் இல்லை.
3.குழந்தைகளையும் நண்பர்களாக அரவணைத்து செல்லும் பெற்றோராக இருந்தால் கண்டிப்பாக சொல்லி கொடுத்திருப்பார்கள்.....அதற்கான முதிர்ச்சி இல்லாது இருக்கும் பட்சத்தில் அந்த பையனின் நிலை தான் பலருக்கும்.
4.கலாச்சாரம் பண்பாடு என்ற பெயரில் சில போலித்தனங்களும் அரங்கேற்றப்படுவதால் இங்கு ஆண் பெண் பேசினாலே தவறான கண்ணோட்டம் தான்.
5. கரு மையப்பதிவுகள் முன்னோர்கள் வழி வருவது. கரு உருவாகும் போதே குணாதிசயங்களும் நிர்ணயிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் நல்லவர்கள் என்பதால் அவர்களின் குழந்தைகளும் நல்லவர்களாத்தான் இருப்பார்கள் என்றில்லை. முறையான வளர்ப்பிலும் பயிற்சியிலும் மாற்றங்களை கொண்டுவர முடியும்.
வாங்க நிஜமா நல்லவன்,
.நட்பில் பேதமில்லை......ஆண் பெண் என்று பேதம் பார்ப்பவர்களிடம் உண்மையான நட்பு இருப்பதில்லை.
2.முதல் பதிலிலேயே பேதமில்லை என்பதால் நல்ல நட்பு யாரிடம் இருந்து வேண்டுமானாலும் வரலாம். நட்பை போற்ற தெரியாதவர்களை பற்றி நாம் கவலை பட ஒன்றும் இல்லை.
சத்தியமான உண்மை
.குழந்தைகளையும் நண்பர்களாக அரவணைத்து செல்லும் பெற்றோராக இருந்தால் கண்டிப்பாக சொல்லி கொடுத்திருப்பார்கள்.....அதற்கான முதிர்ச்சி இல்லாது இருக்கும் பட்சத்தில் அந்த பையனின் நிலை தான் பலருக்கும்//
அதானே பிரச்சனையே.
4.கலாச்சாரம் பண்பாடு என்ற பெயரில் சில போலித்தனங்களும் அரங்கேற்றப்படுவதால் இங்கு ஆண் பெண் பேசினாலே தவறான கண்ணோட்டம் தான்.
பெண்ணை வெறும் போகப் பொருளாக பார்க்கும் கண்ணோட்டம் மாரணும்னு சொல்ரீங்க. மிகச் சரி
பெற்றோர்கள் நல்லவர்கள் என்பதால் அவர்களின் குழந்தைகளும் நல்லவர்களாத்தான் இருப்பார்கள் என்றில்லை. முறையான வளர்ப்பிலும் பயிற்சியிலும் மாற்றங்களை கொண்டுவர முடியும்.
உண்மை
அக்கா, நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் பையனுக்கு தெளிவாக சொல்லியுள்ளீர்கள் என்று தெரிகிறது.
பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதே கிடையாது. 10 வயது தாண்டும் போது பிள்ளைகள் ஒரு தடுமாற்றத்தை சந்திக்கின்றார்கள். அந்த வயதில் பெற்றோர் கொஞ்சம் கவனமாக இருந்து பிள்ளைகளை சரியாக வழிநடத்தினால் அவர்கள் எந்த காலத்திலும் கெட்டுப்போக மாட்டார்கள்.
நீங்கள் உங்கள் பிள்ளைக்கு சொல்லிக்கொடுத்ததையே ஒரு பதிவாக எழுத வேண்டும். அது பிறருக்கும் கண்டிப்பாய் உதவும்.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களின் வழி நடத்துதலில் வளர வேண்டியவர்கள் ஊடகங்களின் வழி நடத்துதலில் அல்லவா வளர்கிறார்கள்? ஊடகங்கள் நல்ல விஷயங்களை சொல்வதை விட தேவையற்றதை தானே பெரும்பாலும் போதிக்கின்றன? அதன் பாதிப்புக்கள் ஒரு சிலரிடம் இருக்கத்தானே செய்கிறது. பதின்மவயதில் பெற்றோர்களின் அரவணைப்பும் கண்காணிப்பும் சற்றே கூடுதலாகவே தேவைப்படுகிறது.
