Thursday, August 21, 2008

ரவீஸ் ஊறுகாய் -ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

பள்ளிவிடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும்போது
பொழுது போகாமல் பசி எடுக்கும்!!?!!. சிறுதிண்டிகள்
தடா போடப்பட்டிருக்கும். ”பசிச்சா சோறு சாப்பிடு”
அப்படின்னு பாட்டி சொல்லிடுவாங்க.

தயிர் சோறு வித் ஊறுகாய் ஹாட் ஃபேவரிட்.
அதுவும் ரவீஸ் ஊறுகாய் என்றால் போதும்.

இலையில் பொட்டலம் மாதிரி மடிக்கப்பட்டிருக்கும்.
மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஆகிய வெரைட்டீக்கள்(!!!)
கிடைக்கும் அப்போது.

”50 பைசா கொடுத்தால் போதும்” என்பதால்
பாட்டி காசு கொடுப்பார். ஓடிப்போய் வாங்கிவந்து
தயிர் சோறோடு வைத்து சாப்பிடுவேன்.

எப்பப்பாரு என்ன எலுமிச்சை? மாதா ஊட்டாத
சோறு மாங்காய் ஊட்டும். அப்படின்னு பாட்டி
கமெண்டினாலும் எலுமிச்சை ஊறுகாய்தான்
எனக்கு மிகவும் பிடித்தது.



ஒரு திரைப்படத்தில் விவேக் குவார்டருக்கு
சைட்டிஷாக ஊறுகாய் பொட்டலத்தில் இருந்து
எடுத்து நாக்கில் ஒரு தடவு தடவுவார் பாருங்கள்
உடனேயே எனக்குள் கொசுவத்தி சுழன்று
ரவீஸ் ஊறுகாய் ஞாபகம் வரும்.

ஊறுகாயை சைட்டிஷ்ஷாக உணவோடு வைத்து
சாப்பிடுவோம். என் உறவினர் (ஆந்திரா காரர்)
ஊறுகாய் போட்டு பிசைந்த சோறுதான் முதலில்
சாப்பிடுவார்.

சோற்றில் பிசைந்து சாப்பிட எலுமிச்சை ஒத்து
வராது எனக்கு. அதற்கு சூப்பர் ஆவக்காய் தான்.
தாயைப் போல பிள்ளை என்பார்களே அது போல்
என் மகன் நெஸ்டத்திற்கு ஆவக்காய் கொஞ்சம்
தொட்டு சாப்பிட ஆரம்பித்து இன்று தலைவர்
ஊறுகாய் சாப்பிடும் வாரிசாக தயாராகிவிட்டார்
என்பதில் ஆனந்தம் பேரானந்தம்.

(ஊறுகாய்க்கு தொட்டுக்கொள்ள சோறா!
சோற்றுக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாயா!
என்று அயித்தான் குழம்புவார்)


இப்படி ஊறுகாய் என் வாழ்வில் முக்கியமான
அம்சம் ஆகிவிட்டது. ஊறுகாய் ஸ்பெஷலிஸ்டாக்கும் நான்.
சூப்பரா ஊறுகாய் போடவும் தெரியும்.


விதம் விதமாய் வித்தியாசமாய் ஊறுகாய்
போடுவேன். நான் போடும் ஊறுகாய் சூப்பர்
என்று அனைவரும் சொன்னாலும்( ஊறுகாய்
போட்டு வித்திருக்கிறேனே) எனக்கு என்றும்
நாவில் நிற்பது ரவீஸ் ஊறுகாய் தான்.

26 comments:

மங்களூர் சிவா said...

ஓவர் ஊறுக்காய் உடம்புக்கு ஆவாது. லோ பிபி இருக்கிறவங்களுக்கு ஓகே.

புகழன் said...

சம்தி்ங் ஸ்பெஷல் சக்தி ஊறுகாய்தான் எப்பவுமே எனக்குப் பிடித்தம்

pudugaithendral said...

