Thursday, August 07, 2008

TABLE MANNERS

ஹோட்டலுக்கு சென்று உணவருந்தையில்
இன்முகத்தோடு பரிமாறவேண்டும்,
சுவையான உணவு வேண்டும், ரெஸ்டாரண்டின்
இண்டீரியர் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம்
பார்க்கிறோம். நாம் எப்படி உண்கிறோம்
என்பதைக் குறித்து ஆலோசித்திருப்போமா?


நாம் உணவை ரசித்து ருசித்து உண்ணலாம்.
ஆனால் அதுவே அடுத்தவருக்கு அருவருப்பாக
இல்லாமல் இருக்க வேண்டும்.

வாயினுள் உணவை வைக்கும் போது
நமது முன் கை வாயை மறைக்கும் வாரு
சாப்பிடவேண்டும் என்பார்கள்.

இப்படி நிறைய இருக்கிறது. எனக்குத் தெரிந்த
சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


வியாபார நிமித்தமாக, நண்பர்களுடன்,
இப்படி பலவேறு காரணங்களினால்
நாம் உணவருந்த சென்றாலும்
டேபிள் மேனர்ஸ் மாறாது.
மாறக்கூடாது.

உங்களுக்குத் தெரியுமா? இப்போது
டின்னரில் இண்டர்வியூக்கள் நடத்துகிறார்கள்.


ஹெட் ஆஃப் த டேபிள் (கீழே இருக்கும் படத்தை
பாருங்கள்) பொதுவாக அங்கே உணவிற்கு
ஏற்பாடு செய்திருப்பவர்தான் (ஹோஸ்ட்) அமருவார்.
(வீட்டில் உணவு மேஜையில் பரவாயில்லை.
ஹோட்டலில் அங்கே உட்கார்வதற்கு முன்
கொஞ்சம் யோசியுங்கள். பாத்து யாராவது
பில்லை தலையில கட்டிட போறாங்க :))
உணவிற்கு அழைத்திருப்பவர் (ஹோஸ்ட்)
நாப்கினை கையில் எடுத்துக் கொண்ட பின்
தான் நாம் நாப்கினை எடுக்க வேண்டும்.

(அதாவது சாப்பாடு ரெடி! சாப்பிடுங்கன்னு
சிம்பாலிக்கா சொல்றாராம்)

கையில் எடுத்த நாப்கின்னை மடியில்
விரித்துக்கொள்ள வேண்டும்.

உதட்டில் பட்ட உணவை துடைக்க
மட்டும்தான் நாப்கினை மேலே
எடுத்து துடைக்க வேண்டும்.

உணவின் இடையில் எழுந்திருக்க
நேர்ந்தால் நாப்கின்னை நாற்காலியில்
வைக்க வேண்டும்.

டேபிளில் வைத்தால் உணவு
உண்டு முடிந்தது என்று அர்த்தம்.
(நாப்கின்னை மடித்து பிளேட்டின்
வலது பக்கம் வைக்க வேண்டும்)

ஃபோர்க் & ஸ்பூனை கிராஸாக
பிளேட்டின் நடுவில் வைத்தாலும்
நான் உண்டு முடித்துவிட்டேன்
என்று அர்த்தம்.

அதிகம் சப்தம் இல்லாமல் நீர் அருந்துவது,
உணவை மெல்லும் சப்தம் கேட்கக்கூடாது,
ஃபோர்க் & ஸ்பூன் உபயோகிக்கும்பொழுது
அதன் அதிக ஓசையும் தவறானது.

ஒரு வீட்டிற்கு சென்றிருக்கும்பொழுது
நமக்கு காபி, ஜூஸ் வழங்கினால்
அதில் கொஞ்சம் மிச்சம் வைக்க வேண்டுமாம்.
(நீங்கள் கொடுத்ததில் என் வயிறு நிறைந்தது
என்று உணர்த்த)

நாமாக காசு போட்டு வாங்கும்போது மிச்சம்
வைக்காமல் அருந்த வேண்டும்.