நீங்க இத சொல்லுறீங்க நான் எல்லாம் 5ம் ஆண்டிலேயே லவ் லெட்டர் கொடுத்தவன் என்னை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?? இப்போது உள்ள தலைமுறை கொஞ்சம் வேகமாகவே மெச்சூரிட்டி அடைவதாகவே தோன்றுகிறது... முதல் த்லைமுறையை விட கொஞ்சம் அதிகமாவே புத்திசாலித்தனமும் இருக்கிறது.
அதே வேளை நிஜமா நல்லவன் சொன்னதை நான் வழி மொழிகிறேன்
முதலில் இந்த விசயமாக டீல் செய்யும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு எந்த அளவு மெச்சூரிட்டி இருக்கிறது என பாருங்கள்.
இந்தியா இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது அதில் இதுவும் ஒன்று.
வேற என்னத்த சொல்ல
:(
10 வயது தாண்டும் போது பிள்ளைகள் ஒரு தடுமாற்றத்தை சந்திக்கின்றார்கள். அந்த வயதில் பெற்றோர் கொஞ்சம் கவனமாக இருந்து பிள்ளைகளை சரியாக வழிநடத்தினால் அவர்கள் எந்த காலத்திலும் கெட்டுப்போக மாட்டார்கள்.
ஆமாம் ஜோசப்
அது பெற்றோர்களுக்குப் புரிய வேண்டும்.
நீங்கள் உங்கள் பிள்ளைக்கு சொல்லிக்கொடுத்ததையே ஒரு பதிவாக எழுத வேண்டும். அது பிறருக்கும் கண்டிப்பாய் உதவும்.//
இன்று விதை விதைத்து நாளை அறுவடை செய்ய முடியாது தானே ஜோசப்?
கருவுற்ற காலத்திலிருந்தே பிள்ளையுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.
இதுதான் பிள்ளை நான் சொல்வதை காதுகொடுக்க வைத்தது என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு ஸ்டேஜாக நட்புடன் சொல்லியிருக்கிறேன். இதில் எதை நான் இங்கே சொல்ல?
எதையும் வித்தியாசமாக செய்துவிடவில்லை ஜோசப்.
எனது மற்றும் எனது தம்பியின் சிறு பிராயத்தில் எங்களது பெற்றோரிடம் என்ன எதிர் பார்ப்பு (பெற்றோரே நண்பராக இருக்க வேண்டும் போன்ற எதிர் பார்ப்புகளும் )எங்களுக்கு இருந்ததோ அதை என் பிள்ளைகளுக்கு நான் பெற்றோராக இருந்து செய்கிறோம்.
சுருங்கச் சொன்னால் என் கனவுகளை என் பிள்ளைகளைச் சுமப்பதை விட நான் வாழ ஏங்கிய எனது சிறுவயது பிராய சந்தோசத்தை எனது மகன், மகளின் சந்தோசத்தில் பார்க்கிறேன்.
வாங்க இவண்,
மெச்சூரிட்டி சீக்கிரமே கிடைக்குதும் போது வீட்டில பெத்தவங்க கண்காணிச்சு தெளிவா புரிய வெக்கணும்.
செய்யும் செயலின் விளைவை எடுத்துச் சொல்ல வேண்டும்.
அந்த சின்ன பெண்ணின் மனது
எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இவண்.
வாங்க சிவா,
ஆசிரியைக்கு நல்ல மெசூரிட்டி இருக்கிறது. அவ்வளவு நல்ல பெயருள்ள பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவனால் வந்த வினை இது.
டீச்சருக்கு விவேகம் இல்லாவிட்டால் எல்லோரையும் ஒரே விதமாக தண்டித்திருப்பார்.
இந்தியா இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது அதில் இதுவும் ஒன்று.
வேற என்னத்த சொல்ல
இன்றைய பிள்ளைகள் நாளை வருங்காலத் தூண்கள். ஆக இந்த மாற்றம் உடனடியாக நிகழ்ந்தாக வேண்டும்.
சிறு வயதில் இருந்து ஓரே பள்ளியில் படித்து வரும் இருபாலரிடையே பெரும்பாலும் இந்தப் பிரச்சனை தோன்றுவதில்லை.கவனித்து இருக்கின்றீர்களா? மழலைப் பருவம் முடிந்து வளர் இளம் பருவம் தோன்றும் போது பள்ளி மாறுகின்ற சந்தப்பம் ஓரு பையனுக்கோ அல்லது பெண்ணிற்கோ ஏற்படும்போது அங்கு புதிதாக அறிமுகம் ஆகும் பையனிடத்திலோ அல்லது பென்ணிடத்திலோ ஈர்ப்பு தோன்றுகின்றது. எந்தெந்த காலகட்டங்களில் எதெதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதனை நம் பிள்ளைகளுக்குத் தெளிவாக வளர் இளம்பருவத் துவக்கத்திலேயே புரிய வைத்துவிட்டால் பாதி பிரச்சனை ஓவர்.