லோ பிபி இருக்கிறவங்களுக்கு ஓகே//

எனக்கு டபிள் ட்ரிபிள் ஓகே.

:))))))))))))))))))))))))))))

pudugaithendral said...

வாங்க புகழன்,

உங்களுக்கு சக்தி ஊறுகாயா? ம்ம்

வருகைக்க்கு நன்றி.

புதுகை.அப்துல்லா said...

பொழுது போகாமல் பசி எடுக்கும்//

நேரங்கெட்ட நேரத்தில திங்க இப்படியெல்லாம் ஓரு ரீசன்!!!!!!!!!

ஆயில்யன் said...

//50 பைசா கொடுத்தால் போதும்” என்பதால்
பாட்டி காசு கொடுப்பார். ஓடிப்போய் வாங்கிவந்து
தயிர் சோறோடு வைத்து சாப்பிடுவேன்.
//


நானெல்லாம் ஸ்கூல் இண்டர்வெல்ல எதிர்த்த கடையில் ஓடிப்போய் வாங்கி வந்து வைச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவோமே!!!

ஆயில்யன் said...

அக்கா ஒரு சந்தேகம் ஏன் எழுத்துக்கள் எல்லாம் சாஞ்சுக்கிட்டு நிக்கிது ஊறுகாய் திங்கப்போறதாலயா ???

:)))

புதுகை.அப்துல்லா said...

அதுவும் ரவீஸ் ஊறுகாய் என்றால் போதும்.
//

அக்கா நம்பூருல பாண்டுரங்கா பொடின்னு ஓன்னு கிடைக்குமே இட்லி,தோசைக்கு! ஞாபகம் இருக்கா?

புதுகை.அப்துல்லா said...

இலையில் பொட்டலம் மாதிரி மடிக்கப்பட்டிருக்கும்.
மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஆகிய வெரைட்டீக்கள்(!!!)
கிடைக்கும் அப்போது.
//

அது இலை இல்ல காஞ்ச வாழை மட்டையில் மடித்து இருக்கும். இப்பல்லாம் ஓன்லி சாஸே தான்.

pudugaithendral said...

நேரங்கெட்ட நேரத்தில திங்க இப்படியெல்லாம் ஓரு ரீசன்!!!!!!!!!/

:)))

pudugaithendral said...

நானெல்லாம் ஸ்கூல் இண்டர்வெல்ல எதிர்த்த கடையில் ஓடிப்போய் வாங்கி வந்து வைச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவோமே!!!//

இந்தப்பதிவையும் சுட்டு போட்டுடுவீங்களோன்னு நினைச்சுதான் உடனே பதிவைப் போட்டது :)

(உங்களுக்கு எனக்கும் ஏதோ டெலிபதி ஸ்டார்ட் ஆகியிருக்கோன்ன்னு தோணுது தம்பி)

pudugaithendral said...

அக்கா ஒரு சந்தேகம் ஏன் எழுத்துக்கள் எல்லாம் சாஞ்சுக்கிட்டு நிக்கிது ஊறுகாய் திங்கப்போறதாலயா ???




ரொம்ப நேரமா நிற்பதால் கால்வலின்னு சாஞ்சிருக்கலாம்.

குவார்டர் அடிச்சதனாலையும் இருக்கலாம். (ஊறுகா மேட்டர் பதிவாச்சே) :)))

pudugaithendral said...

அக்கா நம்பூருல பாண்டுரங்கா பொடின்னு ஓன்னு கிடைக்குமே இட்லி,தோசைக்கு! ஞாபகம் இருக்கா?//

கேள்விப்பட்ட மாதிரி இருக்கு. ஆனா ஞாபகம் வர்லை.

pudugaithendral said...