ஹோட்டலில் நாமாக உணவருந்தச் சென்றாலும்,
யாரேனும் விருந்துக்கு அழைத்திருந்தாலும்
ஏன் அழைத்தோம் இவரை என்று!
அழைத்தவரின் மனம் நோகக்கூடாது.
ஹோட்டலில் இருப்பவர்களும்
தவறாக நினைக்கக் கூடாது.

TIPS: Time and Prompt service இதற்காகத்தான்
டிப்ஸ் கொடுப்பது.

( ஹோட்டல் பில்லில் சர்வீச் சார்ஜ் போட்டிருந்தால்
டிப்ஸ் கொடுக்காவிட்டால் பரவாயில்லை.கேள்விப்பட்டேன்)

ஜோசப் பால்ராஜ்
பின்னூட்டத்தில் தந்த சில தகவல்கள்:ஸ்பூன், ஃபொர்க் இரண்டையும் தலைகீழாக தட்டின் குறுக்கே வைப்பதுதான் உண்டு முடித்துவிட்டதற்கான குறியீடு.

உணவை வாயில் வைத்துக்கொண்டு பேசக்கூடாது.

சாப்பிடுபவர்களின் வாயையே பார்ப்பது தவறான செயல்.

நம்மோடு உணவருந்த வந்தவர்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டபின்னரே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அதே போல் உணவுபொருட்களின் விளையாடக்கூடாது. அது மிக மிக மோசமான செயல்.

சூடான சூப், காபி, டீ போன்றவற்றை ஸாஸரில் ஊற்றி ஆரவைத்து குடிப்பதும் தவறு.

சூப் போன்றவற்றை குடித்துப் பார்கமலேயே உப்பு, மிளகுதூள் போன்றவற்றை சேர்க்க கூடாது.

சாப்பிட்டு முடித்துவிட்டு பல் குத்தும் போது, வாயை ஒரு கையால் மறைத்துக்கொள்ள வேண்டும்.

இது எல்லாம் மேலை நாட்டு மேசை கலாச்சாரங்கள்.

நம்ம ஊரு தரை மேனர்ஸ்ஸா எங்க வீட்ல சொல்லிக்குடுத்தது
1) சத்தம் வராம சாப்பிடனும், குடிக்கனும்.
2) தோள்ல துண்டு போட்டுகிட்டே உக்காந்து சாப்பிட கூடாது.துண்டு மடில தான் இருக்கனும்.
3) விரல்களைத் தாண்டி உள்ளங்கைவரை சாப்பாடு படக்கூடாது. நாங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சதும் வரிசையா எங்க தாத்தகிட்ட கைய காட்டிட்டு அப்றம்தான் போய் கைகழுவுவோம்.

4) சாப்பாட்ட வீணாக்க கூடாது, சாப்பிடும்போது கீழ சிந்த

26 comments:

தமிழ் பிரியன் said...

நல்லா தான் சொல்லி இருக்கீங்க... நாங்க இருக்கும் இடத்தில் நிறுவன கேண்டீனில் ஸ்பூனில், ஸ்போர்க்கில் தான் சாப்பிட வேண்டும். வெறும் கையால் சாப்பிட விடங்கடான்னு கதறனும் போல இருக்கும்...... :(

தமிழ் பிரியன் said...

எங்க சாப்பாட்டு தட்டு

ஹிஹிஹி நாங்கல்லாம் கரீக்டா சாப்பிடுவோம்ல

புதுகைத் தென்றல் said...

வாங்க தமிழ்பிரியன்,

வருகைக்கு நன்றி.

துளசி கோபால் said...

டேபிள் இல்லாத வீட்டுக்குத் தரை மேனர்ஸ் சொல்லுங்க:-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மீதி வச்சா அந்த வீட்டில் இருக்கறவங்க குடுத்ததை பிடிக்காம வச்சிட்டு போயிட்டாங்கன்னு நினைச்சிட்டா என்ன செய்வதுன்னு சொல்லுங்களேன்..