அக்கா அப்புறம் ஜோசப் அண்ணே சொன்ன மாதிரி ஏன் நீங்க உங்க பிள்ளைகளுக்கு சொன்ன அறிவுரைகளை ஓரு பதிவாப் போடக் கூடாது?
சுருங்கச் சொன்னால் என் கனவுகளை என் பிள்ளைகளைச் சுமப்பதை விட நான் வாழ ஏங்கிய எனது சிறுவயது பிராய சந்தோசத்தை எனது மகன், மகளின் சந்தோசத்தில் பார்க்கிறேன்.
//
இது போதுமேக்கா.இத விட வேறு ஏதும் தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.ஆனாலும் நம் தாய் தந்தையர் நமக்காக செய்த பல விஷயங்களின் காரணமும்,அவர்களின் சிரமமும் பெரும்பாலும் நாம் திருமணம் செயதவுடன் தான் புரிகின்றது.
இந்த விஷயத்தில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை
அதே நேரம் இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் பெற்றோருடன் இருப்பதைவிட ஸ்கூல் டியூசன் என்று ஆசிரியர்களிடம்தான் நேரம் செலவிடுகின்றனர்.
எனவே ஆசிரியர்களும் பிள்ளைகளை எவ்வாறு அணுகுவது என்பதை அறிந்து புரிந்து செயல்பட வேண்டும்.
வாங்க அப்துல்லா,
நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் இப்போது ஆங்கில வழி கல்வியில் எல்லாம் ஆண்/பெண் இருபாலர் பள்ளிதானே?
//எந்தெந்த காலகட்டங்களில் எதெதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதனை நம் பிள்ளைகளுக்குத் தெளிவாக வளர் இளம்பருவத் துவக்கத்திலேயே புரிய வைத்துவிட்டால் பாதி பிரச்சனை ஓவர்//
இப்போதைய தேவை பெற்றோரின் இந்த பங்களிப்பு. எனக்கு வேலை டென்ஷன் அது இது என்று சொல்கிறார்கள். அது தான் மனதிற்கு வேதனையாக இருக்கிறது.
ஆனாலும் நம் தாய் தந்தையர் நமக்காக செய்த பல விஷயங்களின் காரணமும்,அவர்களின் சிரமமும் பெரும்பாலும் நாம் திருமணம் செயதவுடன் தான் புரிகின்றது.//
ஆமாம் அப்துல்லா நாம் பெற்றோராக ஆகும்போது தான் அந்த வலி புரிகிறது. ஆனால் அதே நேரத்தில் பிள்ளையாக நாம் பெற்ற வலிகளையும் மறக்க முடியாதே.
அதனால் நம் பிள்ளைகளுக்கு வலி அதிகம் ஏற்படுத்தாமல், ஆனால் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டும்.
வலிக்கு பயந்தால் கல் சிற்பம் ஆக முடியாதுதான். ஆனால் சில சமயம் அதிக அடி வாங்கிய கல் கூட சிற்பம் ஆக முடியாமல் உடைந்துவிடும்.
பெற்றோர் தனது பிள்ளைக்கு முதல் நண்பன் என்ற நிலை ஏற்படும் போது பிரச்சனை ஏது?
அதற்குத் தானே சொன்னார்கள் தோளுக்கு மேல் வளர்ந்தால் மகன் நண்பன் என்று.
ஆனால் 22 வயது ஆனாலும் மகனை கரித்துக்கொட்டும் பெற்றோரும் இருக்கிறார்களே?
வாங்க புகழன்,
இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் பெற்றோருடன் இருப்பதைவிட ஸ்கூல் டியூசன் என்று ஆசிரியர்களிடம்தான் நேரம் செலவிடுகின்றனர்.//
மறுக்க முடியாத உண்மை. அதனால் தான் நாளில் ஒரு 30 நிமிடமாவது பிள்ளைகளுடன் கழிக்க வேண்டுமென்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். குறைந்த பட்சம் வார இறுதியாவலது பிள்ளைகளோடு அளவலாமே!