அது இலை இல்ல காஞ்ச வாழை மட்டையில் மடித்து இருக்கும். இப்பல்லாம் ஓன்லி சாஸே தான்.//

ஆனால் அந்த பழைய டேஸ்ட் இல்லை. :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஊறுகாய்ன்னா எனக்கு மாவடு தான்..அது எங்கம்மா வே போடுவாங்க வீட்டில்.. சும்மா போகவர அப்படியே ஒரு சின்ன மாவடுவை வாயில் போட்டு முதலில் உப்பெல்லாம் உரிஞ்சு சாப்பிட்டுட்டு அதை அப்படியே ஒதுக்கிவைச்சுக்கிட்டு.. ஸ்ஸ்ஸ் ஆகா..:)

புதுகை.அப்துல்லா said...

ஒரு திரைப்படத்தில் விவேக் குவார்டருக்கு
சைட்டிஷாக ஊறுகாய் பொட்டலத்தில் இருந்து
எடுத்து நாக்கில் ஒரு தடவு தடவுவார் பாருங்கள்
//

ஆஹா!அவரும் நம்மள......

புதுகை.அப்துல்லா said...

(உங்களுக்கு எனக்கும் ஏதோ டெலிபதி ஸ்டார்ட் ஆகியிருக்கோன்ன்னு தோணுது தம்பி)
//

:)

புதுகை.அப்துல்லா said...

என் மகன் நெஸ்டத்திற்கு ஆவக்காய் கொஞ்சம்
தொட்டு சாப்பிட ஆரம்பித்து //

நெஸ்டத்துக்கு ஊறுகாயா? ஆஷிஷ் பிறந்ததிலேந்தே வித்யாசமா திங் பண்ண ஆரமிச்சிட்டானா?

புதுகை.அப்துல்லா said...

(ஊறுகாய்க்கு தொட்டுக்கொள்ள சோறா!
சோற்றுக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாயா!
என்று அயித்தான் குழம்புவார்)

//

எங்க அத்தான் அந்த ஓரு விஷயத்துக்கு மட்டுமா உங்களப் பார்த்து குழப்புறாரு?

புதுகை.அப்துல்லா said...

ஊறுகாய்
போட்டு வித்திருக்கிறேனே)//

எங்க ஊரு பிஸ்னஸ் மேக்னட் :)

புதுகை.அப்துல்லா said...

எனக்கு என்றும்
நாவில் நிற்பது ரவீஸ் ஊறுகாய் தான்.
//

எனக்கும் என்றும் நாவில் நிற்பது குவாட்டர் ச்சீய்..ச்சீய் இரவீஸ் ஊருகாய் தான்.

pudugaithendral said...

எங்க அத்தான் அந்த ஓரு விஷயத்துக்கு மட்டுமா உங்களப் பார்த்து குழப்புறாரு?


உங்க தங்ஸ் போன் நம்பர் என்னன்னு அலைபேசியில் மெசெஜ் அனுப்ப மறக்காதீங்க.

ரொம்ப நாளா ஒரு கணக்கு பைசல் செய்யப்படாமலேயே இருக்கு. :)

pudugaithendral said...

எங்க ஊரு பிஸ்னஸ் மேக்னட் :)


புகழ்ச்சி எனக்கு பிடிக்காது. :)

pudugaithendral said...

எனக்கும் என்றும் நாவில் நிற்பது குவாட்டர் //

அதைச் சொல்லு. :))))))))))))))

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

எங்க ஊரில் செல்வம் ஊறுகாய் ரொம்ப பாபுலர்.
எனக்கு நாரத்தங்காய் ஊறுகாய் ரொம்ப பிடிக்கும் .

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

தொட்டுக்க ஊறுகாய் சூப்பர். (இந்த ஒரு விடயத்திலாவது ஒத்துப்போறோமே).

<==
மங்களூர் சிவா said...
ஓவர் ஊறுக்காய் உடம்புக்கு ஆவாது. லோ பிபி இருக்கிறவங்களுக்கு ஓகே.
==>
அப்ப ஊறுகாய் பிடிச்சிருந்தா மட்டும் போதாது. லோ பி.பி இருக்கணும்னு சொல்றீங்க.என்ன கொடுமை இது? நன்றி. எதுக்கும் டாக்டர்கிட்ட செக் பண்ணிக்கிரேன்.