நிஜமா நல்லவன் said...

ஆஹா...டிப்ஸ் எல்லாம் நல்லா தான் இருக்கு.

மங்களூர் சிவா said...

என்ன கொடுமை இது. இப்பிடி ஒரு சாப்பாடுதேவையா??

மங்களூர் சிவா said...

என்னது வீட்டுக்கு கூப்பிட்டு காப்பி குடுத்தீங்கன்னா பாதி டம்ளர் காப்பிய மீதி வைக்கணுமா????

மங்களூர் சிவா said...

காப்பி நல்லா இல்லைனா முழு டம்ப்ளரையுமே மீதி வைச்சிருவோமே!

மங்களூர் சிவா said...

/
நாம் உணவை ரசித்து ருசித்து உண்ணலாம்.
ஆனால் அதுவே அடுத்தவருக்கு அருவருப்பாக
இல்லாமல் இருக்க வேண்டும்.
/

அவனை எழுந்து அடுத்த டேபிளுக்கு போக சொல்லுங்க!!

:)))

மங்களூர் சிவா said...

/
வாயினுள் உணவை வைக்கும் போது
நமது முன் கை வாயை மறைக்கும் வாரு
சாப்பிடவேண்டும் என்பார்கள்.
/

ஏன் கண்ணு வெச்சிருவாய்ங்களோ!?!?
:))

மங்களூர் சிவா said...

/
வியாபார நிமித்தமாக, நண்பர்களுடன்,
இப்படி பலவேறு காரணங்களினால்
நாம் உணவருந்த சென்றாலும்
/

இப்பிடி ஒரு ஆணியே புடுங்க வேணாம்

:))))))))))

புதுகைத் தென்றல் said...

தரை மேனர்ஸா!!!

அதெல்லாம் ஞாபகப் படுத்தாதீங்க டீச்சர்.

அப்பா கிட்ட வாங்கின திட்டுக்கள் அப்படியே ஒரு வீடியோவா ஒடிட்டு போகுது.

கையை மடக்கி வை, குனிஞ்சு சாப்பிடு, கீழே சிந்தாதே,, அவ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

மீதி வைக்கறதுன்னா மொத்தமா இல்ல. ஒரு ஸ்பூன் அளவாவது வெச்சா போதும்.

புதுகைத் தென்றல் said...

வாங்க நிஜமா நல்லவன்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

புதுகைத் தென்றல் said...

ஐயோ சிவா,

சில ஊர்ல அப்படித்தான் ஒரு சிப் அடிச்சிட்டு வெச்சிடுவாங்களாம்.

(தகவல் உதவி துளசி டீச்சர்)

புதுகைத் தென்றல் said...

வியாபார நிமித்தமாக, நண்பர்களுடன்,
இப்படி பலவேறு காரணங்களினால்
நாம் உணவருந்த சென்றாலும்
/

இப்பிடி ஒரு ஆணியே புடுங்க வேணாம்

சிலருக்கு இது தவிர்க்க முடியாததே!

புதுகைத் தென்றல் said...

ஏன் கண்ணு வெச்சிருவாய்ங்களோ!?!?

கண்ணு வெக்க மாட்டாங்க.

கிடங்கு மாதிரி நாம் வாயைத் திறக்கறது, அசிங்கமா இருக்கும் அதுக்காகத்தான்.

புதுகைத் தென்றல் said...

ஜோசப் பால்ராஜ் has left a new comment on your post "TABLE MANNERS":

நல்ல பதிவுங்க அக்கா.
எங்கள மாதிரி சின்ன பசங்களுக்கு நிறையா சொல்லித்தரீங்க. நன்றி அக்கா.
நீங்க எழுதாம விட்ட சிலத இங்க குறிப்பிட்டிருக்கேன்.

pinutam varla athan cut copy paste joseph.

