மருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக
வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது
மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க
அதிகம் சார்ஜ் ஆகும். நாமே வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
ரோட்டையே அடைக்க கோலம் போடும்
கைகளுக்கு மெஹந்தி டிசைன்ஸ்
எல்லாம் ஜுஜுப்பீ.
ஹென்னா கலக்கலாம் வாங்க:
டீத் தண்ணீரை கொதிக்க வைத்து அந்த
டிகாஷனில் ஹென்னா பவுடரைக் கலந்து
குறைந்தது 2 மணி நேரம் ஊற விடவும்.
இப்போ கோன் செய்யலாம் வாங்க:
கீழே கொடுத்திருக்கும் படங்களைப் பாருங்கள்.
அது போல் மெஹந்தி கோன் செய்து
அதில் கலந்து வைத்திருக்கும் ஹென்னாவை
போட்டு கோன் தயாரித்துக்கொள்ளுங்கள்.
கோன் எல்லாம் ரெடி. இதோ இந்த டிசைன்களைப் பாருங்கள்.
(இது அரபிக் மெஹந்தி டிசைன்.)
நம் கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்டு மெஹந்தி
டிசைன்ஸ் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
இவைகள் சிம்பிள் டிசைன்ஸ். கைமுழுதும்
நிறைந்திருக்கும்.
மெஹந்திக் கலர் கையில் அதிக நாள் இருக்க
செய்ய வேண்டியவை:
1. மெஹந்தி டிசைன் போட்டு முடிந்ததும்
சர்க்கரையில், எலுமிச்சம் ரசம் பிழிந்து
அதை பஞ்சில் எடுத்து டிசைன் முழுதும்
ஒற்ற வேண்டும்.
2, மெஹந்தி நன்கு காய்ந்த பிறகு
தண்ணீர் விட்டுக் கழுவக் கூடாது.
3. கத்தியின் மொக்கையான பகுதியைக்
கொண்டு மெஹந்தியை அகற்றிவிட்டு
கையில் ஏதாவது ஒரு வகை
எண்ணையைத் தடவ வேண்டும்.
4. குறைந்தது 1 மணி நேரத்திற்காவது
டிசைனில் தண்ணீர் படாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. அடுப்பை பற்ற வைத்து
தோசைக்கல் போட்டு அதில்
கிராம்பு 4 போட்டு கிராம்பு
சூடானதும் வரும் புகையை
மெஹந்தி டிசைனில் மேல்
பிடிக்கச் செய்வதாலும் நல்ல
கலர் கிடைக்கும்.
தலைக்கு ஹென்னா போடுவதைப் பற்றிய
இ.புக் டவுன் லோட் செய்ய இங்கே.
இந்த வலைத்தளத்தில் ஹென்னா பற்றிய
மற்ற விடய்ங்களை படிக்கலாம்.
10 comments:
சரி நான் போய்ட்டு தங்கமணியை அனுப்பி வைக்கிறேன்.
மீ த ஃபர்ஸ்டு?
வாங்க அப்துல்லா,
வருகைக்கு நன்றி.
ரொம்ப நன்றி புதுகைத்தென்றல்.. முன்னாடி வலைச்சரத்தில் புதுகைப்புயலுன்னு உங்களுக்கு பட்டம் தந்தேன்.. (பட்டம் தர அளவுக்கு பெரியாளான்னு எல்லாம் கேக்கக்கூடாது ) இப்ப கொத்துசப்பாத்தி அண்ட் மெஹந்தி பதிவு காரணமா ஆல் இன் ஆல் அழகு ராணீன்னு ஒரு பட்டம் வச்சிக்குங்க.. பாசத்துல குடுப்பதை மறுக்காதீங்க.. :)
ஆல் இன் ஆல் அழகு ராணீன்னு ஒரு பட்டம் //
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
பாசத்துல குடுப்பதை மறுக்காதீங்க.. :)//
pasam romba jasthyavla iruku. :(
அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களின்
வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை.
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!
வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)
பயனுள்ள பதிவு. மிக்க நன்றி. இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் பார்க்கிறேன்.. ஸாரி :( வலைச்சரம் வழியாக வந்தேன்.
http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_8.html
நன்றி யாதவன் நம்பி
நன்றி கவிநயா
Post a Comment