//ஆசிரியர்களும் பிள்ளைகளை எவ்வாறு அணுகுவது என்பதை அறிந்து புரிந்து செயல்பட வேண்டும்//
இதுவும் மிக நல்ல பாயிண்ட். பெற்றோருக்கு அடுத்து அவர்கள் தான் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அதற்கு பெற்றோர் ஆசிரியரைக் கண்டு பேசினால் அவர்களும் அன்போடு
உதவுவார்கள். (சிலர் இதில் விதிவிலக்கு)
ஆனால் 22 வயது ஆனாலும் மகனை கரித்துக்கொட்டும் பெற்றோரும் இருக்கிறார்களே?
//
22 வயசு வரைக்கும்னா கூட பரவாயில்லையே. பிள்ளை பிள்ளை பெற்றபின்னும் கூட கரித்துக் கொட்டும் பெற்றோர்களும் இருக்கின்றார்களே?
புதுகை எனி ஐடியாப்பா? என்பதிவைப்படிங்க நீங்க போட்ட பதிவுக்கான பின்னூட்டப்பதிவு இது
தென்றல் உங்கள் கேள்விக்கு பதில் தெரியாமல் முத்துலெட்சுமி மறுகேள்வி எழுப்பியிருக்கிறார். பார்த்து விட்டீர்களா?
22 வயசு வரைக்கும்னா கூட பரவாயில்லையே. பிள்ளை பிள்ளை பெற்றபின்னும்//
உங்க கிட்ட ஒரு கெட்ட குணம் அப்துல்லா,
உண்மைய படக்குன்னு சொல்லிப்பிடறீங்க.
//கூட கரித்துக் கொட்டும் பெற்றோர்களும் இருக்கின்றார்களே?//
அந்த பெற்றோருக்கு மெச்சூரிட்டி இல்லைன்னு அர்த்தம். :(
வாங்க கயல்,
உங்க பதிவை படிச்சு பின்னூட்டம் போட்டுட்டேன்.
வாங்க ராமலக்ஷ்மி,
பார்த்தேன். பின்னூட்டம் போட்டாச்சு.
உங்க பின்னூட்டத்திற்கும் அங்கே பதில் போட்டிருக்கிறேன்.
22 வயசு வரைக்கும்னா கூட பரவாயில்லையே. பிள்ளை பிள்ளை பெற்றபின்னும்//
உங்க கிட்ட ஒரு கெட்ட குணம் அப்துல்லா,
உண்மைய படக்குன்னு சொல்லிப்பிடறீங்க.
//
ayyoo athu enga veetil illai...
avvvvvvvvvvvvvv
உண்மைய படக்குன்னு சொல்லிப்பிடறீங்க.
//
ayyoo athu enga veetil illai...
avvvvvvvvvvvvvv
இதுக்கு எதுக்கு அவ்வ்வ் அப்துல்லா?
உங்க வீட்டுல இல்ல. நீங்க சொன்னது சத்தியமான உண்மை. பல வீடுகளில் அதுதான் நடக்குது. நான் அதைச் சொன்னேன்.
நிஜமா நல்லவன் சொன்னது எல்லாம் நல்ல கருத்துக்கள் இல்லை இல்லை தத்துவங்கள். ஆனால் 7ம் வகுப்பு மானவனிடம் இவற்றை சொல்ல முடியுமா? இதற்கு தென்றல் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
உங்கள் பையன் கேட்ட கேள்விகளைப் பார்த்தால், அவனுக்கு தெளிவான பதில் தெரிந்திருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. சூழ்நிலையால் ஏற்பட்ட குழப்பத்தினால்தான் கேள்விகள் கேட்டிருக்கிறார். இந்த கேள்விகளுக்கு உங்கள் மகன் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று முதலில் கண்டுபிடியுங்கள்.
வாங்க விசயகுமார்,
7ஆம் வகுப்பு மாணவன் என்றால் ஐயா டீன் ஏஜ்ற்குள் எண்டரிங் ஆச்சே!
சொல்லியிருக்கிறேன்.
இந்த கேள்விகளுக்கு உங்கள் மகன் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று முதலில் கண்டுபிடியுங்கள்.
ஆமாம் நான் எப்போதும் மகனிடம் கேள்விக் கேட்டு பதிலைப் பெறுவது வழக்கம். நான் மட்டுமே பேசினால் அது அறிவுரை கூறுவது போலாகிவிடுமே! அவன் மனதில் நினைப்பதையும் கேட்க வேண்டும் என்பதால் அவனையும் பேசவிட்டு மனதில் உள்ளவற்றை தெரிந்து கொள்வேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Post a Comment