எனக்குத் தெரிந்ததை மட்டும்சொல்லியிருந்தேன். பால்ராஜ் சொன்ன மீதக் கருத்துக்கள் பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

கானா பிரபா said...

//ஹோட்டலில் நாமாக உணவருந்தச் சென்றாலும்,
யாரேனும் விருந்துக்கு அழைத்திருந்தாலும்
ஏன் அழைத்தோம் இவரை என்று!
அழைத்தவரின் மனம் நோகக்கூடாது.//

இந்த பாயிண்டை ஏற்கமாட்டேன், ஒரு வழி பண்ணிடுவோம்ல

நானானி said...

புதுகத்தென்றல்!! எல்லாரும் உங்களை கலாய்ச்சிட்டாங்க! என் பங்குக்கு நான்.....வேண்டாமா? நாங்க அருவிக்கரையிலும் ஆத்தங்கரையிலும்
பாறையில் வைத்து சாப்பிடுவோம்...அதுக்கு என்ன மேனர்ஸ்? சொல்லமுடியுமா?ஹீ.ஹி..!
கையிலே வாங்கி வாயிலே போடரதுக்குள்ளே இவ்ளோ சமாச்சாரமா? நான் தனியா ஓர் ஓரமா உக்காந்து நிம்மதியா சாப்பிடுவேன்!!!!

புதுகைத் தென்றல் said...

இந்த பாயிண்டை ஏற்கமாட்டேன், ஒரு வழி பண்ணிடுவோம்ல

:)

புதுகைத் தென்றல் said...

கையிலே வாங்கி வாயிலே போடரதுக்குள்ளே இவ்ளோ சமாச்சாரமா? நான் தனியா ஓர் ஓரமா உக்காந்து நிம்மதியா சாப்பிடுவேன்!!!!


வாங்க நானானி,

இதுல என்ன கலாய்த்தல்.

தனியா ஒரமா நாம உட்கார்ந்திருப்போம். ஆனால் மத்தவங்களுக்கு நம்மைப் பத்தின அபிப்ராயத்துல அடி விழுந்திடக்கூடாதே!

எங்க அம்மம்மா படிக்காதவங்க.
ஆனால் அவங்க அண்ணன் மும்பையில் இன்கம் டாக்ஸ் ஆபீஸர்.

தன் தங்கையை வெளியே அழைத்துச் செல்லும்போது அண்ணனுக்காக நாசுக்காக சாப்பிடுவது எப்படி என்று அடுத்தவர்களைப் பார்த்து கற்றுக்கொண்டதாக அம்மம்மா சொல்வார்.

அம்மம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தது தான் மேற்படி பதிவே!

புதுகைத் தென்றல் said...

ஆத்தங்கரையில் சாப்பிடும்போது அந்த சூழ்நிலைக்கு தக்க பாறையில் என்ன? இலை தழையில் வைத்து சாப்பிடுவோம். அது தனி சுகம்.

வீட்டில் கையில் உருட்டி போட்ட சோறு, எனக்கு உனக்கு என்று அடித்துக்கொண்டு சாப்பிடுவது தனி.

பொதுவில் அப்படி இருக்க முடியாது பாருங்க.

புதுகைத் தென்றல் said...

நானானி நீங்க ஆத்தங்கரைன்னு சொன்னதும் எனது திருமண பயணம்தான் ஞாபகம் வருது.

திருமணம் பழனியில். புதுகை- பழனி வேனில் பயணம். ஒரு 40 பேர் இருந்திருப்போம். சோறு கலந்து எடுத்துக்கொண்டு போனோம்.

நடுவழியில் ஒரு ஓடையைக் கண்டு அங்கே இறங்கி ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டு, பேசி சிரித்துக்கொண்டு சாப்பிட்டோம்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

akkaa pls visit here

http://parvaiyil.blogspot.com/2008/08/blog-post_07.html#links